
மவுனராகம், அக்னிநட்சத்திரம், இதயத்தைத் திருடாதே படங்களில் மணிரத்னத்துக்கு இருந்த அதே இளமை பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் மணிரத்னத்துக்கு இன்னமும் இருக்கிறது. குரு படம் ஒரு தொழிலதிபரின் வெற்றியை பறைசாற்றும் படம் என்றாலும் படம் முழுக்க இளமை தெளித்துவிடப்பட்டிருக்கிறது.
துருக்கியில் பணியாற்றும் கதாநாயகன் பெல்லி டான்ஸர்களுடன் ஆட்டம் போடுவதில் ஆகட்டும். கிராமத்து அழகுப் புயல் ஐஸ்வர்யா ராய் அருவியில் ஆட்டம் போடுவதில் ஆகட்டும் இளமை… இளமை… எங்கும் இளமை…..
மும்பையில் புதுமனைவியோடு அபிஷேக் நடத்தும் குடித்தனம் இளமைச் சுனாமி. தினமும் காலையில் வேலைக்குச் செல்பவர் வீட்டை விட்டு இறங்கியவுடன் (வேண்டுமென்றே) பர்ஸை மறந்து வைத்து விட்டு, திரும்பவும் வீட்டுக்கு வந்து Noon Show காட்டுகிறார். இந்த மாதிரி தினமும் காலையில் வேலைக்குச் செல்லும்போது பர்ஸையோ, பைக் கீயையோ அல்லது கர்ச்சீப்பையையோ மறந்து விட்டுச் செல்லும் ஒரு நபரை எனக்கு ரொம்ப நெருக்கமாகவே தெரியும்
படம் முழுக்க ஐஸ்வர்யா ராயை கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் குரு. கொஞ்சும்போது கூட அவரது தொழில் புத்தி மாறுவதில்லை. துணி வியாபாரம் செய்யும் குரு தன் மனைவியை “சீமை சில்க் மாதிரி இருக்கேடி” என்று தான் கொஞ்சுகிறார். உலக அழகி மனைவியாக வந்தால் யாருமே இதுபோல கொஞ்சிக் கொண்டு தான் இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு நாளாக நாளாக இடை மெலிந்து கொடியை விட ஒல்லியாகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் அதே 50 கிலோ தான் என்று வைரமுத்து சொல்கிறார்.
பத்திரிகையாளராக வரும் மாதவனுக்கு காதலி வித்யாபாலன். படத்தின் வசனங்களும் ரொம்ப இளமை. வித்யா பாலன் பேசும் “மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா…. மெதுவா… மெதுவா…. வேகமா…. வேகமா….” வசனம் சூப்பர். மாதவன் தன் காதலை வித்யாபாலனிடம் தெரிவித்து விட்டு அடிக்கிறார் பாருங்கள் ஒரு பிரெஞ்சு கிஸ்….. யப்பா….. செம சூடு…. ஆங்கிலப் படங்களில் கூட இவ்வளவு சூடான கிஸ்ஸைக் கண்டிருப்போமா என்பது சந்தேகமே…. கமல்ஹாசனுக்கு அடுத்த வாரிசு ரெடி.
குருபாய் பெரிய தொழிலதிபர் ஆனதும் தான் சிறுவயதில் மனைவியோடு குடும்பம் நடத்திய வீட்டுக்கு வந்தபின்பு வரும் ஒரு சில பிளாஷ்பேக் கிளிப்புகள் அருமை. மச்சினனின் தொல்லை தாங்காமல் மனைவியோடு ரகசியமாக குரு சரஸமாடும் காட்சிகளில் பின்னணி இசை, கேமிரா, வசனங்கள் என்று செம கூட்டணி.
பிகரோடு ஜாலியாகப் பார்க்க ஏற்றப் படம் குரு.
இப்படத்தின் வேறு கோணத்து விமர்சனத்தை இங்கே பாருங்கள்.
3 comments:
பிகரோடு பார்க்க ஏற்ற படம் என்றால் ? கூட்டம் அவ்ளோவா இருக்காதா ????
கொலைவெறியோடு இரண்டு விமர்சனங்களை எழுதி கலக்கிட்டீங்க...!!!!
//பிகரோடு பார்க்க ஏற்ற படம் என்றால் ? கூட்டம் அவ்ளோவா இருக்காதா ????//
ஆமாம்.
Post a Comment