Thursday, January 18, 2007

மன்னா? என்னா?மன்னா ஜோக்ஸ்

*******************

மன்னர் : புலவரே என்னை புகழ்ந்து தாங்கள் பாடிய கவிதை சூப்பர்... ஆனால் க.கா.

புலவர் : அய்யகோ மன்னா... கி.கி.


சேவகன் 1 : மன்னர் க.கா.ன்னு சொல்றாரு, பதிலுக்கு புலவர் கி.கி.ன்னு சொல்லுறாரு... ஒண்ணுமே புரியலையே....

சேவகன் 2 : மன்னர் 'கஜானா காலி'ன்னு சொல்லுறாரு.... புலவர் பதிலுக்கு 'கிழிஞ்சது கிருஷ்ணகிரி'ன்னு சொல்லுறாருப்பா.......

*******************

அமைச்சர் : மன்னா ராணியார் உங்களுக்கு அனுப்பிய புறா வந்திருக்கிறது... ஆனால் அதற்கு இரண்டு கால்களும் இல்லை....

மன்னர் : அது 'மிஸ்டு கால்' அமைச்சரே.....

*******************

மந்திரி: மன்னா, பக்கத்து நாட்டிலிருந்து புறா மூலம் சேதி வந்திருக்கிறது.

மன்னர்: புறா கறி சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு.

*******************

அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னன் பெரும் 'படையோடு' வந்து கொண்டிருக்கிறான்....

மன்னர் : அமைச்சரே, கவுரவம் பார்க்காமல் நீங்களே போய் சொறிந்து விட்டு வந்து விடுங்கள்....

*******************

மன்னர்: எதிரி மன்னன் படையுடன் வருகிறானாமே? ஏற்பாடுகள் தயாரா?

மந்திரி: எல்லா வெள்ளைக் கொடிகளும் தயார்.


*******************

மன்னன்: மந்திரியரே... தளபதி எங்கே ?..

மந்திரி: பக்கத்து நாட்டில் தளபதி போஸ்டிங் காலியா இருக்குன்னு... இண்ட்ர்வியு போயிருக்காரு....

*******************

மன்னர்: யாரங்கே?

சிப்பாய்: பேர் கூட தெரியாத நீயெல்லாம் ஒரு ராஜா.

*******************

மன்னர் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

மந்திரி: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ýட்டான்.

மன்னர்: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

மந்திரி: அதைத்தான் சொல்லிட்டான்...!

*******************

அமைச்சர் : மன்னரே புறா மூலம் கடிதம் எழுதிய பக்கத்து நாட்டு மன்னனுக்கு என்னவென்று Acknowledgement அனுப்புவது?

மன்னர் : புறாக்கறி சூப்பர் என்று அனுப்பு.....

*******************

அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?

மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?

அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்....


:-)))))))))))))))))))))))))))))

24 comments:

Anonymous said...

அடறா சக்கை,

ரவிக்கு சூப்பர் கெட்டப்...

கலக்கல் போஸ்ட் அ.வா :)

செந்தழலார் கொலைவெறி படை said...

ஜோக்குகளை விட எங்க தலயோட படம் சூப்பர். ரொம்ப நன்றி லக்கியாரே.

மிதக்கும் வெளி said...

அந்த மிஸ்ட்கால் ஜோக் சூப்பர். அந்த படம் செந்தழல் ரவியோடதா, எனக்கென்னமோ போலிடோண்டு மாதிரி தெரிந்தது.

✪சிந்தாநதி said...

இது எத்தனாவது புலிகேசியோட படம்னு சொல்லவேயில்லையே?

நகைச்சுவைகள் அனைத்தும் நல்ல கடியாக இருக்கின்றன அதிர்ஷ்டப் பார்வை அரசனே!

Anonymous said...

அருமையோ அருமை

Anonymous said...

டாப் டக்கர் லக்கி

Anonymous said...

லக்கி அவர்களே!

நான் ஒரு மூத்த பதிவர். என் பெயருடனேயே கேட்க வெட்கப்பட்டு கொண்டு அனானியாக கேட்கிறேன்.

மன்னர் ஜோக்ஸ் போட்டதற்கு பதிலாக உங்கள் பேவரைட்டான Aய்த்தன ஜோக் ஒன்று வெயிட்டாக போட்டிருந்தால் நன்றியுடையவனாக இருந்திருப்பேன்.

லக்கிலுக் said...

//அந்த மிஸ்ட்கால் ஜோக் சூப்பர். அந்த படம் செந்தழல் ரவியோடதா, எனக்கென்னமோ போலிடோண்டு மாதிரி தெரிந்தது.//

போலியார் படம் கிடைத்தால் இதை விட சூப்பராக கிராபிக்ஸ் ஆக்க நான் ரெடி! போலியார் ரெடியா?

என்னப்பா இன்னைக்கு தமிழ்மணத்துலே போலி நெடி தூக்கலா இருக்குதே?

லக்கிலுக் said...

//மன்னர் ஜோக்ஸ் போட்டதற்கு பதிலாக உங்கள் பேவரைட்டான Aய்த்தன ஜோக் ஒன்று வெயிட்டாக போட்டிருந்தால் நன்றியுடையவனாக இருந்திருப்பேன். //

மூத்த பதிவர் அவர்களே!

இதுக்கெல்லாம் வெட்கப்பட்டால் வேலைக்காகுமா?

Aய்த்தனமான ஜோக் போட வ.வா.ச.வின் சட்ட திட்டங்கள் அனுமதிப்பதில்லை. அவர்கள் அனுமதித்திருந்தால் சுஜாதாவின் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கையே போட்டிருப்பேன் :-))))))))

Hariharan # 26491540 said...

:-))) :-)))

சுந்தர் said...

அருமை ... போட்டோவும் ... ஜோக்ஸ்ம் !

தம்பி said...

ராணுவ ரகசியம் டாப் ஜோக்:)))

அதெ விட ஸ்டார் பதிவர் பயங்கரம்!!


;))

செந்தழல் ரவி said...

கொடுமை...முதலில் படத்தை பார்த்துவிட்டு, யாருடா இந்த லூசு, எங்கியோ பார்த்திருக்கோமே என்று நினைத்தேன்...

பிறகுதான் தெரிந்தது !!!! :))))))

எப்படித்தான் தோனுதோ இப்படி எல்லாம் !!!!

Anonymous said...

//அமைச்சர் : அய்யகோ மன்னா... நாம் காலாகாலத்துக்கும் கேவலப்பட்டு போனோமே?

மன்னர் : என்ன ஆயிற்று அமைச்சரே?

அமைச்சர் : 23ஆம் புலிகேசியே நம் மீது படையெடுத்து வருகிறானாம்//:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


இப்படி போடனும் ஸ்மைலி

வைகோ said...

தோழா செந்தில்!

தயவுசெய்து உங்கள் ஸ்மைலியை எடிட் செய்து குறைக்கவும். அல்லது டெலிட் செய்து விடவும். பதிவின் அலைன்மெண்டே ஆட்டம் கண்டு விட்டது.

Anonymous said...

சூப்ப்பபபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வடிவேலு said...

தேவையா. இது தேவையா. ரொம்ப முக்கியமா இப்போ?

கப்பி பய said...

:))))

சூப்பர் லக்கி!!

சேதுக்கரசி said...

ஜோக்ஸ் நல்லா இருக்கு. படத்தை முதல்ல பார்க்கவேயில்லை (நன்றி: அலைன்மெண்டை ஆட்டம் காணவைத்த செந்தில்) முதல் பின்னூட்டம் பார்த்தபிறகு தான் படத்தைப் பார்த்தேன். ஏதோ பா.க.ச விளையாட்டு போலிருக்குன்னு தோணிச்சு முதல்ல. அப்புறம்... பாலா இல்லியேன்னு கூர்ந்து கவனிச்சா... செந்தழலார்னு தெரிஞ்சுது :-)

Anonymous said...

யாராவது Blog அட்மினிஸ்ட்ரேட்டர் பார்த்து செந்தில் கமெண்டையும், கோவி கண்ணன் கமெண்டையும் எடிட்டோ, டெலிட்டோ பண்ணுங்கப்பா. டெம்ப்ளேட் அலைன்மெண்டே ஆட்டம் காணுது.

Anonymous said...

//யாராவது Blog அட்மினிஸ்ட்ரேட்டர் பார்த்து செந்தில் கமெண்டையும், கோவி கண்ணன் கமெண்டையும் எடிட்டோ, டெலிட்டோ பண்ணுங்கப்பா. டெம்ப்ளேட் அலைன்மெண்டே ஆட்டம் காணுது. //

சரி பண்ணியாச்சு சாமி,

செந்தழலுன்னு சொன்னதும் எல்லாரும் ரொம்பவே உணர்ச்சிவச பட்டுட்டாங்க.... :)

லக்கிலுக் said...

//சரி பண்ணியாச்சு சாமி,//

நன்றி இராம்.

உங்க போட்டோ ஏதாவதிருந்தா மெயில்லே அனுப்பிச்சி வையுங்களேன் :-)))))

சேதுக்கரசி said...

//நன்றி இராம்.
உங்க போட்டோ ஏதாவதிருந்தா மெயில்லே அனுப்பிச்சி வையுங்களேன் :-)))))//

அவர் ஏற்கனவே ரொம்ப அனுபவப்பட்டு பயந்துபோய் ரிச்சி ரிச் போட்டோ போட்டிருக்கார்.. நீங்க வேற :)

Anonymous said...

//உங்க போட்டோ ஏதாவதிருந்தா மெயில்லே அனுப்பிச்சி வையுங்களேன் :-))))) //

வேணாமிண்ணே ஏற்கெனவே மாத்து வாங்கியாச்சு, :-(((

//அவர் ஏற்கனவே ரொம்ப அனுபவப்பட்டு பயந்துபோய் ரிச்சி ரிச் போட்டோ போட்டிருக்கார்.. நீங்க வேற :) //

சேது மேடம்,

நீங்கதான் என்னோட பிரச்சினையே புரிஞ்சுக்கிட்டவங்க. :)