~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Tuesday, January 9, 2007
டோண்டு சார் கோச்சுக்க மாட்டேளே?
வலையுலக சச்சின் டோண்டுல்கர் (4800161)
தமிழ் வலையுலகில் பல காலமாக அடித்து ஆடி அசத்தி வருபவர். பொதுவாகவே சிக்ஸர்களும், போர்களுமாக அடிக்கும் இவருக்கு வலையுலகில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. எதிர்பாராத நேரங்களில் டக்-அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றுவதும் உண்டு. சில நேரங்களில் போளி விற்கும் நபர் ஒருவர் இவருக்குப் பதிலாக இவருடைய வேடத்திலேயே இறங்கி பவுண்டரிகளாக "சேம் சைடு கோல்" முறையில் அடித்து விடுகிறார்.
எனவே இவர் ஒரிஜினல் தான் எனக் காட்டுவதற்காக ISO நிறுவனத்திடமிருந்து 4800161 என்ற சான்றிதழைப் பெற்றிருக்கிறார். அடுத்த முறை இவரது ஆட்டத்தை ரசிக்கும் ரசிகர்கள் இவர் ஒரிஜினல் தானா என்று கண்டறிய இவரது சட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும் 4800161 என்ற எண்ணை அவரவர் வீட்டுப் பரணில் பிடித்த எலியினை முகரவைத்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
டோண்டுல்கருக்கு பிடித்த உணவு : உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன் மசாலா போண்டா
பிடிக்காத உணவு : துபாய் சிம்ரன் ஆப்பக்கடையின் ஆப்பம் மற்றும் பாயா
பிடித்தப் பாட்டு : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
பிடிக்காதப் பாட்டு : கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு
பிடித்த நிறம் : கருப்பைத் தவிர எதுவாயினும்
பதிவுக்கு பின்குறிப்பு : :-))))))))))))))))))))) (பெரிய ஸ்மைலி போட்டுட்டேன்)
என் மனசாட்சி : மாப்பு லக்கி! பதிவு எழுத சரக்கு இல்லேன்னா இப்படியெல்லாமா ஜல்லி அடிக்கிறது?
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
டோண்டுல்கருக்கு பர்ஸ்ட் பால் நானே போட்டுடறேன்.
நல்லாத்தேன் ஜல்லி அடிக்கறீங்க! :)))
இப்பதிவு சூப்பர். நீங்கள் டெலிஃபோனில் என்னிடம் இது பற்றி முன்கூட்டியே கூறியபோது இவ்வளவு அற்புதமாக வரும் என நானே நினைக்கவில்லை.
பலே, பலே.
நான் ரசித்தவை:
1. டோண்டுல்கர்
2. போளி விற்கும் நபர்
3. பவுண்டரிகளாக "சேம் சைடு கோல்"
4. இவரது சட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும் 4800161 என்ற எண்ணை அவரவர் வீட்டுப் பரணில் பிடித்த எலியினை முகரவைத்து சரிபார்த்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்பதிவு சூப்பர். நீங்கள் டெலிஃபோனில் என்னிடம் இது பற்றி முன்கூட்டியே கூறியபோது இவ்வளவு அற்புதமாக வரும் என நானே நினைக்கவில்லை. //
நன்றி டோண்டு சார்
"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" பட்டம் எனக்கு கிடைத்திருக்கிறது!
டோண்டு சாரின் இஷ்ட தெய்வமான தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதன் அருளில் லக்கி லுக் விழுந்து இந்த மார்கழி மாதத்தில் ஆடித்தள்ளுபடியாக அதிரடியாக 50% வயசு டிஸ்கௌண்ட் கிட்டியிருக்கிறது!
டோண்டுல்கர் அதிரடியா ஆடுவதை டோண்டுசார் ரசிப்பார்.
கார்க் பாலுக்கு பதிலாக உட்லண்ட்ஸ் போண்டாவை பௌவுலிங் செய்தால் டக் அவுட் ஆக்கிடலாம் :-)))
பேட்டிங் மறந்து போண்டா கேட்சிங் போது ஸ்டம்பிங் செய்திடலாம் :-))
டென்டுல்கர்னு சொல்லிட்டு டிராவிட் போட்டோவுல ஒட்டு வேலை பண்ணிருக்கிங்க?..
"பேட்டிங் மறந்து போண்டா கேட்சிங் போது ஸ்டம்பிங் செய்திடலாம்"
அப்படி செய்தால் ஸ்டம்பிங் எதற்கு? "Handling the ball" என்ற முறையில் அப்பீல் செய்தால் அம்பயர் போண்டாவை இடது கையால் பிடுங்கிக் கொண்டு வலது கையை உயர்த்திவிடுவாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்னை மாதிரி புதுசா வந்திருக்கவங்களுக்கெல்லாம் டோண்டுவை நல்லபடியா(?) அறிமுகம் செஞ்சு வச்சதுக்கு நன்றி ;-)
//டென்டுல்கர்னு சொல்லிட்டு டிராவிட் போட்டோவுல ஒட்டு வேலை பண்ணிருக்கிங்க?..//
ஏன்னா டிராவிட் போல டோண்டுவும் சரியான வாலாச்சே!
அடச்சீ எதையும் தாங்கும் wall ஆச்சேன்னு சொல்ல வந்தேன்! :)))
அந்த போட்டோ டெண்டுல்கர் போட்டோ தான். நான் என்ன அவ்வளோ குண்டாவா இருக்கேன்?
//ஏன்னா டிராவிட் போல டோண்டுவும் சரியான வாலாச்சே!
அடச்சீ எதையும் தாங்கும் wall ஆச்சேன்னு சொல்ல வந்தேன்! :))) //
:-)))))))
கொத்ஸ்.... சூப்பர்
அசத்தல்.
//கருப்பைத் தவிர எதுவாயினும்//
அப்போ டார்க் கருப்பு ஓ.கே.யா?
//"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" பட்டம் எனக்கு கிடைத்திருக்கிறது!//
சைக்கிள் கேப்ல அவருக்கு தெரியாம அவரையே கலாச்சுட்டீங்களே! தூள்!!
//ஷான் போலக் said...
டோண்டுல்கருக்கு பர்ஸ்ட் பால் நானே போட்டுடறேன். //
இது தான் சூப்பர் ::-)
டோண்டுல்கர் சார்! ஹெல்மட் போட்டு விளையாடுங்க!
இல்லாட்டி கருப்பு சார் பந்துக்கு பதிலா கல்ல வீசி மண்டைய உடைச்சிரபோறார்.
:-))))))))) ( நாங்களும் ஸ்மைலி போடுவோம்ல!)
இந்த போட்டோவை பார்த்துட்டு நான் விளக்க, அதுக்கு எனக்கு பக்கத்துல இருக்க பாக்கிஸ்தானி டெண்டுல் பத்தி சொல்றான், இந்த டெண்டுல்கர் எப்போதும் பாக்கிஸ்தான் கூட அடிச்சதே இல்லையாம்...அதுக்கு சவுத் ஆப்ரிக்கா காரன் சப்போட்டு...இதை கேக்க யாருமே இல்லையா ?
//இந்த டெண்டுல்கர் எப்போதும் பாக்கிஸ்தான் கூட அடிச்சதே இல்லையாம்...//
வக்காரு யூனுசு, அகிப் ஜாவித்த எல்லாம் வூட்டுக்கு அனுப்பிச்சது நான் தாண்டா.
//இந்த டெண்டுல்கர் எப்போதும் பாக்கிஸ்தான் கூட அடிச்சதே இல்லையாம்...//
2003 உலகைகோப்பைல பாகிஸ்தான்கூட டெண்டுல் 98 ரன் அடிச்சத அந்த பாகிஸ்தானிக்கு திரும்பவும் நியாபகப்படுத்துங்க ரவி!
டோண்டார் அவர்களை என்னமோ , ஏதோவென்று நினைத்தேன்.
ஆனா ரொம்ப நல்லவரா இருக்காரே.
லக்கி தம்பி, உங்கள் கொள்கை வேறு,டோண்டு சார் கொள்கை வேறு, இருந்தும் உங்கள் மாதத்தில் சாருக்கு ஒரு நல்ல மரியாதையான இருக்கை தந்தமைக்கு நன்றி. சேதுக்கரசி சொன்னது போல் எங்களைப்போல புதுசா வந்திருக்கவங்களுக்கெல்லாம் டோண்டுசாரை நல்லபடியா(?) அறிமுகம் செஞ்சு வச்சதுக்கு நன்றி ;-)
எவ்வளவோ பேர் அவர் மனம் புண்படும்படி பேசியதர்க்கு பர்னால் தடவியமைக்கு நன்றி.அவர் வயதிற்கு நாம் கண்டிப்பாக மரியதை தர வேண்டியது அவசியம்.உங்கள் பாணியில் சொல்லப்போனால் சாவிக்கு கலைgnaர் கொடுத்த மதிப்பு போல,88,89களில் சட்ட சபைகளில் sriரங்கம் Y.Vதீக்ஷிதறுக்கு தந்ததை போல அருமையாக மதிப்பு கொடுத்துள்ளீர்கள்.(அதர்காக நான் டோண்டு சார் கொள்கை ஆதரவாளன் என்றெல்லாம் வீனாக கற்பனை செய்துக்க வேனாம்.சத்தியமாக இல்லை)
"டோண்டார் அவர்களை என்னமோ , ஏதோவென்று நினைத்தேன். ஆனா ரொம்ப நல்லவரா இருக்காரே".
வடிவேலு மாதிரியா? :)))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அம்பி லக்கி, படத்த ரொம்ப நன்னா பண்ணிருக்கே. டோண்டைப் பத்தி நன்னா எழுதுறியே, பாத்து, ஏதாவது காத்து கருப்பு பட்டுடாம பாத்துக்கோ!
காத்து கருப்பல்லாம் ஒன்ன ஒன்னும் பண்ணாதுங்கிறியா? அதுவும் சரிதான். இருந்தாலும் இஷ்ட தெய்வத்தெல்லாம் வேண்டிகோப்பா.
புது வருஷம் நோக்கு நன்னாத்தான் இருக்கு. அப்படியே ஷேமமா இருக்கனும். அதான் எனக்கு வேணும்.
(லக்கி, எழுத்து நடை கருதி ஒருமையில் அழைத்திருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நன்றி.)
super..Fantastic..Excellent...லக்கி
இப்படி கலகல .. இருந்தாவுல்ல ... நல்லா இருக்கும் ..
வாழ்க வளமுடன்
டோண்டுவுக்கு கச்சிதமாக இந்த வேடம் பொருந்துகிறது
Post a Comment