Wednesday, January 31, 2007

லக்கி லுக்... பிக் ஹிட்... பிக் சல்யூட்...

நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.. ஒரு முறை நம்ம லக்கி லுக் கூட தொலைப்பேசியில் பேசியிருக்கேன்..

அப்புறம் புத்தகக் கண்காட்சியிலே ஒரு தரம் நேர்ல்ல பார்த்து ஒரிரண்டு வார்த்தைப் பேசிக்கிட்டோம்....

இப்போ எதுக்கு இந்தப் பில்டப்புன்னு கேக்குறீயளா?

இருக்கே.. போன மாசம் நம்ம சங்கத்து அட்லாஸ் வாலிபர் அவர் தானே....

பொதுவா அட்லாஸ் அப்படின்னா ஒரு திடகாத்திரமான ஆளு முதுகுல்ல டின் கட்டினாப்பல்ல் டன் கணக்குல்ல இருக்க ஒரு பாறையைச் சொமக்க வச்சிருப்பாயங்க...நம்ம சங்கத்துக்கு வர்ற அட்லாஸ்களும் அப்படித்தான்.. மக்களைச் சிரிக்க வைச்சு சந்தோஷப் படுத்தணும்ங்கற இமாலய வெயிட்டை முதுகுல்ல சங்கம் கட்டி விட்டுரும்... அவ்ங்களும் சளைக்காமச் சுமைய சுகமாச் சுமந்து மக்களையும் சிரிக்க வைப்பாங்க...

இதே கணக்கோடுத் தான் நம்ம லக்கியும் வர வச்சோம்.. ஆனாப் பாருங்க அவ்ர் வந்த நேரம் சங்கத்துக்கு மொத்தமும் ப்யூஸ் பிடுங்கி விட்டுட்டாயங்க பிளாகரைப் பெத்த புண்ணியவான்க..

லக்கி வரும் போது... கூட நின்னு கும்மி அடிக்க ஆரும் இல்ல.. என்னடாக் கூப்பிட்டாயங்க... வந்துப் பார்த்தா வெறிச்சோடி கிடக்கே.. ஒரு வேளை நம்மளை வச்சு காமெடி கீமெடி பண்ணுறாங்களோன்னு யோசிக்கமா... டகார்ன்னு சங்கத்துக்குள்ளே ஒரு விளக்கைக் கொளுத்தி வெளிச்சம் போட்டு... கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணி.. சொம்ம கலகலன்னு திருவிழா ரேஞ்சுக்கு ஒரு மாசமும் பட்டயக் கிளப்பிட்டார்...

நண்பா லக்கி.. சங்கம் மொத்தத்தையும் கிட்டத்தட்ட தனி ஆளாவே நின்னு ஒரு மாசமும் தோளில் தாங்கி.. மக்களையும் சிரிக்க வச்சு.. கலக்கிப்புட்டீங்க...

ஓவராப் பீல் ஆவுறோம்ன்னு பாக்குறீயளா.. சங்கத்துப் பயபுள்ளக தல சொல்லுற மாதிரி பாசக்காரப் பயல்வ...

லக்கிக்கு சங்கம் சார்பா மனமார்ந்த வாழ்த்துக்கள்.

11 comments:

நாமக்கல் சிபி said...

லக்கியார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!

இராம்/Raam said...

வலைப்பூ சுனாமியார் நமது சங்கத்து அட்லாஸ் வாலிபர் லக்கிலுக்'க்கு மனமார்ந்த நன்றிகள் :)

ரவி said...

வலைப்பூ சுனாமிக்கு கொலைவெறியோடு நன்றி..!!!!

லக்கிலுக் said...

நன்றி நண்பர்களே!

இன்று தான் எனக்கு அட்லஸ் வாலிபர் கடைசி நாள். ஒரு போஸ்ட்டு கடைசியாக போட்டுவிடலாம் என்று பார்த்தால் வேலை வெட்டி முறிக்கிறது என்னை. அதனால் என்ன பரவாயில்லை. இந்த ஒரு மாத அட்லஸ் வாலிபர் அனுபவங்களை ஒரு தனிபதிவாகவே போடுகிறேன்.

எனக்கு இந்த ஒரு மாதத்தை வெற்றிகரமாக ஓட்ட உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு எனது நன்றிகள்!!!

வ.வா.சவை பொறுத்தவரை எனக்கு இரண்டுபேர் தான் ஓரளவு அறிமுகம் ஆனவர்கள். ராமும், விவசாயி இளாவும்... நான் வலைப்பதிய ஆரம்பித்த சில நாட்களில் ஒரு பிரச்சினையில் நான் மாட்டிக் கொண்டபோது என்னை எச்சரித்து அழகாக வெளியேற வைத்தவர் ராம்...

இளா ஒரு முறை தடாலடிப் போட்டியில் அவர் பெற்ற பரிசை எனக்காக விட்டுக் கொடுத்தார்....

இப்போது ஓரளவுக்கு ஜொள்ளுப்பாண்டி, தேவ், நாமக்கல் சிபி போன்றவர்களுடனும் அறிமுகம் ஆகிவிட்டது....

கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என் வழக்கமான பாணியில் இல்லாமல் புதுப்பாணியில் வலையில் உலவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இனி தொடர்ந்து வ.வா.ச.வுடன் டச்சில் தான் இருக்கப் போகிறேன்.... இம்மாதம் மட்டும் அட்லஸ் வாலிபராக இருக்காமல் இந்த ஆண்டு முழுவதுமே இருக்க ஆசை தான்... ஆனாலும் சங்கத்துக்கு என்று சட்ட திட்டங்கள் இருக்கிறது அல்லவா?

எனக்கு வாய்ப்பளித்த சங்கத்து சிங்கங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!!

இராம்/Raam said...

அன்பு நண்பர் லக்கிலுக்,

பிளாக்கர் குளறுபடியால் கிட்டத்தட்ட 130 பதிவுகளை கொண்ட சங்கத்தை இழந்து வேறயென்ன செய்யலாம் என பலவாறு யோசித்து தற்காலிகமாக ஒரு இடுகை உருவாக்கியதும் அதிலும் மறுபடியும் அதே பிரச்சினையில் கடைசியில் என்னுடைய ஐடி மட்டுமே இருந்தது, வேறே யாரும் அதிலே பங்கேற்காத சூழ்நிலையிலும் தாங்கள் ஒருவரே தாங்கிபிடித்து ,அனைவருடைய முகத்திலும் புன்னகையை வரவழைத்தது... அப்பப்பா எதையும் எங்களால் வார்த்தையால் தட்டச்ச முடியவில்லை.

நன்றி நண்பா __/\__

//நன்றி நண்பர்களே!

இன்று தான் எனக்கு அட்லஸ் வாலிபர் கடைசி நாள். ஒரு போஸ்ட்டு கடைசியாக போட்டுவிடலாம் என்று பார்த்தால் வேலை வெட்டி முறிக்கிறது என்னை. அதனால் என்ன பரவாயில்லை. இந்த ஒரு மாத அட்லஸ் வாலிபர் அனுபவங்களை ஒரு தனிபதிவாகவே போடுகிறேன்.//

அந்த பதிவை படிக்க மிக்க ஆவலாக இருக்கிறோம். எங்களுக்கு தெரிந்தவரையில் ஜனவரிமாதம் முழுவதும் சங்கத்தில் மட்டுமே பதிவுகள் இட்டு கொண்டிருந்திர்கள். :)


//எனக்கு இந்த ஒரு மாதத்தை வெற்றிகரமாக ஓட்ட உதவிய நண்பர் ராம் அவர்களுக்கு எனது நன்றிகள்!!!//

உங்களின் நன்றிக்கு தன்யனானேன்.


//வ.வா.சவை பொறுத்தவரை எனக்கு இரண்டுபேர் தான் ஓரளவு அறிமுகம் ஆனவர்கள். ராமும், விவசாயி இளாவும்... நான் வலைப்பதிய ஆரம்பித்த சில நாட்களில் ஒரு பிரச்சினையில் நான் மாட்டிக் கொண்டபோது என்னை எச்சரித்து அழகாக வெளியேற வைத்தவர் ராம்...//

ஹி ஹி எதுக்கு இப்போ அந்த மேட்டரலாம் :)

//இளா ஒரு முறை தடாலடிப் போட்டியில் அவர் பெற்ற பரிசை எனக்காக விட்டுக் கொடுத்தார்....//

விவசாயி ரொம்ப நல்லவருங்க... கொங்கு நாட்டு வள்ளலு, அவருக்கு அவங்க பட்டிக்காட்டிலே வள்ளல் விவசாயின்னு பட்டபெயர் குடுத்துருக்காங்க... (பி.கு:- இதிலே சிரிப்பான் போடலை.. அதுனாலே இதை சீரியஸா எடுத்துக்கோங்க)

//கிட்டத்தட்ட ஒரு மாத காலம் என் வழக்கமான பாணியில் இல்லாமல் புதுப்பாணியில் வலையில் உலவியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.//

அந்த மகிழ்ச்சி உங்களின் பதிவினை படித்த அனைவருக்கும் கட்டாயம் இருந்திருக்கும்.

//இனி தொடர்ந்து வ.வா.ச.வுடன் டச்சில் தான் இருக்கப் போகிறேன்.... இம்மாதம் மட்டும் அட்லஸ் வாலிபராக இருக்காமல் இந்த ஆண்டு முழுவதுமே இருக்க ஆசை தான்... ஆனாலும் சங்கத்துக்கு என்று சட்ட திட்டங்கள் இருக்கிறது அல்லவா?//

அட்லாஸிக்கு இருக்கிற சட்டதிட்டங்கள்(??)
1) அம்மாதம் முழுவதும் சங்கத்து பணியினை ஆற்ற வேண்டும்.
2) சங்கத்து ஆள் ஒருத்தரையாவது கலாய்க்கவேண்டும்.
3) சங்கத்து ஆளுகள் உங்களை கலாய்க்க அனுமதி தரவேண்டும்
4).........
5).........
6).........
7).........
7 1/2)......

(புள்ளி வச்சது பூராவும் ரகசியம்... அதை பத்தி தெரிஞ்சுக்கினிமின்னா தல'கிட்டே கேளுங்க)

//எனக்கு வாய்ப்பளித்த சங்கத்து சிங்கங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!! //

எங்களின் அனைவருடய நன்றிகள்

வெட்டிப்பயல் said...

ஒரு மாத காலம் சங்கத்தை தாங்கி பிடித்த அட்லாஸ் வாலிபர் லக்கியாருக்கு நன்றிகள் பல...

ஜி said...

லக்கியாருக்கு வாழ்த்துக்கள்....

ஜி said...

//செந்தழல் ரவி said...
வலைப்பூ சுனாமிக்கு கொலைவெறியோடு நன்றி..!!!! //

:))... ரவி... லக்கியார் போட்ட அந்த போஸ்ட்டரத்தான் TR வீராசாமி வெளம்பரத்துக்கு பயன்படுத்துறதா நம்மூர் பக்கம்லாம் ஒரே வதந்தியா இருக்குது....

இராம்/Raam said...

//ரவி... லக்கியார் போட்ட அந்த போஸ்ட்டரத்தான் TR வீராசாமி வெளம்பரத்துக்கு பயன்படுத்துறதா நம்மூர் பக்கம்லாம் ஒரே வதந்தியா இருக்குது....//

ஜி,

:-)))))))))))

Syam said...

நன்றி லிக்கியார் அவர்களே...என்னமோ ஒரே கொழப்பமா இருந்தது..சங்கம் 1 சங்கம் 2 னு...இனிமேதான் உங்க பதிவுகள படிக்கனும்...பரவால்ல அப்பாலிக்கா ஆப்புகள fedex பண்ணிடறேன் :-)

ILA (a) இளா said...

THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS THANKS