சங்கத்து வாசலில் கையை இடுப்பில் வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறார் தல கைப்பு...
"எலேய் எல்லாம் எங்கலே போயிட்டீக??? இங்கன ஒருத்தன் இருக்கறதையே மறந்துடறீக... சத்தம் போட்டு கொண்டிருக்கிறார்."
அங்கே வேகமாக ஓடி வரும் ராயலை பார்த்ததும் பீதி அடைகிறார்...
"எலேய் ராயலு ஏன்யா இப்படி பீதிய கிளப்பற மாதிரி ஓடி வர?"
"தல!!! ஊர்ல ஜல்லிக்கட்டு நடக்குது. போன வருஷம் உன் கால உடைச்சி குப்ப தொட்டில தூக்கி எறிஞ்சிதே அந்த கட்டதுரையோட கன்னுக்குட்டி, அது
இந்த வருஷமும் உன்னைய பாசமா தேடிக்கிட்டு இருக்கு... "
"எலேய் ஜல்லிக்கட்டுனு வீர விளையாட்டுக்கு போனா அப்பப்ப அடிப்படத்தான் செய்யும்... அதெல்லாம் எங்க வீர வரலாறுல ஜகஜம்..."
"அதுக்கு பயந்து தான் இந்த வருஷம் நீ ஊருக்குள்ள வராம இருக்கனு கட்டதுரை எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு இருக்கான்..."
"அப்படியா சொல்றான் அந்த கட்டதுரை???"
"ஆமாம் தல..."
"உண்மை எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சா?"
"ஆமாம் தல... அதுக்கு பதிலா தான் அங்க இந்த வருஷம் புதுசா நடக்க போற புட் பால் மேட்ச்ல சங்கம் உன் தலமைல கலந்துக்க போகுதுனு நம்ம போர் வாள் சவுண்ட் விட்டுட்டாரு..."
"இந்த போர் வாள் சும்மாவே இருக்க மாட்டான்யா!!! நம்மல வம்புல மாட்டி விடறதே அவனுக்கு வேலையா போச்சி... "
சரியாக அந்த நேரத்தில் உள்ளே வருகிறார் தளபதி!!!
"ஏன்யா ராயல இந்த புட் பாலுனா காலல பந்து உதைச்சி விளையாடறது தானே?"
"ஆமா தல..."
"ஏன்யா! நம்ம காலத்தான் உடச்சி புட்டானுங்களே அப்பறம் எப்படிடா நம்ம அதுல கலந்துக்க? வேணும்னே விளையாடி இந்த காலையும் உடைச்சிடுவானுங்களே!!!"
"தல!!! வேணும்னா நம்ம அமெரிக்கம் புட்பால் விளையாடலாம் தல" தளபதி புதிதாக ஐடியா தருகிறார்.
"ஏன்யா சிபி, இதுக்காக நம்ம அமெரிக்கா போய் விளையாட முடியுமா? சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு"
"தல! அமெரிக்கன் புட்பால்னா அமெரிக்கா போக தேவையில்லை. கால்ல அடிச்சிட்டு ஆடறதுக்கு பதிலா கைல பந்த தூக்கிட்டு ஓடி போயி கோல் போடனும் அவ்வளவுதான்"
"ஆஹா.. தளபதினா நீதான்யா தளபதி.... கைல எடுத்துட்டு ஓடறதுதான??? பந்த எடுத்துட்டு எப்படி ஓடறேன் பார்"
"ஆமாம் தல... அன்னைக்கு அந்த பக்கத்து வீட்டு நாயிக்கு வெச்சிருந்த பொறைய எடுத்துட்டு எப்படி ஓடி வந்திங்க.. தெரு நாய் எல்லாம் துரத்தி கூட பிடிக்க முடியலையே!!! இந்த விளையாட்டுக்கு உங்களை விட்டா ஆளே இல்லை" தலயின் பெருமையை சொல்கிறார் ராயல்
"எலேய் ராயலு நீ பெருமையா சொல்றீயா இல்லை கலாய்க்கிறியானே தெரியலையா... பேசாம நீயும் என் கூட கலாய்த்தல்ல சேர்ந்துடு" சொல்கிறார் தளபதி...
"சரி.. போட்டிக்கு எல்லாத்தையும் தயார் பண்ண சொல்லுங்க... சங்கத்து சிங்கங்களுக்கு எல்லாம் அழைப்பை அனுப்பிடுங்க...
கட்டதுரையை களத்துல சந்திக்கிறோம்னு மெயில் அனுப்புங்க...
தயாராகட்டும் விளையாட்டு அரங்கம்.. கட்டதுரையா இல்லை இந்த கைப்புள்ளையானு மோதி பார்த்துடுவோம்" தல பெருமையாக சொல்கிறார்...
விளையாட்டு ஆரம்பிக்கிறது...
கைப்புள்ள தலைமையில் வ.வா.ச அணியிணர் ஆர்ப்பாட்டமாக திரண்டு நிற்க, கட்டதுரை தலைமையில் கொலை வெறியுடன் எதிர் அணி திரண்டு நிற்கிறது...
தல, சங்கத்து சிங்களுக்கு கேம் ஸ்ட்ரேட்டஜி சொல்லி தருகிறார்...
மக்கா, யாருகிட்ட பந்து கிடைச்சாலும் என்கிட்ட தூக்கி போட்டுடுங்க.. நான் ஓடி போயி கோல் போட்டுடறேன்... என்ன புரிஞ்சிதா?
சரி தல... சங்கத்து சிங்கங்கள் ஒன்று சேர சொல்கிறார்கள்...
இப்ப சவுண்ட் எல்லாம் நல்லா தான் கொடுக்கறீங்க.. இந்த ஆர்ப்பாட்டத்த ஆட்டத்துல காட்டனும்.
சரி... யோவ் அம்பையர் ஸ்டார்ட் த கேம்... நாங்க ரெடி... தல வீரமாக முழங்குகிறார்...
ஆட்டம் அமர்க்களமாக ஆரம்பிக்கிறது...
போர் வாள் பந்தை எடுத்து தலையை நோக்கி போட அதை தல சரியாக பிடிக்கிறார்...
எதிர் அணியினர் அனைவரும் தலயின் காலை பிடித்து இழுத்து மல்லாக்க படுக்க வைத்து ஒரேடியாக மேலே விழுகிறார்கள்...
"எலேய்!!! என்னய விடுங்கடா... பந்து என்கிட்ட இல்லை.. சொன்னா நம்புங்கடா" கதறுகிறார் தல
பந்து ஜொள்ளு பாண்டியின் கையில் போக... வேகமாக தரையில் கிடக்கும் கைப்புவின் கையில் பந்தை திணித்து ஓடுகிறார் ஜொ.பாண்டி...
"ஏலேய் ஐயோக்கிய அப்பரண்டீஸிகளா!!! கீழ கிடக்கறவன் கையில ஏன்யா பந்த திணிக்கிற?" தல சொல்லி முடிப்பதற்குள் எதிர் அணியினர் அனைவரும் தலயின் மேல் வேக வேகமாக விழுகிறார்கள்.
"அடப்பாவி மக்கா!!! இதுக்கு தான் பந்த திணிச்சிட்டு வேகமா ஓடுனியா?" கத்தி கொண்டிருக்கிறார் தல...
"இல்ல தல... அந்த பக்கம் நிறைய ஃபிகர்ஸ் இருக்கு அதப்பாக்கத்தான் வேகமா போறேன்" கடமை வீரனாக சொல்கிறார் ஜொ.பாண்டி
"ஏன்யா பாண்டி இந்த ரத்த பூமியிலும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுதா?"
மீண்டும் சிங்கங்களை கூட்டி புது ஸ்ட்ரேடஜியை சொல்கிறார்...
"இனிமே யாருக்கிட்ட பந்து கிடைச்சாலும் எனக்கு தரக்கூடாது புரியுதா? நீங்களே பந்த எடுத்துட்டு போய் கோல் போடுங்க... உடம்பு இப்பவே ரணகளமாயிடுச்சி"
"சரி தல" அனைவரும் கோரஸாக சொல்கிறார்கள்
போர்வாள் பந்தை எடுத்து வேகமாக ஓட...
கட்டதுரை டீமிலிருக்கும் அனைவரும் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைப்பு மீது பாய்ந்து மேலே விழுகிறார்கள்!!!
"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
என்கிட்ட தான் பந்தே இல்லையேடா.. அப்பறம் ஏன்டா இப்படி என் மேலயே விழறீங்க?" கண்ணீருடன் கட்டதுரையை பார்த்து கேட்கிறாட் கைப்பு
"உன் சங்கத்து ஆளுங்க யாருக்கிட்ட இருந்தாலும் உன் மேல தான் விழுவோம்" தெனாவெட்டாக சொல்கிறார் கட்டதுரை
"எலேய் சங்கத்து சிங்கங்களா... உங்களுக்கெல்லாம் குச்சி மிட்டாயும் குருவி உருண்டையும் வாங்கி தறேன்.. அந்த பந்தை அவனுங்க கையில கொடுத்துடுங்கடா" கெஞ்சுகிறார் கைப்பு
"தல!!! நம்ம முன் வெச்ச கால பின் வைக்க கூடாது.. எப்படியும் இந்த ஆட்டத்துல ஜெயிச்சி நம்ம வீரத்த நிலைநாட்டனும்" வீரமாக சொல்கிறார் போர் வாள்!!!
"எலேய் போர் வாளு!!! இங்கன ஒருத்தன் இரத்த வெள்ளத்துல மிதக்கறப்ப உனக்கு இந்த விளையாட்டுல கெளிக்கறதுதான் முக்கியமா??? அந்த பந்தை அவனுங்க கைல கொடுத்து தொலைங்கடா"
கைப்புவின் பரிதாப நிலையை பார்த்து பந்தை கட்டதுரையிடம் கொடுக்க அதன் பிறகு மீண்டும் கைப்பு மேல் வேகமாக விழுகிறார்கள் கட்டதுரையின் ஆட்கள். இதுதான் சமயம் என சங்கத்து ஆட்களும் கைப்பு மேல் விழுகிறார்கள்...
"அயோக்கிய பயலுகளா!!! எல்லாம் ஒரு முடிவோடத்தான் விளையாட்ட ஆரம்பிச்சிருக்கீங்களா???
எலேய் தளபதி ஒரு காலு மட்டும் உடைச்சிடப்போறாங்கனு நான் பயந்தா இப்படி உடம்பு முழுசா கட்டு போட வெச்சிடீயே!!!" கைப்பு கதற கதற அனைவரும் மீண்டும் ஒரு முறை தல மேல் தொப தொபவென விழுகிறார்கள்!!!
21 comments:
:))
தம்பி துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல்ல தலக்கும் சங்கத்துக்கும் என்ன வாங்கி அனுப்புனீங்கன்னுக் கேட்டா இப்படி சிரிச்சா எப்படி?
அடுத்த சங்கம் டீம் ஆட்டம் ஷார்ஜாவுல்ல வச்சிருவோம் ஏற்பாடு பண்ணுங்க..
நம்ம ஊரு மாதிரியே கலைநிகழ்ச்சிகளுக்கு மட்டும் மைதானத்த ஒதுக்கிட்டாங்களாம்!
அதனால கைப்பு தலைமயில கலைநிகழ்ச்சி நடத்துறதா இருந்தா ஏற்பாடு பண்ணலாம்.
கரகாட்டம், ஒயிலாட்டம் இந்த மாதிரி
கைப்புவை லோக்கல் கபடி ஆடவைப்பீங்கன்னு பார்த்தா, இண்டர்நேஷனல் லெவல்ல ரக்பி ஆடவுட்டிட்டீங்களே...!!!
தம்பி கைப்பு இப்போத் தன்னையும் சங்கத்தையும் வலுப்படுத்த விளையாட்டுத் துறையிலே தீவிரமா இறங்கிட்டாரே.. அவர் முடிவு எடுத்திட்டா அதை அவராலேயே மாத்த முடியாதேப்பா.. என்னப் பண்ண?
ரவி.. கபடி தானே.. அதுவும் நம்ம கைப்புக்குப் பிடிச்ச விளையாட்டுத் தான்..ஆனாப் பாருங்க எதிரிங்க எல்லாம் கைப்பு எப்போ களத்துல்ல இறங்குவார் கவுத்துப் போட்டு அடிக்கலாம்ன்னு வெறியோடு அலையுறதால்ல லைட்டாச் சிந்திச்சுகிட்டு இருக்கார்..
//ஆமாம் தல... அன்னைக்கு அந்த பக்கத்து வீட்டு நாயிக்கு வெச்சிருந்த பொறைய எடுத்துட்டு எப்படி ஓடி வந்திங்க.. தெரு நாய் எல்லாம் துரத்தி கூட பிடிக்க முடியலையே!!! இந்த விளையாட்டுக்கு உங்களை விட்டா ஆளே இல்லை" தலயின் பெருமையை சொல்கிறார் ராயல்//
:))))))))))))))))))))))))))))
தலபுராணம் பாடுறதுல ராயலு ராயலுதான் ;)))
எலேய், இதுக்கு பெரு தான் சுத்தி சுத்தி ஆணி அடிகிறது பொல
ரொம்ப ரசித்தேன், கலக்கல் post.
:)))))))
// கப்பி பய said...
:))))))) // //
என்ன கப்பிநிலவரே இப்போல்லாம் கலக்கல்'ன்னு ஒரெ வார்த்தையிலே முடிக்காமே அதுக்கும் சிறுசா சிரிப்பானை போட்டு போயாச்சா??
தலைக்கு இருக்குற தெறமிக்கும், வீரத்துக்கும், அமெரிக்க ஃபுட்பாலா...
தலய WWF ல எறக்கி விடுங்கப்பா...
இதுல ஒரு டையலாக் மிஸ்ஸிங்....
வெட்டி கொல்டி பட ஸ்டைல்ல கலர் சட்டையப் போட்டுக்கிட்டு தல மேல பறந்து பறந்து விழுறாரு :)))
//ஜி said...
தலைக்கு இருக்குற தெறமிக்கும், வீரத்துக்கும், அமெரிக்க ஃபுட்பாலா...
தலய WWF ல எறக்கி விடுங்கப்பா...//
அடுத்து இறக்கி விட்டுட்டா போச்சு...
தல அதுக்கு தான் இப்ப தயாராகிட்டு இருக்காரு (மருத்துவமனைல...)
//ஜி said...
இதுல ஒரு டையலாக் மிஸ்ஸிங்....
வெட்டி கொல்டி பட ஸ்டைல்ல கலர் சட்டையப் போட்டுக்கிட்டு தல மேல பறந்து பறந்து விழுறாரு :)))//
எலேய்!!!
காதல் தோல்வில இருக்கியே உன்னைய ஒன்னும் சொல்ல வேண்டாம்னு பார்த்தா நீ அடங்க மாட்ட போலிருக்கே ;-)
என்னாது இது சிறுபுள்ள தனமா இல்ல இருக்கு...சங்கத்துல இவ்வளோ சிங்கங்கள் இருந்தும்..கட்டதுரை கோஷ்டிய எப்படி தல மேல விழ விடலாம்...அவங்க நினைக்கும் போதே நம்ம தல மேல விழுந்து கை கால உடைக்க வேண்டாமா :-)
//தலய WWF ல எறக்கி விடுங்கப்பா... //
@ஜி,
தல அதுக்கு எல்லாம் அசரமாட்டார்...எத்தன பேரு மேல குதிச்சாலும் அப்படியே அடிபடாத மாரியே போஸ் குடுப்பார் :-)
கலக்கிடீங்க..... நெஜம்மா சிரிப்பு வந்தது.
இனியாள்
//ஜி said...
இதுல ஒரு டையலாக் மிஸ்ஸிங்....
வெட்டி கொல்டி பட ஸ்டைல்ல கலர் சட்டையப் போட்டுக்கிட்டு தல மேல பறந்து பறந்து விழுறாரு :)))//
வெட்டி சொல்லவே இல்ல...
கொல்டி உங்க உண்மை கதையா??
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...
உங்களுக்குள்ள இவ்ளோ பெரிய சோகமா???
//Syam said...
என்னாது இது சிறுபுள்ள தனமா இல்ல இருக்கு...சங்கத்துல இவ்வளோ சிங்கங்கள் இருந்தும்..கட்டதுரை கோஷ்டிய எப்படி தல மேல விழ விடலாம்...அவங்க நினைக்கும் போதே நம்ம தல மேல விழுந்து கை கால உடைக்க வேண்டாமா :-)//
அது முதல்ல செஞ்சா அப்பறம் கடைசி வரைக்கும் யார் மேல குதிக்கறது???
//Iniyal said...
கலக்கிடீங்க..... நெஜம்மா சிரிப்பு வந்தது.
இனியாள்//
மிக்க நன்றி இனியாள்!!!
//இம்சை அரசி said...
//ஜி said...
இதுல ஒரு டையலாக் மிஸ்ஸிங்....
வெட்டி கொல்டி பட ஸ்டைல்ல கலர் சட்டையப் போட்டுக்கிட்டு தல மேல பறந்து பறந்து விழுறாரு :)))//
வெட்டி சொல்லவே இல்ல...
கொல்டி உங்க உண்மை கதையா??
ரொம்ப கஷ்டமா இருக்குப்பா...
உங்களுக்குள்ள இவ்ளோ பெரிய சோகமா???//
இ.அரசி,
நான் என்ன சிவாஜி கணேசன் மாதிரியோ இல்லை கமல் மாதிரியோ உள்ள சோகத்த வெச்சிட்டு வெளிய சிரிக்கிற டைப்பா???
வருத்தப்படாத வாலிபனுங்கோ!!!
Post a Comment