Monday, August 7, 2006

அட்லாஸ் வாலிபர் - ஒரு விளக்கம்

நம்ம சக விவசாயி இளா நம்மள சங்கப்பணி ஆற்றிட வாங்கன்னு கூப்பிட்டப்ப இருந்து நம்ம மனசுல ஒரு சந்தேகம்ங்க.. 'அட்லாஸ் வாலிபர்' அட்லாஸ் வாலிபர்'ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?
வாத்தியார் நடிச்ச உலகம் சுற்றும் வாலிபன் தெரியும், வைஜெய்ந்திமாலா நடிச்ச வஞ்சிக் கோட்டை வாலிபன் தெரியும், நம்ம 'சிங்கம் பெத்த புள்ளை' மனோஜ் நடிக்கிறதா இருந்த வாலிபன் கூட தெரியும், இவுங்கென்னமோ புதுசா அட்லாஸ் வாலிபர்'ங்கிறாங்க, எதாவது வாலிபவயோதிக அன்பர்கள் மாதிரி சமாச்சாராமான்னு கொஞ்சம் டர்ரியலா இருந்துச்சுங்க. சொன்னவுடனே மிதப்பா சரின்னு சொல்லியாச்சு, இப்ப மறுபடி போயி, 'அட்லாஸ்'ன்னா என்னன்னு கேட்டு 'அட்லாஸ்ட்'ல இவன் அவ்ளோதானான்னு நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டாங்கன்னு என்ன செய்யிறதுன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டனுங்க. நம்மளா எதுக்கு போயி வாயகுடுத்து வாங்கிகட்டிகிட்டு, அப்புறம் நம்ம மனவிகாரத்தை நாலு பேரு தெரிஞ்சுகிட்டு, தேவைங்களா அதெல்லாம்? அதுனால தாங்க, நிறையா நேரத்துல நாம அமைதியா இருந்துட்டம்ன்னா நம்மள மெத்த படிச்ச அறிவாளிக, ஆழ்சிந்தனை கூட்டத்தை சேர்ந்தவங்கன்னு அடுத்தவங்க முடிவு பண்ணிக்குவாங்க, நாமளா போயி 'ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை'ங்கிற ரேஞ்சுல எதயாவது பேசி, 'நம்ம மேதாவிதனத்தை காட்டி திருவாத்தானாகறத விட அமைதியா இருக்கிறது மேல்ன்னு, நான் அடிக்கடி இந்த மாதிரி அமைதியா இருந்திடறதுங்க.. (அப்படி இருந்தும் யாரும் நம்மள அறிவாளின்னு ஒத்துகலைங்கிறது வேற விசயம் :( )

நமக்கு தெரிஞ்சு, நாலாப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்துல தினமும் அட்லாஸ் பார்த்து நாலு இடத்தை தெரிஞ்சுகிட்டா அறிவுவிருத்தியாகும்னு கார்த்திகா மிஸ் சொன்னாங்கன்னு, எங்கய்யன் கிட்ட சொல்லி கடைவீதி நாகமாணிக்கஞ்செட்டியார் கடையில வாங்கன TTK அட்லாஸ் தான் ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. கலர் கலரா குறுக்க கோடு போட்டு உலகத்தை முழுசா நான் பார்த்தது அதுல தாங்க், இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். 'யாருய்யா அது அட்லாஸ் பார்த்து அறிவு வளந்துச்சான்னு எல்லாம் கேக்கிறது..?? எதோ அன்னைக்கு மிஸ் சொன்னாங்க வாங்கினோம், அவ்ளோ தான், அப்படி எல்லாம் அறிவு வளர்ந்திருந்தா இந்நேரம் நாம எப்படி இருந்திருப்போம். அந்த அட்லஸ வாங்கிட்டு பள்ளிகூடத்துக்கு போயி, பக்கத்து பெஞ்சு 'திருப்பு' நம்ம கிட்ட அதுல நைல் நதிய காட்ட சொல்லி நானும் அதைய அமேரிக்ககண்டம் பூராவும் தேடிப்பார்த்து கிடைக்காம, அப்படி ஒரு ஆறே இல்லைன்னு நம்ம கூட்டாளி 'செந்தான்' கூட சேர்ந்து அடிச்சு விட்டு, அப்புறம் 'ஃப்ரான்சிஸ்' அதைய ஆப்ரிக்காவுல கண்டுபுடிச்சு குடுத்து, 'திருப்பு'கிட்டயும் அவ நட்புவட்டத்து கிட்டயும் நாங்க பட்ட அவமானம் எல்லாம்... ம்ம்.. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, நம்ம ஆப்பு வாங்க ஆரம்பிச்ச வரலாறு. இதெல்லாம் வாலிப வயசுல ஜகஜம் தான்னு வச்சுக்கோங்க, வாழ்க்கையில இப்படிப்பட்ட அவமானங்களை எல்லாம் சர்வ சாதரணமா கடந்து அதையே வெற்றிபடிகளாக்கி தாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கோம், சும்மா கிடையாது.. ஆமாம்..!

அதுவுமில்லாம் நமக்கு இந்த வரலாறு தான் இஷ்டமான பாடம்ங்க, செத்தவன் கதை கேக்கிறதுல அவ்வளவு சந்தோஷம் நமக்கு, இந்தபூகோளம் அவ்வளவா புடிக்காதுங்க, சிவிக்ஸ் கூட எப்படியோ இந்த 'preamble' வச்சே ஓட்டிட்டோம். பூகோளத்துல சும்மாவாச்சும் எதாவது ஒரு மேப்பை குடுத்து, மலை காடு ஆறு ஊருன்னு எல்லாம் எங்கிருக்குன்னு குறிக்க சொல்லி படாத பாடு படுத்துவாங்க, தப்பா குறிச்சு வச்சா தங்கவேலு சார் வேற ஒவ்வொரு தப்புக்கும் திரும்பி நிக்க வச்சு பிரம்புல ஒரு அடி போடுவாரு... ம்ம் அதுக்காகவே பேண்ட்டுக்குள்ளார எக்ஸ்ட்ராவா ஒரு டவுசர் போட்டுட்டு வருவானுக நம்ம பசங்க. நம்ம கூட்டாளிகளுக்கு அதெல்லாம் அவ்வளவு வேக்யானம். நானா..? நானெதுக்குங்க அப்படி எல்லாம் செய்யிறேன்.. 'பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா புகை போட்டு பழுக்க வப்பானுங்க', யூ நோ தி மேட்டர், உங்களுக்கு மட்டும் சொல்றேன், ரகசியமா வச்சுக்கோங்க, நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன 'பார்த்தி' தான் பூகோளத்துல பிச்சு உதறுவானே, அப்படி ஒருத்தன் முன்னாடி பெஞ்சுல உக்காந்து பரிட்ச்சை எழுதும் போது, நாம தப்பு பண்ணுவமா என்ன? 'பள்ளிக்கூடம் முச்சூடும் இப்படியேதான் படிச்சியா?' 'பரிட்ச்சைக்கு போகும் போது 'பார்த்து எழுது தம்பி'ன்னு எங்கம்மா சொல்லிவிடுவாங்க, நாமெல்லாம் தாய் சொல்லை தட்டாம வளர்ந்த புள்ளையாச்சுங்களா, அதான் அப்படியே லேசா..என்னங்க, பப்ளிக்ல இப்படி சின்ன புள்ளத்தனமா எல்லாம் கேள்விகேட்டுட்டு, உங்களோடு ஒரே ரவுசுங்க.. அதெல்லாம் நான் தனியா வச்சுக்கலாம்.

ஆஹா, வழக்கம் போல அட்லாஸ் வாலிபர் பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன், இது ஒரு கெட்ட பழக்கம்ங்க எனக்கு..
ஒரு வேளை அட்லாஸ் வாலிபர்ன்னா நாலாப்பு படிச்சப்போ நடந்த மாதிரி தினமும் நாலு இடத்தை தெரிஞ்சு அதை பத்தி எழுதனமோன்னு நினைச்சனுங்க.. சரி அப்படியே பொள்ளாச்சி டவுன்ல ஆரம்பிச்சு மாக்கினாம்பட்டி, ஊஞ்ச்வேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி, கோழிக்குட்டை, ஆனமலை, சேத்துமடை, ஒடையகுளம், ஊத்துகுளி, காளியாபுரம், சமத்தூர், கோட்டூர், ஆழியார், கிணத்துகிடவு, தாமரைக்குளம், புரவிபாளையம், நல்லூர், நெகமம்ன்னு நம்ம ஊரை சுத்தி இருக்கிற 225 கிராமங்களையும் பத்தியும் பூகோள குறிப்புகளா எழுதிடுவோம்ன்னு கொஞ்சம் தயாரா இருந்தனுங்க.. தினம் ஒரு ஊரை பத்தி எழுதினாலும் அட்லாஸ் வாலிபரா ஒரு வருஷம் ஓட்டிலாம்னு நொம்ப சந்தோசத்துல இருந்தனுங்க. அப்படி நம்மள சந்தோஷமா இருக்க விட்டிருவாங்களா என்ன..?

அப்பத்தான் முன்னாடி சங்கத்துல இலவசகொத்தனாரை வரவேற்க்க போட்ட பதிவுல இந்த படத்தை பார்த்தனுங்க, அப்பத்தான் நமக்கு லேசா விவரம் புரிஞ்சுதுங்க.. அட்லாஸ் வாலிபர்ன்னா இந்த பூகோளபாடத்துல வர்ற அட்லாஸ் கிடையாதுங்களாம், இது வேறயாம்..

இந்த மாசத்துக்கு வருத்தப்படாத வாலிப சங்கத்துக்கு வர்ற ஆளுக கொண்டார ஆப்பையெல்லாம் சிரிச்ச மாதிரியே வாங்கிகிட்டு சங்கத்தை என் தோள்மேல தூக்கி வச்சி அப்படியே சப்ஜாடா கலகலப்பா கொண்டுட்டு போற வேலையாம் இது.. சரி நமக்கு எப்பவுமே பொறுப்புகளை சுமக்கிறதுன்னா ரொம்ப சந்தோஷமான விசயமாச்சே.. நமக்கு இதெல்லாம் சாதரணம் பாருங்க..
ஹூ ஈஸ் தட்ட் ட்டிஸ்ட்டர்பன்ஸ்..?? யாருய்யா அது 'வேற வேலை வெட்டி ஒன்னும் இல்லாட்டி இப்படித்தான்'னு எல்லாம் சவுண்ட் விடுறது.. அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.. சூரியன்ல தலைவர் 'பன்னிக்குட்டி ராமசாமி' சொல்ற மாதிரி 'நான் ஒர்ர்ரே ப்பிஸி செட்டியார் மதர்'.

ஆக மொத்தம் அட்லாஸ் வாலிபருக்கு அர்த்தத்தை அட்லாஸ்ட் கண்டுபுடிச்சாச்சுங்க.. இதை பத்தி விளக்கமா சொல்றதுக்கு கோணார் தமிழ் உரை எல்லாம் போட முடியாதுங்களே, அதுனால நானே சொல்லிடறனுங்க. நெத்தியில அடிச்சாப்புல ஒரே வரியில பளிச்சுன்னு சொல்லனும்ன்னா "தூக்கி தோள்ல போட்டுட்டு நிக்கிற ஆளு தான் அட்லாஸ் வாலிபர்".. இது தாங்க விளக்கம்.

எப்படியாவது ஒரு மாசத்துக்கு தூக்கி தோள்ல வச்சுகனும் அவ்ளோதாங்க..:)

சரி, இப்பத்தான் என்ன விசயம்னு தெரிஞ்சிருச்சு இல்லை, இனி மேல் தெம்பா தோள்ல தூக்கி வச்சுக்கறேன். சரீங்களா?

(இப்படியே பில்டப் குடுத்துட்டே போனா எப்படி, ஏற்க்கனவே ரெண்டு மூணு நாளாச்சு, எப்பத்தான்டா உருப்படியா ஒரு பதிவு போடுவேன்னு கேட்டீங்கன்னா, ஹி.. ஹீ.. அதுக்கு மேட்டர் இருந்தா நான் ஏங்க இப்படி உளரிகொட்டிட்டு இருக்கேன்.. இன்னும் இருவது இருவத்தஞ்சு நாள் இருக்குதில்லீங்க.. ஒரு கை பார்த்திருவோம்)

34 comments:

நாமக்கல் சிபி said...

//ஆக மொத்தம் அட்லாஸ் வாலிபருக்கு அர்த்தத்தை அட்லாஸ்ட் கண்டுபுடிச்சாச்சுங்க.. //

அட்லாஸ் வாலிபர்னா என்னன்னு ஆராய்ச்சி பண்ணியே ஒரு வாரம் போயிடுச்சு!

Unknown said...

ராசா சுயிட் நெம்.

ஹேய் ஜென்டில் மேன்.. இ லைக் யூ

ஆமா உனக்கு டாக்டர் டெல் சொங்கப்பாவைத் தெரியுமா?

நாகை சிவா said...

//இன்னும் இருவது இருவத்தஞ்சு நாள் இருக்குதில்லீங்க.. ஒரு கை பார்த்திருவோம்//
கைப்பூ ஒரு கை பாத்திருவோம் என்று சொல்ல வருகீன்றீர்களா.
பாத்திருவோம்.....

ilavanji said...

// ஒரே வரியில பளிச்சுன்னு சொல்லனும்ன்னா "தூக்கி தோள்ல போட்டுட்டு நிக்கிற ஆளு தான் அட்லாஸ் வாலிபர்".. இது தாங்க விளக்கம். //

ராசா... இந்த ஒரே வரிய மொதல்லயே சொல்லியிருக்கலாம்ல?!

சங்கமே ஒரு மெகா பில்டப்பு... அதுக்கே நீர் பில்டப்பு பதிவு போடறீர்ன்னா என்னன்னு சொல்ல? "சப்ஸே படே கில்லாடி"யா நீர்!!!!

( P.S: ராசா.. கோச்சுக்காதீங்க... அட்லஸ் வாலிபருக்கு ஆப்புகளை மட்டுமே பின்னூட்டமா போடனும்னு ரூல்ஸ் இருக்காம்ல! )

ரவி said...

நான் ஏதோ ஏழாவது படிக்கும்போது வாங்கின அட்லாஸ் மேப்பு மாதிரி இருக்கும் என்று நினைச்சேன்..

இப்போதான் விளங்குச்சு...

Unknown said...

சாரி சுமால் மிஸ்டேக்.. அது டாக்டர் டென் சொங்கப்பா.. இந்த ஒரே இந்தியாவில்ல காய்ச்சல் வந்து யார் படுத்தாலும் அவர் தான் மருந்துக் கொடுப்பார் உங்களுக்கும் அவர் தான் மருந்துக் கொடுத்தாரா?

Unknown said...

அப்புறம் அந்த தோள்ல்ல தூக்கி வைக்கிற மேட்டர் எல்லாம் கரெக்ட்டா சொன்ன நம்ம விவசாயி... தோள் உலகம் இருக்கும் போது ஸ்டார்ட் மியூசிக் சொல்லுவோம் அதுக்கு ஒத்தக் காலைத் தூக்கிட்டு நீங்க டான்ஸ் எல்லாம் ஆடணும்ங்கறதைச் சொன்னாரா?

Unknown said...

//சங்கமே ஒரு மெகா பில்டப்பு... அதுக்கே நீர் பில்டப்பு பதிவு போடறீர்ன்னா என்னன்னு சொல்ல? "சப்ஸே படே கில்லாடி"யா நீர்!!!!//


வாத்தி அடி ஆத்தி என்ன வார்த்தைச் சொல்லிப் புட்டிய...

புள்ள இப்போத் தானே பூ மிதிக்கவே கிளம்பியிருக்கு அதுக்குள்ளே இப்படி பீதியக் கிளப்புனா எப்படி?

நாகை சிவா said...

//புள்ள இப்போத் தானே பூ மிதிக்கவே கிளம்பியிருக்கு அதுக்குள்ளே இப்படி பீதியக் கிளப்புனா எப்படி? //
தேவ், ராசா பூ மதிக்கும் போது சவுண்ட் விட காந்த கன்னிகள் ரெடியா?

கைப்புள்ள said...

//'ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை'ங்கிற ரேஞ்சுல எதயாவது பேசி, 'நம்ம மேதாவிதனத்தை காட்டி திருவாத்தானாகறத விட அமைதியா இருக்கிறது மேல்ன்னு//

அடாடடடா! அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம்? ராசான்னா ராசா தான். பதிவு நல்லாருக்குதுங்ணா. அட்லாஸ் வாலிபருக்கு வெளக்கம் சொன்னதுக்கும் டேங்ஸுங்கோ!

உங்கள் நண்பன்(சரா) said...

//நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன 'பார்த்தி' தான் பூகோளத்துல பிச்சு உதறுவானே, அப்படி ஒருத்தன் முன்னாடி பெஞ்சுல உக்காந்து பரிட்ச்சை எழுதும் போது, நாம தப்பு பண்ணுவமா என்ன? //

ஏம்பூ ராசா...சும்மாவே இங்க
முன் பெஞ்ச பார்த்து எழுதுன வெவகாரம் சட்டசபை வரைக்கும் நடக்குது, இதுல நீங்க வேறயா...


அன்புடன்...
சரவணன்.

துபாய் ராஜா said...

'பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா புகை போட்டு பழுக்க வப்பானுங்க'

ராசா!தூள் கிளப்புங்க.

Syam said...

//அடாடடடா! அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம//

தல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க...இன்னும் ராசா அதெ தேர்ட் ஸ்டாண்டர்ட் தான்...

இலவசக்கொத்தனார் said...

நல்ல வேளை. இதெல்லாம் சொல்லறதுக்கு முன்னாடி,நம்ம ஆட்டம் ஓவர்.

ரொம்ப டேங்ஸ் ராசா.

இலவசக்கொத்தனார் said...

//தோள் உலகம் இருக்கும் போது ஸ்டார்ட் மியூசிக் சொல்லுவோம் அதுக்கு ஒத்தக் காலைத் தூக்கிட்டு நீங்க டான்ஸ் எல்லாம் ஆடணும்ங்கறதைச் //

தேவு, பாட்டைப் போட்டுன்னு தமிழ்ல சொல்லாம ஸ்டார்ட் மியூசிக்ன்னு ஏன் சொல்லணும்? அந்த ரகசியம் எனக்கும் சிபிக்கும் மட்டும்தான் தெரியும்.

கப்பி | Kappi said...

//ஒரு கை பார்த்திருவோம்//

இது ஜெமினி படத்துல வர்ற ஒரு அள்ளக்கை பேரு தானே???

கப்பி | Kappi said...

யப்பா..நீங்க அட்லாஸ் வாலிபரா இல்ல அட்லாஸ் ப்ரொபசரா?? விளக்கமெல்லாம் சொல்லிகிட்டு...கெரகத்தே...

கொங்ஸ்...கமான்யா...ஸ்டார்ட் ஆப்ஸ்...

Pavals said...

நாமக்கல் சிபி >> //ஒரு வாரம் போயிடுச்சு!// ஆராய்ச்சிங்கிறது மனிதமேம்பாட்டுக்கு ரொம்ப முக்கியம்ங்க.. :)

தேவ் >> //டெல் சொங்கப்பாவைத் தெரியுமா? டென் சொங்கப்பா.?// எனக்கு எங்கப்பாவை மட்டும் தான் தெரியும்..

நாகை சிவா >> பார்த்திருவோம்..

Pavals said...

இளவஞ்சி >> 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மரம் மறுபடி வெல்லும்' இந்த ஒத்த வரிதாங்க மகாபாரதம்.. பில்ட்-அப் குடுத்தா தான் பேரு வாங்க முடியும்ன்னு நமக்கெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடியே 'பன்னிக்குட்டி ராமாசாமி' சொல்லிகுடுத்திருக்காருங்க, அந்த வழியில வந்து, இங்க 'கைபுள்ள' சங்கத்துல நிக்கும் போது இந்தளவுக்கு கூட பில்ட்-அப் குடுக்காட்டி எப்படிங்க.

//ராசா.. கோச்சுக்காதீங்க... //
இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில சாதரணமப்பா..

Pavals said...

செந்தழல் ரவி >> எதோ விளங்குனா சரி..

தேவ் >> //ஒத்தக் காலைத் தூக்கிட்டு நீங்க டான்ஸ் எல்லாம் ஆடணும்ங்கறதைச் சொன்னாரா?// யோவ் தேவு, உன்னைய பார்க்கையில எனக்கு சிப்பு சிப்பா வருதுய்யா.. நாங்கெல்லாம் ஒத்த காலை தூக்கி ஆட ஆரம்பிச்சுத்தான் அந்த நடராசரே அப்படியே சிலையா நின்னது.. நம்ம கிட்ட போயி ஸ்டார்ம்யூசிக் எல்லாம் சொல்லிகிட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கே ஸ்டெப் சொல்லிகுடுத்தவயங்க நாங்க.. தெரியுமில்ல.. நம்மகிட்ட போயி.. ஹஹ..

Pavals said...

நாகை சிவா >> //காந்த கன்னிகள் ரெடியா? // அதுதான் எங்க தலைவர் எல்லா காந்த கண்ணழகிக்கும் பார்லிமன்ட்'ல எடம் பார்த்து குடுத்துட்டாரில்ல.. இனி இங்கன எங்க இருக்காங்க அவிங்கஎல்லாம்.

கைப்பு>> //அந்த சின்ன வயசுலியே எம்புட்டு முதிர்ச்சி...எம்புட்டு ஒலக ஞானம்? // அப்படியே இதைய ஒரு நாலு பதிவு பக்கமெல்லாம் போயி சொல்லுங்க கைப்பு.. அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கறதுல வல்லவரு.. இப்படி எல்லாம் ஊருகுள்ளார போயி சொல்லனும் நீங்க.

Pavals said...

நண்பா சரவணா //ும்மாவே இங்க
முன் பெஞ்ச பார்த்து எழுதுன வெவகாரம் சட்டசபை வரைக்கும் நடக்குது, // வேண்டாம் அப்புறம் நான் அழுதுபோடுவேன் அழுது.. பெரிய இடத்து மேட்டரெல்லாம் இங்கன கொண்டு வராதீங்க..

துபாய் ராஜா >> கிளப்பிருவோம்

ஷ்யாம் >> //அதெ தேர்ட் ஸ்டாண்டர்ட் தான்...// அதானே, அதுக்கு மேல படிச்சா அப்புறம் சாமி கண்ணை குத்திடும்னு அத்தோட நிப்பாட்டிக்கிட்டேன்..

கொத்ஸ் >> தாங்க்யூ..

Pavals said...

கப்பி பய >> பிரியலைங்களே?

//நீங்க அட்லாஸ் வாலிபரா இல்ல அட்லாஸ் ப்ரொபசரா?? // நாங்கெல்லாம் பாடம் நடத்த ஆரம்பிச்சா அப்புறம் நீங்கெல்லாம் தாங்க மாட்டீங்க.. இது சும்மா ட்ரெயிலர் மச்சி.. மெயின் பிக்சர் இனி மேல் தான் இருக்கு,..

கைப்புள்ள said...

//கைப்பு.. அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கறதுல வல்லவரு.. இப்படி எல்லாம் ஊருகுள்ளார போயி சொல்லனும் நீங்க.//

சொல்றேன்...சொல்றேன். அதே ஆல் இன் ஆல் இன் அமுத மொழிக்கு இணங்க "ஆம்பளைங்க கிட்ட சொல்லனும்ங்கிறது அவசியம் இல்லை. குறிப்பா நம்ம ஊரு பொம்பளைங்க கிட்ட சொல்லனும்" அம்புட்டுத் தானே? அப்பிடியே செஞ்சிர்றேன். பின் விளைவுகளை மட்டும் நீங்க பாத்துக்கங்ணே.

Unknown said...

ராசா... டென் சொங்கப்பாவைத் தெரியாதா.. அட கட்டாயம் தெரிஞ்சிக்கணும்ப்பா...நம்ம பன்னிக்குட்டிக்கு பெரியப்பா மொறை வேணும் அவர்.. இந்தக் கோமுட்டித் த்லையன் டிரவுசர் போட்டுகிட்டு அவர் கிட்டத் தான்ய்யா கம்ப்பவுண்டரா வேலைப் பார்த்தான்:)

Unknown said...

//எனக்கு எங்கப்பாவை மட்டும் தான் தெரியும்..//

//யோவ் தேவு, உன்னைய பார்க்கையில எனக்கு சிப்பு சிப்பா வருதுய்யா.. நாங்கெல்லாம் ஒத்த காலை தூக்கி ஆட ஆரம்பிச்சுத்தான் அந்த நடராசரே அப்படியே சிலையா நின்னது.. நம்ம கிட்ட போயி ஸ்டார்ம்யூசிக் எல்லாம் சொல்லிகிட்டு.. மைக்கேல் ஜாக்ஸனுக்கே ஸ்டெப் சொல்லிகுடுத்தவயங்க நாங்க.. தெரியுமில்ல.. நம்மகிட்ட போயி.. ஹஹ.. //

இந்தப் பதில் எல்லாம் உனக்கு யாரோச் சொல்லிக் கொடுத்த மாதிரி இல்ல தெரியுது... ஆபிஸ்ல்ல முன் சீட்ல்ல வேற யாரும் அட்லாஸ் வாலிபர் இருக்காரா?

Unknown said...

ஆனா ஒண்ணு ராசா...

இந்த அட்லாஸ் மேட்டருக்கு மேப் போட்டுக் கொடுத்தவருக்கே நீ சொல்லித் தான் அட்லாஸ்ன்னா என்னன்னு விளங்கியிருக்கு.. விவரமான புள்ளத் தான் நீயு.. ஒத்துக்கிறேன்... சங்கத்துப் பக்கத்துல்ல நடக்கும் போதும் தைரியமாவே நடக்குற நீயு... எவ்வளவு தான் பூ போட்டாலும் ஸ்மைல் விட்டுக்கிட்டே (ஹே ஹே) நல்லாத் தான் மிதிக்கிற.. உன்னிய நல்லவன்ன்னு நாங்க சிக்கீரமாச் சொல்லத் தான் போறோம்...

அது வரைக்கும் அதே மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் போட்டுகிட்டே இரு... ஓ.கே.
பாண்டி காந்தக் கண்ணழகிஸ் எல்லாம் பார்லிமெண்ட்ல்லருந்து வந்தாச்சான்னாப் பாருப்பா

ILA (a) இளா said...

முதலில் கல்கி கண்டது நமது சங்கம். இன்று பாண்டியின் ஜொள்ளு ஒன்று குங்குமம் வாரப் பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. அதற்கு ஒரு பெரிய ஓ. அப்படியே இந்த மாதிரி படைப்பையெல்லாம் வெளிக்கொணர காரணாமாக இருந்த பாலபாரதிக்கு, சங்கம் சார்பாக ஒரு பெரிய நன்றி.

Pavals said...

கைப்பு >> //குறிப்பா நம்ம ஊரு பொம்பளைங்க கிட்ட சொல்லனும்" அம்புட்டுத் தானே? // க.க.க.போ.. :)


தேவ் >> //ஆபிஸ்ல்ல முன் சீட்ல்ல வேற யாரும் அட்லாஸ் வாலிபர் இருக்காரா?// நோ வாலிபர்.. ஒன்லி வாலிபிஸ் .. :)

//உன்னிய நல்லவன்ன்னு நாங்க சிக்கீரமாச் சொல்லத் தான் போறோம் // ஸாரிப்பா, நான் பொதுவா இந்த பாராட்டு விழாவுக்கெல்லாம் போறதில்லை.. பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்..

ILA (a) இளா said...

//பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்.. //
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் அரசியல் கூடாது
//ஒன்லி வாலிபீஸ்//
மாப்பு, மனசுல வெச்சுக்கிறேன், பின்னாடி பத்த வைக்க உபயோகப்படும்.

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க வாங்க ராசா :)) அடடா தலையை இதுக்குத்தான் பிச்சுக்கிட்டீயளா !!! என்னாங்க ராசா இதையெல்லாமா ஆராய்ஞ்சுகிட்டு !! தானாவே தெரிஞ்சுடும்லே !! கையப் பாப்பீங்களோ காலைப் பாப்பீங்களோ சீக்கிரம் ஆவட்டும் மக்கா !! சும்மா ரவுண்டு கட்டி கலக்குங்கோ !!

Unknown said...

//நோ வாலிபர்.. ஒன்லி வாலிபிஸ் .. :)//

ராசு..கன்னு அப்படின்னா இன்னிக்கு உன் கையிலே பூ மிதி திருவிழாவா... ஸ்டார்ட் மியூசிக்கா..

Unknown said...

//தேவு, பாட்டைப் போட்டுன்னு தமிழ்ல சொல்லாம ஸ்டார்ட் மியூசிக்ன்னு ஏன் சொல்லணும்? அந்த ரகசியம் எனக்கும் சிபிக்கும் மட்டும்தான் தெரியும்.//

யப்பா கொத்தனார் நோட்ஸ் கிடைக்காம நான் படுற பாடு இருக்கே.. முடியல்ல..

Pls Tell me also yaa

Unknown said...

//ஸாரிப்பா, நான் பொதுவா இந்த பாராட்டு விழாவுக்கெல்லாம் போறதில்லை.. பொன்முடிப்புன்னா கன்சிடர் பண்ணுவேன்..//

வாலிபீஸ் டூ பொன்முடிப்பு... பொன்முடிப்பு டூ வாலிபீஸ்

டுடே ராக்கி.. ராக்கி டுடே... அப்பூ இளா இது ஆப்பு மேட்டர்டீ.. பின்னாலே பத்த வைக்க வெயிட் பண்ண வேணாம் இப்போ.. இப்போவே ரெடி..

தங்கச்சி.. தங்கச்சிம்மா................ உன்ற வருங்கால வூட்டுக்காரை வந்து ஒரு நடை என்னன்னு கேளு தங்கச்சிம்மா