Wednesday, August 30, 2006

குயி...குயி...குயி...குயிஜு

குயி...குயி...குயி...குயிஜு அப்படின்னே ஒரு 10 பதிவு போட்டு அறிவாளியா காட்டிகிட்ட கைப்புக்காகவே இந்தக் கேள்விகள். இப்படியே குயி...குயி...குயி...குயிஜு ன்னு வெச்சு, எல்லாம் மக்களையும் எவ்வளவு நாள்தான் திசை திருப்பறது. அப்படியே பின்னூட்டம் வேற போட்டு பரிசு கெலிக்கிறார். உம்மையாவே அறிவு ரொம்ப ஜாஸ்தியாகிப்போச்சு நம்ம கைப்புக்கு.

போன முறை சினிமா கேள்விகளை மட்டுமே போட்டு கலாய்த்தது சங்கம். அதுக்கு வரவேற்பு் நல்லா இருக்கவே இந்த முறை விவரமாக வேற வேற துறைகளிலும் சினிமா, வலை உலகம்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்டா அள்ளி விட்டு இருக்கோம். மக்கா, பதிலைக் கண்டுபுடிச்சா அது கைப்பு குடுத்த ட்ரெய்னிங்க்ன்னு நெனச்சுக்குவோம். இல்லைன்னா....கைப்பு திரும்பவும் குயி குயி'ன்னு சொன்னாருன்னா ..ஹூ ஹூம் சொல்ல மாட்டோம் செஞ்சு காட்டுவோம். சரி கேள்விக்கு வருவோம்

கம்ப்யூட்டர்ஜி மக்களுக்கு அந்த கேள்விகளை காட்டுங்க.
டொடொடொயங்க்

1) இடைவேளை எடுத்துக்கொண்டு ரொம்ப நாளாக தன் களப்"பணியை" செய்யாமல் இருந்தவர் இவர். மீண்டும் வந்த பொழுதும் ஒன்றுமே செய்யமுடியாமல் போனதாம். இவர் மட்டைகிளப்பைச் சேர்ந்தவராம். 'திருட்டு' மாம்பழங்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். துப்பு- தினமலர்.


2) ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் 'சிங்கிள்' எடுத்தவர்கள், ஒருவர் ஒரு 'சிங்கிளும்' ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் "தொல்லைகளே ஆவாது சாமி" என்று அந்த இரண்டு 'சிங்கி'ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.

3) இவர்கள் தவற்றைக்கண்டு 'புயல்' எனப் பாய்ந்து வேட்டையாடியதில் கிடைத்தது இரண்டு இலக்கம் 'சரக்கு'. இந்த கூட்டத்தில் ஒருவன் சிக்கியதால் வந்த வினையே இது. இதுக்கும் ஒரு துப்பு, போலீஸார்.


4) இவர் இவரோட லட்சியத்துக்காக் போராடியவர். இதற்காக ஒரு புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. துப்பு, போராடியவருக்கு நிர்வாகமே எதிரியாம்.


5) பெரிய 'கலக'த்தை உருவாக்கியவர், போனால் போகட்டும் என விட்டுவிட்டது நிர்வாகம். இவர் ரொம்ப நல்லவர்ர்ர்ர்ன்னு சொன்னது ஒரு சாரார்.

6) வலைப்பதிவை சேர்ந்த இவருக்கு ஒரு பெரிய வீடும் 5+ சின்ன வீடுகளும் உள்ளதாம். இதில் ரகசியம் எல்லாம் ஒன்றும் இல்லை, நேரடியாகக் கேட்டால் மனம் திறந்து ஒத்துக்கொள்வாராம். துப்பு- இவர் கண்ணாடி, சால்வை அணிந்த 'சக்கி'.

7) முதலாமவர்(கள்) தனித்தனியாக வலைச் சேவை செய்து தன் பொழப்பை விற்று வந்தார்கள். இரண்டாமவர் ரொம்ப பிரபலமானவர், திடீரென்று பல இடத்தில 'கால்/கை' வைத்து வெற்றி பெற்றவர். இரண்டாமவர் இப்போது முதலாமவரின் துணையோடு இன்னும் பிரபலமாகிறாராம். உள்ளுக்குள் என்ன 'Bond'ஓ ஆண்டவருக்கே வெளிச்சம்.


8) தமிழ்மணத்தில் தனி மனித தாக்குதல் தவறு என்று தெரிந்த பிறகும், அப்படித் தான் செய்வேன் என்று சொல்லும் பதிவர்கள் இவர்கள். என்று தான் திருந்துவார்களோ? சங்கமாவி யுகே யுகே

37 comments:

இராம் said...

ஐய் ஜாலி... ஒரு குயிஜீக்கு கூட ஆன்சர் தெரியலையே.......
:-)))))))

கைப்புள்ள said...

போட்டியில நாங்களும் கலந்துக்கலாமா?

நாமக்கல் சிபி said...

//ஒரு குயிஜீக்கு கூட ஆன்சர் தெரியலையே//

நல்ல வேளை!

தேவ் | Dev said...

ராம் உங்க நிலைமைத் தான் எனக்கும்.. ஒரு சாண்டும் புரியல்ல. இளா இதெல்லாம் பதிவுலக மக்களா இல்லைப் போனத் தடவை மாதிரி சினிமா டைட்டிலா?

ப்ரியன் said...

8 வதுக்கு மட்டும் பதில் தெரியும் :) அது கண்டிப்பா நான் இல்லே :)

ILA(a)இளா said...

//போட்டியில நாங்களும் கலந்துக்கலாமா? //

கைப்புக்காகவே இந்தக் கேள்விகள்.

கைப்புள்ள said...

//குயி...குயி...குயி...குயிஜு//

நானே இந்த பேரை காப்பியடிச்சுத் தான் வச்சேன். அதையும் காப்பியா?

ILA(a)இளா said...

//போனத் தடவை மாதிரி சினிமா டைட்டிலா//

இந்த முறை விவரமாக வேற வேற துறைகளிலும் சினிமா, வலை உலகம்னு எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்டா அள்ளி விட்டு இருக்கோம்.

துப்பு- விளையாட்டு, அரசியல், வலைப்பதிவாளர்,அரசாங்கம், வலை உலகம். இப்படி எல்லாம் சேர்ந்த கதம்பம்.
இன்னுமா கஷ்டம்?

கைப்புள்ள said...

//கைப்புக்காகவே இந்தக் கேள்விகள்//

வெவசாயி! இப்பிடியெல்லாம் பதில் போட்டீங்கன்னா வர்ற நாலு பேரும் தலை தெறிக்க ஓடிப் போயிருவாங்க. கொஞ்சம் யோசிச்சுப் பாத்து சொல்லுங்கய்யா.

ILA(a)இளா said...

//யோசிச்சுப் பாத்து சொல்லுங்கய்யா.//
ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
யோசித்துப் பார்த்தாச்சு.
கைப்புவுக்காகவும்

கீதா சாம்பசிவம் said...

தலையைப் பிச்சுக்கணும் போல் இருக்கு! நீங்களே பதில் எழுதிடுங்க, வந்து பார்த்துக்கறேன்.

கைப்புள்ள said...

//4) இவர் இவரோட லட்சியத்துக்காக் போராடியவர். இதற்காக ஒரு புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. துப்பு, போராடியவருக்கு நிர்வாகமே எதிரியாம்.//

இது தான் கொஞ்சம் புரியறாப்புல இருக்கு - "ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை"

துப்பை எல்லாம் கொஞ்சம் சுலபமாக்க முயற்சி செய்யுங்க சாமி. கை வைக்க முடியலை. :)

ILA(a)இளா said...

துப்புகள்:
--------
1. அ)இன்றைய தினமலர்.
ஆ)இவர் பெயரில் உண்மை இருக்கும்
இ)விளையாட்டுத்துறை

ILA(a)இளா said...

துப்பு:
-------
2. தேன்கூடு போட்டி
3. நேற்றைய டில்லி பரபரப்பு, அரசியல் இல்லை. வேட்டையாடு விளையாடு படம் இல்லை. ஆனால் காவல் துறை சம்பந்தப்பட்டது

ILA(a)இளா said...

துப்பு்:
-------
4. பாகிஸ்தான்.
5. LeT
6. தண்ணி-வட்டம்

ILA(a)இளா said...

துப்பு:
------
7. விற்பவர்-தேடுபவர்
8. கேள்வியிலேயே இருக்கு பதில். இதுக்கு பதில் தெரியலைன்னா இன்னொரு முறை கேள்வியை அழுத்திப் படிங்க

பொன்ஸ்~~Poorna said...

6 பித்தானந்தா..

மத்தவை எல்லாம்.. ஆளை விடுப்பா!!!

நாகை சிவா said...

//ஐய் ஜாலி... ஒரு குயிஜீக்கு கூட ஆன்சர் தெரியலையே.......
:-))))))) //

பதில் தெரியலை என்பதை ஜாலி சொல்லிட்டு போற என்ன புள்ளயோ நீ போ......

நாகை சிவா said...

//கேள்வியிலேயே இருக்கு பதில். இதுக்கு பதில் தெரியலைன்னா இன்னொரு முறை கேள்வியை அழுத்திப் படிங்க //

இவ்வளவு சொல்லுறீங்க. அப்படியே எந்த இடத்துல அழுத்தனும் சொன்னீங்கனா இன்னும் நல்லா இருக்கும்.

ILA(a)இளா said...

3 வது கேள்விக்கு விடை- கொஞ்சம் கஷ்டமானதுதான். வே.வி. சம்பந்தப்பட்டது மாதிரி இருந்ததனால இதுவும் ஒரு கேள்வி ஆச்சு.
சுட்டவும்

ILA(a)இளா said...

//அப்படியே எந்த இடத்துல அழுத்தனும் சொன்னீங்கனா இன்னும் நல்லா இருக்கும்.//
என்று தான் திருந்துவார்களோ? சங்கமாவி யுகே யுகே
தனிமனிதன் -- கைப்புள்ளை(பாவம்)

இராம் said...

தல,

நீ ஒரு அறிவாளின்னு வாங்குனகாசுக்கு மேலே கூவுனப்போ ஆமா யாரு இல்லைன்னு சொன்னா'னு கேட்டேலே.....?

ஆனா இப்போ பாரு உனக்கு வச்ச இந்த டெஸ்ட்'ல ஒரு ஆன்சர் கூட சொல்லலை நீயீ...... அவ்வளவுதான் இந்தவருசம் அப்ரைசல் இல்லை உனக்கு.... :-)))))

ILA(a)இளா said...

//1) இடைவேளை எடுத்துக்கொண்டு ரொம்ப நாளாக தன் களப்"பணியை" செய்யாமல் இருந்தவர் இவர். மீண்டும் வந்த பொழுதும் ஒன்றுமே செய்யமுடியாமல் போனதாம். இவர் மட்டைகிளப்பைச் சேர்ந்தவராம். 'திருட்டு' மாம்பழங்கள் என்றால் ரொம்ப இஷ்டமாம். துப்பு- தினமலர்.//

விடை சச்சின் டெண்டுல்கர்
http://www.dinamalar.com/2006aug30/specialnews1.asp?newsid=9

ILA(a)இளா said...

//5) பெரிய 'கலக'த்தை உருவாக்கியவர், போனால் போகட்டும் என விட்டுவிட்டது நிர்வாகம். இவர் ரொம்ப நல்லவர்ர்ர்ர்ன்னு சொன்னது ஒரு சாரார்.//

பதில்: அஸீஃப் முகமது சையது. லக்ஷ்சர்-இ-தொய்பா உருவாக்கியவர்
http://www.expressindia.com/fullstory.php?newsid=73023

ILA(a)இளா said...

//2) ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் 'சிங்கிள்' எடுத்தவர்கள், ஒருவர் ஒரு 'சிங்கிளும்' ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் "தொல்லைகளே ஆவாது சாமி" என்று அந்த இரண்டு 'சிங்கி'ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.//

இதுல ஒரு பவுண்டரி அடிச்சது சாட்சாத் விவசாயிதான். இப்பவாவது பதில சொல்லுங்க சாமி.

பொன்ஸ்-நீங்க சொன்ன பதில் சரி.

ILA(a)இளா said...

பதில் சொல்லாத கேள்விகள்:
2,4,7,8
2க்கு ஏற்கனவே துப்பு தந்தாச்சு. அதுக்கு பதில் நால்வர்.

4- இவர் இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை
7- இந்த வலையை தினமும் ஒரு முறையாவது உபயோகப்படுத்துவீர்கள்

8- ??????????

கொங்கு ராசா said...

//2) ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் 'சிங்கிள்' எடுத்தவர்கள், ஒருவர் ஒரு 'சிங்கிளும்' ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் "தொல்லைகளே ஆவாது சாமி" என்று அந்த இரண்டு 'சிங்கி'ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.// அடப்பாவிகளா.. நான் கூட 'சிங்கிள்' பவுண்டரி'ன்னா என்னமோ பார்த்திபன் டைப்புனு நினைச்சு பயந்து கிடந்தேன்.. நம்ம சமாச்சாரமா இது.. நடத்துங்க நடத்துங்க..

க்ளூ : ரெண்டு பவுண்டரி அடிச்ச ஆள் கூட பறக்கலாம்னு தான் நினைச்சாரு.. ம்ம் விதி வலியது

ILA(a)இளா said...

//ரெண்டு பவுண்டரி அடிச்ச ஆள் கூட பறக்கலாம்னு தான் நினைச்சாரு.. ம்ம் விதி வலியது //
கட்டி வெச்சு உதைக்கிற விதி இருக்க என்ன பண்றது. விதி வலியதுன்னு புரிஞ்ச அப்புறம். ராசா திருப்பதி விமர்சனத்துக்கு போட்டு இருந்த படம் தான் ஞாபகத்துக்கு வந்தது

இலவசக்கொத்தனார் said...

என்ன விளையாட்டு இது? ரொம்ப ஓவரா இருக்கே. கொஞ்சம் புரியறா மாதிரி கேள்வி போடுங்கப்பா.

இலவசக்கொத்தனார் said...

1) சச்சின்

அவ்வளவுதான் தெரிஞ்சுது.

நாமக்கல் சிபி said...

1. இலவசக் கொத்தனார்.

ஆமா இவர் எப்போ மட்டக் கிளப்புக்கெல்லாம் போனார்?

நாமக்கல் சிபி said...

//ஒரு ஊரில் நடந்த வலை மாநாட்டில்(???!!!!) கலந்து கொண்டவர்களில் இருவர் 'சிங்கிள்' எடுத்தவர்கள், ஒருவர் ஒரு 'சிங்கிளும்' ஒரு பவுண்டரியும் அடித்தவர், இன்னொருவர் இரண்டு பவுண்டரிகளை அடித்தவர். பவுண்டரிகளின் "தொல்லைகளே ஆவாது சாமி" என்று அந்த இரண்டு 'சிங்கி'ள்களும் நாட்டை விட்டே பறந்து விட்டார்களாம்.
//

யார் யார் எத்தனை போண்டா சாப்பிட்டார்கள் என்று எண்ணிக் கூறியது யாரோ?

கப்பி பய said...

2. ஆ. போ. வ. வா???

கப்பி பய said...

8. சங்கம் தானே?? :))))

Syam said...

என்னங்க இது ஒரு கேள்வி கூட ஈஸியா இல்லயே...

இனிமேல் இந்த மாதிரி குயி நடத்துனா கீழயே அதுக்கு ஆன்ஸ் குடுத்துடனும் :-)

mgnithi said...

1. சச்சின்
4. நவாப் அக்பர் பக்டி
5.அஸீஃப் முகமது சையது

நாகை சிவா said...

இளா,
எல்லாத்துக்கும் நீங்களே பதில் சொல்லிடுங்க சாமி.
கண்ட மேனிக்கு கண்ண கட்டுது