Friday, August 11, 2006

உறவுகள்- ஒரு தொடர்கதை

இந்த உலகத்துல எல்லாரும் சந்தோசமா இருக்க ஏன் நம்ம கைப்பு மட்டும் ஆப்பு வாங்கி கஷ்படறாருன்னு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா? வரவங்க போறவங்க எல்லாம் ஆப்பு அடிச்சிட்டு போயிட்டே இருக்கீங்க..
ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?.
இதுக்கு பதில் தெரியாம நம்ம தேவ், திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி பேந்த பேந்த முழிக்க, எங்களுக்கு எல்லாம் ஒரே பாவமா போயிருச்சு. அதனால யாருக்கு தெரியாம ஒரு கீதாக்கா தலைமையில விசாரணைக்கமிஷன் ஒன்னு வெச்சோம். அதுக்கு அவுங்க அரும்பாடு பட்டு மேல்மருவத்தூருக்கெல்லாம் போய் சாமி கேட்டு, வெத்திலையக்கிழிச்சு ஒரு உண்மையை கண்டுபுடிச்சு குடுத்தாங்க. படிச்ச உடனே சிபியும், பாண்டியும் அந்த இடத்துலேயே...... போயிட்டாங்க.
ஒரு மோசமான ஒரு பாவ காரியம் செஞ்சதுனால தான் இப்படி வாங்கு வாங்குன்னு வாங்குகிறாரு கைப்பு. சரி சரி பில்டப்பு போதும்.

விசயத்துக்கு நேராவே வந்துருங்க.(ஏன் sidela வரக்கூடாதா). கைப்பு-ஆப்பு வரலாறு தெரியனுமின்னா நீங்க பல வரலாறு தெரிஞ்சிக்கனும்.

இந்த பதிவை இன்னும் படிக்கனுமின்னா ஒரு கண்டிசன் நீங்க இம்சை அரசன், வின்னர் படம் பார்த்து இருக்கனும். இல்லாங்காட்டி வேற ஜோலியப் பாருங்கப்பு.

சரி புவியியல் பார்க்கலாமா? சே வரலாறுதாங்க spelling mistake..

கீதா அக்கா ஒரு 1330 பக்கம் விளக்கம் தந்து இருந்தாங்க அதுல ஒரு பாகம் தான் இது. அதன் ஒரு நகல்தான் இது. வுடு ஜூட்

வரலாறு -1
விவசாயின் அப்படிங்கிறவர் யாரு?
"வாங்க பாஸ் நாம அடி வாங்குறது சகஜம் தானே, பயந்தா தொழில் பண்ண முடியுமா, இவுங்க எப்பவுமே இப்படிதான் இருப்பாங்கன்னு" தத்துவம் சொன்னவர். ஹோட்டலில் டீ சாப்பிட சொன்னதும் ஒரு கிராமத்தையே கூட்டி வந்து சாபாட்டை கட்டு கட்டுன்னு கட்டி ஜென்மத்துக்கும் சம்பளமே வாங்க முடியாமல் செய்த பாசக்கார விவசாயி.


வரலாறு-2
சிபி சொன்ன சரக்கு மாதிரியான கணக்கு இது.
நாகை சிவா=மங்குனி அமைச்சர்
(விளக்கம் பின்னூட்டதுல சிபியே வந்து சொல்லுவாரு)

வரலாறு -3 சொடுக்கிப் பார்த்துக்குங்க
இதுல நல்லா கவனிக்க வேண்டிய விஷயம் அந்த ஓணான் படம், மூதேவி சீதேவிக்கதை. நல்லா படிச்சுக்குங்க. படிச்சு இருந்தாலும் இன்னொரு முறை படிச்சுக்குங்க அப்புறம் புரியலைன்னா அதுக்கு கீதாக்கா பொறுப்பு கிடையாது.

வரலாறு 4


இது ஒரு முக்கியமான வரலாறு.

லகுட பாண்டி 1: மன்னா தங்களைக் காண புலவர் பாலபத்திரி ஓணான்டி வந்திருக்கிறார்.

இம்சை: பாலபத்திரி ஓணான்டி...... வந்து தொலையச்சொல்லும், ஓணான்டி... கோணான்டி....

ஓணான்டிப்புலவர்: எனதருமை 23ம் புலிகேசியே நீர் வாழ்க நின் கொடை வாழ்க

இம்சை: அமைச்சரே இந்த லகுட பாண்டி என்னை பேர் சொல்லிதான் அழைப்பானா?

மங்குனி : புலவர்களுக்கே உள்ள ஆணவம் மன்னா.

இம்சை: தாங்கள் வந்த நோக்கம்?

ஓணான்டிப்புலவர்: நான் எழுதியுள்ள புதுக்கவிதை ஒன்றைப்பாடிகாட்டி பரிசு பெற்று செல்லலாம் என்று வந்துள்ளேன் மன்னா?

இம்சை: (மனசுக்குள்-அதெல்லாம் உன் வரப்புல வெச்சுக்க வேண்டியதுதானே) பாடும் பாடித்தொலையும்.

ஓணான்டிப்புலவர்: மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!

அரசியலில் நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!

தேடி வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும் படைகளை நீ புண்ணாக்கு!

மண்ணோடு மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!


இம்சை: நிறுத்துடா ஓணான்டி, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதனுடைய பிடறியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்?

ஓணான்டிப்புலவர்: நான் என்ன குற்றம் செய்தேன் மன்னா.

இம்சை: எதற்காகடா என்னைத்திட்டினாய்?

ஓணான்டிப்புலவர்: நான் திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல் தானே பாடினேன்?

இம்சை: அமைச்சரே என்ன பிதற்றுகிறான்?(அது நமது தளபது சிபியின் வேலையாச்சே, அவர் மட்டும்தான் பிதற்றுவார். அது அவருக்கு மட்டும்தான் புரியும் சரக்கு போட்டாதான் நமக்கும் புரியும் )

மங்குனி: ஓணான்டி, சிறிதும் இடைவெளியில்லாமல் மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக?

ஓணான்டிப்புலவர்: எப்போது திட்டினேன்?

மங்குனி: புழுகாதே புலவா. மன்னரை பார்த்து மாமாமன்னா என்றாயே.

ஓணான்டிப்புலவர்: ஆமாம், மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால் மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.

மங்குனி: மன்னரின் முகம் பார்த்து மொள்ளமாரி என்றாயே.

ஓணான்டிப்புலவர்: ஆமாம், மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.

இம்சை: முடிச்சவிக்கி..........

ஓணான்டிப்புலவர்: அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.

மங்குனி: மூடா என்றாயே.........

ஓணான்டிப்புலவர்: அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
புண்ணாக்கு? எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்.

இம்சை: என் அழகான மூக்கைப்பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயடா அதற்கு என்ன அர்த்தம்?

ஓணான்டிப்புலவர்: அண்டம் என்றால் உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று சொன்னேன். பாடியதற்கு உரிய பரிசை குடுத்தால் ..............நன்றாக இருப்பாய்

இம்சை: பரிசு எதுவும் கிடையாது நான் உன்னை எட்டி உதைப்பதற்குள் ஓடி விடு.

ஓணான்டிப்புலவர்: மன்னா?........

இம்சை: என்னா?

ஓணான்டிப்புலவர்: என் சாபத்திற்கு ஆளாகாதே

இம்சை: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹா

ஓணான்டிப்புலவர்: மன்னா வயசிலே மூத்தவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். அளவுக்கு அதிகமாக நடக்கிறீர், எதற்கும் ஓர் எல்லை உண்டு.

இம்சை: டேய், பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்? இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் கண்விழிகள் ரெண்டும் பிதுங்கி வெளியே தொங்க
போகிறது. யாரங்கே, யாரங்கே, யாரடா அங்கே ...அந்த மூக்குப்பொட்டியை எடுத்து அவன் முகத்தில் போடுங்கள்[புலவனை தலைகீழாக தொங்கவிட்டு கதறக் கதற மூக்கு பொடிய அவர் மூஞ்சிமேலையே தூவ அரம்பிக்கிறார்கள்]

ஓணான்டிப்புலவர்: அநியாயம் அக்கிரமம்..

இம்சை: எனக்கு இது நியாயமடா ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்

ஓணான்டிப்புலவர்: ஐயோ ஐயோ

இம்சை: நன்றாக தூவுங்கள் ஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ் உனக்கு மட்டும் தான் மூக்குப்பொடி தண்டனை. இனிமே யாராவது பாட வந்தால்
மிளகாய் பொடி தண்டனை.

ஓணான்டிப்புலவர்: கர்வம் தலைக்கேறிய மன்னா, நீ அடுத்த ஜென்மத்தில் ஒரு மோசமான பிறவியாக பிறப்பாய். அப்போது உன்னிடம் தண்டனை பெற்ற அனைவரும் வந்து ஆப்பு அடிப்பார்கள், உனக்கு கவிதை எழுதவே வராது அப்படியே கவிதை கற்றுகொள்ள நேர்ந்தாலும் நீ மண்டூகமாக கற்றுக்கொள்ள என்னிடமே அலைய வேண்டி இருக்கும்.இப்படி 1795ல ஓணான்டி புலவர் விட்ட சாபம் தான் இன்னைக்கு கைப்பு ஓணான் படம் புடிக்க இவ்வளவு கஷ்டப்படறாரு. அந்த ஜென்மத்துல ஓணான்டி புலவர், இந்த ஜென்மத்துல விவசாயியா பொறந்து இருக்காரு. இந்த ஏழை விவசாயி தமிழ்நாட்டுல ஒரு குக்கிராமத்துல இருந்தாலும் ராஜஸ்தான் சித்தூர்காட்ல இருக்கிற கைப்பு ஒரு ஓணான் (ஓணான்டி புலவர் என்பது விவசாயியின் போன ஜென்மம்) படம் புடிக்க ஆசைப்பட்டாருன்னு தெரிஞ்சவுடனே ஒத்த ரூபாயில ஒரு போனை போடு ஆட்டைய கலைச்சு புட்டாரு. படம்தான் ஒழுக்கமா
புடிக்கத்தெரியாட்டாலும், கைப்புக்கு மூதேவி சீதேவின்னு கதை சொல்லறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.
இந்த உறவு ஜென்மம் ஜென்மமா தொடர்ந்து வந்துகிட்டேயிருக்கும். இது கைப்பு போன ஜென்மத்துல பண்ணின மூக்குப்பொடி பாவம். இந்தனால அவருக்கு கஷ்டம் ஆப்பு எல்லாமே வந்து கொண்ட்டே இருக்கும் அத ஒன்னியும் பண்ணமுடியாது

அடுத்த உறவு..

வரலாறு -5.1
இவர் தேவு, தேவுடான்னு இருக்கிற கைப்புவ செத்து செத்து விளையாட மலை உச்சிக்கு போலாம்ன்னு கூப்பிட்டவரு. மண்டையோட்டை கம்பெனி முத்திரையாக்கி சங்கத்தை உறுவாக்கி, கைப்புவை கல்கி காண வைத்தவர். என்றும் கூடவே இருந்து சலிக்காம ஆப்பு வைப்பவர். பேச்சு பேச்சா இருக்கிறப்பவே போட்ட கோட்டை தாண்டி சங்கத்து ஆளை அடிச்சது யாருன்னு கட்டதுரைகிட்ட நேருக்கு நேர் கேட்டு ரப்புன்னு செவுளுமேல
அடி வாங்கி உய் உய்ன்னு சத்தம் போட்டு திரும்பி வந்த வீரச் செம்மல்.

..(தொடரும்)

22 comments:

விசித்ரன் said...

நான் வலைப்பதிவுக்கு புதியவன். நன்றாக இருக்கிறது இந்தப் பதிவு. மனசு நொந்து நான் இன்று இந்த பதிவைப்படித்து சிரித்துவிட்டேன். இப்போது மனசு லேசா ஆகிவிட்டது.
மக்களி சிரிக்க வைக்கின்ற இந்த சங்கம் இன்னும் நல்ல படியாக சிரிக்க வைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பன் said...

விசித்ரன் said...
//மக்களி சிரிக்க வைக்கின்ற இந்த சங்கம் இன்னும் நல்ல படியாக சிரிக்க வைக்க வாழ்த்துக்கள். //

விசித்ரன் இதெல்லாம் சும்மா அப்படியே கொஞம் அந்த பழைய பதிவுகளைபும் படிச்சிப் பாருங்க அப்ரம் உங்க பேர நீங்க Vசிரித்ரன் அப்படினு மாத்திப்பீங்க,


தல! எப்படி..? நம்ப ராஜதந்திரம்? வந்த ஒரு ஆளையும் அப்படியே கவர் பண்ணி, கவுத்தியாச்சு பாத்தியா, புதிய உறுப்பினர் பணிய கரிகிட்டா பண்ணுரனா...?
(ஸ்.... ஆள் புடிக்கிறதுக்குள்ள போதும் போதும் ஆய்டுது)


அன்புடன்...
சரவணன்.

ILA(a)இளா said...

வாங்க விசித்ரன்! வாழ்த்துக்களுக்கு நன்றி! கண்டிப்பா இன்னும் நல்லா சிரிக்க (மட்டுமே) வைப்போம்

மின்னுது மின்னல் said...

இருந்தாலும் தலைக்கு இவ்வளவு பெரிய சாபம் குடுத்துருக்க கூடாது.:))

மின்னுது மின்னல் said...

/./
வாங்க விசித்ரன்! வாழ்த்துக்களுக்கு நன்றி! கண்டிப்பா இன்னும் நல்லா சிரிக்க (மட்டுமே) வைப்போம்
/./

ஆளு புதுசு அதனால தான் இப்படி

போக போக வைப்போம் பெருசா.....

சிரிக்க.

மின்னுது மின்னல் said...

/./
(ஸ்.... ஆள் புடிக்கிறதுக்குள்ள போதும் போதும் ஆய்டுது)
/./

தல ஒரு ஜில்லுனு பெப்சி சொல்லு.

Syam said...

வரலாறு புவியியல் சொல்றேனு சொல்லீட்டு...உங்கள பத்தி மட்டுமே பில்டப் கொடுத்திட்டு எஸ்கேப் ஆயிட்டீங்களே... :-)

ILA(a)இளா said...

ஸ்யாம்-->கேப்டன் ரேஞ்சுல படிங்க எஸ்கேப்பு..
எனக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம்.... எல்லா மொழிகளிலும் .......................................................................................................................................................................................................................................................................... புடிச்ச ஒரே வார்த்தை.

இலவசக்கொத்தனார் said...

சரி. அவருதான் இந்த பாவமெல்லாம் பண்ணினாரு. அப்புறம் இந்த அட்லாஸ் பசங்க என்ன பாவமய்யா பண்ணுனாங்க. அதையும் சொல்லு.

ஜொள்ளுப்பாண்டி said...

என்னங்க இளா 'தல'ய போட்டு இந்த வாரு வாருறீங்களே !!!

ஜொள்ளுப்பாண்டி said...

//தல! எப்படி..? நம்ப ராஜதந்திரம்? வந்த ஒரு ஆளையும் அப்படியே கவர் பண்ணி, கவுத்தியாச்சு பாத்தியா, புதிய உறுப்பினர் பணிய கரிகிட்டா பண்ணுரனா...?
(ஸ்.... ஆள் புடிக்கிறதுக்குள்ள போதும் போதும் ஆய்டுது) //

தலைவா சரவணா யாரையங்க கவுத்தீங்க !! ?? ஏதோ தலைகீழா ஆகிடப்போகுதப்பூ:)))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஆளு புதுசு அதனால தான் இப்படி
போக போக வைப்போம் பெருசா.....
சிரிக்க. //

மின்னலு இப்படி பளிச்சின்னு அடிச்சா எப்படி??

விசித்திரன் பயப்படதீங்கப்பூ !! பாசகார பசங்க !! அதான் பாசத்தை பிழிஞ்சுருக்காக !! :)))

கைப்புள்ள said...

யோவ் வெவசாயி(அ) ஓணாண்டி,
நீரு இப்ப பண்ணற பாவத்துக்கெல்லாம் அப்பவே மூக்குப் பொடி போட்ட்ருக்கேன் பாருங்கையா. அங்கே தான்யா நிக்கிறான் என்னோட முற்பெறவி இம்சை. நீங்க பண்ணற சில்மிசத்துக்கெல்லாம் நியாயமா உங்க மூக்குல மொளகாப் பொடி போட்டுருக்கனும்...இருந்தாலும் மூக்கு பொடி போட்ட சந்தோசத்துலயே என் கட்டை வெந்துரும். இந்த முன்சென்ம சேதியைச் சொன்னதுக்கு டேங்ஸுங்க விவ்.

நாமக்கல் சிபி said...

//சரி. அவருதான் இந்த பாவமெல்லாம் பண்ணினாரு. அப்புறம் இந்த அட்லாஸ் பசங்க என்ன பாவமய்யா பண்ணுனாங்க. அதையும் சொல்லு//

அது அப்புறமா அவரு பண்ணிய புண்ணியத்தையெல்லாம் மனசுல வெச்சிகிட்டு "அப்பப்போ உன்னோட ஆப்புகளையெல்லாம் கொஞ்சம் ஷேர் பண்ணிக்க நல்ல மனுஷங்க யாராவது வருவாங்கன்னு" பரிகாரமும் சொல்லப்பட்டதாம்.

நாமக்கல் சிபி said...

//படிச்சிப் பாருங்க அப்ரம் உங்க பேர நீங்க Vசிரித்ரன் அப்படினு மாத்திப்பீங்க//

சரவணன் கலக்குறீங்களேய்யா!

கண்ணுல ஜலத்தை வெச்சிகிட்டு சொல்றேன்!

Syam said...

//இருந்தாலும் மூக்கு பொடி போட்ட சந்தோசத்துலயே என் கட்டை வெந்துரும்//

தல மூக்குபொடி போட்டதுனால தான் ஆப்பு இல்லனா ஆட்டம் பாம் தான்.. :-)

சந்தோஷ் aka Santhosh said...

பதிவுக்கு ஒரு :))

//கண்ணுல ஜலத்தை வெச்சிகிட்டு சொல்றேன்!//

அதை ஏன் கண்ணுல வெச்சி இருக்கேள் வெளியே விடும்.

ILA(a)இளா said...

//சரி. அவருதான் இந்த பாவமெல்லாம் பண்ணினாரு. அப்புறம் இந்த அட்லாஸ் பசங்க என்ன பாவமய்யா பண்ணுனாங்க. அதையும் சொல்லு. //
ஒரு மாசம் கூட தாங்கனும் அப்படின்னு சொன்ன வுடனே புரிஞ்சு இருக்கனும். ஓணாந்தி முகத்துல மூக்குப்பொடி தூவியது யாரு? புலிகேசியா? யாரோ ஒருத்தர் தானே, அதுல ஒன்னு நீங்களா இருக்கும்

நாகை சிவா said...

தல!
நீ இவ்வளவு பாவம் பண்ணிய அயோக்கியனா.....
உன் அயோக்கிய வரலாற்றில் ஒன்னு தான் வெளி வந்து உள்ளது. இத கேட்டாலே என் கண்ணு எல்லாம் கலங்குது. விவ் எப்படிம்மா இந்த சோதனையை எல்லாம் தாங்கிட்ட....

நாகை சிவா said...

//அதை ஏன் கண்ணுல வெச்சி இருக்கேள் வெளியே விடும்.//
அட பங்காளி, ஏற்கனவே காவிரி பொங்கி வழிஞ்சிக்கிட்டு இருக்குல. அதான் நாங்க வெளியே விடாம கண்ணுலே வச்சு இருக்கோம்.
தேவைப்படும் போது வெளிய விட்டு டெல்டா மாவட்ட விவசாயிகளை மகிழ்விப்போம்.

(துபாய்) ராஜா said...

இளா!தூள்மா!பட்டையை கிளப்பறீங்க!

தொடர்ச்சி பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

ILA(a)இளா said...

//இளா!தூள்மா!பட்டையை கிளப்பறீங்க!//
நன்றிங்க ராஜா, அடுத்த வரலாறு தேவு மேட்டரு. பட்டைய கிளப்பும், இந்த காலத்தின் படி டாஸ்மாக்கையே கிளப்பும்.