Wednesday, August 16, 2006

கோவியாரின் நாடக சபா - பாகம் 2

பாகம் 1

காட்சி 3 :

எனக்கு வேணும் ... எனக்கு வேணும் ... ஆசை .. ஆசை ஆயாக்கட ஆப்பம் பாயாமேல ஆசப்பட்டு ... இங்கிட்டு வந்து மாட்டிக்கிட்டேனே ... அவ்வ்வ் .. சுத்தி நின்னு அடிக்கிற மாறியே இருக்கே ... இன்னிக்கு பிளாஸ்திரி தான் .... ஐயோ ... இந்த நேரம் பார்த்து சிவாவைக் காணும்... சொக்கா .... நானே சொக்காவை கிழிச்சிக்கறத்துக்குள்ள வந்துடய்யா என் ராசா... ! அவன் இல்லை வரமாட்டான் நம்பாதே ... அவ்வ்வ்வ்வ்வ் !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
மறுபடியும் சிவா சின்னப்பிள்ளையின் முன் தோன்றுகிறார்
சின்னப்பிள்ளை : வா அப்பு ... லொள்ளுதானே ... !
சிவா : அதைவிடும் பரிசு கிடைத்ததா ?
சின்னப்பிள்ளை : எல்லாம் கெடச்சிது ... கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு வண்டிக்கு ஆளு அனுப்பாததுதான் குறை ... செத்த பொருத்திருந்தா ... அவனுங்க சொக்காவை கிழிச்சி அனுப்பியிருபானுக ... எம காதக பயலுவ ...!
சிவா : சின்னப்பிள்ளை என்ன உளருகிறீர்
சின்னப்பிள்ளை : உளரலப்பு ... உண்மையைத்தேன் சொல்றேன் ... நீ வடித்ததில் ஜொள் இல்லையாம்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லையென்று சொன்னவன் எவன் ?
சின்னப்பிள்ளை : ம் ... ஒனக்கு எகனைக்கு மொகனையா மாத்தி மாத்தி நக்கலா பதில் குடுக்கறத்துக்குன்னே ஒருத்தன் இருக்கான் ...
சிவா : எனக்கு சரிக்கு சரி லொள்ளு பண்ண ஒருவன் இருக்கிறானா எவன் ?
சின்னப்பிள்ளை : பேரு நக்கலாராம்
சிவா : சின்னப்பிள்ளையாரே ... ! என் கூடவாரும் !
சின்னப்பிள்ளை : அப்பு ஆளவிடுவியா ... ஏற்கனவே பசி காதை அடைக்கிது...!
சிவா : இப்ப வருவிரா வரமாட்டிரா ? என்று கோபமாக பார்க்கிறார்.
சின்னப்பிள்ளை மனதுக்குள் ... 'விடமாட்டேங்கிறானே... !வரலைன்ன .. அங்கன ஆவுனுங்க செய்யததை இவன் செஞ்சிடுவானோ' நினைத்து பயந்தபடி
சின்னப்பிள்ளை : ம் விதியாரை விட்டிச்சு ... வர்ரேன் வர்ரேன் ..... ஆப்பு வாங்கனும்னு விதியிருந்தா யாரால மாத்த முடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்.
இருவரும் ஜொள்ளுப் பாண்டியின் அரண்மனையை நோக்கிச் செல்கிறார்கள்

காட்சி 4 :
சிவாவும் சின்னப்பிள்ளையும் உள்ளே நுழைகிறார்கள்
சிவா : என் பாட்டில் ஜொள் இல்லை என்று லொள்ளு பண்ணியவ எவன் ?
ந.நக்கீரர் : அவையடக்கத்துடன் கேட்டால் அதற்குத் தக்க நக்கல் செய்யப்படும்
சிவா : ஓ நக்கல் பேசுகிறவரிடம் நாவடக்கமாக பேசவேண்டும் ? நீர் யார்
ந.நக்கீரர் : நானே நக்கலா ... நானே உமது பாட்டில் லொள் இல்லையென்றேன்

சிவா : ஓ நீர் தான் நக்கல் நக்கீரரா .... ? என் பாட்டில் என்ன ஜொள் இல்லை ?

ந.நக்கீரர் : பாட்டை ஏற்றியவர் நீர் வராமல் யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பியதன் காராணம் ?
சிவா : காரணம் ஆயிரம் இருக்கிறது ... அவற்றை உம்மிடம் சொல்லி ... ஜொள் சங்கதிகளை உம்மிடம் மொத்தமாக விற்க முடியாது ... ஒன்று மட்டும் சொல்கிறேன் ... சரியாக 5 மணிக்கு எத்திராஜ் காலேஜ் வாசலில் ஆஜராகிவிடுவது வழக்கம்... அதுதான் சின்னப் பிள்ளையிடம் கொடுத்து அனுப்பினேன் ... உமக்கு என்ன ஓய் ?

ந.நக்கீரர் : சரி நீர் வடித்த ஜொள் பாடலை பாடிக்காட்டு ஓய் !

சிவா : நன்றாக கேட்டுவிட்டு பிறகு லொள்ளு பேசு ஓய், இதோ கேளும்

காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் ... ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

ந.நக்கீரர் : பாடலின் பொருள் ... ?

சிவா : ம் ... புதுக்கவிதை புரியவில்லை என்று சொல்லும் ஒரு புலவரை வைத்திருப்பது ஜொள்ளுப் பாண்டிக்கு வெட்கக்கேடு ! சரி நானே சொல்லிவிடுகிறேன்

தமிழ் பெண்களில் எத்தனை வகை இருந்தாலும், எந்த வயதாக இருந்தாலும் அவர்களின் நெற்றியில் வைக்க ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது ... !

ந.நக்கீரர் : சாந்துப் பொட்டுதான் சிறந்தது என்கிறேன் நான் !

சிவா : எப்படி சரி என்கிறீர்கள் ?

ந.நக்கீரர் : சாந்து பொட்டுதான் நம் பாரம்பரியம், நம் பண்பாடு, நம் கலாச்சாரம்

சிவா : பழம்பெருமை பேசுகிறீர் நக்கலாரே !

ந.நக்கீரர் : உண்மையாகத் தான் சொல்கிறீரா, ஸ்டிக்கர் பொட்டு சிறந்ததென்று ?

சிவா : காலேஜ் பிகர்கள்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்

ந.நக்கீரர் : சத்தியமாக ?

சிவா : ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிகர்கள் மீதும் ஆணையிட்டுச் சொல்கிறேன் ... ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !

சிவா கோபமாகிறார்

சிவா : நக்கலாரே ... நன்றாக என்னைப் பாரும் .. நான் வடித்த பாடலில் ஜொள் இல்லையா ?

ந.நக்கீரர் : நீரே ஜொள்ளுக்கெல்லாம் ஜொள்ளலானாக இருக்கட்டும் ... அரண்மனை காவல் ராஜபாளையம் நாய்களே ... நீர் வடிக்கும் ஜொள்ளைப் பார்த்து தலைகுணிந்தாலும் ... உம் பாட்டில் ஜொள் இல்லை ... ஜொள் இல்லை !

சிவா நக்கலாரை மேலும் கீழும் பார்த்து பிரகாசம் ஆகிறார்

சிவா : ஜொள்ளுபாண்டி மன்னரே ... ! அவையோர்களே ... ! நக்கலாரின் அங்க வஸ்திரத்தைப் பாருங்கள் ... ஆடையைப் பாருங்கள்... அவர் அவைக்கு வரும் முன்னர் இவருடன் வண்டியில் வந்த பிகரின் சாந்து/குங்குமம் இவரது ஆடையில் ஒட்டியிருப்பதைப் பாருங்கள் ... அங்க வஸ்திரத்திலும் ஆடையிலும் சாந்து பொட்டு ... அதாவது குங்குமம் எங்கும் பட்டிருக்கிறது பார்த்தீர்கள் தானே !

சிறிது நேரம் எல்லோரும், ஜொள்ளையும், லொள்ளையும் மறந்து 'கொள்' என்று சிரிக்கிறார்கள்

நக்கலாரின் லூட்டி வெளியில் தெரியவந்ததை நினைத்து நக்கலார் வெட்கத்தால் தலைகுனிகிறார் !

சிவா : ஜொள் மன்னா ! அதற்காகத்தான் சொன்னேன் ... சாந்து பொட்டு அசவுகர்யமானது ... காட்டிக் கொடுத்துவிடும் .. அதுமட்டும் தானா இல்லை இல்லை .... . மேலும் அதை வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு கலப்படம் காரணமாக நெற்றித்தோல் வெளிர்ந்து அரிப்பும் வரும் !

நக்கலார் சிக்கல் தீர்ந்ததும் மெதுவாக சிவாவை நோக்கியபடி,
ந.நக்கீரர் : ஜொள்ளரே ... சாந்து குங்குமம் விற்கும் அனைவரும் தொழில் நசிந்து சாப்பாட்டிற்கு வழியில்லாமால் போய் கஷ்டப்படுவார்களே என்ற நல்லெண்ணத்தில் அவ்வாறு கூறினேன். மன்னியுங்கள் எங்காவது தவறியிருந்தால்.

சிவா: நக்கலாரே... ! எல்லாம் எமக்குத் தெரியும். உங்கள் நக்கலை ரசித்து லொள்ளு பண்ணுவே நான் இங்கு வந்தேன். வந்திருப்பது லொள்ளிலும், ஜொள்ளிலும் வல்லவர் என்று தெரிந்தும். தொடர்ந்து எக்குதப் பாகவே பேசி எல்லி நகையாடி நக்கல் செய்ததற்கு உங்களை போற்றி மகிழ்கிறேன் . வாழ்க உமது நக்கல். இனி உங்களுக்கு ஒரு காலமும் இல்லை சிக்கல்.

ஜொள்ளுப்பாண்டி : ஆகா அருமையான விளக்கம் தீர்ந்தது சந்தேகம் ... இனி அந்தப்புர மங்கையர் அனைவருக்கும் ஸ்டிக்கர் பொட்டையே சிபாரிசு செய்கிறேன். இந்தாருங்கள் ஒரு லெட்சம் ரூபாய்க்கான காசோலை.

சிவாவிடம் கையெழுத்துட்டு கொடுக்கிறார்

காட்சி 5 :

மண்டபத்துக்கு திரும்பவும் வருகிறார்கள்

சின்னப்புள்ளை :அப்பு சிவா... ! ஆகா பரிசு எனக்கே கிடைத்துவிட்டது

சிவா : ரொம்ப குதிக்காதே சின்னப்புள்ள ... காசோலை அதுவும் கிராஸ் பண்ணப்பட்ட காசோலை என் பெயரில் இருக்கிறது ... வா .. நாயர் கடையில் ஒரு பொறையும் டீயும் வாங்கித் தருகிறேன் ... சாப்பிட்டு விட்டு மண்டபத்தில் போயி படுத்துக்க.

சின்னப்புள்ளை : ஆகா பரிசு தரேன் சொல்லி சொல்லி பட்டை போட்டுட்டான்யா போட்டுட்டான் !

திரை
*******************************************
ஆக்கம் : கோவி.கண்ணன்
மேற்பார்வை : எஸ்.கே
*******************************************
சங்கப் பக்கங்களில் இந்த நாடகப் பதிவினை வெளியிட அனுமதியளித்த நண்பர் கோ.வி.கண்ணனுக்கு சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

7 comments:

தேவ் | Dev said...

Testing

குண்டலக்கேசி said...

இரண்டாவது பாகமும் அருமை. மேலும் இதுப் போன்ற நகைச்சுவைப் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

கோவி.கண்ணன் [GK] said...

//சங்கப் பக்கங்களில் இந்த நாடகப் பதிவினை வெளியிட அனுமதியளித்த நண்பர் கோ.வி.கண்ணனுக்கு சங்கத்தின் சார்பில் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். //

சங்கத்தில் வெளியிட்டு கவுரவப்படுத்திய சங்கத்தின் நண்பர்கள் அனைவருக்கும், தேவ் அவர்களுக்கும் நன்றி !

நாகை சிவா said...

//இரண்டாவது பாகமும் அருமை. மேலும் இதுப் போன்ற நகைச்சுவைப் பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?//
குண்டலக்கேசி, சங்கத்தில் நகைச்சுவை மட்டும் தான். தொடர்ந்து வாருங்கள். மகிழ்ந்து செல்லுங்கள்.

Syam said...

கோவி.கண்ணன் அட்டகாசம் போங்க... :-)

கைப்புள்ள said...

//சிவா : ரொம்ப குதிக்காதே சின்னப்புள்ள ... காசோலை அதுவும் கிராஸ் பண்ணப்பட்ட காசோலை என் பெயரில் இருக்கிறது ... வா .. நாயர் கடையில் ஒரு பொறையும் டீயும் வாங்கித் தருகிறேன் ... சாப்பிட்டு விட்டு மண்டபத்தில் போயி படுத்துக்க.//

எப்படியோ புலியை ஹீரோவாப் போட்டு ஒரு கதை எழுதிட்டீங்க. இதப் படிச்சிப்பிட்டு அந்த சந்தோசத்துல புலி, சூடான் சிட்டுக் குருவிகளுக்கு எல்லாம் ஸ்டிக்கர் பொட்டு வாங்கிக் கொடுத்துட்டு இருக்காப்பலயாம்.
:)

தங்கள் ஆக்கம் நல்லா இருந்துச்சுங்க கோவி.கண்ணன். நன்றி.

(துபாய்) ராஜா said...

அழகான ஆக்கமிட்ட கோவி.கண்ணன்,
மேலான மேற்பார்வையிட்ட எஸ்.கே,
பார்த்து பார்த்து பதிவிட்ட தேவ் மற்றும் எப்போதும் ஆதரவளிக்கும் நமது சங்கத்தின்'தங்கத்தின் தங்கங்கள்' அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பதிவுகள் தொடரட்டும்.பார்வையாளர்கள்
மனம் மகிழட்டும்

வ.வா.ச.வளைகுடா கிளை.