Tuesday, August 22, 2006

உதயமாகிறது கிசுகிசு சங்கம்

ஷெர்லாக் ஹோம்ஸ்'னு ஒரு உப்பு சப்பிலாத மேட்டருக்கு ஒரு மொக்க படத்த உத்து பார்க்க வெச்சவுரு Dr. நமது கைப்பு. இது வேற மாதிரி.. ஜூட்

1)மருத்துவரும் கட்டிட காண்டிராக்டரும் இணைந்து அமானுஷ சக்திகளை எதிர்த்து போராடுகிறார்களாம். வெற்றி நிச்சயமாம், இதற்கு பிண்ணனியில் இருப்பது ரா.ரா வாம்.

2) ரே'னாவுக்கும், கீ'னாவுக்கு கடுக்காக் குடுத்த பி'னா சு'னாவிடம் வகையாக மாட்டிக்கொண்டார். ர.மா'னா வந்துதான் முடித்துவைப்பாரே?

3) வைகைக்காரருக்கும் சென்னைக்காரருக்கும் நடுவில் சிக்கிக் கிடக்கிறதாம் திரி. கொளுத்தப்போவது யாரு?

4) அடக்க ஒடுக்கமாய் இருப்பாராம், அழகிய பெண்கள் மயங்கி இவர் பின்னால் போகிறார்களாம், தப்புகள் செஞ்சா பிடிக்காதாம் நெருப்பென பாய்வாராம். கடைசியில, இது எங்கே போய் முடியுமோ சங்கரா, சங்கரா...

5) புத்தரின் மறுபெயர் கொண்டவருக்கும், மரம் நட்ட சாம்ராட்டுக்கும் நடுவில் உறவுப் பிரச்சினையாம், நட்சத்திர மணியானவருக்கே எல்லாம் வெளிச்சம்.

6) கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு, பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடிய வில்லையாம். அட்வஸ் பண்ணியும் கேட்கலையாம். சந்திரனின் சூழ்ச்சி வெற்றி பெருமா?

7) பாலைவன ஊரில் இருக்கும் அவருக்கும், குளு குளு ஊர் பொண்ணுக்கும் இடையில் காதலாம். அஞ்சல்கள் பறக்கும் அவசரத்தைப் பார்த்தால் அடுத்தது என்ன? குள்ளப் புலவர் சொன்ன கதை இது.

8) கிராமத்து ராசா, தோகையப் பார்த்து மயங்கி நின்னாராம், இது வயசுக்கோளாராம். . என்னாத்த சொல்ல.

9) ஆனை மாதிரி செலவு, படகுல சவாரி, பொன்னும் பொருளும் புதைஞ்சு இல்லே கிடக்கு. ரகசியம் தேடிப் போயிருக்காம் ஒரு கும்பல்

10) ஆட்டோவும் இருக்கு, ஆஸிடும் இருக்கும், எதையும் எதிர்த்து ஜெயிக்க துணிவும் இவருக்கு இருக்கு. பட்டைய கிளப்புவாரா?

Disc: இந்தப்பதிவு வழக்கம் போல யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை. தனிமனித தாக்குதலும் இல்லை.

பதில் தெரிஞ்சா சொல்லுங்க பார்ப்போம்
நன்றி: விசாரணை குழு தலைவர் தேவ், மற்றும் உறுப்பினர்கள்

75 comments:

செந்தழல் ரவி said...

///Disc: இந்தப்பதிவு வழக்கம் போல யாருடைய மனதையும் புண்படுத்த இல்லை. தனிமனித தாக்குதலும் இல்லை.///

அப்புடியா ?

ILA(a)இளா said...

கண்டிப்பாங்க ரவி, இதுல தனிமனித தாக்குதல் கண்டிப்பாக இல்லவே இல்லை

ILA(a)இளா said...

Udhayakumar said...
1. ராமநாதன் , இ.கொ
9. பொன்ஸ்

ILA(a)இளா said...

உதய், மீதி 8 பதிலையும் போடுங்க. பதில் சொல்றேன்

G.Ragavan said...

ஏற்கனவே குசுகுசுன்னு ஒன்னும் புரியாத மாதிரி பேசிக்கிருவீங்க...இதுல கிசுகிசு வேறையா....ஒன்னும் புரியல சாமி....

கைப்புள்ள said...

என்னமோ தெரியல. படிச்சா எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியுது சாமி!

"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்"

புதுசா ஓல்சேல் கடை ஆரம்பிச்சிருக்கீங்க போலிருக்கு?

தேவ் | Dev said...

ஏன் இளா இதுல்ல இருக்கப் பேரு எல்லாம் சஙக்த்து மக்கள் மட்டுமா இல்ல மற்ற மக்களும் அடக்கமா?

தேவ் | Dev said...

//ஏற்கனவே குசுகுசுன்னு ஒன்னும் புரியாத மாதிரி பேசிக்கிருவீங்க...இதுல கிசுகிசு வேறையா...//.

ஜி.ரா... குசுகுசுன்னு சங்கத்துல்ல சவுண்ட்டா.. இதை அதிபயங்கரமான கொடூரமானக் குற்றச்சாட்டு எப்பவுமே எட்டு ஊருக்கு கேக்குற மாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு அலறல் சவுண்ட் விட்டு பேசித் தான் எங்களுக்கு பழக்கம்

//ஒன்னும் புரியல சாமி.... //
அட என்ன சாமி நீங்களே இப்படி ஒதுங்கிப் போனா யார் வந்து விடைச் சொல்லுவா? ... இதுக்கெல்லாம் நீஙகப் பயப்படக்கூடாது ஆமா.. ஏன்னா அடுத்த பதிவுக்கு ஹீரோவே நீங்கத் தானே ஹி..ஹி

ILA(a)இளா said...

//அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்//
கைப்பு, தெரியாட்டி கம்னு இருக்கனும். இந்த மாதிரி புரளி எல்லாம் கிளப்பிவிடக்கூடாது

ILA(a)இளா said...

//) கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு, பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடிய வில்லையாம். அட்வஸ் பண்ணியும் கேட்கலையாம். சந்திரனின் சூழ்ச்சி வெற்றி பெருமா?//

இந்த கேள்விக்கு முதல்ல பதில் தெரியுமா? அதச்சொல்லுங்க பார்ப்போம்?

குண்டலக்கேசி said...

////) கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு, பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடிய வில்லையாம். அட்வஸ் பண்ணியும் கேட்கலையாம். சந்திரனின் சூழ்ச்சி வெற்றி பெருமா?//

இந்தக் கேள்விக்குப் பதில் வ.வா.சங்கம் கரிக்கிட்டா

கைப்புள்ள said...

//இந்த கேள்விக்கு முதல்ல பதில் தெரியுமா? அதச்சொல்லுங்க பார்ப்போம்?//

அடடா! அது மட்டும் தானே எனக்கு தெரியாது?

குண்டலக்கேசி said...

9. பொன்ஸ் அந்தக் கும்பல் யாரு?

ILA(a)இளா said...

//கலகலப்பு கோஷ்டி ஊரு விட்டு ஊருவந்து, இருக்கிற ஒரு டப்பா மேட்டரை உருட்டிகிட்டு//
மண்டுகம்னு கொத்ஸ் சொன்னது சரியாத்தான் இருக்கு. ஒரு துப்பு தரேன் பார்த்துக்குங்க.

கலகலப்பு கோஷ்டி- வ.வா.சங்கம் இல்லே

டப்பா மேட்டரை- கைப்பு இல்லே

ILA(a)இளா said...

//ஏன் இளா இதுல்ல இருக்கப் பேரு எல்லாம் சஙக்த்து மக்கள் மட்டுமா இல்ல மற்ற மக்களும் அடக்கமா? //

ரகசிய ஒற்றர் வாதகோடாரி கேட்கலாமா இந்தக்கேள்வியை

Anonymous said...

//ரே'னாவுக்கும், கீ'னாவுக்கு கடுக்காக் குடுத்த பி'னா சு'னாவிடம் வகையாக மாட்டிக்கொண்டார். ர.மா'னா வந்துதான் முடித்துவைப்பாரே?//
மற்றவைக்கெல்லாம் கூட பதில் டேப்பரா தெரியறமாதிரி இருக்கு. இதுக்கு ஒரே ஒரு துப்பு தந்தா என்னவாம்?

ILA(a)இளா said...

குண்டலகேசி-->
//இந்தக் கேள்விக்குப் பதில் வ.வா.சங்கம் கரிக்கிட்டா //
சே சே இப்படியா ஒரு கேள்வி வெப்போம். இது வேற மாதிரியான பதில்.

ILA(a)இளா said...

//மற்றவைக்கெல்லாம் கூட பதில் டேப்பரா தெரியறமாதிரி இருக்கு. இதுக்கு ஒரே ஒரு துப்பு தந்தா என்னவாம்? //
இதுல பி'னா ஒரு சர்வாதிகாரி மாதிரி.
சு'னாவுக்கும் ர.மா'வுக்கும் நடுவுல ஒரு உறவு இருக்கு.

ILA(a)இளா said...

உதய்--> உங்க ரெண்டு பதிலுமே தப்புங்க.

ILA(a)இளா said...

இது வரைக்கும் யாருமே சரியான் பதில் சொல்லாத காரணம் வலைப்பதிவுன்னா இப்படிதான் இருக்கும் நினைக்கிற மனநிலைமை. அதை மாத்ததான் இந்த 10 கேள்விகள். பதிவு உலகம்ங்க இது. உலகத்தையே பதிவா கொண்டு வரலாம். பதிவுலகம்னா தமிழ்மணம் மட்டுமே இல்லே. இதை மனசுல வெச்சுக்கிட்டு யோசிச்சா பதில் ரொம்பச் சுலபம்.

கைப்புள்ள said...

4. விஷால் - படம் திமிரு.

மகேந்திரன்.பெ said...

//பாலைவன ஊரில் இருக்கும் அவருக்கும், குளு குளு ஊர் பொண்ணுக்கும் இடையில் காதலாம். அஞ்சல்கள் பறக்கும் அவசரத்தைப் பார்த்தால் அடுத்தது என்ன? குள்ளப் புலவர் சொன்ன கதை இது//.


என்னைய வச்சி எதுவும் காமெடி கீமெடி பன்னலியே?

கைப்புள்ள said...

சரியா இளா?

G.Ragavan said...

// Dev said...
//ஏற்கனவே குசுகுசுன்னு ஒன்னும் புரியாத மாதிரி பேசிக்கிருவீங்க...இதுல கிசுகிசு வேறையா...//.

ஜி.ரா... குசுகுசுன்னு சங்கத்துல்ல சவுண்ட்டா.. இதை அதிபயங்கரமான கொடூரமானக் குற்றச்சாட்டு எப்பவுமே எட்டு ஊருக்கு கேக்குற மாதிரி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு அலறல் சவுண்ட் விட்டு பேசித் தான் எங்களுக்கு பழக்கம் //

அது பாருங்க....இந்தக் கிட்டப் பார்வை மாதிரி கிட்டக் கேள்வை நமக்கு. யாராவது கத்துனாச் செஞ்சாச் சரியாக் கேக்குறதுல்ல...குசுகுசுன்னுதான் கேக்கும். ஆனாக் குசுகுசுன்னு பேசுனா..நல்லா தெள்ளிவ்வாக் கேக்கும். ஹிஹி

// //ஒன்னும் புரியல சாமி.... //
அட என்ன சாமி நீங்களே இப்படி ஒதுங்கிப் போனா யார் வந்து விடைச் சொல்லுவா? ... இதுக்கெல்லாம் நீஙகப் பயப்படக்கூடாது ஆமா.. ஏன்னா அடுத்த பதிவுக்கு ஹீரோவே நீங்கத் தானே ஹி..ஹி //

என்னது....அடுத்து பதிவுக்கு ஈரோ நானா? அப்ப கூட சோடி கட்டுறது யாருன்னும் சொல்லீட்டா வசதியா இருக்கும். ஹி ஹி.

G.Ragavan said...

// 8) கிராமத்து ராசா, தோகையப் பார்த்து மயங்கி நின்னாராம், இது வயசுக்கோளாராம். . என்னாத்த சொல்ல. //

எப்போ? 16 வயதினிலே படம் வந்தப்பயா? இல்ல மாலினி ஐயர் வந்தப்பயா?

நாகை சிவா said...

//4. விஷால் - படம் திமிரு.//
தல இருந்தாலும் உனக்கு ஒவர திமிரு தான். எவ்வளவு சீரியஸா அவன் அவன் திங் பண்ணிகிட்டு இருக்காங்க. நீ என்னனா, இப்படி காமெடி பண்ணிக்கிட்டு இருக்க. ரொம்ப சின்னப்புள்ளத் தனமா இருக்கு

தேவ் | Dev said...

10 கிசுகிசுக்கு விடைச் சொன்னா.. சரியான விடைச் சொன்னா ஐஸ்வர்யா ராய் கூட் சோடிப் போடணும்ன்னு நீங்க ஆசப்பட்டாலும் அதுக்கு இளா பொறுப்பு ஏத்துக்குவாராம்.

9 பதில் ரைட்ன்னா கைப்புள்ள செலக்ஷன்னுக்கு நீங்க ஓ.கே சொல்லணும் ரைட்டா

6 - 8 நம்ம சிவா சொல்லுற சூடான் நாட்டு சுடர்மணி தான் சோடி

5 க்கும் கொறைஞ்சா.. ம் ரொம்ப கஷ்ட்டம் ஜொள்ளுபாண்டி குங்குமத்திலே சொன்ன அந்தப் பொண்ணு தான் உங்கச் சோடி.. இப்போ உங்க சோடி உங்க கையிலே:)

தேவ் | Dev said...

வாங்க மகேந்... ஹி..ஹி... காமெடி மட்டும் தானே எங்களுக்குப் பண்ணத் தெரியும்.. ஆமா இந்தக் க்ளு உங்களைச் சொல்லுர மாதிரியா இருக்கு... குள்ளப் புலவர் யார்?

தேவ் | Dev said...

//4. விஷால் - படம் திமிரு//

தல ஆனாலும் உனக்குச் செம திமிராமா ஊருக்குள்ளேப் பேசிக்கீறாயங்க....:)

தேவ் | Dev said...

//எப்போ? 16 வயதினிலே படம் வந்தப்பயா? இல்ல மாலினி ஐயர் வந்தப்பயா? //

ஜி.ரா கிசுகிசுவுக்கே கிசுகிசு போடக்கூடாது.. ம்ம்ம் நெருங்கிட்டீங்க

கைப்புள்ள said...

//தல ஆனாலும் உனக்குச் செம திமிராமா ஊருக்குள்ளேப் பேசிக்கீறாயங்க....:)//

நாலாவது கேள்வியில கேட்டுருக்க மாதிரி எல்லாம் நடக்கும்னா நான் திமிரு தான். ஐ ஈட் திமிரு, வாக் திமிரு, ஸ்லீப் திமிரு.
:)

கைப்புள்ள said...

1. இந்திய தேசிய காங்கிரஸ்
2. ஜனதா விமுக்தி பெரமுனா
3. சம்பல் நதி
4. ஆல்ரெடி அட்டெம்ப்டட்
5. பிரகாஷ் ராஜ்
6. காண்டலீசா ரைஸ்
7. 1008 அரேபிய இரவுகள்
8. புது நெல்லு புது நாத்து
9. மெக்கென்னாஸ் கோல்ட்
10. ஆட்டோ ராணி

எல்லா பதிலும் சரின்னு எனக்கு தெரியும். அதனால ஜிராவை ஈரோவாப் போட்டு இயக்க வேண்டிய படத்துல என்னையே ஈரோவாப் போடோணும்னு கம்பேனியைத் தாழ்மையுடன் கேட்டுக்கறேன். சம்பளம் கூட கொறச்சல்ன்னாலும் பேசிக்கிறலாம்.

கைப்புள்ள said...

சாரி...ஒரு சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக். எட்டாவது கேள்விக்குப் பதிலு "நட்வர் சிங்".
இதையும் கணக்குல சேத்துக்கிரணும்.

தேவ் | Dev said...

கைப்பு கவுந்திட்டியே கைப்பு.. 10ல்ல ஒண்ணுக் கூடச் சரியில்லயே.. ம்ஹும் உனக்கு வழ்க்கம் போல அந்தப் படத்துல்ல அடி வாங்குற வேசம் தான் கிடைக்கும்.. சரி போனாப் போகுது கீப் டிரையிங்க்

ILA(a)இளா said...

// சரியான விடைச் சொன்னா ஐஸ்வர்யா ராய் கூட் சோடிப் போடணும்ன்னு நீங்க ஆசப்பட்டாலும் அதுக்கு இளா பொறுப்பு ஏத்துக்குவாராம்.//

யார கேட்டு சாமி இப்படி ஒரு வாக்குறுதி தரீங்க? நமக்கே ஆப்பா?

கைப்புள்ள said...

//கைப்பு கவுந்திட்டியே கைப்பு.. 10ல்ல ஒண்ணுக் கூடச் சரியில்லயே...//

சங்கத்து ஆளு போட்டில கலந்துக்கக் கூடாதுன்னு வேணா சொல்லு...பதில் தப்புன்னு இப்பிடி பொய் பேசப் பிடாது. ஒவ்வொரு பதிலும் க்ளூவோட நச்சு நச்சுன்னு எப்படி பொருந்துது பாத்தே இல்ல? அதுக்கப்புறமும் எப்டிய்யா தப்புன்னு வாய் கூசாம புளுகுறே?

என்னா ஒன்னு, எட்டாவது கேள்வியில நட்வர் சிங்கைச் சரியா அடையாளம் கண்டுபிடிக்கையில சித்த பிசகிடுச்சு. ஆனாலும் சமாளிச்சிட்டோம்ல? தீர்ப்பை மாத்தி சொல்லு இல்ல ஆட்டத்தைக் கலைச்சு போடு. இந்த அளுகுனி ஆட்டம் எல்லா வாணா...ஆமா!!

குண்டலக்கேசி said...

பத்தாவது கேள்விக்கு விடை ஜிம் கேரி நடிச்ச ஆங்கிலப் படத்தின் தமிழ் பெயரா?

ILA(a)இளா said...

//தீர்ப்பை மாத்தி சொல்லு இல்ல ஆட்டத்தைக் கலைச்சு போடு.//
சரி, கேள்வி நீங்களே கலைச்சுப் போட்டு பதில் சொல்லுங்க, அதுக்கு தகுந்த மாதிரி பதில் சொல்லுங்க பார்ப்போம்

(ஆமா அப்ப மட்டும் சரியா வந்துருமாக்கும்)

தேவ் | Dev said...

இளா.. இது வரைக்கும் இந்த துப்பறியும் போட்டியிலே பங்கு எடுத்துட்ட புண்ணியவான்கள் வந்து உதய், குண்டலக்கேசி, ஜி.ரா,மகேந்திரன் அப்புறம் நம்ம கைப்புள்ள..

இப்போதைய நிலவரப் படி இவங்கச் சொன்னதெல்லாம் சரியா தப்பான்னு மட்டும் சொல்லுங்க

ILA(a)இளா said...

//பத்தாவது கேள்விக்கு விடை ஜிம் கேரி நடிச்ச ஆங்கிலப் படத்தின் தமிழ் பெயரா?//
அஹாக், நகரவே மாட்டேன்கிறீங்களே. கொஞ்சம், ஆழமா, அகலமா, குறுக்க, நெடுக்க யோசனை பண்ணுங்க, பதில் எல்லாம் சுலபதாங்கோ

ILA(a)இளா said...

//சரியா தப்பான்னு மட்டும் சொல்லுங்க //

சரியா தப்பா

சொல்லிட்டேன் போதுமா?

கைப்புள்ள said...

//சரியா தப்பா

சொல்லிட்டேன் போதுமா?//

யோவ்! என்னய்யா நடக்குது இங்கே? எனுமோ கேள்வியைக் கேட்டுப்பிட்டு வெளாட்டு பண்ணறீங்க. நாங்க எல்லாம் என்ன வேலை வெட்டி இல்லாமயா ஒக்காந்து இருக்கோம்?

இப்படி எல்லாம் நக்கல் பண்ணுனீங்க் தமிழ்மணத்துல உங்களைப் பத்தி பிராது குடுத்துருவேன் ஆமா!

மகேந்திரன்.பெ said...

//யோவ்! என்னய்யா நடக்குது இங்கே? எனுமோ கேள்வியைக் கேட்டுப்பிட்டு வெளாட்டு பண்ணறீங்க. நாங்க எல்லாம் என்ன வேலை வெட்டி இல்லாமயா ஒக்காந்து இருக்கோம்?

இப்படி எல்லாம் நக்கல் பண்ணுனீங்க் தமிழ்மணத்துல உங்களைப் பத்தி பிராது குடுத்துருவேன் ஆமா!//


கைப்பு சொன்னதை பின்பற்றி இனி கையெழுத்து வேட்டை நடைபெறும் என்பதை இங்கே தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்


கைப்பு,, இந்த மாதிரி மண்டையப் பிச்சிக்கவிடுற ஆளுகளுக்கு வச்சிடலாமா ஆப்பு? :))

ILA(a)இளா said...

ஒரு 10 கேள்விக்கு பதில் சொல்லனும் அவ்வளவுதான், நாங்க பதில் சொல்லுவோம்னு சொன்னோமா? இது கிசு கிசு. பதில் சரியா சொல்ற வரைக்கும் உட மாட்டோம்

ILA(a)இளா said...

//இந்த மாதிரி மண்டையப் பிச்சிக்கவிடுற ஆளுகளுக்கு வச்சிடலாமா ஆப்பு? :)) //
ஆமா இதுவரைக்கும் வெக்காமதான் இருந்தாங்களாக்கும், இப்போ மட்டும் என்ன புதுசா?

ILA(a)இளா said...

//கைப்பு சொன்னதை பின்பற்றி இனி கையெழுத்து வேட்டை நடைபெறும் என்பதை இங்கே தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்//
அப்படியே அவுங்க அவுங்க செக் புக்குல கையெழுத்து வேட்டை நடத்தி எங்களுக்கு அனுப்பிச்சு வெச்சா இன்னும் வசதியா போகும். நல்லா இருப்பீங்க

மின்னுது மின்னல் said...

1. SK
வடுவூர் குமார்.
ரா.ரா யாரு..
9. பொன்ஸ்
கும்பல் யாரு??

இப்படி ஒரு கிசுகிசுவுல ரெண்டு மூனு பதில் இருந்தா எப்படி ???

ஜொள்ளுப்பாண்டி said...

5> சித்தார்த் & அசோக்? வா மணிகண்டன்??

8> இளா??

அண்ணே நம்ம அறிவுக்கு தகுந்த மாதிரி ஏதாசும் இருந்தா சொல்லுங்கணனா !!!:))))

ஜொள்ளுப்பாண்டி said...

அட இதென்னாங்கோ கிசு கிசு ??

4> ஜிரா??

தேவ் | Dev said...

மின்னலு சத்யமாச் சொல்லுதேம் ஒவ்வொரு கிசுகிசுவுக்கும் ஒரு ஒரு பதில் தான்.. கொஞ்சம் யோசிங்க

தேவ் | Dev said...

வாலே பாண்டி... நீயுமா சறுக்குதே.. தல சொன்னப் பதிலை எல்லாம் உத்துப் பாரு எதாவது தட்டுப்படுதாலே...இது தான் க்ளு

ILA(a)இளா said...

//தல சொன்னப் பதிலை எல்லாம் உத்துப் பாரு எதாவது தட்டுப்படுதாலே//
அத மட்டும் பார்க்காதே பாண்டி, உள்ளதும் போயிரும் நொல்லகண்ணாங்கிற மாதிரி ஆகிரும்

கைப்புள்ள said...

3. மல்லிகா ஷெராவத் தானே?

மின்னுது மின்னல் said...

/./
மின்னலு சத்யமாச் சொல்லுதேம் ஒவ்வொரு கிசுகிசுவுக்கும் ஒரு ஒரு பதில் தான்.. கொஞ்சம் யோசிங்க
/./

1.தெறியாது
2.???
3.ம்ம் யோசிக்கிறேன்

மின்னுது மின்னல் said...

//தல சொன்னப் பதிலை எல்லாம் உத்துப் பாரு எதாவது தட்டுப்படுதாலே//

/./
அத மட்டும் பார்க்காதே பாண்டி, உள்ளதும் போயிரும் நொல்லகண்ணாங்கிற மாதிரி ஆகிரும்

/./

என்னா இ8து ??
சின்னபுள்ள தனமா??
யோசிக்க உடாம??

செந்தழல் ரவி said...

////இல்லவே இல்லை///

அப்ப ஸரி...

நாகை சிவா said...

எப்பா நீங்க யாரும் பதில் சொல்லுற மாதிரி தெரியல. அதனால் எல்லா பதிலையும் நானே சரியா சொல்லிட வா? இல்ல உங்க எல்லாருக்கும் இன்னும் கொஞ்சம் சான்ஸ் கொடுக்குறேன். நல்லா யோசிச்சு சீக்கிரம் பதில சொல்லுங்க.....

mgnithi said...

இதெல்லாம் ரெம்ப நக்கல்... சொல்லிட்டேன்..

இந்த கேள்வி எல்லாம் நம்ம கைப்புள்ளய உலக அளவில தெரிய வச்ச தமிழ் திரைப்படங்களை பத்தினு நினைக்கிறேன்.

ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்றேன்

1) தெரியல ... அப்பால சொல்றேன்
2) தெரியல ... அப்பால சொல்றேன்
3) கில்லி
4) அன்னியன்
5) அக்னி நட்சத்திரம்
6) திருட்டு பயலே / ஊரு விட்டு ஊரு வ்ந்து
7) காதல் கோட்டை
8) 16 வயதினிலே
9) மெக்கானாஸ் கோல்ட் ( இது இல்லனா அந்த படத்தோட தமிழ் காப்பி)
10)பாஷா

mgnithi said...

ரொம்ப மூளைய கசக்கி யோசிச்சதுல வந்த பதில் இது.

2) கல்கி

( ப்ரகாஷ் ராஜ்- ரேனுகா, கீதா, சுருதி-- ரகுமான்)

சிங்கமுல....

mgnithi said...

6. பட்டிணத்தில் பெட்டி ( டப்பா மேட்டருனு சொன்னீங்களே ... அதனால இந்த கெஸ்ஸு) இந்த கேள்விக்கு மட்டும் மூணு பதில்.. எதாச்சும் கரீட்டா இருக்கும்னு நினைக்கிறேன்...)

mgnithi said...

3)கில்லி
4)அன்னியன்
5)அக்னி நட்சத்திரம்
6)காதல் கோட்டை
8)16 வயதினிலே
9)மெக்கனாஸ் கோல்ட்
10)பாஷா

நான் இதுக்கு முன்னாடி பதிலோட அனுப்பின பின்னூட்டம் சரியா வந்து சேரலனு நினைக்கிறேன். அதனால மறுபடியும் அனுப்பறேன்... பதில் எல்லாம் கரீட்டானு சொல்லுங்க

தேவ் | Dev said...

Mgnithi - You have hit close to the Target

3)கில்லி - ரைட்ங்கண்ணா
4)அன்னியன் - ரைட்ங்கண்ணா
5)அக்னி நட்சத்திரம் - ரைட்ங்கண்ணா
6)காதல் கோட்டை - இது கொஞ்சம் மிஸ்ங்கண்ணா
8)16 வயதினிலே - ரைட்ங்கண்ணா

9)மெக்கனாஸ் கோல்ட் - சாரிங்கண்ணா
10)பாஷா - டபுள் ரைட்ங்கண்ணா

உங்கள் நண்பன் said...

1.சந்திரமுகி


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

6.கரகாட்டக்காரன்
7.காதல்கோட்டை


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன் said...

9.கரீபியன் கல்லறைத் தீவு


அன்புடன்...
சரவணன்.

தேவ் | Dev said...

சரா வாய்யா

1.சந்திரமுகி
6.கரகாட்டக்காரன்
7.காதல்கோட்டை

மேலே சொன்னப் பதில் எல்லாம் சரி

தேவ் | Dev said...

கரீபியன் தீவு தான் கொஞ்சம் சொதப்பல். மீண்டும் முயற்சி செஞ்சுத் தான் பாரேன்.

mgnithi said...

நான் முத தடவை சொன்னப்ப 7) காதல் கோட்டை னு சொன்னேன்.

ரெண்டாவது முறை சொன்னப்ப மாத்தி எழுதிட்டேன்.

அதனால அதுவும் கரீட்டுனு எடுத்துகோங்க.

2. பதில் கல்கி சரியா?
1. பதில் சரவணன் சொல்லிட்டாரு

9. மட்டும் தான் இன்னும் பதில் சொல்லனும்.

சங்கத்துல யாரவது சொல்லுவாங்கனு எதிர் பார்க்கறேன்.

ILA(a)இளா said...

//சங்கத்துல யாரவது சொல்லுவாங்கனு எதிர் பார்க்கறேன்//
நாமளே கேள்வி கேட்டுட்டு நாமே பதில் சொன்னா எப்படிங்கண்ணா?
முயற்சி திருவினையாக்கும்..;)

நாமக்கல் சிபி said...

9.புதையல் !?

ILA(a)இளா said...

//9.புதையல் !? //
இல்லீங்க சிபி.

நாகை சிவா said...

9. உலகம் சுற்றும் வாலிபன்

ILA(a)இளா said...

//9. உலகம் சுற்றும் வாலிபன் //

ஹி ஹி இல்லீங்க புலி

G.Ragavan said...

// 4) அடக்க ஒடுக்கமாய் இருப்பாராம், அழகிய பெண்கள் மயங்கி இவர் பின்னால் போகிறார்களாம், தப்புகள் செஞ்சா பிடிக்காதாம் நெருப்பென பாய்வாராம். கடைசியில, இது எங்கே போய் முடியுமோ சங்கரா, சங்கரா... //


// 4> ஜிரா??
By ஜொள்ளுப்பாண்டி, //

ஐயா ஜொள்ளுப்பாண்டி....இதெல்லாம் ஓவரு....சொல்லிப்புட்டேன். தப்பு செஞ்சாப் பிடிக்காது...நெருப்புன்னு பாய்வாருன்னு எம் பேரக் கெடுக்கப் பாக்குறீங்களே! இதெல்லாம் நாயமா?

ILA(a)இளா said...

10க்கும் சரியான பதில் இதோ.
1. சந்திரமுகி
2. கல்கி
3. கில்லி
4. அந்நியன்
5. அக்னி நட்சத்திரம்
6. கரகாட்டகாரன்
7. காதல் கோட்டை
8. 16 வயதினிலே
9. டைட்டானிக்(யாருமே பதில் சொல்லாத கேள்வி இது)
10. பாட்ஷா

இன்னும் விளக்கம் வேணுமா?