Wednesday, August 23, 2006

மனோகரா

திருக்குரல்'ன்னா பி.சுசீலா, எஸ்.ஜானகி குரல் மாதிரி ஸ்வீட்டா இருக்குமா....?

---

நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப ஏன்ன் சார்ர்ர் மோளம் அடிக்கர்ரீங்க...?

---

ஞானப்பழம் சாப்பிட்டா, ஞானம் வரும்ன்னா, புளியம்பழம் சாப்பிட்ட புளி வருமா..?

---

திருக்குரளை எழுதினது யாரு?
நம்ம பெயிண்டர் மணி சார்..

---

ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன்..
ட்ரெயினுக்கு நேரமானா, ட்ரெயின் தான கிளம்பனும், நீ ஏன் போற..?

---

ஈ.பி.கோ.. ஈ.பி.கோ'ன்னு சொல்றீங்களே, அங்கயும் வசந்த் அன் கோ'வில கிடைக்கிற மாதிரி டீ.வி, ப்ரிட்ஜ் எல்ல்லாம் கிடைக்குமா..?

---

இந்த மாதிரி எல்லாம் பேசுனா அப்புறம் நான் பெனால்ட்டீ குடுத்திடுவேன்..
குடுங்க குடுங்க.. அப்படியே கொஞ்சம் சக்கரை ஜாஸ்த்தியா போட்டு குடுங்க..

---

நரசிம்மாவா? அது ப்ரிபெயிட் சிம்மா இல்லை போஸ்ட் பெயிட் சிம்மா??

---

கவிதை எழுத தெரியாது, சாக்ஸஃபோன் வாசிக்க தெரியாது, உனக்கு என்னதான் தெரியும்?
தூர இருக்கிற நிலாவை தெரியும், கண்ணை கட்டி விட்டாலும் கரெக்ட்டா வைன்ஷாப் போக தெரியும்.. அப்புறம்... உங்க அப்பா வச்சிருக்கிற ஆன்ட்டிய தெரியும்.

---

ஹெலிகாப்டர்க்கு ஏன் வெளியில ஃபேன் வச்சிருக்காங்க, உள்ளார வச்சிருந்தா குளு குளுன்னு போலாமில்ல..

---

டேய் தல'க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?

---

டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..

---

வண்டிய ஏன் தள்ளிட்டு வர்ற, என்ன பிரச்சனை?
காத்து இல்லை..
அந்த ஆலமரத்துக்கு கீழ போயி நில்லு, அங்க நல்ல்லா காத்து வரும்

---

படிச்ச பொண்ணா இருந்துட்டு அய்யோ அய்யோ'ன்னு கத்துறா..
ஏன் படிச்ச பொண்ணா இருந்து அழகப்பா யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி'ன்னு தான் கத்தனுமா??

---

மேல இருக்கிற தெய்வீகவசனங்களோட சொந்தக்காரர்.. நம்ம கைப்புள்ள'க்கு அடுத்தாப்படியா, நம்மள அவரோட ஒவ்வொரு அசைவுக்கு சிரிக்க வைக்கிற கில்லாடி.. திருவாளர். 'சொட்டை'மனோகர்..


விஜய் டீ.வி'யில லொல்லு சபா பார்க்கரீங்க இல்ல, முன்னயெல்லாம் புதங்கிழம ராத்திரி ஒம்போதுமணிக்குங்கோ'ன்னு சொல்லிட்டிருந்தாங்க இப்ப அது வெள்ளிக்கிழம ராத்திரி ஒம்போது மணிக்குங்கோ'வா மாறியிருக்கு...

இணையத்துல லொல்லுசபா

கவுண்டர் பத்தி ஒரு ஒன்லைனர் பதிவு போட்டது நல்லாயிருக்குன்னு சொன்னீங்களா.. அதுதான் மறுபடியும் அதே மாதிரி பதிவு.. ஹி..ஹீ.

15 comments:

தேவ் | Dev said...

மண்டையா மனோகரா உன் சின்ன மண்டைக்குள்ளே இம்புட்டு அறிவா?

பாத்தியா மண்டையன் மண்டைக்குள்ளே முழியை விட்டு நம்ம ராசா எவ்வளவு சேதியைக் கண்டுபிடிச்சுச் சங்கத்துப் பலகையிலே எழுதியிருக்கார்..

ராசா நீ நல்லாயிருக்கணும்ய்யா

நாமக்கல் சிபி said...

//டேய் தல'க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?
//

தப்பு, தல'க்கு ஆப்புதான் போடோணும்!

நாமக்கல் சிபி said...

சொட்டை மனோகரின் ஒவ்வொரு அசைவுமே காமெடியா இருக்கும்.

G.Ragavan said...

கண்ணக் கண்ண முழிப்பாரே...அவர்தான இவரு...இவரு பேரு சொட்டை மனோகரா! இப்படிக் கடிச்சு வெச்சிருக்காரு....

தலைக்கு டீ போடு ஜோக்கு சூப்பரப்பு!

Syam said...

இருங்க நானும் அந்த லொல்லு சபால போய் என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வந்துடரேன் :-)

சந்தோஷ் aka Santhosh said...

அவர் பேரு சொட்டை மனோகர் இல்லிங்கோ லொல்லு சபா மனோகர். இவரு தான் சொல்லு சபாவுல கலக்கல் அதும் kahun banegha crorepathi நிகழ்ச்சியை நக்கலடிச்சி ஒரு program பண்ணி இருப்பாங்க அதுல இவரு பர்மா பருப்பு செட்டியா வந்து கலக்கி இருபாரு. www.youtube.comல போயி lollu sabha என்று தேடுங்க வரும் எல்லாமே கலக்கல்.

mgnithi said...

மனோகரோட இன்னும் சில தத்துவ முத்துக்கள்;

1. பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு அதுல ஒன்னுத்தலயாவது ஹோட்டல் இருக்கா?

2. ஜட்ஜ்: இப்படி எல்லாம் பண்ணிட்டு இருந்த உன்னை பொடால போட்ருவேன்

மனோ : போடறது தான் போட்றீங்க நல்லா பெரிய ஸைஸ் போட்டாவா போடுங்க .. அப்ப தான் பார்க்க பார்வையா இருக்கும்...

இன்னும் இந்த மாதிரி நிறையா இருக்கு..

லொள்ளு சபால வர காமெடி நிறைய நேரம் நல்லா இருக்கும்..

உதாரணத்துக்கு சில யூடுயூப் வீடீயோஸ்

http://youtube.com/profile_videos?user=Srivatsan

ILA(a)இளா said...

ஹா ஹா நல்ல தொகுப்புதான் போங்க ராசா. கலைஞர் ஒரு மனோகரா குடுத்த மாதிரி ராசா குடுத்த மனோகரா இது. ;)

கோபி(Gopi) said...

அவரு கையை சுழட்டுற ஸ்டைல் சூப்பரா இருக்கும்.

பொதுவா பாத்தா... அவரோட கதாபாத்திரம், வசனத்துல வர்ற வார்த்தைகளின் இன்னோரு அர்த்தத்தை மட்டும் எடுத்துகிட்டு அதுக்கு பதிலா கிண்டலடிக்கறது.. Simple Logic but Successful :-)

theguywhothinkstoomuch said...

sooperappu... my favourite... :)

டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..

உங்கள் நண்பன் said...

நல்ல கமெடிப் பதிவு ராசா!அவரு கையை சுழட்டுற ஸ்டைல் சூப்பரா இருக்கும்.

1.அசோக் லைலாண்டு,அசோக் லைலாண்டுனு சொல்லுராங்களே அசோக்கு நீ! அப்போ லைலாண்டு யாரு?

2.பன்னிக்குட்டிக்கி கோட்சூட் போட்டா நல்லா இருக்குமா?
சீ,சீ,நல்லாவேஇருக்காது!
பின்ன ஏன் நீ போட்டுருக்கிற?

3.இங்க என்னட நடுறீங்க?
கம்பம் நடுறோம்.
அப்போ தேனி, ராஜபாளையம் எல்லாம் எப்போ நடுவீங்க?


அன்புடன்...
சரவணன்.

lollu-sabha said...

இந்த சொட்டை மனோகர் பற்றி நிறைய தெரிந்து கொள்ள இந்த பதிவில் படிக்கவும்.

http://lollu-sabha.blogspot.com
or
www.lollusabha.tk

Anonymous said...

Can You Help Me Please?

lollu-sabha said...

இந்த சொட்டை மனோகர் பற்றி நிறைய தெரிந்து கொள்ள இந்த பதிவில் படிக்கவும்.

http://lollu-sabha.blogspot.com
or
www.lollusabha.tk

மதுரை சரவணன் said...

அருமை... வாழ்த்துக்கள்