Wednesday, August 2, 2006

வணக்கம்ங்க

நான் பாட்டுக்கு காய்ச்ச வந்து செவனேன்னு படுத்து தூங்கிட்டு இருந்தனுங்க, திடீர்ன்னு தலகாணிக்கு பக்கத்துல அமைதியா உக்காந்திருந்த நம்மாளு ஒரே சினுங்கல், என்னடா செல்லம்னு எடுத்து பார்த்தா, நம்ம சக விவசாயி இளா. 'நம்ம சங்கத்து பக்கம் வாங்க ராசா'ன்னு ஒரு கோரிக்கை வச்சாருங்க..
நம்ம தான் பொதுவாவே இந்த மாதிரி சங்கம் கட்சின்னு எல்லாம் சேர்ந்துகிறது இல்லைங்கலா, அதுனால நம்ம தலைவர் ராஜாதிராஜா'வுல பாடுற மாதிரி 'ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம், அட டாங்குடக்கரடக்கர..'ன்னு எட்டு கட்டையில ஆரம்பிச்சேன், ஆனா பாருங்க எதிர்தரப்புல் இருந்து 'அடங்குடா டேய்'ங்கிற மாதிரி ஒரு அதட்டல்.. 'உன்னைய யாருய்யா சங்கத்துல சேர சொன்னா'ன்னு நக்கலா ஒரு கேள்வி. 'என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே'ன்னு ஒரு சந்தேகமா கேட்டா, 'அதெல்லாம் சந்தேகமே படாத கண்ணு மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு வந்து நடுவால ஆட விட்டு, நாங்க ஆளாளுக்கு விதவிதமா ஆப்பு வைப்போம், அது தான் எங்க கொள்கை, இந்த மாசம் உன்னைய வச்சு விளையாடலாம்னு கூப்பிடறோம் அவ்ளோ தான்'ன்னு சீரியசா சொல்றாங்க..


இதெல்லாம் நமக்கு தேவையா, நம்ம பதிவுல எழுதறதுக்கே ஒரு சமாச்சாரமும் இல்லாம ஓனான் முட்ட வச்ச மேட்டுக்காடு கணக்கா வெறோச்சுன்னு கிடக்கு, இதுல துடிப்பா போயிட்டிருக்கிற சங்கத்துல எல்லாம் போயி நாம என்னத்தை எழுதறது, அதுவும் போன மாசம் பூராவும் நம்ம இலவசகொத்தனார் போட்டு கொத்தி எடுத்துட்டு போயிருக்காரு, இந்த நேரத்துல நாம எதுக்கு அங்க போயி, அதுவும் கை நிறையா ஆப்போட நிக்கற ஆளுக மத்தியில.. இதென்னடா இது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற கதையா இருக்குதுன்னு, நானும் பல மாதிரி உக்காந்து படுத்து நடந்துகிட்டே ரோசனை செஞ்சு பார்த்தனுங்க..

அப்புறம் கடைசியா 'சரி, நமக்கு இந்த ஆப்பு வாங்கிறதெல்லாம் புதுசா என்ன. என்னதான் ஆகுதுன்னு பார்த்திருவோம்'ன்னு ஒத்துகிட்டு... இதோ.. உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..தயாரா இருங்க.. நெக்ஸ்ட் மீட் பண்ணவோம்..

56 comments:

நாமக்கல் சிபி said...

வாங்க வாங்க! முதல் பதிவுக்காக்க ஆவலாய் காத்துகிட்டிருக்கோம்!

சிங்கங்களே எல்லொரும் தயாரா?
ஊழலின்றி செய்யப்பட்ட ஆப்புகள்தானே வைத்துள்ளீர்கள்.
ம். ஆகட்டும். ஆரம்பிப்போம்!.

கலாய்..கலாய்.....!

மகேந்திரன்.பெ said...

வெளிஆள் அடிக்கும் முதல் ஆப்பு :))

ILA(a)இளா said...

//ஓனான் முட்ட வச்ச மேட்டுக்காடு கணக்கா //
அடடா என்ன ஒரு கிராமிய மணம்.

//நம்ம இலவசகொத்தனார் போட்டு கொத்தி//
கொத்து பரோட்டா கணக்கா..

ILA(a)இளா said...

//இது சொந்த செலவுல சூனியம்//
எங்கே மாப்பூ புடிக்கிற இந்த வார்த்தையெல்லாம்? வாத்திகிட்ட இருந்தா?

ILA(a)இளா said...

// இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..//
அட்லாஸ் வாரிபராகவும்'ன்னு சேர்த்துக்குங்க.

கவிதா|Kavitha said...

சங்கம் டெம்ப்'லேட் சூப்பர், லேட் டா இருந்தாலும் லேட்டஸ்ட்.. கலக்குங்க.. வாழ்த்துக்கள்

மணியன் said...

காய்ச்சலிலிருந்து தப்பி கலாய்ப்பவர்களிடம் மாட்டிக் கொண்டீர்களா :)) இப்ப சமாளிச்சிட்டீங்கன்னு வைங்க, 'அப்புரம்' பயமில்லை :))

உங்கள் நண்பன் said...

வா ராசா வா...

உனக்காகத் தான் காத்துகிட்டு இருக்கோம்..(ஒரு குரூப்)

//உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'//

ஏது, இந்தப் பார்த்தீபன் கைல அருவாளப் புடுச்சிகிட்டு போகும் போது "தல" கொடுக்குமே ஒரு ரியாக்சன் அது மாதிரியா..?
ஹய்யோ ஹய்யோ...சிப்பா வருது,
சரி சரி நீ அழாதே... ராசா
அதான் ஒரு மாசம் இருக்குல்ல..
மொத நாலே உன்னைப் பயமுறுத்தக் கூடாது,
ஆனா அடிக்கடி கையில் ஆப்போட வருவோம்,
எப்போனு கணக்கில்லாம வருவோம்,


அன்புடன்...
சரவணன்,

கைப்புள்ள said...

//'என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே'ன்னு ஒரு சந்தேகமா கேட்டா, 'அதெல்லாம் சந்தேகமே படாத கண்ணு மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு வந்து நடுவால ஆட விட்டு, நாங்க ஆளாளுக்கு விதவிதமா ஆப்பு வைப்போம்//

யோவ் வெவசாயி!
அப்படியா சொன்னீரு? கொத்ஸ் இதை நீங்க படிக்கலை. பாக்கலை. சரியா?
:)

நாகை சிவா said...

//இந்த மாசம் உன்னைய வச்சு விளையாடலாம்னு கூப்பிடறோம் அவ்ளோ தான்'ன்னு சீரியசா சொல்றாங்க..//
வச்சு விளையாட்டிடுவோம்.

//உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..//
சாமி உத்தரவு கொடுத்துச்சுறோய், ஸ்டார்ட் மியுசிக்.

நாகை சிவா said...

//வெளிஆள் அடிக்கும் முதல் ஆப்பு :))//
சாரிம்மா மகேந்த. இந்த தடவை நம்ம தளப்தியார் முந்திட்டார். ஆனா அடுத்த தடவை விடக் கூடாது என்ன.

கைப்புள்ள said...

//இது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற கதையா இருக்குதுன்னு//

அப்படியே சூடா ரெண்டு 'ஜல்லியடித்தலும்' ஒரு ப்ளேட் 'பின்னி பெடலெடுத்தலும்' பார்சேல்!
:)

பா.க.ச தொண்டன் said...

//அப்படியே சூடா ரெண்டு 'ஜல்லியடித்தலும்' ஒரு ப்ளேட் 'பின்னி பெடலெடுத்தலும்' பார்சேல்!
//

என்னை ஒழுங்கா சைக்கிள் கடையைப் பார்த்துக்க விடுங்கப்பா! இப்படி ஆளாளுக்கு பெடலெடுத்தா எப்படி?

கொங்கு ராசா said...

நாமக்கல் சிபி >> //ஆவலாய் காத்துகிட்டிருக்கோம்! // நடக்கட்டும் நடக்கட்டும்.. தினுசு தினுசா யோசிக்கறாங்கய்யா..

மகேந்திரன் >> தாங்க்யூ தாங்க்யூ

இளா >> ம்ம்.. இழுத்து விட்டுட்டு அப்புறம் ஏன் சொல்ல மாட்டீங்க..

நாகை சிவா said...

//சிங்கங்களே எல்லொரும் தயாரா?//
தளபதியாரே, எல்லாரும் தயார். அது போல எல்லாமும் தயார். உங்க உத்தரவுக்கு தான் வையிட்ங்.

கொங்கு ராசா said...

மணியன் >> //'அப்புரம்' பயமில்லை :))// அப்புரத்துல நாங்க எப்பவுமே பயந்ததில்லீங்க.. அவிய இதெல்லாம் படிக்கறதில்லை, அதுனால தைரியமாவே சொல்றேன் :)

உங்கள் நண்பா >> //மொத நாலே உன்னைப் பயமுறுத்தக் கூடாது,// ம்ம்.. நாங்க பாக்காத ஆப்பா.. பெரிய பெரிய ஆப்பு ஜாம்பவானெல்லாம் வந்து சொருகினதையே சும்மா சாதரணமா வாங்கிட்டு போயிருக்கோம்.. போங்கய்யா, போங்க.. போயி புள்ளை குட்டிகள படிக்கவைங்க..

நாகைசிவா >> //ஸ்டார்ட் மியுசிக்// ஹூ ஈஸ் தட் டிஸ்டர்பன்ஸ்..

ஆல் இன் ஆல் அழகுராஜா >> ஊருக்குள்ளார ஒரு ஆல் இன் ஆல் செய்யிற அலும்பே தாங்க முடியலை.. இதுல நீங்க வேறயா.. எத்தனை..

ILA(a)இளா said...

ராசா உங்க பதிவுல அருமையான ஒன்னு இது(சொடுக்கவும்) Grow Up Man
உள் குத்து உடும்

விவசாயி
டிராக்டர் சங்கம்.
கொங்கு மண்டலம்

ILA(a)இளா said...

//ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு//
சக்காகிதே மச்சா

நாமக்கல் சிபி said...

//உங்க உத்தரவுக்கு தான் வையிட்ங்.
//

முதல் பின்னூட்டத்தின் கடைசி வரியைப் பாரும் நாகையாரே!

"கலாய்..கலாய்.....! "

நாகை சிவா said...

//ராசா உங்க பதிவுல அருமையான ஒன்னு "Grow up Man.

உள்குத்து உடன்//
அது என்ன அந்த உள்குத்து, உங்களுக்குள்ளயும் "Grow up Man". அந்த மேட்டர் இருக்கா?

மகேந்திரன்.பெ said...

//சாரிம்மா மகேந்த. இந்த தடவை நம்ம தளப்தியார் முந்திட்டார்//

உங்க தளபதி எங்க முந்துனாரு அவரு எல்லாரையும் கூப்பிட்டாரு அவ்ளோதான் ஆப்பு முதல்ல அடீச்சது நாந்தான் :(

ILA(a)இளா said...

Grow up Man- No Comments

இலவசக்கொத்தனார் said...

தங்கமே ராசா, பாத்து நடந்துக்க. என்ன அடி விழுந்தாலும் நமக்கு இதெல்லாம் சகசமப்பான்னு சொல்லிக்கிட்டே நெஞ்சாங்கூட்ட நிமித்திக் கிட்டு இரு. அளுவாதே. மாத்தி மட்டும் செஞ்ச பசங்க போட்டி போட்டு வெளயாடிருவாங்க.

எதோ முன்னாடி இதெல்லாம் அனுபவிச்ச மொறையுல சொல்லறேன்...

மின்னுது மின்னல் said...

//
போங்கய்யா, போங்க.. போயி புள்ளை குட்டிகள படிக்கவைங்க..
//

இருந்தா நாங்க ஏன் இங்க வர்ரோம்.?

கொங்கு ராசா said...

இ.கொத்தனார் >> //பசங்க போட்டி போட்டு வெளயாடிருவாங்க// கொத்ஸு, உங்க அன்புக்கு நன்றி.. நாமல்லாம் வாங்காத ஆப்பா, ஆறாத புண்னுகளா.. இதுக்கெல்லாம் அசருவோமா.. நீங்க வேற.. நின்னு ஆடிற மாட்டோம்.. :)

மின்னல் >> //இருந்தா நாங்க ஏன் இங்க வர்ரோம்.?// புள்ளை - குட்டி.. தனித்தனியா படிங்க மின்னலே.. உங்களை சுத்தி ஒரு 'புள்ளை' - ஒரு 'குட்டி'கூட இல்லைன்னா.. அய்யோ பாவம் நீங்க வேற என்னத்த சொல்றது..

தேவ் | Dev said...

//மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு //

ஆகா வந்ததும் வராதுமா ஆறு கோடியே அறுபத்தேழு முக்கால் தமிழ் மக்களின் இதயத்தில் இடம் புடிச்ச இ.கொவை இப்படி வையறாரே ராசா....

செய்யறதையும் செஞ்சுபுட்டு கடைசியா நான் எல்லாம் அப்பாவின்னு அலுங்காம குலுங்காம டயலாக் வேற அடிக்கிறார்..

தேவ் | Dev said...

யோவ் ராசா ஏனுங்கண்ணா.. ஆப்பு உங்களுக்கு நாங்க சங்கத்துகாரவிய மட்டும் தான் அடிக்கணும்னு பார்த்தா அமெரிக்காவில்ல இருந்து அட்டையாம்பட்டி வரைக்கும் அம்புட்டு பயலையும் கூப்பிட்டு விட்டு ஆப்பு வாங்குவீரு போலிருக்கு..

கொத்ஸ் ராசா தீ வட்டி சொன்னது உங்களைன்னு நீங்க நினைச்சு அவ்ருக்கு எதிரா எதுவும் பண்னக் கூடாது. இது சங்கத்தின் சார்பா ஹம்பிள் ரிக்வெஸ்ட்.. PLS EXCUSE RAASAA

ராசா உங்களை நான் காப்பாத்திட்டேன் அப்பாடா

ILA(a)இளா said...

//நின்னு ஆடிற மாட்டோம்//

நின்னு ஆடி செஞ்சுரு போடுறதெல்லாம் பழசுங்க, 1000 தான் யாரும் இன்னும் தொடல.அடிச்சுடுவீங்க இல்லே?

கொங்கு ராசா said...

தேவ் >> //ராசா உங்களை நான் காப்பாத்திட்டேன் அப்பாடா// நான் பாட்டுக்கு என் வழியில அமைதியா போயிட்டிருந்தேன், இப்படி காப்பாத்துறேங்கிற பேர்ல இலவசமா ஆப்பு செஞ்சு பப்ளிக்ல குடுத்துட்டு போறீங்களே இதெல்லாம்.. சரி.. சரி நடக்கட்டும்..

அப்புறம் தீவட்டி தடியன்னா அர்த்தம் தெரியும் தானே... :)

ILA(a)இளா said...

//ஆட்டையாம்பட்டி வரைக்கும்//
disc- இது எங்க ஊர், எப்படி தேவ் நீங்க பயன்படுத்தலாம்?
//தீ வட்டி//
disc- சங்கம் வியாபாரம் நோக்கற்றது

ILA(a)இளா said...

//தீவட்டி தடியன்னா அர்த்தம் தெரியும் தானே//
அப்படின்னா?

பழூர் கார்த்தி said...

திருமணத்திற்கு பிறகு
வலை உலகத்திற்கு
திரும்பி வந்திருக்கும்
கொங்கு ராசா,
நல்லா, நின்னு விளையாடுங்க ராசா !!

***

வெளி ஆள் அடிக்கும் கடைசீ ஆப்ப்ப்ப்ப்பூ :-)))
(இதில் எந்த உள்குத்தும் இல்லை )

***

பழூர் கார்த்தி said...

நின்னு விளையாடுறதுக்கு எதுனா, டிப்ஸ் வேணும்னா, நம்ம கவிதைகளை பாத்து தெரிஞ்சுகிடுங்க ராசா

http://lazyguy2005.blogspot.com

ஜொள்ளுப்பாண்டி said...

//'அதெல்லாம் சந்தேகமே படாத கண்ணு மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு வந்து நடுவால ஆட விட்டு, நாங்க ஆளாளுக்கு விதவிதமா ஆப்பு வைப்போம், அது தான் எங்க கொள்கை,//

கொங்ஸ் !! ( பேர் நல்ல இருக்கா கொங்குராசா ??:)) நல்லா விம் போட்டு வெளக்கி இருக்காரு எங்க வெவசாயி சங்க கொளுகையப் பத்தி :))

ஜொள்ளுப்பாண்டி said...

//ஓனான் முட்ட வச்ச மேட்டுக்காடு கணக்கா //

//அதுவும் போன மாசம் பூராவும் நம்ம இலவசகொத்தனார் போட்டு கொத்தி எடுத்துட்டு போயிருக்காரு,//

//உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..//

ஆஹா கொங்ஸ் !! எழுத்தெல்லாம் கொங்கு மணம் !! ஏர் கலப்பையோடதான் அலையுர்ரீங்க போல :_))))

சீக்கிரம் வந்து நாத்து நடுங்கண்ணா!! :))

நாகை சிவா said...

//அவ்ளோதான் ஆப்பு முதல்ல அடீச்சது நாந்தான் :( //
அதுக்கு ஏன் கடுப்பான போட்டு இருக்க. நல்லா ஒரு நாலஞ்சு சிரிப்பான போடு.
:))))))

நாகை சிவா said...

//எதோ முன்னாடி இதெல்லாம் அனுபவிச்ச மொறையுல சொல்லறேன்... //
ஆஹா, அனுபவம் பேசுத்தய்யா.

நாகை சிவா said...

//என்ன அடி விழுந்தாலும் நமக்கு இதெல்லாம் சகசமப்பான்னு சொல்லிக்கிட்டே நெஞ்சாங்கூட்ட நிமித்திக் கிட்டு இரு. //
//கொத்ஸு, உங்க அன்புக்கு நன்றி.. நாமல்லாம் வாங்காத ஆப்பா, ஆறாத புண்னுகளா.. இதுக்கெல்லாம் அசருவோமா.. நீங்க வேற.. நின்னு ஆடிற மாட்டோம்.. :)//
இத பாருடா, கொத்துஸ் சொன்ன அப்படியே கவ்விட்டாரு.
கக்கப்போ ராசா. சூப்பருங்க

நாகை சிவா said...

//சங்கம் டெம்ப்'லேட் சூப்பர், லேட் டா இருந்தாலும் லேட்டஸ்ட்.. கலக்குங்க.. வாழ்த்துக்கள் //
இளா, கவிதா உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்காங்க. நன்றி சொல்லிடுங்க. இல்லாட்டி அணில் குட்டிய விட்டு பிராண்ட விட்டுவாங்க.

நாகை சிவா said...

//Grow up Man- No Comments //
பாருங்க இளா, இந்த விந்தைய, நோ கமெண்ட்ஸ் என்பதை கூட கமெண்டில் போட வேண்டியது இருக்கு.
:)

கப்பி பய said...

//உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..
//

அட்லாஸ் கொங்கு ராசா..

கெரகத்துல சிக்கிட்டீங்களா...

நல்லா இருங்க...
நல்லாவே இருங்க!!! :)))

கப்பி பய said...

ராசா..

ரீஜண்டா உங்களுக்கு அப்ரசண்டை ஆப்பரேசன் எதுனா நடந்துச்சா...வவுத்துல ஒரு X இருக்கு??

கொங்கு ராசா said...

கப்பி பய >> //வவுத்துல ஒரு X இருக்கு??// அது வவுத்தல இல்லங்க.. நெஞ்சாங்கூட்டுல.. :)

இராம் said...

அருமை பெருமையா வளந்த என்னோட ராசா.... இங்கனே எருமைகெனக்கா ஆப்பு விழபோகுதே...
பார்த்து பக்குவமா ஒன்னுகூட தவறாமா சரியா வாங்கிட்டு வாப்பா. அம்புட்டும் வாங்குனாதப்புறம் ஒன்னுமே இல்லங்கற மாதிரி இருக்கணும் என்னா.... :-)))

Udhayakumar said...

//திருமணத்திற்கு பிறகு
வலை உலகத்திற்கு
திரும்பி வந்திருக்கும்
கொங்கு ராசா,
நல்லா, நின்னு விளையாடுங்க ராசா !!///

ராசா, சொல்லவே இல்லை.... ஆப்பு ரெம்ப வாங்கிட்டா அப்படியே ஒரு ஒரமா கட்டுதாரையில கொட்டி வையுங்க. வயசான காலத்தில அம்மணிகிட்ட சொல்லி காட்டிக்கலாம். (நாங்கெல்லாம் அந்த காலத்திலே...)

பொன்ஸ்~~Poorna said...

வாங்க ராசா, வாங்க வாங்க..

செப்டம்பர் மாசத்துக்கு இப்போவே தயார் பண்ணலாம்னு நான் தான் சொன்னேன் விவசாயி கிட்ட.. செப்டம்பர் முடியட்டும்.. அம்மணியையும் தயார் செஞ்சுரலாம், ஆப்பு வைப்பது எப்படின்னு தான்... இப்படி ஆகஸ்ட்ல ஆப்பு வாங்கி உங்களுக்கும் பழகிருக்கும்ல.. அப்பால ஆப்பு குறைஞ்சா போரடிச்சிராது?!! ;)

ILA(a)இளா said...

//செப்டம்பர் மாசத்துக்கு இப்போவே தயார் //
நீங்க சொன்னது சரிங்க.
ஒரு சின்ன திருத்தம் அது செப்டம்பர் இல்லீங்க நவம்பர் மாசம்.

தேவ் | Dev said...

//நம்ம தலைவர் ராஜாதிராஜா'வுல பாடுற மாதிரி 'ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம், அட டாங்குடக்கரடக்கர..'ன்னு எட்டு கட்டையில ஆரம்பிச்சேன், //

ஏப்பா சிவா.. ராசா நம்ம தங்கத் தலைவர் சூப்பர் ஸ்டார் பாட்டெல்லாம் போட்டு பட்டயக் கிளப்பிருக்காப்பல்ல.. கேட்டியளா... மக்கா பதிவுப் படிச்சுட்டு ஆப்படிங்கப்பா

தேவ் | Dev said...

ஆமாங்க ராசா... அந்த ஆட்டைப் புடிக்கற போட்டோவில்ல நீங்க இருக்கீங்களா.. அடையாளமே தெரியல்ல.. இல்ல எங்க தலக் கைப்பு மாதிரி உங்களுக்கும் போட்டோ கிறுக்குப் புடிச்சு ஆட்டைப் போட்டோ எடுக்கப் போனீங்களா...?? ஏனுங்க அப்பாவியாத் தான்ங்க இந்தக் கேள்வி கேட்குறேன்.. விவரம் தெரியல்ல ஏதாச்சும் சொல்லி ஏமாத்தக் கூடாது..

Syam said...

காய்ச்சல் இருந்து கொஞ்சம் தெளிஞ்சுட்டீங்க இல்ல அது போதும்...ஒரு கோழி குஞ்ச நசுக்கி சாறு குடிச்சிட்டு தெம்பா வாங்க.. :-)


//சிங்கங்களே எல்லொரும் தயாரா?//

வண்டி நிறயா ஆப்ப லோட் பண்னி வெசுசுட்டு ரெடியா இருக்கோம்.. :-)

நாகை சிவா said...

//வண்டி நிறயா ஆப்ப லோட் பண்னி வெசுசுட்டு ரெடியா இருக்கோம்..//
வாய்யா பங்காளி, பெரிய எழுத்தாளர் ஆயிட்ட போல. உன் பதிவுக்கு சங்கத்தில் லிங்க் கொடுத்து இருக்காங்க.
வாழ்த்துக்கள் அப்பு வாழ்த்துக்கள்

நாகை சிவா said...

ஆஹா.... நாளையுடன் சங்கம் ஆரம்பித்து நாறு நாள் ஆக போகுதா. சந்தோஷம் அப்பு சந்தோஷம்.
பார்ட்டி எப்ப, எங்கன சொல்லுங்க அப்பு சீக்கிரம். வந்து குவிஞ்சுறோம்.

நாகை சிவா said...

50வது பதிவிற்கு "கொத்துஸ்"
100வது நாளுக்கு "கொங்குஸ்"
நல்லா கலக்கலாய் தான் இருக்கு
தொடர்ந்து இது போல பல கலக்கல்கள் இங்கு நடக்கட்டும்

Syam said...

//வாய்யா பங்காளி, பெரிய எழுத்தாளர் ஆயிட்ட போல//

பங்கு என்னாது இது....வெளில சொன்னா சிரிக்க போறாங்க...ஏதோ ஒரு பாசத்துல நம்ம தேவு,இளா லின்க் குடுத்து இருக்காங்க...

ILA(a)இளா said...

100வது நாள் நன்றி:
சிரிப்பு,கிண்டல், நக்கல், நையாண்டி, எகத்தாளம்,கிச்சு கிச்சு, மட்டுமே என்றிருக்கும் சங்கம் இன்று போலவே என்றும் சிரிப்புடன் நடத்திச்/நடந்து செல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறோம்.

இவண்
சிரிப்பு சங்கம்

ILA(a)இளா said...

எங்களை எந்த விதமான பிரச்சினையுமில்லாமல் காப்பாற்றி சிரித்துவரும் அனைத்து பதிவுலகத்தாருக்கும் நன்றிகள் பல கோடி.

இவண்
சிரிப்பு சங்கம்