Tuesday, June 12, 2007

சைட் அடிக்கப் போனா சும்மா அதிருதுல்ல...

மணி சரியா சாயுங்காலம் 4:20. ஏந்தான் இந்த டைம்ம எங்க ஸ்கூல்ல ஸெலக்ட் பண்ணாவளோ தெரியல. ஒரு வேள எல்லா பயலுவலும் 420 கேஸ்தான் கரெக்ட்டா அந்த டைமுக்குத்தான் பெல்ல அடிச்சு எங்கள தொரத்தி விடுவானுவளோ என்னவோ?. ஆனா அது கூட ஒரு வழியில நல்லதுதான். பொம்பள புள்ள பள்ளியூடமெல்லாம் அதுக்கு அப்புறந்தானே விடுவாவ. 'நாலரை மணிக்கு என்னப் பாக்கலாம்?'னு யார்க்கிட்டக் கேட்டாலும் கரெக்க்ட்டா சொல்வாங்க, ஸ்கூல் முடிஞ்சு போற ஃபிகர்ஸ்னு. நானும் என்னோட நண்பனும் வேகமா கெளம்பி ஸ்கூல் பின்னால இருக்குற கிரவுண்டுக்கு ஓடுனோம். அங்க போய் எங்க பைல இருந்த பேண்ட எடுத்துப் போட்டுக்கிட்டே என்னோட நண்பன்கிட்டேச் சொன்னேன்.

"எல மாப்ள. பத்தாப்பு படிக்கோம். மாடு மாதிரி வளந்து நிக்கோம். இன்னும் நம்மள இந்த வாத்திமாரு மதிக்கவே மாட்டுக்கிறானுவளே. ஏம்ல?"

"எல சவுத்து மூதி. ஏற்கனவே லேட் ஆவுதுல்லா. நீ வேற என்னத்தலப் போட்டு சலம்புத?"

"இந்த ஆறாப்புப் படிக்குற ரோஸ்மேரி பயலுவெல்லாம் பேண்டு போட்டு அலையிறானுவ. பத்தாப்பூ வந்தும் நம்மள டவுசர் போடச் சொல்லுதானுவள்ல. அதத்தாம்ல சொல்லுதேன்"

"எல. அவிங்க பள்ளியூடத்துல கேள்ஸ் இருக்காவள்லா. அதான்."

"நம்மப் பள்ளியூடத்துல ஏம்ல கேள்ஸ் இல்ல?"

"பொண்ணுங்க இல்லாமலே இந்தப் பயலுவ ரவுசு தாங்க முடியல. இதுல அவிங்களையும் சேத்துப் போட்டானுங்கன்னா... நம்ம தமிழ் வாத்தியார் பீரியட்லெல்லாம் ஒரு பொண்ணாவது ஒக்காந்து அவரு பேசுறத கேக்க முடியுமா?"

"அதுக்கு இல்ல மச்சி. அவுளவலும் நம்ம ஸ்கூல்ல படிச்சாவன்னா, நாம இப்படி அலைய வேண்டியது இல்லைல. அதுக்குத்தாம்ல சொன்னேன்"

"அப்ப மட்டும் போவாம இருப்போமா? இக்கரைக்கு அக்கரை பச்ச மாப்பு"

வேகமா பேண்ட மாட்டி, சட்டைய இன்ஸெர்ட் பண்ணி, பெரிய பட்டி பெல்ட்ட போட்டுக்கிட்டு, நண்பன்கிட்ட பெல்ட், பேண்ட், சட்டை ஆங்கிளெல்லாம் கரெக்ட்டா இருக்குதான்னு செக் பண்ணச் சொன்னேன்.

"மக்கா... பாக்குறதுக்கு அஜித் மாரி இருக்கேனா?", அப்படியே தலையைச் சீவியவாறேக் கேட்டான் என் நண்பன்.

"எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாவ. கழுதைக்கு பேரு முத்துமாலைனு"

"மவனே... இன்னைக்கு உனக்கு ஒரு ஃபிகரும் மாட்டாது"

"ஆமா. இவருக்கு மட்டும் எக்கச்சக்கம் சிக்கப் போவுது?"

அதுக்கப்புறம் வேகமா ஸ்கூல் ஸைட்ல "குடிநீர். குடிப்பதற்கு மட்டும்" னு போட்டிருக்குற பைப்ல தண்ணிய கைலப் புடிச்சு மூஞ்ச கழுவி, கர்சீப்ல ஏற்கனவே போட்டு வச்சிருந்த பவுடர பூசிட்டு, எங்க தண்டர் பேர்ட் ஹெர்குலஸ் ஸைக்கில்ல கெளம்பினோம்.

"மாப்ள இன்னைக்கு எந்த ஸ்கூல்?", வெகுளியான நாந்தான்.

"சைல்ட் ஜீஸஸ் வேணாம் மாப்பு. பாத்து பாத்து போரடிச்சிடிச்சு. அதுவுமில்லாம எக்கச்சக்க மொக்க ஃபிகரா இருக்குது. பேசாம பஸ் ஸ்டாண்ட் போயிடலாம். மூனு ஸ்கூல் சஞ்சமிக்கிர எடம். சாரா டக்கர் ஃபிகரெல்லாம் டக்கரா இருப்பாளுவ. கான்வெண்ட் ஃபிகர்களும் அங்குன வருவாளுவ. அப்படியே ரோஸ்மேரி ஃபிகர்ஸும் வரும்"

"சூப்பர் மச்சி.. இதுக்குத்தான் நம்ம பாளையங்கோட்டையத் தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டுனு சொல்லுதாவளோ?"

பஸ் ஸ்டாண்ட்ல போய் நின்னா நாம ஸைட் அடிக்கிறது க்ளீனா தெரியும்ங்றதால, பஸ் ஸ்டாண்ட் போற வழில ரோஸ்மேரி ஸ்கூல் பக்கத்துல ஒரு கையேந்தி பவன் இருக்கும் அங்குன ஆளுக்கு ரெண்டு ரூபாய்க்கு பஜ்ஜிய வாங்கித் தின்னுக்கிட்டு அப்படியே பேக் ரவுண்ட்ல "கவலை மறந்தோம்.. பெண்ணைக் கண்டு"னு ஒரு ஸாங்க ஓட விட்டுக்கிட்டு அப்படியே பார்வைய மேய விடுவோம்.

5 மணி இருக்கும். ஒரு அழகான புள்ள ஸைக்கிள்ல, அப்படியே பறக்குற குதிரையப் பூட்டுன ரதத்துல போற தேவதை மாதிரி பறந்து போய்க்கிட்டு இருந்தா. அவ சைக்கிள் பெடல மிதிக்கிற ஒவ்வொரு மிதியும் சுத்தி நின்னுக்கிட்டு இருந்தவனுவ நெஞ்சுல விழுந்துச்சு. அவளப் பாத்துக்கிட்டே சூடா அம்புட்டு நேரம் திங்க முடியாம இருந்த பஜ்ஜிய அப்படியே வாயில போட்டோம். அன்னைக்குச் சாகுபடி நல்ல படியா முடிஞ்சு வீட்டுக்குக் கெளம்பிட்டோம்.

அடுத்த நாள் அதே மாதிரி 4:30 மணிக்கு கும்முன்னு அதே எடத்துல நின்னுக்கிட்டு இருந்தோம். இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா மேக்கப். ஜீன்ஸ் பேண்ட். என்னுடைய நண்பன் என்கிட்டச் சொல்லாமலேயே ஷூவும் போட்டுக்கிட்டு வந்துட்டான். துரோகி. அதே நேரம், அதே தேவதை. அப்படியே கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் பாத்துக்கிட்டே இருந்தோம்.

"மாப்ள அவள ஃபாலோ பண்ணுவோமா?", நண்பன் வெவெகாரமா ஆரம்பிச்சான்.

"என்னடா மாப்பு சொல்லுத? ஏதாவது எடக்கு மடக்கா ஆயிறாதுல்ல?"

"அதெல்லாம் ஆவாது மாப்ள. கெளம்பு. கெளம்பு", என்னோட பதிலுக்கு நிக்காமையே வேகமா சைக்கிள அழுத்த ஆரம்பிச்சிட்டான். வேற வழி இல்லாம நானும் அவன்கூட போனேன். மெதுவா சமாதானபுரம் வழியா போய்க்கிட்டு இருந்தவ பின்னாலேயே ஏதோ நாங்க பேசிட்டே போற மாரி போனோம். நாங்க பின் தொடருறத அவ பாத்துட்டா. சைக்கிள வேகமா அழுத்துனா. அதுவுமில்லாம அப்பப்ப திரும்பி திரும்பி நாங்க அவளத்தான் ஃபாலோ பண்றோமான்னு செக் வேற பண்ணா. அவ மொகத்துல செம பயம். நேரா போக வேண்டியவ, சட்டுனு ஒரு முக்குல திரும்பி அழுத்த ஆரம்பிச்சா. நாங்க விடுவோமா?? அதே சந்துல திரும்புனா அவளுக்குச் சந்தேகம் அதிகமாயிடும்னு அடுத்தச் சந்துல திரும்பி கரெக்ட்டா அவ பின்னாடி வந்து சேந்தோம். அப்புறம் பாத்தா, அவ எங்க ஏரியாக்கேப் போறா. அப்பத்தான் நமக்கு லேசா கலக்க ஆரம்பிச்சது.

மண் புழுவப் பாத்தாலே பாம்புன்னு ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடுற தைரியசாலி நாம. ஒரு பொண்ண அவ ஏரியாலையே ஃபாளோ பண்றோம். நம்ம ஏரியாவும் கூட. அவ ஆளுங்க ரெண்டு பேரு வந்து 'ஏம்ல இங்க சுத்துதிய?'னு கேட்டாலே எல்லாத்தையும் ஒளறிடுவோம். நம்ம ஏரியால வேற காந்திக்கு அப்புறம் நல்லவன் ஜி தான்னு ஒரு பேர வேற எடுத்துத் தொலச்சொட்டோம்.

"மாப்ள. மறந்தே போயிட்டேம்ல. எங்க சித்தப்பா வீட்டுக்குப் போவனும். நான் போயிட்டு வர்றேன். நீ கண்டினிவ் பண்ணு"னு எஸ்கேப் ஆயிட்டேன்.

அடுத்த நாள் பக்கத்து க்ளாஸ் நண்பன் வீட்டுக்குப் போனோம். அவன் வீட்டுக்கு அப்பத்தான் ஃபர்ஸ்ட் டைம் போனோம். பாத்தா, அந்தச் சிட்டு அவன் வீட்டுக்குப் பக்கத்து வீடு.

"எல மக்கா. இனி உங்க வீட்டுக்கு அடிக்கடி வரணும் போலையே..", லேசா ஆரம்பிச்சோம்.

"என்னல ஒரு மாரி பேசிறிய? பக்கத்து வீட்டுப் புள்ளையப் பாத்தியளோ?"

லேசாய் வழிஞ்சுக்கிட்டே, "அவ பேரு என்ன மாப்பி?"

"அவ பேரு xxxxxx (பேரப் போட்டு மாட்டிக்கிடதுக்கு நான் என்ன ராமா? இல்ல தம்பியா?). எலேய் அவள ரூட் விடுற வேலையெல்லாம் வச்சிக்கிடாதிய"

"உங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்தா அவ உன் ஆளா? அவ பப்ளிக் டெலிஃபோன் பூத். யாரு வேணும்னாலும் ஸைட் அடிக்கலாம்"

"எல. பக்கத்து வீட்டுல இருந்துக்கிட்டே நான் ஏன் அவள ஸைட் அடிக்காம இருக்கேன்னு சொல்லு?"

"அவுங்க அம்மா உங்க அம்மாக்கிட்ட சீனி கேட்டிருப்பாங்க. அப்படியே உனக்கும் அந்தப் பொண்ணத் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்ச பொண்ணுங்களத்தான் ஸைட் அடிக்க முடியாதே. அதுனாலத்தான் நாங்க எந்தப் பொண்ணுங்களையும் தெரிஞ்சிக்கிறதே இல்ல.", அவன்கிட்ட பேசிட்டு இருந்தாலும் நாலு கண்ணு மட்டும் அவ வீட்டையே நோட்டம் விட்டுட்டு இருந்துச்சு.

"எங்க அம்மா சீனியும் வாங்கல. உப்பும் வாங்கல. கொஞ்ச நாளைக்கு முன்னால நம்ம சீனியர் ஒருத்தனப் போட்டாங்கள்ல. அது இந்தப் பொண்ணுக்காகத்தான்"

"என்னல சொல்லுத?" பேச்சு வாயில வர்றதுக்குள்ள எக்கச்சக்க நேராமாயிடிச்சு.

"ரெண்டு கேங்கல இருந்து இந்தப் பொண்ண ரூட் விட்டுக்கிட்டு இருந்தானுவ. அதுல ஒரு கேங்க்தான் இன்னொரு கேங்க் ஆளப் போட்டுத் தள்ளுனானுவ"

அப்படியே எங்களுக்கு வேக்க ஆரம்பிச்சது. கைல லேசா நடுக்கம். நம்ம கேங்கெல்லாம் 'அண்ணாச்சி. இவன் இங்குட்டுத்தான் ஒழிஞ்சிக்கிட்டு இருக்கான்'னு காட்டிக் கொடுக்குத எட்டப்பன் பயபுள்ளைங்களாச்சே. அந்த நேரத்துல அவ வீட்டைவிட்டு வெளில வந்து, எதுத்தாப்ல இருக்குறக் கடைக்குப் போனா. போற வழில எங்களையே மொறச்சிப் பாத்துக்கிட்டேப் போனா. அந்தக் கடைக்காரங்கக்கிட்ட வேற எங்களப் பத்தி ஏதோ சொல்லுத மாதிரி இருந்துச்சு. அப்படியே அந்த நண்பன் பக்கத்துல போய்

"மச்சான். நாங்க யாருன்னு யாராவது கேட்டா, தெரியாது. சும்மா அட்ரஸ் கேட்டாங்கன்னு சொல்லு. ஸ்கூல்ல உன்கிட்ட ஆட்டையப் போட்ட பேனாக்காக பழி வாங்கிறாதடா. இது உயிர் பிரச்சனை"னு வேகமா சைக்கிள அழுத்திக்கிட்டு அந்த எடத்தவிட்டு கெளம்புனதுதான். அதுக்கப்புறம் பாளை பஸ் ஸ்டாண்ட் பக்கங்கூட போகவே இல்ல.

32 comments:

கருப்பு said...

அட இங்கேயும் கேங் பிரச்னைதானே?

நன்றாக இருந்தது பதிவு ஜி.

சூப்பர்!

நாகை சிவா said...

யோவ்... ஜி... உன்னய வீரன்ல நினைச்சேன் நான்....

சரித்திரத்தில் உன் பெயர் இடம் பெற இருந்த ஒரு அபூர்வமான சான்ஸ் இப்படி விட்டுட்டியேப்பா....

சே....சே..... நீ நாளைக்கு நம்ம ஜொள்ளு பாண்டி கிளாஸ்க்கு வந்து சேரு.... வரும் போது

உடல் மண்ணுக்கு உயிர் பிகருக்கு என ஒரக்க சொல்லிக்கிட்டே வா...

ALIF AHAMED said...

அத்தான் நீங்க யாருனு கடையில விசாரிச்சிகிட்டு இருந்தேன் என் உயிரே உங்களுக்காக தான் நீங்க என்னடானா உயிருக்கு பயந்து ஓடுரீங்க

அத்தான் என் பேரு xxxxxx இல்ல கீதா

சொல்லுங்க கீதா

:)

Anonymous said...

"சைட் அடிக்கப் போனா சும்மா அதிருதுல்ல..."

///

எது....?

Anonymous said...

உடல் மண்ணுக்கு உயிர் பிகருக்கு என ஒரக்க சொல்லிக்கிட்டே வா...
///

கேட்குறத்துக்கு நல்லாதான் இருக்கும்

ஜி said...

//விடாதுகருப்பு said...
அட இங்கேயும் கேங் பிரச்னைதானே?

நன்றாக இருந்தது பதிவு ஜி.

சூப்பர்!
//

வாங்க கருப்பு... என்ன பண்றது? எங்க போனாலும் கேங்க் வார் இருக்குதே :((

ஜி said...

// நாகை சிவா said...
யோவ்... ஜி... உன்னய வீரன்ல நினைச்சேன் நான்....//

யோவ் புலி.. அது நாகை இல்ல.. திருநெல்வேலி. டைம் சொல்லலனாகூட அருவாளால போட்டிருவாய்ங்க :((

//சரித்திரத்தில் உன் பெயர் இடம் பெற இருந்த ஒரு அபூர்வமான சான்ஸ் இப்படி விட்டுட்டியேப்பா....//

சரித்திரத்துல வந்து என்னத்துக்கு?? அத படிக்கிறதுக்கு உயிர் வேணும்ல

//சே....சே..... நீ நாளைக்கு நம்ம ஜொள்ளு பாண்டி கிளாஸ்க்கு வந்து சேரு.... வரும் போது//

நான் பாண்டிண்ணே க்ளாஸுக்கு ரெகுலர் ஸ்டூடண்ட்

//உடல் மண்ணுக்கு உயிர் பிகருக்கு என ஒரக்க சொல்லிக்கிட்டே வா...
//

சொல்லும்போதே போட்டுட்டானுவன்னா???

ஜி said...

//மின்னுது மின்னல் said...
அத்தான் நீங்க யாருனு கடையில விசாரிச்சிகிட்டு இருந்தேன் என் உயிரே உங்களுக்காக தான் நீங்க என்னடானா உயிருக்கு பயந்து ஓடுரீங்க

அத்தான் என் பேரு xxxxxx இல்ல கீதா

சொல்லுங்க கீதா

:)
//

கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்??

கப்பி | Kappi said...

:))

வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா?

என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :))

கப்பி | Kappi said...

//கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்?? //

தெரியாத மாதிரியே கேட்கறீங்க :))

Santhosh said...

எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம்.

Santhosh said...

//சரித்திரத்துல வந்து என்னத்துக்கு?? அத படிக்கிறதுக்கு உயிர் வேணும்ல //
உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.

மணிகண்டன் said...

//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.
//

இப்படியெல்லாம் உசுப்பேத்தி , தாமிரபரணி தண்ணி இப்போ செவப்பா போனதேன்னு பாடனுமா?

நாகை சிவா said...

//வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா?

என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :)) //

கண்ணு போனா வரும்ய்யா பிகரு போன வருமாய்யா?

நாகை சிவா said...

//எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம். //

இதான் பங்காளிங்குற... எப்படி சொன்னான் பாரு... அடுத்தப்பா அருவாள எங்க வைக்குற அவங்க அப்பா கழுத்துல....

நீ வை.... மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்....

நாகை சிவா said...

//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல. //

அட்ரா....அட்ரா.... இல்லையா பின்ன

ACE !! said...

என்ன அதிர்ந்தாலும் தில்லா நிக்கனும்லே.. அத விட்டுபுட்டு அப்பனுக்கும் சுப்பனுக்கும் பயந்தா எப்படி... என்னவோ போங்க.. மானத்த கப்பலேத்திட்டீங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும்யா...அது தான் சங்கத்துக்கு அழகு.. என்ன நான் சொல்றது.. :D :D

நல்ல நகைச்சுவை பதிவு ஜி.. வாழ்த்துக்கள்.. :)

ACE !! said...

//உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல. //

அதானே..

Anonymous said...

maranthu pona sila vaarthaikalai
gnapaka paduthukiramathiri unkal eluthil niraya nativity vaasam - then, ippadi ellaam panninaal nellaiyil enna nadakkum enta unmaiyai ellorukkum sonna maadiri- summa verum gang illa - athil jaathi kalanthirukkume athai solla maranthuviteenga JI - oru siriya, ellor vazhkaiyilum nadakkum sampavathai, ithanai perum padikira maathiri eluthi ithanai feedback eluthavaikamudikirathu - killadi thaam le - Oorvaasi

ஜி said...

//கப்பி பய said...
:))

வாளும் வேலும் இரு கண்கள் இல்லையா?

என்னது கீதா அப்பாவுக்கு தெரிஞ்சா கண்ணையே நோண்டிடுவாங்களா? :))
//

கீதா அப்பா என்ன ப்லேக் ரோஸ் விக்கிற பார்ட்டியா???

ஜி said...

// கப்பி பய said...
//கீதாவா? ஹூ இஸ் திஸ் ப்லேக் ஷீப்?? //

தெரியாத மாதிரியே கேட்கறீங்க :))
//

தெரிஞ்சிக்கலாம்னுதான் கேட்டேன்... (கேப்டன் வாய்ஸில் படிக்கவும்)

ஜி said...

//சந்தோஷ் aka Santhosh said...
எலேய் ஜியா என்னலே திருநெல்வேலியில இருந்து வந்துட்டு இப்படி பண்ணிபுட்டே. அப்படியே ஒரு அருவாவை எடுத்துகிட்டு போயி xxxxxx அப்பா கழுத்துல வெச்சி இப்ப பொண்ணை தறியா இல்ல கழுத்த தறியா அப்படின்னு வீரத்தோட நம்ம சங்க மரபை காப்பாத்த வேணாம்.
//

அப்படி பண்ணிருக்கலாம். அதுக்கப்புறம் திருநெல்வேலில சண்டைப் போட்டுக்கிறதுக்கு ரெண்டு கேங்குமே இல்லாம போயிடுமே. அப்புறம் திருநெல்வேலி பேரே கப்பலேறிடுமேன்னுதான் விட்டேன். இல்லைனா இந்நேரம்...

ஜி said...

//சந்தோஷ் aka Santhosh said...
உயிராலே முக்கியம் பெயர் முக்கியம்லே. ரோசிச்சி பாரு நாளை போல மூணாவகுப்பு புள்ளைங்க ஜியா ஒரு வீரரு, மாவீரரு அப்படின்னு கத்தும் போது நிஜமாவே அதிருது இல்ல.//

நாம கஜினி முஹம்மதப் பத்தி படிக்கும்போது எத்தன தடவ அவன யேசிருப்போம். அதே மாரி யேசு வாங்கச் சொல்லுதியளா??

ஜி said...

// மணிகண்டன் said...
இப்படியெல்லாம் உசுப்பேத்தி , தாமிரபரணி தண்ணி இப்போ செவப்பா போனதேன்னு பாடனுமா?
//

நல்லா கேளுங்க அண்ணாச்சி... நம்ம தமிழ்நாட்டுலையே அந்த ஆறு மட்டும்தான் நிக்காம ஓடுது, பயபுள்ளைங்க சிந்துற ரத்தத்தால....

ஜி said...

//நாகை சிவா said...

கண்ணு போனா வரும்ய்யா பிகரு போன வருமாய்யா? //

அண்ணாச்சி... மாத்திச் சொல்லுதியளே.. அப்ப கண்ணு போயிருந்தா, இப்ப ராம் அண்ணாச்சி கூட சேந்து பெங்களூர் இயற்கைய ரசிச்சிருக்க முடியுமா??

ஜி said...

//நாகை சிவா said...

இதான் பங்காளிங்குற... எப்படி சொன்னான் பாரு... அடுத்தப்பா அருவாள எங்க வைக்குற அவங்க அப்பா கழுத்துல....

நீ வை.... மிச்சத்த நாங்க பாத்துக்குறோம்.... //

நீங்க பாப்பீங்க... அத நான் பாக்க இருக்க மாட்டேனே :((

ஜி said...

//சிங்கம்லே ACE !! said...
என்ன அதிர்ந்தாலும் தில்லா நிக்கனும்லே.. அத விட்டுபுட்டு அப்பனுக்கும் சுப்பனுக்கும் பயந்தா எப்படி... என்னவோ போங்க.. மானத்த கப்பலேத்திட்டீங்க.. எவ்வளவு அடிச்சாலும் தாங்கனும்யா...அது தான் சங்கத்துக்கு அழகு.. என்ன நான் சொல்றது.. :D :D//

ஒரு சின்ன மேட்டர போட மிஸ் பண்ணிட்டேன்.. அதனால எல்லாரும் கன்ஃபியுஸ் ஆயிட்டீங்க. ஆக்டுவலி அந்த ஃபிகர விட்டதுக்கு ரீஸனே அதோட பக்கத்துத் தெருல அதவிட சூப்பரான ஒரு சிட்டு இருந்துச்சு. அதுனாலத்தான் இத விட்டுட்டு அதுக்குத் தாவிட்டேன் :))

//நல்ல நகைச்சுவை பதிவு ஜி.. வாழ்த்துக்கள்.. :) //

டாங்கிஸ் சிங்கம் :))

G.Ragavan said...

அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. பிரமாதம் ஜி. பிரமாதம். பாளையங்கோட்டை சங்சன்னு படிக்கைல...அடடா! அடடடடா!

அது சரி...அப்புறம் ஒரு நாளு தெரியாம அந்தப் பிள்ளளயப் பாத்து...கண்ணடிச்ச கதையச் சொல்லவேயில்லையே!

ulagam sutrum valibi said...

எலஜி,
இந்த டாபிக்கு முன்னாலே யேசிச்சி சங்க போட்டிக்கு எழுதி வச்சோமல.
நீதா நம்ம பக்கம் வரதுல,இப்பஅத வேரச போடுவோமல.

ஜி said...

//G.Ragavan said...
அப்பிடியே நம்மூருக்குப் போய்ட்டாப்ல இருந்துச்சு. பிரமாதம் ஜி. பிரமாதம். பாளையங்கோட்டை சங்சன்னு படிக்கைல...அடடா! அடடடடா!//

வாங்க ஜிரா... அதெல்லாம் வாலிப வயசு.. இப்ப அந்தப் பக்கம் போனோம்னா, சின்ன சின்ன பயலுவல்லாம் கூலிங் க்ளாஸ் லெவெலுக்குப் போய் ஸைட் அடிச்சிட்டு இருக்கானுவ :((

//அது சரி...அப்புறம் ஒரு நாளு தெரியாம அந்தப் பிள்ளளயப் பாத்து...கண்ணடிச்ச கதையச் சொல்லவேயில்லையே! //

என்ன இப்படி ரகசியத்த வெளியச் சொல்லிப் போட்டிய.. அப்புறம் நம்ம வீரம் வெளில தெரிஞ்சுப் போயிடும்ல :))

ஜி said...

//ulagam sutrum valibi said...
எலஜி,
இந்த டாபிக்கு முன்னாலே யேசிச்சி சங்க போட்டிக்கு எழுதி வச்சோமல.
நீதா நம்ம பக்கம் வரதுல,இப்பஅத வேரச போடுவோமல. //

வாங்க பாட்டிமா.... அந்தப் பதிவ மிஸ் பண்ணிட்டேனோ?? சரி.. இனி ஒரு போஸ்ட் போட்டவுடனே எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க.. கும்முன்னு வந்து படிச்சுடுறேன் :))

களவாணி said...

//ஒரு வேள எல்லா பயலுவலும் 420 கேஸ்தான்//

நீங்க 420ன்னா நாங்கள்லாம் 320, (உங்களை விட சிறிய கேஸ்கள்) ;)

//"சூப்பர் மச்சி.. இதுக்குத்தான் நம்ம பாளையங்கோட்டையத் தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்டுனு சொல்லுதாவளோ?"//

இது எப்போலேர்ந்து, எனக்கு சொல்லவேயில்ல

//"மாப்ள இன்னைக்கு எந்த ஸ்கூல்?", வெகுளியான நாந்தான்.//

பாருங்கப்பா வெவரமான கேள்வியக் கேட்டுப்புட்டு இவரு வெகுளியாமா

//(பேரப் போட்டு மாட்டிக்கிடதுக்கு நான் என்ன ராமா? இல்ல தம்பியா?). //

நீங்க வெகுளிதானுங்க, நம்பிட்டேன்

//வாங்க கருப்பு... என்ன பண்றது? எங்க போனாலும் கேங்க் வார் இருக்குதே :(( //

அடப் பாவிகளா, ஒரு ஃபிகருக்காக கேங் வார்னு சொல்லி டங் வாரை அத்துப் புட்டீங்களே. தெரியாத பொண்ணை ஸைட் அடிச்சி ரிஸ்க் எடுக்குறதுல த்ரில் இருந்தாலும், உயிர் பிரச்சினைன்னு வந்துட்டா "சித்தப்பா வீட்டுக்குப் போகணும்னு " S ஆகிடணும்.

நல்ல பதிவு ஜி, செம காமெடி