Thursday, June 28, 2007

கவுண்டரின் கவுஜ திறனாய்வுப் பத்திரம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாமே!

ஆரம்பமே அட்வைஸா? ஏன்டா வீட்ல இந்தப் பெருசுங்க தொல்லத்தான் தாங்க
முடியலைனா, நீங்களுமா??

மூன்று வேளையும் அமிர்தம் உண்டும்
நஞ்சேறவில்லை இந்த பிஞ்சு நெஞ்சில்.
நஞ்சை நஞ்சே முறிக்குமாம்
நீ எந்தன் நெஞ்சில் இருப்பதனால்.


அல்வாக்கும் அமிர்தத்துக்கும் வித்தியாசம் தெரியாத பஞ்சர் மண்டையா. நீ மூனு
வேளையும் மூக்குப் பிடிக்க திங்குறதுக்கு ஏன் டா எவளோ ஒருத்திய குத்தம் சொல்ற?

காதலித்ததுதான் தவறா?இல்லை...காதல்தான் தவறா?

நீ காதலிச்சதுதான்டா தப்பு... லவ் பண்றதுக்கு என்ன மாதிரி ஒரு பெர்சனாலிட்டி
வேணும்டா. நாங்கெல்லாம் காலேஜ்ல படிக்கும்போது....

பெரிதாக ஒன்றும் கேட்க வில்லை

ஆமா.. நீ கேட்டா மட்டும் அவ கொடுதிட போறாளா?

"ஆம்""இல்லை"இரண்டிலொன்று வேண்டும்.

எவன்டா இவன் சரியானக் கேனப் பயலா இருக்க? கேக்குறதுதான் கேக்குற.. ஒரு
பத்து லட்சம் பணம், பங்களான்னு கேக்க வேண்டியதுதானே??

இல்லை என்பது உன்பதில் எனில்
இந்தமேகம் வேறு ஆகாயத்தில்வேறு
உருவில் இணைய ஆயத்தமாகும்.


ஏன்டா உனக்கெல்லாம் ஒரு ஆகாயத்துல தூறல் விழுந்தாலே பெரிய விசயம்.
இதுல இன்னொரு ஆகாயமா?

ஆம் எனில் இப்போதே கூடி மழையாக
தரையிறங்கி வாழ்வோம்.


டேய். உச்சா போறதா இருந்தா ஒழுங்கா போ. அத ஏன்டா தண்டோரா போட்டு ஊருக்குச் சொல்ற? இங்க அவன் அவன் மழை பொய்யாம காஞ்சி போய் இருக்கான். இதுல இவரு மழை பொய்ய போறாராம். டேய்... எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும்? நீ ப்ரோபோஸ் பண்றியா? இல்ல வானிலை அறிக்கை சொல்றியா?

இரண்டிலுமில்லாத மவுனத்தைபதிலாக தருகிறாய்.

ஏன்டா ஒரு ஊமச்சிக்கிட்ட பேசு பேசுன்னு சொன்னா அவ எப்டிடா பேசுவா
டப்பாத் தலையா...

என் இருப்பை நியூட்ரலிலேயே வைத்திருப்பதில்
என்ன சுகமடி உனக்கு?


ஆமா.. இது பெரிய அரசு கஜானா இருப்பு. உன் இருப்பு நியூட்ரல்ல இருக்குதுன்னா,
நி ஒக்காந்துக்கிட்டு இருக்குற சேர்ர முன்னாலையும் பின்னாலையும் கொஞ்சம் ஆட்டு..

இன்றாவது பதில் வருமா?

வரலைனா கொஸ்டீன் பேப்பர லீக் அவுட் பண்ண போறியா?

48 டிகிரி செல்சியஸ் வெயிலோடு
போட்டி போடுகிறது என் இதயம்.


ஆமா.. இவரு பெரிய ஃபெண்டாஸ்டிக் ஃபோர். இவரு இதயம் நெருப்பா இருக்குதாம். டேய் உன்னையெல்லாம் அணுகுண்டு தயாரிக்கிற உலைல போட்டு வதக்கணும்டா...

அதை விட வாட்டுகிறது என்னை உன் மவுனம்.

ஏன்டீ.. நீயாவது கொஞ்சம் மவுன விரதம், ஊமைனு ஏதாவது சொல்லி தொலையேன்டி.

காத்திருக்கும் கணங்கள் சாதாரணமாயினும்
அது ரணமாக இருக்கிறதே மானே.


பத்து வருசமா பஸ்ஸே வராத பஸ் ஸ்டாப்ல காத்திருந்தா ஏன்டா ரணமா இருக்காது.? அதுலையும் சும்மா நிக்காம அந்த பம்புசெட்டுல தண்ணி புடிக்கிற அந்தப் பொண்ணு கையப் புடிச்சு இழுத்தா?. அதுவும் அவ புருசன் போன வாரந்தான் ஜெயில்ல இருந்து வந்தான்னு தெரிஞ்சும் அவக்கிட்ட வம்பு பண்ணா ரணமாவது?

கள்ளனிடம் தேடியும் கிடைக்கவில்லை
உன் உதட்டுக் கதவினை திறக்கும் சாவி.

நீயே ஒரு திருட்டு மண்டையன். நீ இன்னொரு கள்ளங்கிட்ட தேடுனியா? ஏன்டா
அவளே பல்லுல கிளிப்ப மாட்டிக்கிட்டு வாய மூட முடியாம இருக்கா? உங்க
கற்பனைக்கு ஒரு அளவே இல்லையாடா?

நான்காவது கியரில் பிகரோடு பறக்க
காத்திருக்கிறேன் நியூட்ரலிலே
நிறுத்தி வைத்திருப்பதுஎன்ன நியாயமடி.


பெட்ரோல் போடக்கூட காசு இல்லாம திரியுற தகரடப்பா மண்டையா. ஒரு அம்பது ருபாய்க்காக ஒரு பொண்ண லவ் பண்றேன்னு வெக்கமில்லாம சொல்றியே...
உனக்கே இது அசிங்கமா இல்ல??

இன்பாக்சை ஸீரோவாக்கி உன்
மெயில் கொண்டு நிரப்பி.
மயில் எழுதிய மடல் என்று
பெயரிடுவேன் கண்ணே.


அப்படியே...சகிலாவின் சாகசங்கள், மும்தாஜின் முனுகல்கள்னு சப்ஸ்க்ரைப் பண்ணி வைய்யி. இன்பாக்ஸ் ஃபுல் ஆகும். இவனுக்கெல்லாம் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்தவன மிதிக்கணும்.

சீக்கிரம் வா தேனே!

ஏன்? டப்பா போட்டு விக்கப் போறியா?

இந்த வருட இறுதி வரை காத்திருப்பேன்.

அடுத்த வருச முதல் நாள் சொன்னா ஒத்துக்க மாட்டியா?

இப்படிக்கு கவுஜயான காதலன்.

உங்களுக்கெல்லாம் ஜி மாதிரி கவுஜன கூட்டி வந்து அவனோட ஆயிரம் கவுஜய உன் காதுக்குள்ளச் சொல்லணும்டா. அப்பத்தான் இனி கவுஜைய எழுதாம மக்கள தொல்லப் பண்ணாம இருப்பீங்க.

நன்றி: கவுண்டர்"ஜி"

இதுபோலவே நீங்கள் எழுதி கவிதை/படைப்பை கவுண்டரிடம் கொடுத்து திறனாய்வு
செய்து கொள்ளுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

காலிங்
மேட்டுக்குடி அரண்மனை
மேட்டுக்குடி

19 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

யாராச்சும் இருக்கீங்களா? 9 மணிக்குள்ள ஒரு கும்மியடிச்சுட்டு போலாம். இன்னும் 20 நிமிடங்களே இருக்கு!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//பெரிதாக ஒன்றும் கேட்க வில்லை

ஆமா.. நீ கேட்டா மட்டும் அவ கொடுதிட போறாளா?//

:-))) ரிப்பீட்டே!

.:: மை ஃபிரண்ட் ::. said...

//"ஆம்""இல்லை"இரண்டிலொன்று வேண்டும்.

எவன்டா இவன் சரியானக் கேனப் பயலா இருக்க? கேக்குறதுதான் கேக்குற.. ஒரு
பத்து லட்சம் பணம், பங்களான்னு கேக்க வேண்டியதுதானே??//

ஒரு பத்து கோடி கேட்கலாமே? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இரண்டிலுமில்லாத மவுனத்தைபதிலாக தருகிறாய்.

ஏன்டா ஒரு ஊமச்சிக்கிட்ட பேசு பேசுன்னு சொன்னா அவ எப்டிடா பேசுவா
டப்பாத் தலையா...//

கண்ணால் பேசும் பெண் அவள்.. அவ பேசியிருப்பா! இவர்தான் பார்க்கலை.. ஹூஹீ

.:: மை ஃபிரண்ட் ::. said...

//கள்ளனிடம் தேடியும் கிடைக்கவில்லை
உன் உதட்டுக் கதவினை திறக்கும் சாவி.//

இவதான் சாவித்ரியா? ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//சீக்கிரம் வா தேனே!

ஏன்? டப்பா போட்டு விக்கப் போறியா?//

முதல்ல தேனி வந்து உங்களை கொட்ட போகுது.. ஜாக்கிரத்தை!! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//இந்த வருட இறுதி வரை காத்திருப்பேன்.//

அதுக்கப்புறம் வேற பொண்ணை தேடி போயிடுவாரா?

.:: மை ஃபிரண்ட் ::. said...

தம்பி கதிரு,

ஏற்கனவே எழுதிய பதிவுக்கு எப்போதோ கும்மியடிக்க சொன்னதா ஞாபகம்..

அன்னைக்கு முடியல.. அதான் சேர்த்து எல்லாமே இங்கே செஞ்சாச்சு! திருப்தியா? ;-)

அனு said...

///அதை விட வாட்டுகிறது என்னை உன் மவுனம்.

ஏன்டீ.. நீயாவது கொஞ்சம் மவுன விரதம், ஊமைனு ஏதாவது சொல்லி தொலையேன்டி.//

கலக்கல் :)))))

anand said...

கவுன்டர் வாழ்கையில் இதலாம் சகஜமப்பா.....

குசும்பன் said...

யப்பா யாராவது அவரு வண்டிய தள்ளி விடுங்கப்பா!!! நியுட்ரலிலேயே இருக்கிறார்...

தம்பி போன மாசம் துபாய் வருகிறேன் என்றாய்...இன்னும் வண்டி நியுட்ரலிலேயே இருந்தால் எப்பதான் வந்து சேருகிறமாதிரி உத்தேசம்???

தம்பி said...

யெம்மா மை ப்ரெண்டு உன்ன நெனச்சா கண்ணுல தண்ணியா ஊத்துது.
யாருமே இல்லாம ஒத்தையில நீ கும்மியடிச்சத நினைச்சா....

ஆனாலும் ரொம்ப நல்ல்ல்ல்ல பொண்ணும்ம்மா நீயி.

//மீ தி ஃபர்ஸ்ட்டூ? ;-) //

பத்து வரைக்கும் நீயேதான் :)

தம்பி said...

//தம்பி போன மாசம் துபாய் வருகிறேன் என்றாய்...இன்னும் வண்டி நியுட்ரலிலேயே இருந்தால் எப்பதான் வந்து சேருகிறமாதிரி உத்தேசம்??? //

நாளை கிடேசன் பார்க் தலைவர் அமீரகம் வருகிறார். அவரிடம் மீட்டிங்கிற்கு தேவையான பொருள்களை பஞ்சாப் "சிங்"குகளிடம் கொள்முதல் செய்துவிட்டு பிறகு சந்திக்கலாம் குசும்பா!

CVR said...

//அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாமே!

ஆரம்பமே அட்வைஸா? ஏன்டா வீட்ல இந்தப் பெருசுங்க தொல்லத்தான் தாங்க
முடியலைனா, நீங்களுமா?//

ஆரம்பமே அசத்தல்!!
இங்கிட்டு ஆரம்பிச்சு பதிவு ஒரே சிரிப்பு வெடி தான்!!
வாழ்த்துக்கள் தம்பி அண்ணா!! :-))

Padmapriya said...

sema ROTFL post

தம்பி said...

தம்பி (என்ன கொடுமை இது தம்பியே தம்பினு கூப்பிடறது)

இதுல கவுஜ மட்டும்தான் என்னுது. மீதி நக்கலெல்லாம் நம்ம ஜியாவோட கைவண்ணம். எத்தனை நாள் பகையோ தெரில போட்டு தாக்கிட்டாரு.

நன்றி.

இன்னும் நாலு பேர் கமெண்ட் போடுங்க அப்பதான் சிறந்த இந்த படைப்பு நாலு பேரை சென்றடையும்.

cdk said...

சீக்கிரம் வா தேனே!

ஏன்? டப்பா போட்டு விக்கப் போறியா?


கவுண்டர் கவுண்டர் தாம்பா!!

ஜி said...

என்னுடைய பெயரை இழுத்த கவுண்டரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதனை என்னுடைய அனுமதி இல்லாமல் பதிவிலிட்ட தம்பியையும் நான் கன்னா பின்னாவாகக் கண்டிக்கிறேன்...

(ஸ்மைலி போடலியே.. நான் கோவமா சொன்னனா இல்ல சும்மாக்காச்சிக்குத்தான் சொன்னனான்னு எப்டி கண்டுபிடிப்ப?? )