Wednesday, June 27, 2007

லைலாவ பண்ணு இம்ப்ரஸு...

டைட்டில பாத்தவுடனே டைவ் அடிச்சு ஓட நினைக்கிறவங்க, அப்படியே க்ளைமேக்ஸ்ல இருக்குற பஞ்ச் டையலாக்க பஞ்சமில்லாம படிச்சுட்டு அப்படியே அப்பீட்டு ஆகிக்கோங்க. மத்தவங்க மேலப் படிங்க... ஸாரி... பேச்சு தோஷத்துல அப்படி சொல்லிட்டேன். நீங்க கீழப் படிங்க...

ஸைட் அடிக்கிற ஃபிகர பாக்கப் போகுமுன்னாடி, நல்லா மேக்கப் பண்ணிட்டு போங்க. ஆனா ஒன்னுங்க. அப்படி ஸைட் அடிக்கக் கெளம்பும்போது உங்கள விட கொஞ்சம் சுமாரா பசங்க யாராவது இருந்தாங்கன்னா, அவுங்கள தயவு செஞ்சு கூட்டிட்டுப் போயிடாதீங்க. அவனுக்கு செட் ஆனாகூட பரவாயில்லீங்க. அப்புறம் அவன் உங்க ஆளோட லவ் பண்ண உங்கள காவலுக்கு விட்டுறுவான். அதாவது பரவாயில்ல. நம்மள சுண்டல் வாங்கித் தரச் சொல்லி நம்ம கண்ணு முன்னாலையே நம்ம ஃபிகர் கூட கடலை போடுவான்.

நம்முடைய வீக்னெஸ், நம்ம ஃபிகரோட ஸ்ட்ராங்னஸ்ஸா இருந்துட்டா பெரும் பிரச்சனை. இப்படித்தான், நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது, எங்க க்ளாஸ்லையே சூப்பர் ஃபிகர் ஒன்னு உண்டு. அவளுக்கு எப்படியாவது பிராக்கட் போட்டு அப்புறம் ராக்கெட் இல்லாமலே சந்திரமண்டலத்துல அவகூட டூயட் பாடணும்னு திரிஞ்சவங்க எக்கச்சக்க பேர். கூட்டம் எங்க சேந்தாலும் அதுல குடியிருக்குற ஆளாச்சே நாமெல்லாம். இந்தக் கூட்டத்துல மட்டும் சேராம இருந்திடுவோமா?? ஒரு தடவ, இயற்பியல் லேப்ல ஒரு எக்ஸ்பெரிமெண்ட்ட முடிச்சுட்டு நோட்ட சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஏ.ஆர். ரகுமானும், இளையராஜாவும் கம்பினேஷன்ல டாமினேஷன் போட்டு அடிச்ச வித்தியாசமான மெல்லிய குரல் அப்படியே காதுல விழுந்து மூளைல ஒரு டிராஃபிக் ஜாமையே ஏற்படுத்திச்சு.

"ஜி"

அப்படியே திரும்பிப் பாத்தா மயில். திடீர்னு ஒரு தவுஸண்ட் வாலா சரவெடி வெடிச்ச மாதிரி பட படன்னு பி.பி.ஸி, ஸ்டார் மூவீஸ், டிஸ்கவரி ன்னு பல சேனல்கள அட் எ டைம்ல ஓபன் பண்ண மாதிரி பேசினா. ஒரு எழவும் வெளங்கல. இதுக்குத்தான் தமிழ்ல பேசுனா நாலனா ஃபைன்னு போட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடத்துல சேந்திருக்கணும். நம்மாளு சென்னை கான்வெண்ட். நான் என்னமோ, ஊட்டி கான்வெண்ட்ல படிச்சு வந்த பயபுள்ளைன்னு நெனச்சுட்டா போல. 'எனக்கு ஒன்னுமே புரியல', அப்டீனு எப்டி இங்கிலிஸ்ல சொல்றதுன்னு தெரியல. நாம வேற, யாராவது ஹிந்தில பேசினா, 'மே ஹிந்தி மாலும் நஹி'னு ஹிந்திலத்தான் பதில் சொல்வேன்னு அடம்புடிக்கிற பரம்பரையாச்சே. அதுலையும் ஃபிகர் கிட்ட புரியலைன்னு சொன்னா அது கௌரவக் குறைச்சல் இல்லையா? அப்பத்தான் தலைவரோட 'படிக்காதவன்' படம் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியே ஒரு ஸ்மைல தூவிட்டு, "எஸ்"னு சொல்லிட்டு வேகமா அந்த எடத்த விட்டுக் கெளம்பிட்டேன். அப்புறமாத்தான் தெரிஞ்சது, அவளுக்கு நான் செஞ்சு முடிச்ச எக்ஸ்பெரிமெண்ட சொல்லித் தரச் சொல்லி அப்படி கேட்டான்னு. ச்சே.. அவளுக்கு சொல்லித் தரக் கூடிய நல்ல சான்ஸும் போச்சு. நம்ம வீக்னெஸும் அவளுக்குத் தெரிஞ்சுப் போச்சு :((

என்னத்தான் அசிங்கப் பட்டாலும் நம்ம ஃபிரண்ட்ஸ்கிட்ட நம்ம 'கெத்'த மெயிண்டெயின் பண்ணிக்கனும். அப்புறம் அவனுங்க ஃபிகருக்கிட்ட காமெடி பண்ணும்போது நம்மள ஊறுகாயா ஆக்கிடுவானுங்க. அதுனாலத்தான், அந்தச் சம்பவம் முடிஞ்ச வுடனே, நேரா நம்ம நண்பர்கள்கிட்ட,

"மச்சான், இன்னைக்கு அந்த ஃபிகர் ஏன்கிட்ட பேசினாடா... நாந்தான் அவளுக்கு ஃபிசிக்ஸ் லேப்ல சொல்லிக் கொடுத்தேன்"னு ஒரு பிட்டப் போட்டு அவுங்க காதுலையும் வாயிலையும் புகை வர வச்சேன்.

ஃபிகர் விசயத்துல என்னைக்குமே அவசரப் படக்கூடாது. என்னோட நண்பன் இப்படித்தான் ஒரு ஃபிகருக்கு நூல் விட்டுக்கிட்டு இருந்தான். அது எல்லாருக்கும் தெரியுங்றதால எல்லாரும் அவுங்க ரெண்டு பேரையும் வச்சி ஓட்டுவாங்க. ஒரு நாள் அந்தப் பொண்ணுக்கிட்ட இருந்து மெயில் மயிலா வந்திருந்துச்சு.

"நான் படிக்க வந்திருக்கேன். உன்ன மாதிரி ஊர் சுத்த வரல. உன்னையும் என்னையும் வச்சு ஓட்டுற மேட்டர் மட்டும் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, அப்புறம் என்னோடப் படிப்பையே நிறுத்திடுவாங்க"ன்னு அந்த மெயில்லப் போட்டிருந்துச்சு. பயபுள்ள பயந்தடிச்சு வேகவேகமா, அவசர அவசரமா அதுக்கு ஒரு பதிலத் தட்டி விட்டான்.

"நானும் படிக்கத்தான் வந்திருக்கேன். பசங்க ஓட்டுனா, அதுக்கு நான் என்னப் பண்ண முடியும்.", அப்படி, இப்படின்னு எக்கச் சக்கமா அந்தப் பொண்ண வஞ்சி எழுதிப்புட்டான். அதுக்கப்புறம் என்கிட்ட வந்து மெல்லமா இந்த மேட்டர சொன்னான். 'வேற யாருக்கெல்லாம் இந்த மேட்டர் தெரியும்?'னு கேட்டேன். பயபுள்ள உண்மையான நண்பன் நாந்தான்னு என்கிட்டத்தான் மொதல்ல சொல்லிருக்கான். அப்புறம் அவன்கிட்டச் கேட்டேன்.

"ஏன்டா அவதான் அந்த மெயில அனுப்புனாளான்னு உனக்குத் தெரியுமா?"

"ஆமாம்டா. அவ மெயில் ஐடில இருந்துதான் மெயில் வந்துச்சு"

"மாப்ள. இந்த ஃபேக்மெயில்ஸ் ஃபேக்மெயில்ஸுன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? அதுல இருந்து யார் ஐடில இருந்தும் யாருக்கு வேணும்னாலும் மெயில் அனுப்பலாம்"னு லேசா சிரிச்சிக்கிட்டேச் சொன்னேன்.

அன்னைக்கு ஹாஸ்டல் முழுக்க என்னையத் தொரத்தி தொரத்தி அடிச்சான். நானும் நண்பனுக்கு செட் ஆகணும்னு ஒரு நல்லெண்ணத்துலதான் அதப் பண்ணினேன். பயபுள்ள அவசரப் பட்டதால எல்லாம் போச்சு.

ஆர்வக் கோளாறு அறவே கூடாது. ஃபிகர் செட் ஆகுறதுக்கு முன்னாடி யோசிக்காமப் பேசுனா ஆப்பு. செட் ஆனதுக்கப்புறம் யோசிச்சாலே ஆப்பு. ஒரு தடவ டூர் போயிட்டு பஸ்ல வரும்போது ரொம்ப மும்முரமா எல்லாரும் அன்தாக்ஷ்ரி விளையாடிட்டு இருந்தாங்க. நம்ம நண்பன் ஒருத்தன் அவனோட ஃபிகர இம்ப்ரஸ் பண்றதுக்காக எக்கச்சக்கமா காதல் பாடல்கள அள்ளி விட ஆரம்பிச்சான். எதிர் அணில அவனோட ஆளோட சேத்து முக்காவாசி பொண்ணுங்கதான். தலைவர்தான் இந்த அணில ஃப்ரண்ட்ல நின்னு பாடிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல நம்ம நட்போட அணிதான் பாடணும். 'எ'னு தொடங்குற எல்லாப் பாட்டையும் அதுக்கு முன்னாடி பாடியாச்சு. எதுவுமே தோணல தலைக்கு. நம்மளோட இன்னொரு நண்பன் அவன் காதுல ஒருப் பாட்ட பத்திச் சொன்னான். அவனும் ஓவர் ஆர்வக்கோளாறுல அந்தப் பாட்டையும் பாடித் தொலச்சிட்டான். அதோட நின்னுப் போச்சு அன்தாக்ஷ்ரி. என்னப் பாட்டுனு கேக்குறீங்களா? கிழக்குச் சீமையிலேயில பாண்டியன் பாடுற பாட்டுத்தாங்க... "எதுக்குப் பொண்டாட்டி..."

நமக்குத் தெரியாத மேட்டர் நம்ம ஃபிகருக்குத் தெரிஞ்சுதுன்னு வைங்க, உடனே போய் 'எனக்கு அத சொல்லித் தாயேன்'னு அப்பாவியாய் கேட்டுக்கணும். ஆனாலும் அதுலையும் ரொம்ப கவனமா இருக்கணும். என்னோட நண்பன் ஒருத்தன், ஒரு பொண்ணுக்கிட்ட, ஹிந்திக் கத்துக்கிட்டு இருந்தான். நமக்கு ஒரு ஃபார்வேர்ட் மெயில் வந்திருந்தது. அதுல பாதி ஆங்கிலத்துலையும், பாதி ஹிந்திலையும் இருந்தது. நல்ல காமெடி மெயில். ஆஹா, நம்ம பயபுள்ளைக்கு இந்த ஹிந்தி மெயில் ரொம்ப உபயோகமா இருக்குமேன்னு அவனுக்கு அனுப்பி அதுக்கு அர்த்தத்த அவக்கிட்டக் கேக்கச் சொன்னேன். அவனும் அத அவளுக்கு ஃபார்வேர்ட் பண்ணி அதுக்கான அர்த்தத்த கேட்டான். அதுக்கு அவ பதிலே சொல்லல. அவன் திரும்ப திரும்ப ஒரு அஞ்சாறு ரிமெயிண்டர் மெயில் அனுப்பி அவள உசுப்பேத்திக்கிட்டே இருந்தான். அவளும், அவன் டார்ச்சர் தாங்க முடியாம அதுக்கு பதில அனுப்பினா. அப்புறந்தான் தெரிஞ்சுது அது வெவெகாரமான ஹிந்தி 'ஏ' ஜோக்குன்னு. பயபுள்ள நம்ம மேல பாய, நம்மத்தான் 'ஏக் காவுமே, ஏக் கிஷான் ரகு தாத்தா' கும்பல்டான்னு அவனுக்கு வெளக்குனேன். அப்புறம் எனக்கு அந்த மெயில அனுப்புன பயலுக்கு ஒரு ஃபோனப் போட்டு, 'ஏன் டா வெவகாரமான மெயில் அனுப்புறதா இருந்தா ஸ்டார் போட்டு அனுப்புன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்'னு டோஸ் விட்டா, பாவம்போல அவன் சொன்னா

"எனக்கு மட்டும் ஹிந்தி தெரியும்னா நெனச்ச?"

அதுனால என்னைக்குமே அவசரப்படாம, விசாரிச்சு அப்ரோச் பண்ணனும்.

க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))

அப்பாடா... எப்படியோ நாமலும் ஒரு மெஸேஜ வச்சி ஒரு பதிவுப் போட்டாச்சு.

23 comments:

நாகை சிவா said...

ஜி... பஞ்ச் டயலாக் எங்க இருக்கு....

ஜி said...

// நாகை சிவா said...
ஜி... பஞ்ச் டயலாக் எங்க இருக்கு.... //

இப்பெல்லாம் சாதரண டையலாக்னாலும் பஞ்ச்ன்னு சொன்னாதான் மக்கள் படிக்கிறாங்க.. அதான் ஒரு வெளம்பரத்துக்கு......

தம்பி said...

//க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))//

மயக்க ஊசி போட்டாதான மயங்குவாங்க. அதெப்படி அன்பை காட்டுனா மயங்குவாங்க. ஒருவேளை இது உண்மையா இருந்துச்சின்னா டாக்டருங்க ஆபரேஷன் தியேட்டருல அன்பை வாடி இறைச்சாருன்னா கன்னா பின்னான்னு மயக்கம் வருமா?

CVR said...

////க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))//

மயக்க ஊசி போட்டாதான மயங்குவாங்க. அதெப்படி அன்பை காட்டுனா மயங்குவாங்க. ஒருவேளை இது உண்மையா இருந்துச்சின்னா டாக்டருங்க ஆபரேஷன் தியேட்டருல அன்பை வாடி இறைச்சாருன்னா கன்னா பின்னான்னு மயக்கம் வருமா?//

ROFL!!

ஜி!!!
நீங்க நாலு வருஷமா இதுதான் படிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே பா!!! :-(

சூப்பர் காமெடி பதிவு இது ஜி!!
எப்பவும் போல கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள்!! :-))

ஜி said...

//மயக்க ஊசி போட்டாதான மயங்குவாங்க. அதெப்படி அன்பை காட்டுனா மயங்குவாங்க. ஒருவேளை இது உண்மையா இருந்துச்சின்னா டாக்டருங்க ஆபரேஷன் தியேட்டருல அன்பை வாடி இறைச்சாருன்னா கன்னா பின்னான்னு மயக்கம் வருமா? //

இது மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா அப்புறம் உன் கவிதைக்கு கவுண்டர அணிந்துரை எழுத சொல்லிடுவேன்.. ஜாக்கிரதை...

சிநேகிதன்.. said...

\\நம்மத்தான் 'ஏக் காவுமே, ஏக் கிஷான் ரகு தாத்தா' கும்பல்டான்னு அவனுக்கு வெளக்குனேன்\\
கண்ணில்
தண்ணிர்
சிரித்து
சிரித்து!!!
அசத்தரிங்களே தல..
இத நீங்க தொடரா போடலாமே!!

ராஜா said...

////க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))//

Pona rendu vaaram, Vijay TV La Nadantha Neeya Nanna Programla kettangale atha ketta namaku thaan varanum Mayakam...

ஜொள்ளுப்பாண்டி said...

அட்ரா சக்கை அட்ர சக்கை அட்ரா சக்கை சும்மா பிகரை மடக்கறதைப்பத்தி பிரிச்சு மேய்ஞ்சு இருக்கீயளே ஜி. கலக்குது போங்க !! :))))))))))

ILA(a)இளா said...

//ஆபரேஷன் தியேட்டருல அன்பை வாரி இறைச்சாருன்னா கன்னா பின்னான்னு மயக்கம் வருமா? //

வசூல் ராஜாவுல பிகாஷ்ராஜ் சொல்றா மாதிரி டாக்டர்ங்க பேஷ்ண்டை அன்பு காட்டாம கேஸா பார்க்கிறதனாலதான் மயக்க மருந்து குடுக்க வேண்டி இருக்கோ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஜி, மே ஐ கம் இன்? :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

என்னது? முடியாதா? அப்படின்னா கண்டிப்பா வருவேன். :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

//ஸைட் அடிக்கிற ஃபிகர பாக்கப் போகுமுன்னாடி, நல்லா மேக்கப் பண்ணிட்டு போங்க. //

அதான.. இல்லன்னா பொண்ணுங்க உங்களை பார்த்து அலறி அடிச்சுட்டு ஓடிடுவாங்க. :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

//அப்படி ஸைட் அடிக்கக் கெளம்பும்போது உங்கள விட கொஞ்சம் சுமாரா பசங்க யாராவது இருந்தாங்கன்னா, அவுங்கள தயவு செஞ்சு கூட்டிட்டுப் போயிடாதீங்க. //

நீங்க சைட் அடிக்கும்போதெல்லாம் ராயலை கூட்டிட்டு போறீங்களே? இதுல ஏதாவது "உள்நோக்கம்" இருக்கா?

ராமு, இந்டஹ் ஜியை கொஞ்சம் கவனிப்பா!

(நாராயணா! நாராயணா!)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//நண்பன் இப்படித்தான் ஒரு ஃபிகருக்கு நூல் விட்டுக்கிட்டு இருந்தான்.//

அந்த பொண்ணு என்ன பட்டமா? நூல் விடுறதுக்கு? :-P

.:: மை ஃபிரண்ட் ::. said...

/"மாப்ள. இந்த ஃபேக்மெயில்ஸ் ஃபேக்மெயில்ஸுன்னு ஒன்னு இருக்குது தெரியுமா? அதுல இருந்து யார் ஐடில இருந்தும் யாருக்கு வேணும்னாலும் மெயில் அனுப்பலாம்"னு லேசா சிரிச்சிக்கிட்டேச் சொன்னேன்.//

அப்பப்ப மேல் மாடில சரக்கு (பக்கார்டி இல்ல) இருக்குன்னு காட்றீங்க.. வாழ்த்துக்கள்! ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

//க்ளைமேக்ஸ்:
இப்படி எதுவுமே தேவயில்லைங்க. ஒரு பொண்ண நீங்க விரும்புனா, அவுங்கக்கிட்டக் காட்டுற அன்புலேயே அவங்க மயங்கிடுவாங்க. அதுக்கு மேல எதுவுமே தேவையில்லை. :))//

"காரியத்துல" கண்ணாதான் இருக்கீங்க. ;-)

ஜி said...

// CVR said...
ஜி!!!
நீங்க நாலு வருஷமா இதுதான் படிச்சீங்கன்னு சொல்லவே இல்லையே பா!!! :-(//

படிக்கும்போது இதெல்லாம் இல்லீனா அப்புறம் எப்படி படிப்பு ஏறும்?? ;))

//சூப்பர் காமெடி பதிவு இது ஜி!!
எப்பவும் போல கலக்கிட்டிங்க வாழ்த்துக்கள்!! :-)) //

ரொம்ப ரொம்ப டாங்கிஸ்...

ஜி said...

//சிநேகிதன்.. said...
கண்ணில்
தண்ணிர்
சிரித்து
சிரித்து!!!
அசத்தரிங்களே தல..
இத நீங்க தொடரா போடலாமே!! //

வாங்க சிநேகிதன்... தொடராவா?? ஆஹா நான் எப்பவுமே பல்ப் வாங்குற பார்ட்டின்னு நெனச்சிட்டீங்களே...

ஜி said...

//ராஜா said...
Pona rendu vaaram, Vijay TV La Nadantha Neeya Nanna Programla kettangale atha ketta namaku thaan varanum Mayakam... //

வாங்க ராஜா... ஆமாங்க.. நானும் பாத்தேன்.. பாத்ததுக்கப்புறம் தெரிஞ்சுப் போச்சு நமக்கெல்லாம் கண்ணாலமே ஆகாதுன்னு :((

ஜி said...

// ஜொள்ளுப்பாண்டி said...
அட்ரா சக்கை அட்ர சக்கை அட்ரா சக்கை சும்மா பிகரை மடக்கறதைப்பத்தி பிரிச்சு மேய்ஞ்சு இருக்கீயளே ஜி. கலக்குது போங்க !! :)))))))))) //

வாங்க தல.. Master of Jollz பட்டம் வாங்கின உங்க வாயால என்னிய புகழ்ந்திட்டீங்களே... நீர் வாழ்க...

பிகர மடக்குற மேட்டர் இல்லீங்க.. பிகர மடக்க போய் பல்ப் வாங்குன மேட்டர்ஸ் :))

ஜி said...

//ILA(a)இளா said...
வசூல் ராஜாவுல பிகாஷ்ராஜ் சொல்றா மாதிரி டாக்டர்ங்க பேஷ்ண்டை அன்பு காட்டாம கேஸா பார்க்கிறதனாலதான் மயக்க மருந்து குடுக்க வேண்டி இருக்கோ? //

இருக்கலாம் இருக்கலாம். அதுனாலத்தான் அவரு கடைசில வில்லனாயிட்டார்னு நெனக்கிறேன் :))

ஜி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

நீங்க சைட் அடிக்கும்போதெல்லாம் ராயலை கூட்டிட்டு போறீங்களே? இதுல ஏதாவது "உள்நோக்கம்" இருக்கா?//

என்னது இப்படி சொல்லிட்ட தங்கிச்சிக்கா.. ராயலு கூட போனா அப்புறம் நம்மள யாரு பாக்குறது?? எல்லா அவரு பக்கம்ல திரும்பிடும் :((

//ராமு, இந்டஹ் ஜியை கொஞ்சம் கவனிப்பா!
(நாராயணா! நாராயணா!) //

இதுக்கெல்லாம் அசர மாட்டார்.. எங்கள் இளந்தல....

ஜி said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
அப்பப்ப மேல் மாடில சரக்கு (பக்கார்டி இல்ல) இருக்குன்னு காட்றீங்க.. வாழ்த்துக்கள்! ;-) //

" சரக்கு உள்சென்றால்
மேல் சரக்கு மறைகிறதே...
அடடா ஆச்சர்யக்குறி !!! "

ஆஹா தங்கச்சிக்கா.. என்னிய கவுஜனாக்கிட்டியே...