Monday, June 11, 2007

தலைமுடி தத்துவங்கள்!

சென்ற வார இறுதியில் என் சக ஊழியர் 200டாலர் கடனாகக் கேட்டார். சும்மா இருக்க முடியாமல் எதற்கு என்று வாயை விட்டேன். முடி வெட்டத்தான் என்று ஸ்டைலாகச் சொன்னார். முடிவெட்ட அவ்ளோ பணமா என்று கேட்டேன். ஆமாம் 125 டாலர் என்றார். இன்று காலை வேலைக்கு வந்ததும் அவரைத் தேடிப் பிடித்து தலையைப் பார்த்தேன்... அவரின் முடி இதோ கீழே உள்ள படத்தில் இருப்பது போலத்தான் இருந்தது!இதுக்கு எதுக்கு காசு? சும்மா குளிச்சிட்டு வந்து துண்டால தலையை துவட்டினாலே இப்படித்தான்டா இருக்கும் என்றேன். என்னை அடிக்கத் துரத்தினான் அந்த சீனன்! எப்படி எல்லாம் நாட்டில் கொள்ளை அடிக்கின்றனர் பாருங்கள்!

தலைமுடி உதிர்வது ஒரு சிலருக்கு கவலை! முடி நிறைய இருப்பதுவோ முடிவெட்ட பணம் இல்லாதவர்களுக்கு பெரும் கவலை! இப்படி கவலைகள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதம். தற்போது டென்மார்க்கில் முடி நடுவது, முடி ஒட்டுவது போன்ற முறைகளால் தலை முடி இல்லாதவர்கள் தமது தேவைளைப் பூர்த்தி செய்கிறார்கள். சமீபத்தில் இறந்து போன ஒருவரின் தலை முடியை தோலோடு சீவி எடுத்து, உயிருடன் இருக்கும் இன்னொருவருக்கு ஒட்டியிருக்கிறார்கள்.

உலகில் ஆண்கள், பெண்கள் என்று தலை முடியலங்காரம் செய்வதென்பது சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் இவ்வேளையில் தலைமுடிக்கு நிறமூட்ட அல்லது நீட்டப் பயன்படும் இரசாயனப் பொருட்களின் பக்க விளைவால் பலர் தங்கள் உண்மை அழகை இழந்து வரும் நிலை உலகில் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரிப்பு, சொறி, வீக்கம், விகாரம் போன்ற நோய் அறிகுறிகளைக் காண்பிக்கவும் செய்வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன!

தலைமுடி நிறமூட்டிகளில் உள்ள para-phenylenediamine (PPD) எனும் நச்சுப் பொருளே இந்த வகையான ஒவ்வாமை விளைவுகளுக்கு முக்கிய காரணம் என்றும் PPD யும் தலை முடி நிறமூட்டிகளில் காணப்படும் இன்னோர் இரசாயனமான tetrahydro-6-nitroquinoxaline எனும் இரசாயனமும் சேர்ந்து உடற்கலங்களில் உள்ள டிஎன்ஏ எனும் பிறப்புரிமையியல் பதார்த்தத்துடன் தாக்கமுற்று விகாரங்களை தோற்றுவித்து புற்றுநோய் தோன்ற வழிவகுப்பதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்!

ஸ்டைல், நிறம் என அலையும் இளைய சமுதாயத்தினர் கவனமாக இருக்க வேண்டும்! அல்லது பேசாமல் நம்ம கைப்புள்ள ஸ்டைலில் அப்படியே விட்டுரலாம்... செலவும் மிச்சம்.தலைமுடிகளைப் பற்றி பெரியவர்கள் சொன்னது இதோ:-

பாப்பாக்களுக்கு, தலையில் முடி இல்லை. இதேபோல, முதியவர்களின் தலைகளும் உள்ளன. தொட்டிலுக்கும் சாமதிக்கும் இடையே, முடி வெட்டுதலும் ஷேவ் செய்து கொள்ளலும் இருக்கின்றன. - சாம்யூவல் ஹாபன்ஸ்பெயின்

உங்களுடைய தலைமுடி ஒவ்வொன்றும் எண்ணப்பட்டு இருக்கின்றன. - பைபிள்

பத்து நுகத்தடிகளில் பூட்டப்பட்ட எருதுகள்கூட, ஒரு பெண்ணின் முடியைப்போல, நம்மை இழுக்க முடியாது. - லாங்பெலோ

7 comments:

Anonymous said...

கருப்பருக்கு தலையை விட மீசைதான் பெருசாமே?

ILA(a)இளா said...

கண்ணு நான் தலைக்கு மேல இருக்கிற முடியைவிட தலைக்கு உள்ள இருக்கிற மூளையை நம்புறவன் - முடியில்லாத சத்யராஜ் சொன்னதையும் அப்படியே சேர்த்துக்குங்க

நளாயினி said...

மரஇலைகளைப்பார்.
வீழ்கிறது.
மரத்துக்கே எருவாக.

வீழ்வதது குhட
தனது புதிய செழிப்புக்குத்தான்.

நல்ல மூளைசாலிக்கு
தலைமுடி உதிர்கிறதாம்.
உதிர்தல் ஒன்றும்
கெடுதல் இல்லையே.

உயிர்த்தீ. (பக்கம் 88)

இம்சை said...

I remember one Goundamani & Senthil Joke... do you also

Anonymous said...

// I remember one Goundamani & Senthil Joke... do you also //

புலிக்குட்டி சன் ஆஃப் பூனைக்குட்டி என்று செந்தில் சொல்வாரே அதுவா ?
:)))

மின்னுது மின்னல் said...

இதெல்லாம் இருக்குறவங்க கவலை படனும் :)

மின்னுது மின்னல் said...

ஆண்களுக்கு மட்டுமே வலுக்கை விழுதே :(