நமீதாவை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நமீதாவை வைத்துப் பராமரிக்க அதிக செலவாகிறது. நமீதாவை என்னிடம் தள்ளி விட்டவர் ஆரம்பத்தில் அப்படி என்னிடம் சொல்லவே இல்லை! தெரிந்திருந்தால் அப்போதே வேண்டாம் என்று சொல்லி இருப்பேன். இப்போது அதனை வைத்து மேய்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. பணச்செலவும் அதிகமே. இடையிடையே கோவித்துக் கொண்டு மக்கர் செய்கிறது!
அடடே... சொல்லவே இல்லை பாருங்க. என் செல்ல மோட்டார் பைக்குக்கு நான் வைத்து இருக்கும் பெயர்தான் நமீதா. புதிதாகத்தான் வாங்கினேன். அதன் முன்பக்கம் பின்பக்கம், நடுப்பக்கம் எல்லாம் சுற்றிச் சுற்றி வந்து பார்த்ததில் என் மனதில் தோன்றிய ஒரே பெயர் நமீதா!
நேற்று காலையில் உதைத்ததும் கிளம்பவில்லை. அணைத்து ஒரு செல்ல முத்தம் கொடுத்தபிறகு புதுமணப் பெண்போல் முறுக்கிக் கொண்டு பிறகு கிளம்பியது. மாலை வேலை முடிந்ததும் அதேபோல கோவித்துக் கொண்டு கிளம்பவில்லை. மறுபடி அணைத்து தாஜா செய்ததும் கிளம்பிற்று!
இதனைக் கட்டி மேய்த்து செலவு செய்வதற்கு நிஜ நமீதாவையே கட்டி மேய்க்கலாம் போல தோன்றுகிறது எனக்கு. அல்லது இதனை விற்றுவிட்டு அசின் அல்லது ஷ்ரேயா வாங்கலாம் என நினைக்கிறேன். என்ன நான் சொல்றது?
நீங்க அடிக்க வர்றதுக்குள்ள நான் எஸ்கேப்பு!
4 comments:
மகிழ்வுந்தில் சிவபாலனுக்கு ஏற்பட்ட சம்பவமே இப்பதிவு எழுத கிரியா ஊக்கி!
:)
என்ன பச்சை வாசம் நிறைய அடிக்குது வவாச பக்கம்?
Aasin, trishanaa! Enna BSA SLR or Hero andha madhiri Cycle brand sollaringalaa! adhusaari, petrol selavu micham aagum.....paramarimum kammithaaan...
Post a Comment