Thursday, June 28, 2007

கைப்புள்ள கொடுக்கின் லூட்டி!

ஒரு மனிதர் தனது ஒரே மகனான குறும்புக்காரச் சிறுவனை ஒரு கடைத் தொகுதிக்கு அழைத்து வந்திருந்தார். சிறுவனோ அங்கிருக்கும் பொருள்களைத் தள்ளுவதும், தூக்கி எறிவதுமாக குறும்பு செய்து கொண்டிருந்தான்.

அந்த மனிதர் அடிக்குரலில் அடிக்கடி உறுமினார், "கைப்புள்ள கம்முன்னு வா. இது பொது இடம். அசிங்கமா நடந்துக்காதே. பார்க்கிறவங்க சிரிப்பாங்க!"

மீண்டும் மீண்டும் சிறுவன் அட்டூழியம் செய்துகொண்டே இருக்க, அந்த தந்தையும், "வேண்டாம் கைப்புள்ள. இது கூடாது கைப்புள்ள. சொன்னாக் கேளு. அப்புறம் அடி விழும். அசிங்கமாயிடும் கைப்புள்ள!" என்று கூறியவாறே இருந்தார்.



இவ்வளவு களேபரத்தையும் ஒரு பெண்மணி அருகிலிருந்து கவனித்துக் கொண்டே இருந்தாள்.



கடைசியாக சொன்னாள், " சார், ஆனாலும் நீங்க ரொம்ப டீசண்ட். பொது இடத்துல பையனை அடிக்கக் கூடாதுன்னு எவ்வளவு பொறுமையா இருந்தீங்க! ரியலி ஐ அப்ரிசியேட் யூ!"



அவரே பிறகு பையனைப் பார்த்து, "ஏம்பா கைப்புள்ள.. நீ இவர் பையனா..? அப்பா பாவம்தானே, ஏன் இவ்ளோ கஷ்டத்தை கொடுக்குறே?"

பையன் சொன்னான், "நான் அவர் பையந்தான். ஆனா கைப்புள்ளங்கிறது என் பேர் இல்லே.. எங்க அப்பா பேரு..!"



பின்குறிப்பு:- கொடுக்கு என்றால் பையன் என்று அர்த்தம்

1 comment:

Anonymous said...

ஹாஹாஹாஹாஹ்ஹாஹாஹ்ஹ்ஹா