வ.வா.ச. ஏற்கனவே சில போட்டிகள் நடத்தி பரிசுகள் அளித்து வந்து உள்ளது. இந்த தடவை போட்டி ஏதும் நடத்தாமல் நம் தமிழ் பதிவுலக மக்களுக்கு மிக பெரிய பம்பர் பரிசு அளிக்கலாம் என முடிவு எடுத்து உள்ளது.
அது தமிழகமே, இல்லை இல்லை இந்தியாவே அதுவும் இல்லை உலகமே ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி - The BOSS படத்துக்கான டிக்கெட்.
முதல் சில நாட்களில் ரஜினி (சிவாஜி) படத்துக்கான டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால் எல்லாருக்கும் முதல் சில நாட்களில் ரஜினி படத்தை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை(வெறி) கண்டிப்பாக இருக்கும். அதை தீர்க்கும் வகையில் ரஜினி ரசிகர் மன்றத்தில் தீவிர உறுப்பினராக இருக்கும் மிக நெருங்கிய நண்பர்கள் மூலம் சில டிக்கெட்களை பெற்று நம் தமிழ் பதிவுலக பதிவர்களுக்கு அளிக்கலாம் என்று இருக்கிறோம்.
முடிந்த அளவு குறைந்த விலையில் டிக்கெட் கொடுக்க முயற்சி செய்கின்றோம். இலவசமாக தான் தரலாம் என்று முதலில் நினைத்து இருந்தாம். ஒசியில் கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது என்ற காரணத்தால் ஒரு குறைந்தப்பட்ச விலை முடிவு செய்யப்பட்டது உள்ளது.
எந்த தியேட்டர், எந்த நாள் மற்றும் எந்த காட்சி நேரம் என்பது இன்னும் இறுதியாக முடிவு செய்யாத காரணத்தால், அவை விரைவில் அறிவிக்கப்படும்.
டிக்கெட் வேண்டுப்பவர்கள், பின்னூட்டத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நபருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே.
சங்கத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
டிக்கெட் பெறும் வரை சிவாஜியை டிரைலரில் பார்த்து ரசிக்கவும்.
55 comments:
என் பெயரை பதிஞ்சுகோங்க! மயிலாடுதுறைல இருக்கும் தியேட்டர்! ஜெயிச்சா நேரா ரஜினி ராம்கி மூலமாக வாங்கிப்பேன் டிக்கெட்டை!(நான் அப்போ மயிலாடுதுறைல தான் இருப்பேன்)
புலி,
கலக்கலான அறிவிப்பு!
அபி அப்பா!
சென்னை வரும்போது மறக்காம என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கணும்!
சொல்லிட்டேன்!
Anna
nan Sathis
coimbatore
any date, any time
nan namma thaliver a parkkanum
avvalo than
chennai vara ticket kaasu yaaru koodupa?neega koduka mathinga nu theriyum.so nana SG la sivaji paarthukuren,
என் பெயரை பதிஞ்சுகோங்க
துபாயில் எந்த தியேட்டராயிருந்தாலும் பரவாயில்லை..:)
அல்லது
டவுன்லோடு லிங்கை மெயில் பண்ணவும்..!!!
நாமக்கல் சிபி said...
அபி அப்பா!
சென்னை வரும்போது மறக்காம என்னைச் சந்திக்க நேரம் ஒதுக்கணும்!
///
நீங்க அங்கதான் இருப்பிங்கனு தெரிஞ்சா திருச்சி வழியா துபாய் போயிடுவாரு...:)
//நீங்க அங்கதான் இருப்பிங்கனு தெரிஞ்சா திருச்சி வழியா துபாய் போயிடுவாரு//
என்னைப் பத்தி நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்கியே மின்னல்!
:)
அட! இது யாருப்பா மின்னலுக்கே பிராக்ஸி கொடுக்குறது?
:(
நாமக்கல் சிபி said...
அட! இது யாருப்பா மின்னலுக்கே பிராக்ஸி கொடுக்குறது?
:(
///
ஒரு சேஃப்டிக்கு எனக்கு நானே குடுத்தேன் கண்டுகாதீங்க தள..:)
யப்பே! எனக்கு சென்னை வந்து சிவாஜி பாக்கனும்னு ஆசைதான்.
என்ன பண்றது?
//ஒரு சேஃப்டிக்கு எனக்கு நானே குடுத்தேன் கண்டுகாதீங்க தள..:)
//
யோவ் மின்னலு!
எனக்குதான் வலையுலக வாரிசா வருவேன்னு நினைச்சேன்!
உன்னோட நோக்கம் எங்கியோ(!?) போகுதே!
ரொம்ப பிரபலமான(!?) ஆள் மாதிரி செய்யுறீங்களே!
எந்த தியேட்டர், எந்த நாள் மற்றும் எந்த காட்சி நேரம் என்பது இன்னும் இறுதியாக முடிவு செய்யாத காரணத்தால்,
சிவாஜி படத்தை டிசம்பர் மாதத்திற்கு பிறகு வெளியிட உத்தரவு இடுகிறேன்
இப்படிக்கு
வவாச கொலவெறி பாசறை
துபாய்
யோவ் மின்னலு!
எனக்குதான் வலையுலக வாரிசா வருவேன்னு நினைச்சேன்!
//
வாரிசுக்கு இப்பயெல்லாம் ரொம்ப ஆப்படிக்குராங்க தள
அதுமட்டும் இல்லாமல்
வாரிசு அரசியல் பண்ணுராங்கனு நாளைக்கு யாரும் சொல்லபிடாது இல்லையா...
அதான் ஒரு சேஃப்டிக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கார்மேகராஜா said...
யப்பே! எனக்கு சென்னை வந்து சிவாஜி பாக்கனும்னு ஆசைதான்.
என்ன பண்றது?
///
சென்னை வத்துடுங்க...:)
எங்களை வெச்சு காமெடி கீமெடி ஏதாவது பண்ணுறீங்களா???
மிசிகன் மாநிலம் ஃபார்மிங்டன் ஹில்ஸில் உள்ள இந்திய திரையரங்குகளின் டிக்கெட்டுகள் கிடைக்குமா??? :-D
கிடைக்கும்னா எங்க பேரையும் கொஞ்சம் சேத்துக்கோங்க!! :-)))
கார்மேகராஜா said...
யப்பே! எனக்கு சென்னை வந்து சிவாஜி பாக்கனும்னு ஆசைதான்.
///
சென்னையில மட்டும்தான் டிக்கெட் உண்டுனு யாரு சொன்னா அங்க பாருங்க மின்னல் பேரு குடுத்துருக்கு நீங்களும் குடுங்க என்ன செய்யுராங்க பாபோம்...:)
//சங்கத்தின் ரெகுலர் வாசகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.//
//இப்படிக்கு
வவாச கொலவெறி பாசறை
துபாய்
//
அதுக்காக இப்படியா?
மின்னலு! கவுத்திட்டியேய்யா!
//வாரிசுக்கு இப்பயெல்லாம் ரொம்ப ஆப்படிக்குராங்க தள//
அதுக்குத்தானய்யா ஆரம்பத்துலேர்ந்தே ஆள் தேடிகிட்டிருக்கேன்!
குறிப்பா இந்த திரையரங்கில் கிடைத்தால் சந்தோஷம்!!!! :-P
வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்கு பெயர் குடுத்தால் டவும்லோட் லிங்க் மெயில் முலம் அனுப்ப தள உத்தரவாதம் தரவேண்டும்...???
வவாச
அஸ்ரேலியா கிளை
(பி.க)
நாமக்கல் சிபி said...
//வாரிசுக்கு இப்பயெல்லாம் ரொம்ப ஆப்படிக்குராங்க தள//
அதுக்குத்தானய்யா ஆரம்பத்துலேர்ந்தே ஆள் தேடிகிட்டிருக்கேன்!
///
ஆஹா நானாதான் வந்து மாலையை போட்டுகிட்டு மஞ்சதண்ணிய சிலிப்பிகிட்டு தலைய ஆட்டிக்கிட்டு இருக்கேனா...:)
Atlanta vula enaku oru ticket.
//என் பெயரை பதிஞ்சுகோங்க! மயிலாடுதுறைல இருக்கும் தியேட்டர்! ஜெயிச்சா நேரா ரஜினி ராம்கி மூலமாக வாங்கிப்பேன் டிக்கெட்டை!(நான் அப்போ மயிலாடுதுறைல தான் இருப்பேன்) //
மயிலாடுதுறைல.... கொஞ்சம் கஷ்டம், நம்ம பசங்க கிட்ட சொல்லி தனியா ஏற்பாடு பண்ணுறேன் உங்களுக்கு... ர.ரா... சென்னையில் இருப்பதாக கேள்வி....
//Anna
nan Sathis
coimbatore
any date, any time
nan namma thaliver a parkkanum
avvalo than //
சதீஸ்... கோவையா...கஷ்டமாச்சே...
இப்படி எல்லாரும் ஒவ்வொரு இடமா கேட்டா எப்படி... சரி குலுக்கல் முடியட்டும் பாக்கலாம்...
//chennai vara ticket kaasu yaaru koodupa?neega koduka mathinga nu theriyum.so nana SG la sivaji paarthukuren, //
துர்கா இது எல்லாம் உங்களுகே ஒவரா தெரியல... சிவாஜி படத்துக்கு டிக்கெட் கொடுப்பதே பெரிய விசயம்... இதில் பிளைட் டிக்கெட் வேறையா.... சங்கத்தின் நிதிநிலைமை கட்டுப்படி ஆகாதுங்க...
//என் பெயரை பதிஞ்சுகோங்க
துபாயில் எந்த தியேட்டராயிருந்தாலும் பரவாயில்லை..:)
அல்லது
டவுன்லோடு லிங்கை மெயில் பண்ணவும்..!!! //
மின்னல் நீ ஒரு முடிவோட திரியுற மாதிரி இருக்க.....
//யப்பே! எனக்கு சென்னை வந்து சிவாஜி பாக்கனும்னு ஆசைதான்.
என்ன பண்றது? //
ஏன் ராஜா சோகம்... நீங்க எந்த ஊரில் இருக்கீங்க....
//சிவாஜி படத்தை டிசம்பர் மாதத்திற்கு பிறகு வெளியிட உத்தரவு இடுகிறேன்//
மின்னல் நாங்க எல்லாம் முடிவு எடுக்க மாட்டோம் எடுத்தா மாத்த மாட்டோம்... ஒகே.. படம் ஜுன் ரீலிஸ் தான்...
//கிடைக்கும்னா எங்க பேரையும் கொஞ்சம் சேத்துக்கோங்க!! :-))) //
c.v.r ஒருத்தர் பெயர் மட்டும் தான்.. உங்கள சேர்த்துக் கொள்ள வேண்டுமா வேண்டாமா?
//சென்னையில மட்டும்தான் டிக்கெட் உண்டுனு யாரு சொன்னா அங்க பாருங்க மின்னல் பேரு குடுத்துருக்கு நீங்களும் குடுங்க என்ன செய்யுராங்க பாபோம்...:) //
வெயிட் & சீ...
மின்னல் நாங்க எல்லாம் முடிவு எடுக்க மாட்டோம் எடுத்தா மாத்த மாட்டோம்... ஒகே.. படம் ஜுன் ரீலிஸ் தான்...
///
ஒன்ஸ்மோர் பிளிஸ்ஸ்
:)))
இது எத்தனையாவது முடிவு...?
//குறிப்பா இந்த திரையரங்கில் கிடைத்தால் சந்தோஷம்!!!! :-P //
சி.வி.ஆர். அண்ணன், இப்ப நீங்க எங்கள வச்சி காமெடி பண்ண பாக்குறீங்க...
ஒரு போட்டி வச்சி அதுல கெலிச்சி பரிசு வாங்கினா அது மப்பு மாப்பே
எகா:
இந்த படத்தின் கதாநாயகன் யார்?
க்ளு: சூப்பர் ஸ்டாருனு சொன்னாலும் பரிசு உண்டு..
இப்படி எதாவது குவிஜு போட்டா என்ன ?
கலக்கிருப்போமில...:)
//Atlanta vula enaku oru ticket. //
பங்காளி ஒரு முடிவுடன் தான் இருக்கியா?
என்னைப் பார் யோகம் வரும் படத்திற்கு, மன்சூரலிக்கான் ரசிகர் மன்றம் மூலம் டிக்கெட் வாங்கித்தரமுடியுமா?
entha oor theater ticket tharuveengga? enakku Malaysian theather ticket venum! india thether ticket kodutheengagnna, flight ticket kaasum anuppi vachidungga.. hehehe
ரொம்ப வயசாகிப் போச்சுப்பா இவருக்கு. இந்த மாதிரி நடிக்கிறது எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் மெச்சூர் ரோல்களா தேர்ந்தெடுத்தா நல்லது. க்ளோசப் எல்லாம் சகிக்கலை. அடிச்சுக்கிட்டு இருக்கிற பெயிண்ட் வாசம் இங்க அடிக்குது.
எதோ ரஜினி படமாச்சேன்னு பார்ப்பேன். ஆனா இதுக்கெல்லாம் இலவச டிக்கெட் வேண்டாம். ஏன்னா ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை.
தசாவதார சீசன் எப்போ ஆரம்பிக்குது?
நமது பெயரையும் பதிவு செஞ்சிகோங்க சென்னையில, ஓரு மாசத்திற்கு பிறகு காடசி தான் என்றாலும் பரவாயில்லை .
ஆமா இது ஆளுக்கு ஒன்னுதானா?? எனக்கு ஒரு நாலு டிக்கட் வேனுமே ஏன்னா நம்ம எப்பவும் தனியா போய் படம் பார்கிறது இல்லை ...
எனக்கு டிக்கட் வரவில்லை என்றால் சங்க நிர்வாகிகளின அனைவரின் வீட்டுக்கு "ஆட்டோ,சுமோ,லாரி,பஸ என எல்லாம் வ்ரும் என்று முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன்.
லக்கிலுக், சென்னை :-)))))
மெய்யாலுமே டிக்கெட் ரெடி பண்றீங்களா இல்லைன்னா ஜூன் பூல் ஆக்குறீங்களா?
25 நாட்களுக்குப் பிறகு, தியேட்டரை விட்டு, ஓடுற படத்துக்கு இப்படி ஒரு பில்டப்பா?
ஓசியா டிக்கெட் கொடுத்தா கூட எனக்கு வேண்டாம்.
Yes, I Need the ticket
//இது எத்தனையாவது முடிவு...? //
இது தாம்ப்பா தான் முதல் முடிவு. இதுக்கு முன்பு எல்லாம் முடிவு எடுக்கலாமா என்று திங்க் தான் பண்ணிக்கிட்டு இருந்தோம்... ஒகே..
//ஒரு போட்டி வச்சி அதுல கெலிச்சி பரிசு வாங்கினா அது மப்பு மாப்பே//
மின்னல் அடிக்கடி போட்டி வச்சா போட்டிக்கான மதிப்பே போயிடும் பாரு, அதான்.... அதும் அதுக்கு தீர்ப்பு சொல்லக் காட்டியும் மண்ட காய்ஞ்சு போயிடுது... அதான். .. இப்படி...
//என்னைப் பார் யோகம் வரும் படத்திற்கு, மன்சூரலிக்கான் ரசிகர் மன்றம் மூலம் டிக்கெட் வாங்கித்தரமுடியுமா? //
இதுக்கு ரசிகர் மன்றம் மூலம் எல்லாம் முயற்சி பண்ண வேணாங்க... எந்த தியேட்டரில் ஒடுது என்று சொல்லுங்க... வாங்கி தரோம்...
//entha oor theater ticket tharuveengga? //
இப்பவே அவசரப்பட்ட எப்படி? வெயிட்ஸ் ப்ளிஸ்....
//enakku Malaysian theather ticket venum!//
இது வேறையா?
// india thether ticket kodutheengagnna, flight ticket kaasum anuppi vachidungga.. hehehe //
நிதிநிலைமை தாங்குதுங்க... அதனால நீங்களே பிளைட் டிக்கெட் வாங்கிகோங்க...
//ரொம்ப வயசாகிப் போச்சுப்பா இவருக்கு. இந்த மாதிரி நடிக்கிறது எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் மெச்சூர் ரோல்களா தேர்ந்தெடுத்தா நல்லது.//
:-)
// க்ளோசப் எல்லாம் சகிக்கலை. அடிச்சுக்கிட்டு இருக்கிற பெயிண்ட் வாசம் இங்க அடிக்குது. //
தியேட்டர்ல லாங்கா வர்காந்து தானே பாப்போம்... அதுனால ஒன்னும் தெரியாது.. நீங்க லாப்டாப்ல பாக்காதீங்க...
//எதோ ரஜினி படமாச்சேன்னு பார்ப்பேன்.//
இதே காரணம் தான் பலருக்கும், ரஜினி என்ற மூன்று எழுத்து மந்திரம்.
// ஆனா இதுக்கெல்லாம் இலவச டிக்கெட் வேண்டாம்.//
இலவசத்துக்கு இலவசம் வேணாமாம்... தமிழனுக்கு இலவசம் வேணாமாம்... என்ன கொடுமை இது...
//தசாவதார சீசன் எப்போ ஆரம்பிக்குது? //
அறிக்குறியே இல்லையே.... சிவாஜி சீசன் அடங்கிய பிறகு தான் போல...
மொத நாளே மொத ஷோவே பாக்கணும்னு ஆசை இல்லாட்டியும் நீங்க ஆசையா கூப்பிடுறனாலே நானும் வாரேம்பா ..
ஒரு 3 அடிசனல் டிக்கெட் பார்சல் :)
பெங்களூர்- 1 டிக்கெட்..
konjam lateaa vanthutten. innum irukuthaa??
Bangalore 1
என்னையும் சேர்த்துக்கோங்க.
கார்த்திக் - பெங்களூர்.
//ஒசியில் கிடைத்தால் அதன் மதிப்பு தெரியாது என்ற காரணத்தால் ஒரு குறைந்தப்பட்ச விலை முடிவு செய்யப்பட்டது உள்ளது//
அடங்கப்பா சிவாஜி பட டிக்கெட் விக்க இப்படி ஒரு தந்திரமா???
சென்னை - என் பெயரை பதிஞ்சுகோங்க
நம்ம பேரும் பதிவு செய்து கொள்ளுங்கள்
விழியன்
எல்லாப் பதிவர்களும் சூடானுக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ண கெளம்பிட்டாங்களாமே!
உண்மையா புலி?
Post a Comment