Tuesday, June 5, 2007

கவிதைகளோடு என் சுவாசம்!

விடாது கருப்பை வெறும் ஜாதி மற்றும் மதங்களைப் பற்றி மட்டுமே எழுதும் பதிவராகப் பார்த்த தமிழ் உள்ளங்களுக்கு எனது மற்றோர் முகமான கவிஞராக.. கவிதையை நன்கு ஊன்றி ரசிப்பவராக இங்கே நான் வெளிகாட்டி இருக்கிறேன்.

மழைக்குப் பிறகும் மழை
அசையும்
மரங்களில் இருந்து!....

எனக்கு மிகவும் பிடித்த கவிதை. எழுதியவர் தோழர் அய்யப்ப மாதவன். மழை.. மழை என்பது வெறும் சொல் விளையாட்டு அல்ல. தான் பார்த்த ஒரு காட்சியை வித்தியாசமான சிந்தனையுடன் கவிதையாகப் படைத்துள்ளார்.

கேழ்வரகின் நெய்யும் கஞ்சரின் கையும் என்ற தலைப்பில் சிங்கை தமிழ் கிறுக்கன் அவர்கள் எழுதிய சிலேடை வெண்பாவைப் படித்ததும் வாய்விட்டுச் சிரித்தேன்.

எடுக்கத்தான் பார்க்கத்தான் எந்நாளும் காணோம்
வடிக்கத்தான் வைக்கத்தான் வந்தால் - தடுக்கித்தான்
காணாது போனதுபோ கஞ்சரின்கை கேய்வரகின்
தேனான நெய்யென்றே தேடு.

கேழ்வரகில் நெய் எடுப்பது எப்படி நடவாத செயலோ அதேபோல கஞ்சரின் கையில் இருந்து காசு பெயர்வதும் முடியாத செயல். எச்சில் கையால் காகம் ஓட்டாத கஞ்சனின் கையை கேழ்வரகில் இருந்து வடியும் நெய்யோடு ஒப்புமை படுத்தி உள்ளார் நம் கவிஞர்! கேட்பவர் கேனையராக இருப்பின் கேழ்வரகில் நெய் வடியுமாம் என்ற கிராமத்துப் பழமொழியை ஞாபகப் படுத்தும் கவிதை!

மிக நல்ல கவிதைகளுக்கு சொந்தக்காரர் தோழி மாலதி மைத்ரி. இருந்தாலும் அவரின் சில வரிகள் எனக்கு ஏற்புடையது அல்ல. இதோ அவரின் ரோஜாப்பழம் கவிதையில் இருந்து சில வரிகள்.

நீ அழும்போது உன்முகம்
ரோஜாப்பூப் போல இருக்கிறது
அதனாலேயே
உன்னை நான் அடிக்கடி
அழவைத்துப் பார்க்கிறேன்.

அழகை ரசிக்கலாமே தவிர துன்புறுத்தி ரசித்தல் மனித மாண்புக்கு அழகல்ல. அதனாலேயே இதுபோன்ற சில கவிதைகளை பார்த்ததும் உள்ளுக்குள் ஏனோ வெறுப்பு ஏற்படுகிறது எனக்கு.

அடுத்து ஒத்த கருத்துடைய எனது சக நண்பர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் அடையாளம் என்ற கவிதையில் இருந்து சில வரிகள்..

கடுவெளியின் மரத்தடியில்
தாயின் மார்க்காம்பு ஞாபகத்தில்
விரல் சப்பித் துயிலாரும்
குழந்தை நினைப்பில்..

கொதிக்கும் தாரை சூரிய வெப்பத்தையும் தாங்கிக் கொண்டு கொளுத்தும் வெயிலில் கால் நோக தாயானவள் சாலையில் தார்போட்டுக் கொண்டிருக்க அவளின் சேயானது வெப்பக் காற்றுடன் கூடிய மரநிழலில் தாயின் மார்பில் பால் குடிப்பதாக நினைத்து தன் விரலைச் சூப்பும் காட்சியை எவ்வளவு அழகாக படைத்திருக்கிறார் பாருங்கள்!

சில பெண் எழுத்தாளர்களை என்னால் இன்னும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தமக்கிருக்கும் உறுப்புகளின் பெயர் சொல்லி மற்றோருக்கு பறையறிவித்தல்தான் புதுக்கவிதை என்று நினைக்கின்றனர போலும். அதில் முக்கியமானவர்கள் குட்டி ரேவதி, சல்மா.. இன்னும் சிலர். இதோ குட்டி ரேவதியின் எங்கோ கவிதையில் இருந்து சில வரிகள்..

எங்கோ மலையைக் கீறிக்கொண்டு வழியும்
அருவிக்குத் தலைகுனிகிறது கனத்த கானகம்
எங்கோ பூப்போன்றதொரு சிறுமியின் உறுப்பு
நகங்களால் கிள்ளியெடுக்கப்படுகிறது

அதாண்டா இதாண்டா, நாந்தாண்டா போலீஸ், நீதாண்டா ரவுடி என்று பெயர் வைப்பது நமது டைரடக்கர் ராஜசேகரின் பாணி. அதேபாணியில் பாரதியையும கூடச் சேர்த்துக் குழைத்து மக்களுக்கு எழுச்சியூட்டும் கவிதைகளை எழுதுவதில் கவிஞர் காசி.ஆனந்தன் மிகவும் வல்லவர். இதோ அவரின் குமுறி எழடா என்ற கவிதையில் இருந்து சில வரிகள்..

தட்டி எழுக உன் தோளை!
தாவுக போரில்! இத்தாய்மண் சிரிக்கும்
கொட்டி நிறைத்திடு குருதி!
குமுறி எழடா.... விடுதலை பிறக்கும்.

நண்பர் தேவமைந்தனின் கவிதைகளில் உலக யதார்த்தம் பார்த்து இருக்கிறேன். அவரின் எழுத்துக்கள் அத்தனையும் இன்றும் என்னால் விரும்பி வாசிக்கப்படுபவை. இதோ அவரின் அவனைத் தெரியும்தானே என்ற கவிதையில் இருந்து சில வரிகள்..

அழுத்திவைக்கப்பட்டவர்களின்,
ஒடுக்கப்பட்டவர்களின்,
எந்த ஆட்சியிலும்
சுரண்டப்படுபவர்களின் கண்ணீர்
அவன் கன்னங்களில் மட்டுமல்ல,
எழுத்துகளிலும் வழியும்.

தோழர் அழகிய பெரியவனின் கவிதைகள் எப்போதும் கருப்பின் எழுத்துக்கள் போல் காட்டம் அதிகமாக இருக்கும். எதிரில் இருப்பவர் என்ன நினைப்பாரோ என்று கவலைப் படாமல் நறுக்குத் தெரித்தார்போல் கேள்விகளைக் கேட்பதில் வல்லவர். அவர் வார்த்தை வீச்சுக்களை பெரிதும் ரசித்து இருக்கிறேன்.. அவரின் ஒரு கவிதையில் இருந்து சில வரிகள்...

கரற்பூரம் மணக்கும்
கருவறைகளில் மணியாட்டாமல்
குடல்புரட்டும் மலக் கிடங்குகளில்
வந்து நீ..

கவிதை, கவிஞரைப் பற்றி இவ்வளவு பேசும் நீ, என்ன பெரிய கவிதை எழுதி இருக்கிறாய் என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது.. இதோ எனது சிறு கவிதை ஒன்று...

காலம்
=====
திறந்திருக்கும் ஜன்னலினூடாக
கடந்து செல்கின்றன
சில காலங்கள்
வெற்று மரங்கள் தங்கள்
மொட்டைத் தலையுடன்
ஒய்யாரமாய்
ஊர்வலம் போகும்...

இறந்தகாலம் நினைத்துப்
பார்த்தால் இருக்கும்காலம்
ஓடிப் போகும்..
வருங்காலம் குறித்த கனவுகள்
நிகழ்கால நாற்காலிகளைக்
கொஞ்சம்
அசைத்துப் பார்க்கும்...

அதனால்தான்
இருப்பதை விட்டு பறப்பதற்கு
ஆசைப்படாமல் உள்ளதை
வைத்து நல்லதை காணச்
சொல்கின்றன என்
மனதின் ரணங்கள்...

எனக்கான காலம்
வரும்வரை
வாழ்க்கைப் பெட்டியில்
காத்திருக்கிறேன்
நான்!

55 comments:

பெயர் வேனுமா? said...

இது அநியாயம். அக்கிரமம். வ.வா.சங்கத்தில் கருப்பின் வரவை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.

அய்யனார் said...

கருப்பு உங்களோட இன்னொரு முகம் ரொம்ப பசுமையா இருக்கு :)

ரோஜாப்பழம் கவிதைய நீங்க அணுகுன விதம் தவறு. இப்படி யோசிங்களேன் காதலிய அழ வச்சு பாக்குற காதலனோட குறும்புகள்தான் அப்படி வெளிப்பட்டு இருக்கு.காதலிய அழ வைக்கிறது மனித மாண்புக்கு எதிரானதல்லவே :)

ஆதவன் தீட்சண்யா வோட சுயவிலக்கம் படிச்சிருக்கிங்களா? ரொம்ப தீர்க்கமான கவிதை அது.

/உறுப்புகளின் பெயர் சொல்லி மற்றோருக்கு பறையறிவித்தல்தான் புதுக்கவிதை என்று நினைக்கின்றனர/

புதுக்கவிதை வார்த்தை நெருடுதுங்க இவங்க எழுதுறது கவிதை தான் புது தேவையில்லை நவீனம்னு வேணும்னா சொல்லிக்கலாம்.உறுப்பு,புனிதம் போன்ற கட்டுக்களை உடைத்து வெளியில வர வேண்டிய அவசியம் கவிதை சூழலுக்கு தேவை.புரட்சிகரமா இருக்கும் உங்க எழுத்து,கவிதைல மட்டும் ஏன் இன்னும் பழைய அனுகுமுறை?

கோவி.கண்ணன் said...

காணமல் போன கருப்பு கவிதைகளுடன் வந்திருக்கிறார்.

வருக ! வருக ! மறுபக்கம் நன்றாக இருக்கிறது கருப்பு சார்.

நாமக்கல் சிபி said...

//பெயர் வேனுமா? said...
இது அநியாயம். அக்கிரமம். வ.வா.சங்கத்தில் கருப்பின் வரவை நான் வன்மையாகக் கண்டனம் செய்கிறேன்.
//

ஏன்? அவரு மட்டும் வாலிபர் இல்லையா? இல்லை அவரு மட்டும் எப்பவும் வருத்தப் பட்டுகிட்டே இருக்கணுமா?

அதெல்லாம் கூட போகட்டும்! விடாது கருப்புக்கு நகைச் சுவை உணர்வே கிடையாதுன்னு சொல்றீங்களா?

போகப் போக பாருங்க! காமெடில எப்படி கலக்கப் போறாருன்னு!

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை அலசல் விடாது கருப்பு!

நாமக்கல் சிபி said...

ஆனா கலாய்க்க முடியாம எங்க கையை கட்டிப் போட்டுட்டீங்க!

நாமக்கல் சிபி said...

//அழுத்திவைக்கப்பட்டவர்களின்,
ஒடுக்கப்பட்டவர்களின்,
எந்த ஆட்சியிலும்
சுரண்டப்படுபவர்களின் கண்ணீர்
அவன் கன்னங்களில் மட்டுமல்ல,
எழுத்துகளிலும் வழியும்.
//

சூப்பர் வரிகள் வி.க!
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

நாமக்கல் சிபி said...

//காணமல் போன கருப்பு கவிதைகளுடன் வந்திருக்கிறார்.
//

:)

அட! நல்ல வரவேற்பு!

கோவியாரே வார்த்தைகளில் விளையாடுறீங்க!

நாமக்கல் சிபி said...

கவிதை என்றவுடன் அய்ஸ் அட்டெண்டன்ஸ் குடுத்துட்டாருப்பா!

விடாதுகருப்பு said...

பெயர் வேனுமா அவர்களே,

என் கடன் எழுதிக் கிடப்பது. உங்கள் கேள்வி கேரி ஓவர் டூ வவாசங்கம் ஹெட் ஆபீஸ்.

//இப்படி யோசிங்களேன் காதலிய அழ வச்சு பாக்குற காதலனோட குறும்புகள்தான் அப்படி வெளிப்பட்டு இருக்கு.காதலிய அழ வைக்கிறது மனித மாண்புக்கு எதிரானதல்லவே :)
//

அய்யனார் அவர்களே,

அவர் ஒரு குழந்தையை முன்வைத்தே அக்கவிதையை புனைந்து இருந்தார். அதனாலேயே ஆதங்கம்.

ஆதவன் தீட்சண்யாவின் சுய விலக்கம் படிச்சு இருக்கிறேன் தோழர்.

புதுக்கவிதையோ தூசு தட்டப்பட்ட பழங்கவிதையோ... மு**கள், யோ** என்று வரிகளைப் போடு கவிதை எழுதுவதுதான் பாஷனாகப் போயிற்று இப்போது. ஆண் கவிகளே அடங்கி இருக்கும்போது பெண்கவிகள் இப்படி காமத்தில் கரை புரண்டு எழுவதை மட்டுமே கண்டித்து இருக்கிறேன்.

புரட்சிகரம் என்பது எழுத்தில் இஅருக்கலாம், ஆனால் உறுப்புகளின் பெயர்களையும் ஆண்-பெண் கூடலையும் வார்த்தைகளாகப் போட்டு கவிதை படைப்பதை புரட்சிகரம் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சரி சரி ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க. எங்கே சிரிங்க பார்க்கலாம்.

//காணமல் போன கருப்பு கவிதைகளுடன் வந்திருக்கிறார்.
//

கோவி சார், காணாமல் எல்லாம் போகவில்லை. கொஞ்சம் மிகைப்பணி. அவ்வளவுதான்.

//அதெல்லாம் கூட போகட்டும்! விடாது கருப்புக்கு நகைச் சுவை உணர்வே கிடையாதுன்னு சொல்றீங்களா?
//

நாமக்கல்லார் ஓவரா கலாய்ச்சு இருக்கிறார். ஹாஹாஹா... எனக்கு நகைச்சுவை வராது என்று யார் சொன்னது? போகப் போகப் பாருங்கள். பட்டையைக் கிளப்பிடுவோம்ல...!

செந்தழல் ரவி said...

இப்போவாவது தெளியுதா பார்க்கலாம்...

:)))))

அய்யனார் said...

/கவிதை என்றவுடன் அய்ஸ் அட்டெண்டன்ஸ் குடுத்துட்டாருப்பா! /

நாமக்கலாரே அவ்வளவு சீக்கிரம் இந்த கவிதைய விடுறதா இல்ல :)

/அவர் ஒரு குழந்தையை முன்வைத்தே அக்கவிதையை புனைந்து இருந்தார்/
அப்படியா? முழு கவிதையையும் முடிஞ்சா இடுங்களேன்.

/மு**கள், யோ** என்று வரிகளைப் போடு கவிதை எழுதுவதுதான் பாஷனாகப் போயிற்று/

இஃதொரு தீராத விவாதம்.நான் வரல இந்த ஆட்டத்துக்கு :)

என் கருத்த கேட்டிங்கன்னா இலக்கியம்,கவிதை இதிலெல்லாம் நம்மோட தமிழ்சூழல் ரொம்ப பின் தங்கி இருக்கு.சாதீய கட்டுக்களை பெரியார் உடைக்குபோது ஏற்பட்ட அதிர்ச்சிதான் இலக்கிய மரபுமீறல்களை எதிர்கொள்ளும்போதும் நமக்கு ஏற்படுது.கொஞ்சம் சன்னல்களை திறப்போம் கருப்பு :)

நாமக்கல் சிபி said...

//சாதீய கட்டுக்களை பெரியார் உடைக்குபோது ஏற்பட்ட அதிர்ச்சிதான் இலக்கிய மரபுமீறல்களை எதிர்கொள்ளும்போதும் நமக்கு ஏற்படுது.கொஞ்சம் சன்னல்களை திறப்போம் கருப்பு //

சபாஷ் சரியான போட்டி!

இதுக்கு கருப்பு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்!

நாமக்கல் சிபி said...

// எனக்கு நகைச்சுவை வராது என்று யார் சொன்னது? போகப் போகப் பாருங்கள். பட்டையைக் கிளப்பிடுவோம்ல...!
//

ஆமா! ஆமா!

அதுக்குத்தான காத்துகிட்டிருக்கோம்!

எலேய்! ஸ்டார்ட் மீசிக்!

லக்கிலுக் said...

தோழர் கருப்புவை வ.வா.ச.வில் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான தேர்வு!!!

நாமக்கல் சிபி said...

அனானியாக வந்து அங்கலாய்த்த அனானி,

வெறும் ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே யாரையும் குற்றம் சுமத்துவது நல்லதல்ல.

ஊகங்களில் இரு பக்கமும் பார்க்க வேண்டும் நாம். பாஸிடிவ், நெகடிவ்.

ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு ஒருவரை நிராகரிக்கும்போது, பின்னால் அப்படி அல்ல என்று தெரிய வரும்போது ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்து இடுவது எப்படி?

இது ஜாலியாக வந்து சிரித்து விட்டுப் போகும் இடம். வாங்க. நீங்களும் சிரிங்க! அதுதான் எங்களுக்கு வேணும்!

நாமக்கல் சிபி said...

//காணமல் போன கருப்பு கவிதைகளுடன் வந்திருக்கிறார்.
//

ஆமாம்! காணாமல் போனவர் கரும்பு கவிதைகளுடன்தான் வந்திருக்கிறார்.

நாமக்கல் சிபி said...

//தோழர் கருப்புவை வ.வா.ச.வில் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. சரியான தேர்வு!!!
//

மிக்க நன்றி லக்கி!

அவரோட கவிதை அலசலைப் பற்றி ஒண்ணும் சொல்லாம போயிட்டீங்களே!

நல்லா கலாய்ப்பீங்கன்னு பார்த்தேன்!

:(

இராம் said...

சதிஸ்'ண்ணே வாங்க... வாங்க... :)

//அனானியாக வந்து அங்கலாய்த்த அனானி,

வெறும் ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே யாரையும் குற்றம் சுமத்துவது நல்லதல்ல.

ஊகங்களில் இரு பக்கமும் பார்க்க வேண்டும் நாம். பாஸிடிவ், நெகடிவ்.

ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு ஒருவரை நிராகரிக்கும்போது, பின்னால் அப்படி அல்ல என்று தெரிய வரும்போது ஏற்படும் மன உளைச்சலுக்கு மருந்து இடுவது எப்படி?
//

தள,

நல்லா சொல்லிருக்கீங்க....


இதேப்போலே பல பின்னூட்டங்கள் வி.க'வே தாக்கி வந்திருக்கு, அனானிஸ் தயவுச்செய்து எந்த ஆதாரம் இல்லாமே குற்றச்சாட்டை வைக்காதீங்க.... அவர் இங்க ஜாலியா'தான் எழுத வந்திருக்காரு.

இது ஜாலியாக வந்து சிரித்து விட்டுப் போகும் இடம். வாங்க. நீங்களும் சிரிங்க! அதுதான் எங்களுக்கு வேணும்!

நாமக்கல் சிபி said...

//தள,

நல்லா சொல்லிருக்கீங்க....
//

இராம்,
நீங்க சொல்ல வேண்டியதைத்தான் நான் சொல்லி இருக்கேன்!

:))

நீங்க கொஞ்சம் பிஸியாயிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன்.

ஹிஹி...!

நாமக்கல் சிபி said...

//இப்போவாவது தெளியுதா பார்க்கலாம்...

:)))))

//

செந்தழலாரே!

யாருக்கு? என்ன? தெளியணும்னு இப்படி தெளிவில்லாம சொல்லிட்டு போயிட்டீங்களே!

கருப்பு ரசிகர் பேரவை said...

தமிழ் மணத்துல வௌவாலா?

எங்க கருப்புவுக்கே சவாலா?

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு!
டொய்யோவ் டொய்யோவ்!

கருப்பு ரசிகர் பேரவை.
சென்னை - மேற்கு!

கருப்பு காமெடி மன்றம் said...

//எனக்கு நகைச்சுவை வராது என்று யார் சொன்னது? போகப் போகப் பாருங்கள். பட்டையைக் கிளப்பிடுவோம்ல...! //

அதான! பார்த்துகிட்டீங்களா!

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!

எங்க ஆளு எப்படி கலக்குறாருன்னு பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க!

இவன்,
கருப்பு காமெடி மன்றம்
அவுஸ்திரேலியா கிளை

விடாதுகருப்பு said...

//இப்போவாவது தெளியுதா பார்க்கலாம்...//

செந்தழல் ரவி,

இது வவாச பதிவு. தெரியுதுல்ல. என் சொந்தப் பதிவு இல்ல.

ஏசுவால் ரட்ஷிக்கப் பட்டீர்களா படிச்சு தெளிஞ்சா சரிதான்.

விடாதுகருப்பு said...

லக்கி, ராம், நாமக்கல்லார், ரசிகர் பேரவை, ரசிகர் மன்றம், அய்யனார் ஆகியோருக்கு சிறப்பு நன்றி.

விடாதுகருப்பு said...

இதோ அக்கவிதை:-

ரோஜாப்பழம்- மாலதி மைத்ரி

நீ அழும்போது உன்முகம்
ரோஜாபூப் போல இருக்கிறது அதனாலேயே
உன்னை நான் அடிக்கடி
அழவைத்துப் பார்க்கிறேன்

பூவே இத்தனை அழகென்றால்
ரோஜா பழுத்தால் அதன் நிறமும் சுவையும் மணமும்
எப்படி இருக்கும்

சாறூறிய உனது உதடுகளை
யாருக்குத் தின்னத் தருவாய்
மகளே
என் ரோஜாப் பழமே!

விடாதுகருப்பு said...

//சாதீய கட்டுக்களை பெரியார் உடைக்குபோது ஏற்பட்ட அதிர்ச்சிதான் இலக்கிய மரபுமீறல்களை எதிர்கொள்ளும்போதும் நமக்கு ஏற்படுது.கொஞ்சம் சன்னல்களை திறப்போம் கருப்பு :) //

சாதி ஈயத் தளைகளை அறுத்து வெளிவரச் சொல்லும் முதல் பதிவர் நான். என் எழுத்தும் பேச்சும் எண்ணமும் அப்படியேதான் இருக்கின்றன.

(ஜாதி பற்றி இங்கு பேச வேண்டாம் என்பதால் அடக்கி வாசிக்கிறேன். என் பதிவில் பேசுவோம்)

மரபு மீறல்கள் சரிதான். ஆனால் எது எதில் மீற வேண்டும் என ஒரு வரைமுறை வேண்டாமா? நாகரீகம் என்ற பெயரில் டிஸ்கொத்தேக்களில் நடக்கும் கூத்துகளை பார்க்கிறீர்கள்தானே? நாகரீகம் என்ற பெயாரில் வளையம் தொங்கும் இடங்களை நினைத்துப் பாருங்கள். அதேபோல் இதுபோன்ற வார்த்தைகளை நுழைத்துத்தான் பெருங்கவிஞர் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை மட்டுமே சாடி இருக்கிறேன்.

இதுபற்றி தோழி அனியிடம்கூட விவாதம் செய்து இருக்கிறேன்.

கருப்பு ரசிகர் மன்றம் said...

அட்லாஸ் வாலிபராக (வழக்கத்திற்கு மாறாக) புதியதோர் முகம் காட்டி காமெடியில் கலக்கவிருக்கும் எங்கள் கருப்பு அண்ணாச்சிக்கு வாத்துக்கள் ச்சே! வாழ்த்துக்கள்!

- கருப்பு ரசிகர் மன்றம்
துபாய் கிளை,
துபாய் குறுக்கு தெரு,
துபாய் பஸ் நிலையம் அருகில்,
துபாய்!

நாமக்கல் சிபி said...

//மரபு மீறல்கள் சரிதான். ஆனால் எது எதில் மீற வேண்டும் என ஒரு வரைமுறை வேண்டாமா? நாகரீகம் என்ற பெயரில் டிஸ்கொத்தேக்களில் நடக்கும் கூத்துகளை பார்க்கிறீர்கள்தானே? நாகரீகம் என்ற பெயாரில் வளையம் தொங்கும் இடங்களை நினைத்துப் பாருங்கள். அதேபோல் இதுபோன்ற வார்த்தைகளை நுழைத்துத்தான் பெருங்கவிஞர் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை மட்டுமே சாடி இருக்கிறேன்.
//

இப்போ அய்யனார்க்கு பால் போட்டாச்சு!

அய்ஸ் நீங்க என்ன சொல்றீங்க?

மின்னுது மின்னல் said...

இராம்,
நீங்க சொல்ல வேண்டியதைத்தான் நான் சொல்லி இருக்கேன்!

:))

நீங்க கொஞ்சம் பிஸியாயிட்டீங்களோன்னு நினைச்சிட்டேன்.

ஹிஹி...!

//

பாவம், தல எதோ பிஸியா இருக்கு விடுங்க தள

லொள்ளுப் பாண்டி said...

அண்ணன் ஜொள்ளுப் பாண்டி அவர்கள் தற்போது கல்லூரிச் சாலையில் பிஸியாக இருப்பதால் கருப்பு அவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை என் மூலம் தெரியப் படுத்தியுள்ளார்.

நாமக்கல் சிபி said...

//பாவம், தல எதோ பிஸியா இருக்கு விடுங்க தள //

மின்னல்!

க.க.க.போ!

:)

(கக்கா போ அல்ல)

மின்னுது மின்னல் said...

எங்க அய்யனார் பெரிய கவி ஆவதை தடுக்க நீங்கள் சதிசெய்வதாக நாங்கள் எடுத்து கொள்ளலாமா..? விடாது கருப்பு அவர்களே...:)

மின்னுது மின்னல் said...

///

பெயர் வேனுமா? said...
///


பெயர் யாருக்கு வேண்டும் எங்களுக்கு சிரிப்புதான் வேண்டும்...:)

நாமக்கல் சிபி said...

//பெயர் யாருக்கு வேண்டும் எங்களுக்கு சிரிப்புதான் வேண்டும்...:) //

மின்னல்
நீ நம் இனமடா!

மின்னுது மின்னல் said...

///
(கக்கா போ அல்ல)
///


:)

நாமக்கல் சிபி said...

///
(கக்கா போ அல்ல)
///


:)
//

மின்னலாரே!

சொல்லித் தெரிவதில்லை காதல்
என்பது போல்தான் இதுவும்!
சொல்லத் தேவை இல்லை!

அய்யனார் said...

கவிதைக்கு நன்றி கருப்பு

நடுவர் நாமக்கல்லாருக்கும் நன்றி

/மரபு மீறல்கள் சரிதான்./
இதான் எனக்கு வேணும்
/ஆனால் எது எதில் மீற வேண்டும் என ஒரு வரைமுறை வேண்டாமா? நாகரீகம் என்ற பெயரில் டிஸ்கொத்தேக்களில் நடக்கும் கூத்துகளை பார்க்கிறீர்கள்தானே? நாகரீகம் என்ற பெயாரில் வளையம் தொங்கும் இடங்களை நினைத்துப் பாருங்கள். /
இது நம்ம மேட்டரே இல்லையே நாம பேசியது கவிதையின் மரபுடைத்தல்
/அதேபோல் இதுபோன்ற வார்த்தைகளை நுழைத்துத்தான் பெருங்கவிஞர் ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை மட்டுமே சாடி இருக்கிறேன்./
சொற்கள் துருத்திக் கொண்டிருந்தால் அது கவிதையல்ல ஒரு அழகான வாக்கியம் கூட கவிதையின் கட்டமைப்பை மீறி சொல்லப்பட்டிருக்குமெனில் அது அக்கவிதையை சிதைக்கிறது.இதுபோன்ற வார்த்தைகளை உள்நுழைப்பது குற்றம்தான்

நாமக்கல்லாரே வேற ஏதாச்சிம் எதிர்பாத்திங்களா :)

சிரிங்கப்பு வவாச ல என்ன ஆர்க்யுமெண்ட் மக்க என்ன அடிக்க வருவாங்க :)

நாமக்கல் சிபி said...

ஐயா போலி உண்மைத் தமிழரே!

உண்மை உண்மைத் தமிழன் ரொம்ப பாவம்! அவரை விட்டுடுங்க!

உங்கள் பின்னூட்டம் நீங்கப்பட்டது!

நாமக்கல் சிபி said...

மின்னலாரே!

போலி உண்மைத் தமிழனுக்கு நீங்க போட்ட பதிலை என்ன பண்ணலாம்?

முடிவு உங்க கையில!

:)

பாவம்! புலம்புறாரு உண்மை உண்மைத் தமிழன்!

நாமக்கல் சிபி said...

//நடுவர் நாமக்கல்லாருக்கும் நன்றி//

:))

ஆஹா! என்னை நடுவர்னு சொல்லி ஆப்புக்கு தயார் பண்ணுறீங்களாஅ ஐய்ஸ்?

(ஐய்யனார்னு சொல்றதுக்குப் பதிலா ஐய்ஸ்னு சொல்லச்சொல்லோ ஒரு கில்மாவா இருக்கே)

நாமக்கல் சிபி said...

//சிரிங்கப்பு வவாச ல என்ன ஆர்க்யுமெண்ட் மக்க என்ன அடிக்க வருவாங்க //

அட! அடிக்கவெல்லாம் வரமாட்டோம்!
கலாய்க்கத்தான் வருவோம்!

:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தோழர் விடாது கருப்பு அவர்களே.. கவிதைக்கும் எனக்கு ரொம்பபபபபபபபபபபபபபபபபபபப தூரம் சாமி.. நாற்பது பக்கத்துக்கு கட்டுரை எழுதச் சொல்லுங்க. எழுதித் தள்ளிருவேன்.. ஆனா நாலு வரில கவிதை எழுதச் சொல்லுங்க.. கை டான்ஸ் ஆடுது.. சரி.. நமக்கு வர்றதுதான் வரும்னுட்டு விட்டுட்டேன்.

கருப்பு சாமி.. கோச்சுக்காதீங்க.. இன்னிக்கு ஆபீஸ்ல ஓவர் வேலை.. சம்பளம் நாலு வேறய்யா. அதான் இன்னிக்கு ஒரு நாளாச்சும் ஒழுக்கமா, உண்மையா உழைப்போமேன்னுட்டு காலைல இருந்து யாருக்குமே கமெண்ட்ஸ் போடாம இருந்தேன். பாருங்க.. அதுக்குள்ள போலி உண்மைத்தமிழன் இங்கனேயே வந்து நமக்குள்ள பகையைக் கிளப்பிவிட்டுட்டான்.. எங்கிட்டிருந்துதான் வரான்னு தெரியலய்யா..

பெண்ணியக் கவிஞர்களாகட்டும், இன்றைய இளைஞர்களாகட்டும், இதுவரை யாரும் பேசாதவற்றைப் பேசினால் மட்டும்தான் அது நவீனம் என்றும் பேசாமல் இருப்பதாலேயே அவையெல்லாம் நல்லவைகள் என்றும் நினைத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவுதான் குட்டி ரேவதி போன்ற பெண்ணியவாதிகளின் 'அந்த' மாதிரிக் கவிதைகள்..

கவிதை வாசிப்பு தங்களுடைய மற்ற விஷயங்களில் தீவிரத்தைக் குறைக்கும் என்று நம்புகிறேன். விரும்புகிறேன். ஸோ.. இது போல் நிறைய மற்ற விஷயங்களில் தங்களது பெருவாரியான கவனத்தைத் திருப்பினால் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இங்கே நீங்கள் தொகுத்து வழங்கியிருப்பதில் எனக்குப் பிடித்திருப்பது அய்யப்ப மாதவன் எழுதியிருக்கும்,
"மழைக்குப் பிறகும் மழை
அசையும்
மரங்களில் இருந்து!...."

- இந்தக் கவிதைதான்.. எப்படி ஒத்துமை பார்த்தீங்களா?

வாழ்க வளமுடன்..

மின்னுது மின்னல் said...

நாமக்கல் சிபி said...

மின்னலாரே!

போலி உண்மைத் தமிழனுக்கு நீங்க போட்ட பதிலை என்ன பண்ணலாம்?

முடிவு உங்க கையில!
///


எடுத்துடுங்க !!

நாமக்கல் சிபி said...

//தோழர் விடாது கருப்பு அவர்களே.. கவிதைக்கும் எனக்கு ரொம்பபபபபபபபபபபபபபபபபபபப தூரம் சாமி..//ஒரு பதிவாக போடவேண்டிய அளவில் பின்னூட்டம் போட்டுத் தன்னை நிரூபித்திருக்கும் இந்த உண்மைத் தமிழன்தான் உண்மையான உண்மைத் தமிழன் என்று உண்மையாகவே சான்றிதழ் பெறுகிறார்.

நாமக்கல் சிபி said...

//"மழைக்குப் பிறகும் மழை
அசையும்
மரங்களில் இருந்து!...."
//

உண்மைத் தமிழன்!
எனக்குக் கூட இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருந்தது!

நாமக்கல் சிபி said...

//எடுத்துடுங்க !! //

மின்னல்!

எடுத்தாச்சு!

நாமக்கல் சிபி said...

//ஸோ.. இது போல் நிறைய மற்ற விஷயங்களில் தங்களது பெருவாரியான கவனத்தைத் திருப்பினால் என்னைப் போன்ற அப்பாவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்//

உண்மைத் தமிழன்!

போச்சு!

"ஸோ" ன்னு எதுக்கு சொன்னீங்க?
இதுக்குப் பேர்தான் சொ.செ.சூ என்பது!

வெட்டிப்பயல் said...

அட்லாஸ் வாலிபராக கலக்கவிருக்கும் கருப்புக்கு வாழ்த்துக்கள்!!!


சும்மா அடிச்சி ஆடுங்க :-)

ILA(a)இளா said...

//இப்போவாவது தெளியுதா பார்க்கலாம்...//
கவிதை போதை தெளியவே தெளியாது ரவி.

நாமக்கல் சிபி said...

//கண்டனத்தை வ.வா.ச தலைமை ஏற்று பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது//

இளா! அதான் ஏற்கனவே பதில் சொல்லிட்டமே!

:)

ILA(a)இளா said...

//என் கடன் எழுதிக் கிடப்பது. உங்கள் கேள்வி கேரி ஓவர் டூ வவாசங்கம் ஹெட் ஆபீஸ்.//
கண்டனத்தை வ.வா.ச தலைமை ஏற்று பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறது.
ஏன் கருப்பு வ.வா.ச'வில் எழுத கூடாது? எங்களிடம் இன்னார்தான் நகைக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. யார் வேண்டுமென்றாலும் சிரிக்கலாம், சிரிக்க வைக்கலாம். எங்கள் நோக்கம் 100% சிரிக்க வைக்க மட்டுமே. வேறு முகம் இருந்தாலும் இங்கே சிரித்தவாறு இருக்கும் முகம்தான் முக்கியம். பெயரோடு எழுதினால் இன்னும் விளக்கம் தரத்தயார்.

ILA(a)இளா said...

//இளா! அதான் ஏற்கனவே பதில் சொல்லிட்டமே!//
ஆஹா அப்படியா, கொஞ்சம் லேட் அதான், அதனால் என்ன திரும்ப சொல்லுவோமில்லே.

நாமக்கல் சிபி said...

//அதான், அதனால் என்ன திரும்ப சொல்லுவோமில்லே//

ஆமாம்! திரும்ப திரும்ப சொல்லுவோம்!

விடாதுகருப்பு said...

பின்னூட்டம் செய்து தட்டிக் கொடுத்து சுட்டிக்காட்டிய அனைத்து கவிதை உள்ளங்களுக்கும் நன்றி.

போலித்தமிழன், உண்மைத் தமிழன், தோழர் வெட்டி, நண்பர் இளா, லொள்ளுப் பாண்டி, மின்னிய மின்னல், அனைவருக்கும் பதில் அளித்த சிபியார், ஆரோக்கியமான கவி வாதம் செய்த அய்யனார் அனைவருக்கும் சிறப்பு நன்றி.