Wednesday, November 29, 2006

இது ஒரு நகைச்சுவை நாள்

*

தப்பு செய்றது எப்பவுமே தப்புதான்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தப்புங்கறது சில சமயம் தப்பு இல்லைன்னு நினச்சு நாம செய்ற சில காரியங்களால தப்பா போயிடும். எதுக்கு இத இப்போ சொல்றேன்னா..

வ.வா.ச. அப்டிங்கிற பேர்ல உள்ள 'வா'வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம். அது தப்பில்ல...

அவங்க சங்கம்; அவங்க பேரு. அதனால அது தப்பில்ல...

அதோடு, அந்தக் காலத்து ஆள் ஒருத்தரைப் பத்தி எழுதணும்னா,இன்னொரு அந்த காலத்து ஆள்தான் வேணும்னு அவங்க நினைச்சிருக்காங்க; அதுவும் தப்பில்லைதான்.

ஆனால் இப்படி தப்பே செய்யாத அவங்க பண்ணுன ஒரே தப்பு என்னன்னா,
என்னை இங்க ஒரு நாள் டேரா அடிக்கச் சொல்றதுதான்.

'ஆனாலும் இந்த ஆண்டவன் இந்தச் சின்னூண்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான்,பாத்தீங்களா?" (காதலிக்க நேரமில்லை)
என் தலைவிதி எனக்குத் தொடர்பில்லாத ஒரு சங்கத்தில, அதுவும் நகைச்சுவைக்கு முதலிடம் - இல்ல..இல்ல - முழு இடமே கொடுக்கும் வ.வா.ச. ஆட்கள் என்ன இப்படி பிடிச்சி மாட்டுவாங்களா? உங்க தலைவிதி அவங்க செஞ்ச தப்புனால இப்போ பாருங்க நீங்க இத வாசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. (எங்க கடைசிவரை வாசிக்கப் போறீங்க? எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியே வாசிச்சிங்கன்னா, அது உங்க தப்பு! )

இன்னைக்கி எழுத நினச்சதை ஒரு வாரத்துக்கு முந்தியே எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும். இன்னைக்கி நம்ம கலைவாணர் பிறந்த நாள். இதப் பத்தி ஒரு வாரத்துக்கு முந்தியே நினச்சி, இந்த நாளை ஒரு 'நகைச்சுவை நாள்' அப்டின்னு நாம பதிவர்கள் எல்லோரும் ஒரு விழாவா கொண்டாடியிருக்கலாம். இன்றைய பதிவுகள் எல்லாமே நகைச்சுவையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதி இந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். அடுத்த வருஷமாவது இந்த நாளை அப்படி கொண்டாடலாம் - தமிழ்மணத்தில் மட்டுமாவது. இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல விஷயமாவது செய்யலாம்ல..? காதலுக்கு நாளிருக்கு;நன்றி சொல்ல நாளிருக்கு.எல்லோருமா சேர்ந்து சிரிக்கிறதுக்கு ஒரு நகைச்சுவை நாளுன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல..அடுத்த வருஷம் பதிவர்கள் சேர்ந்து திட்டமிடுங்க.. வருத்தப்படாதவங்களுக்கு இதில ஒரு முக்கிய ரோல் இருக்கு; பாத்து செய்யுங்க. சரியா?



எல்லா நகைச்சுவை நடிகர்களின் நடிப்பிலும் நான் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன். அவங்க காமெடி செஞ்சு முடிச்சதும் ஆடியன்ஸ் ரீயாக்ஷனுக்காக ஒரு சின்ன இடைவெளி தெரியும். ஒரு சில நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள்ல தான் இந்த gap இல்லாதமாதிரி தெரியும். பேசும்போது ஆற்றொழுக்கு நடை அப்டின்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இவங்க நடிப்பும் ஒரே சீராகச் செல்லும். நம்ம ஊர் ஆள்களில் கலைவாணர், எம்.ஆர்.ராதா இந்த இருவரின் நடிப்பில் இதைக் கண்டதுண்டு. அதனாலே அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கும்.

கலைவாணர் வில்லுப்பாட்டில் ஆரம்பித்து, நாடகங்களில் வளர்ந்து சினிமாவுக்குள் வந்தவர். இப்படி வருபவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனமும் ஒட்டிக் கொண்டு விடும். ஆனா எப்படின்னே தெரியவில்லை. கலைவாணருக்கிருந்த body language அந்த செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது - அதுவும் சினிமாக்களின் ஆரம்ப காலத்திலேயே அவர் அதைப் புரிந்து நடித்தது - உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான்.

இப்போ வர்ர படங்களில் நம்ம இயக்குனர்கள் "கோனார் நோட்ஸ்" போடுவார்கள் தெரியுமா? அதாவது ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒன்று செய்யும் முன் அதைப்பற்றி அந்த பாத்திரமே ஒரு soliloquy-ல் அது எதற்கு ஏன் என்று ஒரு detailed lecture கொடுக்கும்; அதாவது படம் பார்ப்பவர்கள் மடையர்கள்; அவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இது போல் விளக்கம் கொடுத்தால் தான் அவர்களுக்குப் புரியும் என்று நம் இயக்குனர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான நினைப்பு. இப்படி இல்லாத தமிழ்ப்படம் கொஞ்சம் அரிது. கடைசியில் கதாநாயகனுக்குப் பைத்தியம் தெளிந்தும் அவன் பைத்தியங்களோடு போனானா; இல்லை பைத்தியமாகவே திரும்பி போனானா என்று ஒரு கேள்வியோடு படம் பார்த்தவர்களைத் தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பியதே 'சேது'படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக எனக்குத் தெரியும். இப்படி ஒரு கேள்விக்குறியோடு ஒரு படத்தையே முடித்த பாலாவுக்கு நல்ல தைரியம்தான்.ஆனால் மற்ற படங்களைப் பாருங்கள்; சீனுக்கு சீன் விளக்கவுரை இருக்கும்.

ரொம்ப பழைய படம் (அப்புறம் கலைவாணர் நடித்திருந்தா புதுப்படமாகவா இருக்கும்; வந்திட்டாய்ங்க கத சொல்றதுக்கு) - பணம்னு நினைக்கிறேன். சிவாஜி - பத்மினி..? வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார். கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.'பாருங்க, ஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். பத்த வைக்கிறதுதான். நல்லா பத்திக்கும். ஆனா இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காது. அதாவது நோட்ஸ் ஏதும் கிடையாது.

சிரிப்பைப் பத்தியே ஒரு பாட்டு - எந்தப் படமென்று நினைவில்லை. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு ஒரு சின்ன புன்முறுவலாவது வரலைன்னா அவங்கள் என்ன மனுசங்களோன்னுதான் சொல்லணும். பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.

நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தாங்கள் நடிக்கும்போது சொல்பவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரியார் படத்திற்கு ராஜா இசை அமைக்க மறுத்ததாக வந்த செய்தியை வைத்து நாம் எல்லோரும் அலசினோமே அதுவும் இதைச் சார்ந்த கேள்விதான். இரண்டுக்கும் தொடர்பு தேவை என்பது கட்டாயம் இல்லை. ஆனாலும் இரண்டும் ஒரே கோட்டில் சென்றால் அதன் மவுசே தனிதான். அந்த வகையில் கலைவாணர் ஒரு நல்ல முன்னோடி.அவர் படத்தில் பொதுவுடமைக் கருத்துக்கள், சமூக நல கருத்துக்கள், அப்போதைய தி,க.வின் கருத்துக்கள், சமய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளின் மேல் சாடல் - இப்படிப் பல சேதிகளைச் சொல்லுவதாக வரும். அவைகளை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மனிதனும், நடிகனும் ஒன்றிணைந்த இந்த பிணைப்பு அவர் புகழுக்கு அச்சாணி.

புரட்சிக் கருத்துக்களைப் படங்களில் பேசிவிட்டு, 'அது நடிப்பு; நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது ஒரு நடிகனுக்குப் பெரிய சறுக்குதான் என்பதை இந்த நாளில் பார்த்தோமே. சொல்லப்போனால் நாம நடிகரா திரையுலகில் பார்த்த நிழல் மனிதரை விடவும் அந்த நிஜ மனிதரின் குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.

நம்ம தமிழ் மக்கள்ட்ட ஒரு "நல்ல" குணம் உண்டு. செத்துட்டா எல்லோரையும் ஓஹோன்னுருவோம். அதனாலேயே 'அவர் ஒரு சகாப்தம்' அப்டின்றதில எனக்கு மரியாதை இல்லாம போச்சு. நமக்குப் பிடிச்சிட்டா செத்தவங்களை சகாப்தமாக்கிடுவோம் - அரசியல்வாதிகள் இன்னொரு அரசியல்வாதி இறந்ததும் 'யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் ஏற்பட்டுரிச்சி' அப்டின்னு சொல்ற ஒரு வார்த்தை ஜாலம் மாதிரி. அதனால கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகாப்தம்னு சொல்லி அவரை சீப் ஆக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் அவரது பெயர் எப்பவுமே மறையாது.

அவர் பிறந்த இந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு பதிவின் மூலம் அவரை நினைவுகூற நினைத்த வ.வா.ச. வாலிப, வயோதிக - (இன்னைக்கு மட்டும் நானும் இதிலே இருக்கேனே; அதுக்காக வயோதிக அப்டின்னு சேர்த்திருக்கேன்) உறுப்பினர்களுக்கு என் வாழ்த்து.




என்னை இப்படி இழுத்துவிட்ட தப்பை செய்தவர்களுக்கு நன்றி சொன்னாலும் அது தப்புதானே!?

பதிவர்களே, இப்படி என்னை இழுத்துவிட்டவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தத் தப்பைச் செய்துவிட்டார்கள். அவர்களை மன்னியுங்கள்.


*

55 comments:

நாமக்கல் சிபி said...

தருமி ஐயா!

சங்கத்துலே வந்து சிரிப்பு நாளுக்கு பதிவு போட்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவு தருமி. (பாருங்க ஐயா எல்லாம் போடலை!)

நாமக்கல் சிபி said...

நகைச்சுவைய நம்ம புரிஞ்சி ரசிக்கணும்னு நம்ம சாய்ஸ்க்கே விடறதுதான் அவரோட அட்டகாசமான குணம்...

அவர் சிறந்த கொடை வள்ளல் எனவும் படித்ததுண்டு...

நல்ல பதிவை கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி ஐயா!!!

தருமி said...

சிபி,
நகைச்சுவை நாள் அப்டின்னு நான் சொன்னதை விடவும் நீங்கள் சொல்லும் சிரிப்பு நாள் என்பது நன்றாக இருக்கிறதே.

நன்றி.

தருமி said...

கொத்ஸ்,
நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்குத்தான் ஏற்கெனவே தெரியுமே.
தொடருங்கள்.

நன்றி

தருமி said...

வெ.பயல்,
//நம்ம புரிஞ்சி ரசிக்கணும்னு நம்ம சாய்ஸ்க்கே விடறதுதான்..//

நமக்கும் மூளை இருக்கும்னு தெரிஞ்ச மூளை உள்ள ஆளு..

நன்றி.

Unknown said...

தருமி சார் பிரமாதமானப் பதிவு..இந்தப் பதிவினைச் சங்கத்தில் பதித்து சங்கத்திற்கு பெருமைச் சேர்த்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கில்லி பையன் said...

யப்பா வ.வா.சங்கத்துச் சிங்கங்களா.. உருப்படியாக் கூடச் சிலக் காரியங்கள் பண்றீங்களேப்பா..

தருமி சார் கலைவாணர் பத்தி பதிவுப் போட்டிருக்கீங்க வாழ்த்துக்கள் அப்படியே சின்ன கலைவாணர் ப்ர்த் டேயும் கண்டுபிடிச்சு அவருக்கும் ஒரு பதிவுப் போட்டீங்கன்னா நல்லாயிருக்கும் ஹி..ஹி..

சின்ன கலைவாணர் ரசிகன்
பஞ்ச் பாலா

ILA (a) இளா said...

தருமி அய்யா, சங்கத்துலே வந்து சிரிப்பு/நகைச்சுவை நாளுக்கு பதிவு போட்டு சிறப்பித்தமைக்கு நன்றி!.

கொத்ஸ், சரியான நேரத்துல ஒரு பின்னூட்டம் போட்டு ஆரம்பிச்சு வெச்சி இருக்கீங்க.

ILA (a) இளா said...

//சின்ன கலைவாணர் ரசிகன்
பஞ்ச் பாலா ///
சின்ன கலைவாணருக்கு டைமிங்க் சரியா இருக்கும், அதேமாதிரி இருக்கீங்களே பஞ்ச் பாலா.

//சின்ன கலைவாணர் ப்ர்த் டேயும் கண்டுபிடிச்சு அவருக்கும் ஒரு பதிவுப் போட்டீங்கன்னா//
செஞ்சுட்டா போச்சுங்க, நீங்களே வந்து ஒரு பதிவு போட்டுருங்க.

ILA (a) இளா said...

//யப்பா வ.வா.சங்கத்துச் சிங்கங்களா.. உருப்படியாக் கூடச் சிலக் காரியங்கள் பண்றீங்களேப்பா..//

நன்றி நன்றி நன்றி

தருமி said...

தேவ்,

//இந்தப் பதிவினைச் சங்கத்தில் பதித்து சங்கத்திற்கு பெருமைச் சேர்த்த...// - அப்டிங்கிறீங்க?? :)

தருமி said...

பஞ்ச் பாலா,
உங்க ஆளப்பத்தி இந்தப் பதிவிலேயே சொல்லிட்டேனே.. :(

தருமி said...

இளா,
நன்றிக்கு நன்றியும், சி.கலைவாணர் ரசிகரை அமுக்கி விட்டதுக்கும் நன்றி.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் குறிப்பிட்ட சிரிப்புப் பாட்டு இதோ. பாடியது சந்திரபாபு, பாடம் ஆண்டவன் கட்டளை என நினைக்கிறேன். இப்போது பாட்டுக்குப் போவோமா?

"சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது!

லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும் போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும் போது
சொன்னதெல்லாம் போச்சு!

காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குக் கூட ஓட்டு!

உள்ள பணத்தை பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு!

நல்ல கணக்கை மாத்து
கள்ளக்கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனை ஏமாத்து!"

சந்திரபாபுவின் குரலை நினைத்துக் கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கைப்புள்ள said...

ஐயா,
அருமையான பதிவுங்க. தேவ் சொன்னது போல கலைவாணர் பிறந்த நாள் அன்னிக்கு சங்கத்துல ஒரு நாள் முதல்வரா இருந்து சிறப்பித்ததற்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.//

சிரிப்பு...சிரிப்பு அப்படின்னு வரும் இந்தப் பாட்டு. பாடல் வரிகள் இப்போ ஞாபகம் இல்லை. "இது விஞ்ஞானச் சிரிப்பு" அப்படின்னு ஒரு சிரிப்பு சிரிச்சுக் காட்டுவாரு பாட்டுலேயே...அதே போல பல வகைச் சிரிப்புகள் வரும் இந்தப் பாட்டுலேயே.

கைப்புள்ள said...

சின்ன பசங்க கிட்ட என்ன பேசனும் என்ன பேசக் கூடாதுங்கிற கருத்தை வலியுறுத்தறதுக்காக ஒரு காட்சி வரும். ஒரு பையன் கிட்ட ஒரு பெரியவர் எதோ காரணத்துக்காகத் தீயை எடுத்துட்டு வரச் சொல்லுவாரு...அவனும் ஒரு பந்தத்துல தீயைக் கொளுத்திட்டு வருவான். அப்புறம் "தீயை எங்கே வைக்கிறது"ன்னு அந்த பையன் கேக்கும் போது எதோ ஞாபகத்துல "என் தலையில வை"ன்னு கோவமா சொல்லுவாரு. அவனும் அவரு அசந்த நேரமாப் பாத்து அவரு தலைபாகையில வச்சிடுவான். அப்போ கலைவாணர் வந்து எப்படி சின்ன பசங்க கிட்ட பேசனும்னு எடுத்து சொல்ற வசனம் ஒன்னும் வரும். படம் பேரு ஞாபகமில்லை.

siva gnanamji(#18100882083107547329) said...

இது சந்திரபாபு பாட்டு .....
கலைவாணர், மதுரம்,சி.எஸ்.பாண்டியன் பாடிய பாட்டு வேறு.
அதில் ஒவ்வொரு வகைச் சிரிப்பையும்
சொல்லி,சிரித்தும் காட்டுவார்கள்!

கைப்புள்ள said...

ஸ்கூல் தமிழ் புத்தகத்தில் படித்த ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது...பழசை மறக்காம இருக்கும் அவருடைய குணத்திற்காக. மதுரையிலோ நெல்லையிலோ சிறு வயதில் ஒரு டென்னிஸ் குழாமில் பந்து பொறுக்கி போடும் "பால் பாயாக" வேலை பார்த்தாராம். பின்னால் அதே குழாமுக்கு அவர் ஒரு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த போது "நான் இதே குழாமில் பால் பாயாக வேலை பார்த்தேன்" என்று நினைவு கூர்ந்தாராம்.

Unknown said...

மாசச் சம்பளக்காரர்கள் பத்தி கலைவாணர் ஒரு பாட்டு பாடுவார்.. படம் முதல் தேதின்னு நினைக்கிறேன்..அருமையான பாடல் வரிகள்.. கலைவாணரின் ஞாபகங்களை இன்னும் பலர் இந்தப் பதிவின் பின்னூட்டங்கள் மூலம் பகிர்வார்கள்ன்னு நினைக்கிறேன்.. நம்ம சுதர்ஸன் கோபால் கூட கலைவாணர் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார்...

Unknown said...

//சிரிப்பு...சிரிப்பு அப்படின்னு வரும் இந்தப் பாட்டு. பாடல் வரிகள் இப்போ ஞாபகம் இல்லை. "இது விஞ்ஞானச் சிரிப்பு" அப்படின்னு ஒரு சிரிப்பு சிரிச்சுக் காட்டுவாரு பாட்டுலேயே...அதே போல பல வகைச் சிரிப்புகள் வரும் இந்தப் பாட்டுலேயே.//

சிரிப்பு. அதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு

கைப்புள்ள said...

//முதல் தேதின்னு நினைக்கிறேன்..அருமையான பாடல் வரிகள்..//

ஆமாம் நல்ல பாடல் தேவ். "மாசம் ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் கொண்டாட்டம்" இப்படி ஆரம்பிக்கும் இந்த பாட்டு.
:)

மங்கை said...

தருமி ஐயா

என் பங்குக்கு நானும் ஏதாவது உளரீட்டு போயிட்றேன்... எனக்காக சிரிச்சுடுங்க ப்ளீஸ்..

ஒரு சர்தார்ஜி விமானத்தில போய்ட்டு இருந்தார்..திடீர்னு விமானத்தில கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கிறாங்க..எல்லாரும் பிரார்த்தனை செய்யும் போது நம்ம சர்தார்ஜி மட்டும் சிரிச்சுட்டே இருந்து இருக்கார்...
பக்கதில இருக்கிறவர்.என்ன உங்களுக்கு பயமா இல்லையானு..

சர்தார்ஜி.. விமான கீழே விழுந்தாலும் எனக்கு ஒன்னும் ஆகாது..என்னோட பாஸ் தன சாகப் போறார்னாராம்..

பக்கதில இருப்பவர்-அது எப்படி?...

சர்தார்ஜி- இது பாஸோட டிக்கட் தானே..அவர் வரமுடியலை அதனால நான் போறேன்..அவர் பேரல இருக்கிற டிக்கட்

முதல்லேயெ தெரியும் அது இதுன்னு எல்லாம் சொல்லக்கூடாது யாரும்..:-))

நன்றி தருமி ஐயா..

தருமி said...

டோண்டு,
ரொம்ப பழைய பாட்டு..அதனாலதான் கொஞ்சம் குழம்பிட்டிங்கன்னு நினைக்கிறேன். நீங்க சொன்னது சந்திரபாபு ஆடிப்பாடி நடித்தது.
சுல்தான் நான் சொன்ன பாட்டின் முதல் வரியைத் தந்திருக்கிறார்.
"சிரிப்பு. அதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு "

'சிரிப்பைத்' தந்த சுல்தான், அதைப்பற்றி எழுதிய கைப்புள்ள, சிவஞானம்ஜி,
உங்களுக்கு எல்லோருக்கும் நன்றி

இராம்/Raam said...

எங்களின் அழைப்பை ஏற்று ஒரு அருமையான பதிவிட்டு எங்களை பெருமைப்பட வைத்த தருமி ஐயா'விற்கு மிக்க நன்றிகள்!!!

தருமி said...

கைப்புள்ள,
//ஸ்கூல் தமிழ் புத்தகத்தில் படித்த ஒரு சம்பவமும்..//

நம்ம ஊர்ல பாடப்புத்தகத்தில இவரைப் பத்திகூட வந்திருக்கா? அவ்வளவு contemporaryயானவைகளை எழுதுறாங்களா...கண்ல பட்டதேயில்லையே!

தருமி said...

தேவ்,

நீங்க சொல்ற அந்த சம்பளப் பாட்டு ஒரு சிரஞ்சீவிதான். எப்போதும் அது நடப்பை சொல்ற ஒரு பாட்டு.

தருமி said...

மங்கை,
இது ஒரு நகைச்சுவை நாள் என்பதை ஒப்புக் கொண்டு ஒரு சர்தார்ஜி ஜோக்கைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

இராம்/Raam said...

ஐயா,

எனக்கு தெரிந்த சிலவரிகள்...



சிரிப்பு சிந்திக்க தெரிந்த மனிதனின் கையிருப்பு..
இதன் சிறப்பை சீர்த்தூக்கி பார்ப்பதே நமது பொறுப்பு !
மனம் கருப்பா, வெளுப்பா என நமக்கு எடுத்து காட்டும் கண்ணாடி,
சிரிப்பு!!
கவலையே போக்கி மூளைக்கு தரும் சுறுசுறுப்பை தரும்
சிரிப்பு!!
துன்ப வாழவிலும் இன்பத்தை தருவது சிரிப்பு!!

இராம்/Raam said...

இது அந்த பாட்டை பற்றிய விபரங்கள்..

படம்:- இராஜா ராணி
இசையமைப்பாளர்:- T.R.பாப்பா


பாடலை கேட்க இங்கே சுட்டுங்கள்

நன்றி கூகுளாண்டவருக்கு... :)))

ILA (a) இளா said...

மங்கை அவர்களின் வருகைக்கும் நல்ல சர்தார் சோக்குக்கும் நன்றி

தருமி said...

ராம்,
உங்களோடு சேர்ந்து நானும் சொல்வேன்:

"நன்றி கூகுளாண்டவருக்கு... "

Anonymous said...

"நான் ஏன் வாலிபனானேன்" என்று கலைவாணர் பிறந்த நாளில் சங்கம் மாறி எங்களை மகிழ்வித்த ஐயா தருமி அவர்களுக்கு நன்றிகள்.

ஏதோ என்னால் முடிந்தது.

மூன்று குடிகாரர்கள் இரயில் நிலையத்தில் "தண்ணி" அடித்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களில் இரண்டுபேர் பயணம் செய்பவர்கள் ஒருவர் வழியனுப்ப வந்தவர். அடித்த "தண்ணி" வேலை செய்தது. மூவரும் இரயில் நிலையத்திலேயே தூங்கி விட்டனர், இரயிலும் வந்தது, கிளம்பும் நேரம் பதறியடித்துக் கொண்டு மூவரும் இரயிலை நோக்கி ஓடினர், அதில் ஒருவர் மட்டும் இரயில் ஏறிவிட்டார் மற்ற இருவரும் இரயிலை விட்டு விட்டனர் பிறகு இரயில் ஏறாத இருவரும் பயங்கரமாக சிரிக்கத் தொடங்கினர், பக்கத்தில் உள்ளவருக்கு ஆச்சரியம் என்னடா இது மூவர் இரயிலை பிடிக்க ஓடினர் ஆனால் இரயில் கிடைத்ததோ ஒருவருக்கு இதில் சிரிக்க வேறு செய்கிறார்கள் என்று கருதிய அவர் "ஏன்ய்யா இரயிலை விட்டதுமல்லாமல் அந்தக்கவலை ஏதுமில்லாமல் சிரிக்க வேறு செய்கிறீர்களே உங்களுக்கு என்ன பைத்தியமா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் "ஐயோ! ஐயோ! வண்டில போனது எங்கள வழியனுப்ப வந்தவன்" அதை நினைச்சுதான் சிரிக்கிறோம்.

பொன்ஸ்~~Poorna said...

நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலிபரான தருமி ஐயா சரியான தேர்வு :)

சிரிப்பு பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த ராமுக்கு ஒரு ஓ..

இதே போல் கலைவாணர் ஒரு பாட்டில் நம் நாடு இன்னும் பத்திருபது வருடங்களில் எப்படி எல்லாம் முன்னேறி விடும் என்று ஒரு சிரிப்பு நாடகம் வைத்திருப்பார். அதில் 1960களிலேயே ஒரு பெண் தனியாக இரவில் நகைகளுடன் வெளியே போய்விட்டு வருமளவுக்கு நாடு முன்னேறிவிட்டது என்பது போன்ற காட்சி அமைத்திருப்பார். ம்ஹும்.. நாம் இன்னும் அதுபோன்ற நிகழ்வைக் கனவாகவே யோசித்துக் கொண்டிருக்கிறோம்!

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.

//வ.வா.ச.அப்டிங்கிற பேர்ல உள்ள 'வா'வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம்.//

தருமி சார் நீங்கள் என்னிக்குமே வாலிபர்தான்னு உங்க எழுதுக்கள் சொல்லுதே !! :)) அதனால நாங்க ஒரு நிஜமான வாலிபரைத்தான் எழுத வைத்திருக்கிறோம் :))))

மிக அழகான பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி :))

சிவமுருகன் said...

தருமி ஐயா,
சிரிப்பூவை மலர செய்தமைக்கு நன்றி

தருமி said...

மக்களே,
பொன்ஸ், ஜொள்ளுப்பாண்டி, சிவமுருகன் இவர்கள் மூவரும் ( மண்டபத்தில யாரோ எழுதிக்கொடுத்ததை இங்க வந்து வாசிச்சிட்டு போனது மாதிரி) எழுதியதற்கும் எனக்கும் எந்த வித தொடர்புமில்லை என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். :))

Anonymous said...

\\கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.\\

நிச்சயமாக கலைவாணர் ஒரு பாடம்தான் தன் கருத்துக்களை வெறும் படத்துடன் நிறுத்தி விடாமல் தன் வாழ்விலும் பின்பற்றினாரே. அந்த சிந்தனையாளரை நினைத்து உள்ளம் பூரிக்கிறது.

நல்ல செய்தி வாலிபர்களுக்கு ஐயா.

இராம்/Raam said...

//நகைச்சுவை நாளுக்கு என்றென்றும் வருத்தப்படாத வாலிபரான தருமி ஐயா சரியான தேர்வு :)//

நன்றி நட்சத்திரக்கா.... ;)

//சிரிப்பு பாட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த ராமுக்கு ஒரு ஓ..//

இதுக்கு ஒரு நன்றி....

//இதே போல் கலைவாணர் ஒரு பாட்டில் நம் நாடு இன்னும் பத்திருபது வருடங்களில் எப்படி எல்லாம் முன்னேறி விடும் என்று ஒரு சிரிப்பு நாடகம் வைத்திருப்பார். அதில் 1960களிலேயே ஒரு பெண் தனியாக இரவில் நகைகளுடன் வெளியே போய்விட்டு வருமளவுக்கு நாடு முன்னேறிவிட்டது என்பது போன்ற காட்சி அமைத்திருப்பார். ம்ஹும்.. நாம் இன்னும் அதுபோன்ற நிகழ்வைக் கனவாகவே யோசித்துக் கொண்டிருக்கிறோம்! //

உண்மைதான் பொன்ஸ்... அவருடைய தீர்க்கதரிசன எழுத்துக்கள் நிச்சயம் நிறைவேறும் ஒரு நாள்....

இராம்/Raam said...

வாங்க ஸ்யீத்,

சர்தார்ஜி ஜோக்கிற்கு நன்றிக்கோவ்.. இன்னுமிருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்!!!!
:-))))))))))

//தருமி ஐயா,
சிரிப்பூவை மலர செய்தமைக்கு நன்றி //

வாங்க சிவமுருகன்,

நன்றி உங்களின் வருகைக்கும் தருகைக்கும்.....

இராம்/Raam said...

//வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.//

ரீப்பிட்டே.... :-)))))))))))

Anonymous said...

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார் " ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்".

அதிர்ச்சியடைந்த சர்தார் எழுந்து "என்ன? we find that women and stop her".
----------------------------------

Postman:- I Have To Come 5 Miles To Deliver U This Packet
Sardar:- why did u come so far. Instead u could have
posted it...
-----------------------------------
Sardar told his servant: Go and water the plants. Servant
it's already raining. Sardar: So what? Take an
umbrella and go.

ILA (a) இளா said...

////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.//

ரீப்பிட்டே.... :-)))))))))))

//
ரீப்பிட்டே....

Unknown said...

////வாங்க தருமி சார் :)))) அருமையான பதிவு ! சங்கத்து சிங்களில் ஒரு சிங்கமாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.//

ரீப்பிட்டே.... :-)))))))))))

//
ரீப்பிட்டே....//

Another ரீப்பிட்டே....

கப்பி | Kappi said...

நல்ல பதிவு தருமி ஐயா!



//பாடலை கேட்க இங்கே சுட்டுங்கள்

நன்றி கூகுளாண்டவருக்கு... :)))
//

உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது கண்மணி! ;)

இராம்/Raam said...

//உன் கடமையுணர்ச்சி என்னை மெய்சிலிர்க்க வைக்குது கண்மணி! ;) //

மக்கா கப்பி,

ஆரம்பிச்சிட்டிய்யா... வேணாம் விட்டுறு... அப்புறம் அழுதுருவேன்.

தருமி said...

ஜொள்ளுப் பாண்டி,
இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :))

இராம்/Raam said...

//ஜொள்ளுப் பாண்டி,
இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :)) //

ஐயா,

அது டிட்டோ இல்லே...எங்களோட ஒத்தக்கருத்தே ஓங்கி சொல்லிருக்கோம்..... ;)

கப்பி | Kappi said...

//ஆரம்பிச்சிட்டிய்யா... வேணாம் விட்டுறு... அப்புறம் அழுதுருவேன்.//

நகைச்சுவை நாளன்னிக்கு அழக்கூடாது...சிரிங்க...கலகலவென சிரி..கண்ணில் நீர் வர சிரி!! ;)

கதிர் said...

ஆஹா சிரிப்புக்குன்னே ஒரு தனி தினமா? நல்லாருக்கே! ஆனா ஒரு நாள் பத்தாதே! :(

சிரிப்பு வாரம்னே வச்சிக்கலாம்.

இதுவரைக்கும் கலைவாணர் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதுக்காக பெரிய வருத்தமெல்லாம் இல்லை. வாய்ப்பு கிடைக்காமலேவா போயிடும்!

கலைவாணரை நினைவு கூர்ந்து பதிவெழுத எண்ணிய சங்கத்திற்கு நன்றி. பதிவு எழுதி சிறப்பித்த தருமி அவர்களுக்கும் நன்றி.

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப் பாண்டி,
இங்க பாத்தீங்களா, மக்கள் நிலைமையை? சொல்றதுக்கு ஒண்ணுமில்லாததால் நீங்க சொன்னதை எடுத்துவச்சு டிட்டோ போட்டுக்கிட்டு இருக்காங்க... :))//

தருமி சார் :)) சொல்றதுக்கு ஒண்ணுமில்லாமல் இல்லைங்க சார் சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் அதுதான் அந்த ரிப்பீட்டே ;))))))

சார் நீங்கதானே போன் பேசிட்டே வண்டி ஓட்டுறவகளை ரமணா ஸ்டைலில் துரத்கிட்டு போய் அவங்க வண்டி முன்னாடி 'கட்' அடிச்ச விஷயத்தை சொல்லியிருக்க்கீங்களே :))) நீங்க நிச்சயமா வாலிபர்தாங்க சார் !! சிங்கம்தான் . ப்ளீஸ் ஒத்துக்குங்களேன் :)))

Adiya said...

hi kewl. his sense is very abstract and sensiable towards the medium. grt8 work.

தருமி said...

சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் //

:))

தருமி said...

//சிங்கங்ள் ஒன்னு சேர்ந்து கர்ஜிச்சா ஒரே மாதிரி தானே சத்தம் கேட்கும் //

அது சரி... :))

//சிங்கம்தான் . ப்ளீஸ் ஒத்துக்குங்களேன் .//

ஒத்துக்கிறேன்...ஒத்துக்கிறேன்... இல்லாட்டி இளஞ்சிங்கங்கள் கி. சிங்கத்தை ஒரு கை பார்த்துரும்போல இருக்கு!