Friday, November 24, 2006

ராயலோ ராயல்


இன்றைய வருத்தப்படாத வாலிபனுக்கு என்ன வேணும், முதல்ல ஸ்டைல்லா ஓட்ட ஒரு வண்டி, அதுவும் பழைய ராயல் என்ஃபீல்ட் வண்டி வாங்கி ஹேண்டில் பாரை வளைச்சு, நெளிச்சு, நல்லா இருக்கிற வண்டிய கேனத்தனமா மாத்திட்டா "வாவ் சூப்பர்"ன்னு சொல்லுவாங்க மக்கள்.

அப்புறம் என்ன,

சொகமா ஒரு ராயல் சேலஞ்ச் பீர ஏத்திக்க வேண்டியது தான்.

ராயலா ஒரு டின்னர்.

எதுக்கு இதெல்லாம், வாலிபப் பசங்க வெளங்காம போவதான் இத்தனை ராயல் மேட்டரு.

என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி "ராயல்" ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.

அப்படியே சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் "Contributors" ல "ராயல்" ராம் பேர் இருக்குதான்னு பார்த்துக்கங்க.

23 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

வாய்யா ராயல் :))))

சங்கத்து சிங்கமே !!
எங்களின் அங்கமே!!
சொக்கத் தங்கமே !!!

ராயலே வா !
பீராக பொங்கிவா !!
மோர்போல கூலாக வா !!!
ஆயிரம் ஆப்பு வாங்கினாலும்
சீறிவரும் சிங்கமென
காத்துநிற்கும் 'தல' யின் வழிநடக்க ஆப்போடு வா !!! :))))

ILA(a)இளா said...

பொங்கி வர்ரத்துக்கு ராயலு என்ன காவேரியா? பாண்டி பார்த்து. ராயலை ஏன் இப்படி எடுத்தவுடனே கவுக்கறீங்க?

Anonymous said...

கைப்புள்ளையை கலாய்க்க ஆள் சேர்க்குறீங்க போல இருக்கே, அதுக்கு ராயல் சரியான சாய்ஸ்தான்

நாமக்கல் சிபி said...

சங்கத்தின் புதுவரவு ராயல் ராமுக்கு ஒரு ராயல் சல்யூட்டோடு வரவேற்பை அளிக்கிறோம்!

நாமக்கல் சிபி said...

//பீராக பொங்கிவா !!//

மானிட்டராக மாறி வா!
நெப்போலியனாக தோன்றி வா!

இராம் said...

//என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி "ராயல்" ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.//


அட கடவுளே என்னோட மானம் இப்பிடிய்யா போவணும்????

தெரியமேதான் கேட்கிறேன் எதுக்கு இத்தனை ராயல் விளம்பரம்???? :)))

இராம் said...

//வாய்யா ராயல் :))))

சங்கத்து சிங்கமே !!
எங்களின் அங்கமே!!
சொக்கத் தங்கமே !!!//

பாண்டிண்ணே கவிஜ சூப்பருண்ணே!!!

(one by one வார்த்தை இருந்தா அது கவிஜதானே??)

//ராயலே வா !
பீராக பொங்கிவா !!
மோர்போல கூலாக வா !!!
ஆயிரம் ஆப்பு வாங்கினாலும்
சீறிவரும் சிங்கமென
காத்துநிற்கும் 'தல' யின் வழிநடக்க ஆப்போடு வா !!! :)))) //

ரெடிமேட் ஆப்பு எப்பவும் ரெடியா இருக்கில்லே!!!!

தல நீ ரெடியா?? நான் ரெடி!!!

:)

நாமக்கல் சிபி said...

சங்கப்பணிகளை சிங்கமென ஆற்றிட வருக வருக என வரவேற்கிறேன்

ILA(a)இளா said...

//அட கடவுளே என்னோட மானம் இப்பிடிய்யா போவணும்????//

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் ராயல், இல்லாததப்பத்தி இப்போ ஏன் பேசுவானேன்?

செந்தழல் ரவி said...

welcome royal ram......

கப்பி பய said...

வாங்க ராயல்...வாழ்த்துக்கள்!

(இதுக்கு மேல உங்களைப் புகழக்கூடாதுன்னு அன்புக்கட்டளை போட்டுட்டீங்களே ராயல் ;)))

ILA(a)இளா said...

//வாங்க ராயல்...வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கு நன்றி கப்பி. அதென்ன கடைசியா ஒரு டிஸ்கி?

G.Ragavan said...

ஓய்! ராமுமா? அட ராமா!

நெய்யோட சேர்ந்த முந்தியும் பொரியாமப் போகாது!

இராம் said...

//கைப்புள்ளையை கலாய்க்க ஆள் சேர்க்குறீங்க போல இருக்கே, அதுக்கு ராயல் சரியான சாய்ஸ்தான் //

ஆஹா வாங்க அனானி,

எனக்கு ஆதரவு தெரிவிச்சதுக்கு நன்றி!! :)

இராம் said...

//சங்கத்தின் புதுவரவு ராயல் ராமுக்கு ஒரு ராயல் சல்யூட்டோடு வரவேற்பை அளிக்கிறோம்! //

தளபதியின் வரவேற்ப்புக்கு தலை வணங்குகிறேன்.

//மானிட்டராக மாறி வா!
நெப்போலியனாக தோன்றி வா!//

அதெல்லாம் எனக்கு ஒத்துக்காது தள,

எனக்கு பிடிச்சது ராயல் சேலன்ஞ்'தான்!!!! :)))

இராம் said...

//வெட்டிப்பயல் said...
சங்கப்பணிகளை சிங்கமென ஆற்றிட வருக வருக என வரவேற்கிறேன் //

டாங்கீஸ் வெட்டி..


//செந்தழல் ரவி said...
welcome royal ram...... //

நன்றி ரவி... உங்கள் பதிவு தினமலரில் இடம்பெற்றதுக்கு வாழ்த்துக்கள்!!

இராம் said...

//வாங்க ராயல்...வாழ்த்துக்கள்!//

ஒனக்கும் டாங்கீஸ் கப்பி... :)

//(இதுக்கு மேல உங்களைப் புகழக்கூடாதுன்னு அன்புக்கட்டளை போட்டுட்டீங்களே ராயல் ;))) //

ஆமாய்யா நீப்பாட்டுக்கு எனக்கு ஆப்பு வைச்சிட்டு போயிருவே????

வாங்குன காசுக்கு கூவச்சொன்ன அதுக்குமேலேயே கூவி என்னை பாடாபடுத்திடேன்னா???

அதுக்குதான் கொஞ்சம் முன்னாடியே சொல்லிட்டேன்!

கில்லி பையன் said...

ரா..ரா.. ராயல் ரா..ரா....

ரண்டக்க..ரண்டக்க ராயல் நீ ரண்டக்க...
குண்டக்க மண்டக்க சங்கம் குண்டக்க...

இப்படி ஒரு பாட்டைப் போட்டு ராயலை வர வேர்க்க வைங்கப்பா

இராம் said...

/G.Ragavan said...
ஓய்! ராமுமா? அட ராமா!//

வாங்க ஜிரா! ரொம்ப ஆச்சரியப்படுறிங்க!!!

//நெய்யோட சேர்ந்த முந்தியும் பொரியாமப் போகாது!//

ஆகா!!! ரொம்ப நன்றிங்க.... :)

இராம் said...

//Punch பாலா said...
ரா..ரா.. ராயல் ரா..ரா....

ரண்டக்க..ரண்டக்க ராயல் நீ ரண்டக்க...
குண்டக்க மண்டக்க சங்கம் குண்டக்க...

இப்படி ஒரு பாட்டைப் போட்டு ராயலை வர வேர்க்க வைங்கப்பா //

வாய்யா Punch பாலா...

பாட்டெல்லாம் அமர்க்களமா இருக்குய்யா!!!

Syam said...

ராயலு ராயலுனு நம்ம விவ் சொல்லும் போதே சந்தேக பட்டேன்...வாங்க ராயல் ராம்...உங்களை வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைக்கிறேன்.... :-)

Syam said...

//எனக்கு பிடிச்சது ராயல் சேலன்ஞ்'தான்!!!! :))) //

கேட்டாங்களா...யாராவது உங்களுக்கு என்ன புடிக்கும்னு கேட்டாங்களா...சிபிக்கு என்ன புடிக்கும்னு சொல்றாரு அதுக்குள்ள..... :-)

இராம் said...

//ராயலு ராயலுனு நம்ம விவ் சொல்லும் போதே சந்தேக பட்டேன்...வாங்க ராயல் ராம்...உங்களை வணங்கி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைக்கிறேன்.... :-) //

ரொம்ப நன்றி 12B

//கேட்டாங்களா...யாராவது உங்களுக்கு என்ன புடிக்கும்னு கேட்டாங்களா...சிபிக்கு என்ன புடிக்கும்னு சொல்றாரு அதுக்குள்ள..... :-) //

பார்த்திங்களா.. இங்கேயும் வந்து ஆலமரத்த பிடிச்சி உட்கார்த்திட்டிங்களே நாட்டாமை'ன்னு நிறுபிக்க...

;))