Wednesday, November 22, 2006

பாண்டி- அவசரக் கச்சேரி

Image Hosted by ImageShack.us
கிழக்கப் பார்த்த கம்பத்துல்ல நம்ம பாண்டியை பாட்சா படத்து ரஜினிகாந்து மாதிரி கட்டிப் போட்டிருந்தாங்க...

சங்கத்துல்ல அடிச்ச போனை எடுத்தப்போத் தான் விவரம் தெரிஞ்சுது..
ஆஹா சிக்கிட்டான்ய்யா பாண்டி... இனி சிதறு தேங்காத் தான்டீயோன்னு சங்கத்து சிங்கம் ஒண்ணு டைனமைட்டை மிதிச்ச எபெக்ட்ல்லக் கர்ஜிச்சுட்டு ஒதுங்கிருச்சு.

எங்கேப்பா நம்ம சங்கத்து வாகனம்... எடுங்கப்பான்னு ஆளுக்காளு கொரலு விட.. போன மாதம் பேரீச்சபழ ஆசையில் பாண்டி செய்த பழைய ஊழல் வெளியே வந்தது. வாகனம் விலைக்குப் போடப்பட்ட விவகாரம் பாண்டி மீது இருந்த குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாய் உயர்த்தியது.

சங்கத்து சபையின் முன் வாசலில் தளபதியும், இளைய தளபதியும் கம்பத்துப் பக்கம் பாண்டிக்குப் பக்கா காவலாய் நின்றுகொண்டிருந்தனர். தல அகமதாபாளையத்துகாரர்க்ளோடு அண்டாவுக்கு அளவெடுத்து அல்ட்ரா டிஸ்டம்பர் அடிப்பது எப்படி என்று அடிக்கடி மீட்டீங் போட்டு பேசவேண்டி இருப்பதாலும் விவசாயியாரின் டிராக்டர் பாகிஸ்தான் பார்டரில் பஞ்ச்ர் ஆகி நிற்பதால் அவரும் சங்கத்தில் மிஸ்ஸிங்.

கச்சேரிக்கான மைக்செட், சவுண்ட் சர்வீஸ் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு திருப்பதியா.. ச்சே திருப்தியான்னு நான் தளபதியைப் பார்த்துக் கேட்டுட்டு ஓரமா ஓதுங்கி நின்னுட்டேன். சிவா கையிலே சாட்டை எடுத்து தளபதி கையிலேக் கொடுக்க.. ராசுக்குட்டி என்ன நடக்கப் போவுதோன்னு பயத்துல்ல என் கையை எடுத்து அவர் கண்ணை அரையும் கொரையுமாப் பொத்திகிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

அப்போ நிறுத்துடா....என்று சவுண்ட்

வெள்ளைக் குருதப் பூட்டுன்ன சாரியட்ல்ல இருந்து ட்ரிம் பண்ண மீசையோட புலிக்கேசி மன்னர் இறங்குறாரு...

"ஏ...பாண்டி.. என்ன இது?"

"என்ன என்னாது?"

"என்னச் செய்தாய்?"

"என்ன என்ன செய்தாய்?"

"ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"என்ன..ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"

"என்ன பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"
"அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"என்ன அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"என்ன டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"என்ன ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"வேணாம் எனக்கு கோவம் வராது"

"என்ன வேணாம் எனக்கு கோவம் வராது"

"ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"என்ன ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"என்ன டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"என்ன மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"என்ன டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"சொல்லிருடா தப்பா ரைட்டா?"

"என்ன சொல்லிருடா தப்பா ரைட்டா?"

நீ அவன் ஆளுதானே.. அவன் பிட்ட எனக்கேப் போடுறீயா.. இனி வாய் பேசி பிரயோஜனம் இல்லை...

புலிக்கேசி கையில் இருந்து கிளம்பிய சாட்டை சரியாகக் குறி தவறி பாண்டியின் இடமும் வலமும் மாறி மாறி அடிக்க.. புலிக்கேசி மன்னர் களைத்துக் கன்னத்தில் கை வைத்து உட்கார்கிறார். டேய் மன்னருக்கு எதாவது புத்துணர்ச்சிக்கு வழி பண்ணுங்கடான்னு மிகவும் பரிதாபமானக் குரலில் மன்னர் கெஞ்சுகிறார்...

அவ்வளவுத் தான் பாண்டி கைக் கட்டுக்களை நொடியினில் அறுத்தெறிந்து விட்டு மின்னலெனப் போய் தலக் கொடியில் காயப்போட்டிருந்த வேட்டியை அவிழ்த்து கம்பங்களுக்கு நடுவினில் கட்டி.. டிஜிட்டல் டால்பி டிஸ்க் பிளேயரில் ஜெசிக்கா சிம்சனின் லோ ஹிப் நடனக் காட்சியினை ஓட விடுகிறான்.

மன்னர் மெய்மறந்து குத்துப் போடுகிறார். கூடவே கச்சேரியும் களைக் கட்டுகிறது..

"ஆடி வா.. ஆடி வா.. ஆணழகைத் தேடிவா.. பாடல் ஸ்பீக்கரில் அலறுகிறது..."

ஆடலின் உச்சத்தில் புலிக்கேசியின் மீசை மண்ணில் விழுகிறது...

"ஆ..தல.. நீயா?" பாண்டி வாய் பிளக்க...

சத்தம் போடாதே... உன்னிய விசாரிக்கத் தான் இந்த வேசம்... இந்தா அந்த பில்ல இடுப்பு மட்டும் தனியாக் கழண்டு விழற மாதிரி என்ன அழகா ஆடுது.. அதை எம்புட்டு அழகா நீயும் ரசிச்சு எங்களையும் ரசிக்க வைக்கற மாதிரி பண்ணியிருக்க்.. இதுல்ல உன்னிய மாதிரி திறமைசாலி நாட்டுல்ல காட்டுல்ல் ஏன் நெட்டுல்ல கூட உண்டாச் சொல்லு?

பாண்டி தல்யைப் பெருமையாய் பாக்குறான்.

"அதை செய் ராசா..அதைச் செஞ்சு மக்களைச் சந்தோசப்படுத்து.. அதை விட்டுட்டு இட்லி சுடுறேன்.. வடைத் திங்குறேன்னு என்ன இது சின்னப்பில்லத் தனமா இல்ல இருக்கு..அதுக்குன்னு இருக்கவங்க அதைச் செய்வாங்க.. நீ வேணாம்.. என்ன?"

விவசாயின் டிராக்டரின் சத்தம் கேட்க எல்லாரும் வாசலைப் பார்க்க...

விவசாயிக்கு ஸ்பெஷலா... ஜெனிபர் லோபஸ் பாடல் 1000 வாட் ஸ்பீக்கரில் அலறியது....

"நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா.... நல்லதைச் செய்ங்கய்யா...செய்ங்கன்னு " தல சவுண்ட்டா சொல்லிகிட்டே அகமதாபாளையத்து அடுத்த மீட்டிங்க்கு விவசாயி டிராக்டரில் கிளம்பிப் போனார்.

வாழ்க வளமுடன்.

9 comments:

ஜொள்ளுப்பாண்டி said...

ஐயா நான் யாரு நான் எங்கே இருக்கேன் ஆராச்சும் வந்து கைத்தாங்கலா கூட்டீட்டு போங்களேன் கண்ணுகளா !!!! யம்மாமமமம யப்பாஆ ...

பிரிச்சு மேயருதுன்னா இதுதனா ???
:(((

தல ஒரு நாளைக்கே இப்படி நாக்கு தள்ளுதே எப்பாடிய்யா இவ்ளோ நாளும் தாங்குனே நீ

:((((((((

நாமக்கல் சிபி said...

//நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா.... நல்லதைச் செய்ங்கய்யா...செய்ங்கன்னு " //

அது!

நாமக்கல் சிபி said...

//தல ஒரு நாளைக்கே இப்படி நாக்கு தள்ளுதே எப்பாடிய்யா இவ்ளோ நாளும் தாங்குனே நீ
//

பாண்டி! பயப்படாதே! இதெல்லாம் அடுத்த பெரிய ஆப்பு வாங்குவதற்காக உம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லவா! அதற்காக நான் கொடுத்த டிரீட்மெண்ட் இது!

பார்த்திபன் said...

//அதற்காக நான் கொடுத்த டிரீட்மெண்ட் இது! //

பாண்டி! இன்னுமா இவரை நம்புகிறீர்?
உம்மை வைத்து காமெடி செய்து தனக்கு தெய்வ தளபதி என்ற பெயரை சம்பாதித்துக் கொல்லப் பார்க்கிறார்.

செந்தழல் ரவி said...

சிங்கம் தூங்குற ஸ்டில் சூப்பர்.

நன்மனம் said...

தேவு,

எப்படி தேவு... எப்படி....

நகைச்சுவை கொழாவ மூடி வெச்சு... வேனுங்கறப்போ திரப்பியா..... எப்படி இப்படி சடக்குனு இவ்வளோ பெரிய பதிவ சடார்னு போட முடியுது.

:-)))))

We The People said...

//பாண்டி! பயப்படாதே! இதெல்லாம் அடுத்த பெரிய ஆப்பு வாங்குவதற்காக உம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லவா! அதற்காக நான் கொடுத்த டிரீட்மெண்ட் இது//

என்ன சிபி ஏதாவது ஏற்பாடு நடக்குதா?? பாண்டி எஸ்கேப் ஆயிடுமா!!!

கைப்புள்ள said...

//நகைச்சுவை கொழாவ மூடி வெச்சு... வேனுங்கறப்போ திரப்பியா..... எப்படி இப்படி சடக்குனு இவ்வளோ பெரிய பதிவ சடார்னு போட முடியுது//

ஆமாங்க ஒற்றர்படைத் தலைவரே! எனக்கும் அந்த டவுட்டு ரொம்ப நாளாவே இருக்கு.

எது எப்படியோ கரெண்டு கம்பத்துல கட்டிப் போடப் பட்டிருக்குற நம்ம பாண்டி பய ரெண்டு விங்ஸோடயும், ரெண்டு லெக் பீஸோடயும் ஒழுங்கா வீடு வந்து சேந்தா சரி தான்.

rahini said...

m...m... arumaithan