Thursday, November 30, 2006

டிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்

"எலேய் தேதி முப்பதாச்சி சங்கத்து கூட்டுங்கப்பு" சவுண்ட் விட்டுக்கொண்டே தல கைப்பு உள்ள வர...கூடவே புதுசா சேர்ந்த ராயலும் சங்கத்துக்குள் வர...

உள்ளே இருக்கும் சங்கத்து சிங்கங்களெல்லாம் தலய ஒரு லுக் உட்டவுடனே ஜெர்க் ஆகிறார்...

"எல்லாம் இங்கனத்தான் இருக்கீங்கனு தெரியாம ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டனோ" என்று மனதிற்குள் நினைத்தவாரு ஒரு கர்ஜனையோட ஆரம்பிக்கிறார்!!!

"எலேய் வெட்டி உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"என்ன சொன்னீங்க?"

"போன வாரம் உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"போன வாரம் எங்கிட்ட என்ன சொன்னீங்க?"

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!!!

"ராயலு இதுக்கு மேல நான் பேசினேனா ரணகளமாயிடும்... நீயே அவன்கிட்ட கேளு"

"வெட்டி, அதான்யா நம்ம தலைக்கு ஆப்பு வாங்கறதுக்கு துணையா ஒருத்தர பிடிப்போமேயா. அவர் பேரு என்ன?
ஹா...அதான் அட்லாஸ் வாலிபரு. இந்த மாசத்துக்கு அட்லாஸ் வாலிபரு ரெடியா?"

"அதெல்லாம் எப்பவோ ரெடி... பதிவோட வெயிட்டீங்ல இருக்காரு!"

"ஆஹா! யாருப்பா அது? நம்ம ரேஞ்சுக்கு ஆப்பெல்லாம் தாங்குவாறா?"

"ராயலு என்ன இப்படி கேட்டுட்ட? ஒரு பொண்ணு ஓட்டனதுக்கே நீ போட்டோவ மாத்திட்ட... நாலு தமிழ் பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து ஓட்டனத பெருமையா பதிவு போட்டு இன்னும் போட்டோ போட்டுருக்க சிங்கமுங்க!!!"

"அது சரி.. நம்ம ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாரா?" தளபதி பெருமை பொங்க கேட்கிறார்!!!

"தள!!! கடைசி ரெண்டு பதிவும் கவிதைனு ஏதோ எழுதி வெச்சிருக்கிறார். அதுல அவருக்கு ஏன் தூக்கம் வரலைனு ஒரு கவிதை பல பேர சிந்திக்க வெச்சிருக்கு"

"ஓ! நம்ம ரேஞ்சிக்கு ஏதாவது ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காறா?" ஜொள்ளு தவிப்போட கேட்கிறார்.

"ஜொள்ளு! உனக்கு முன்னாடியே ஏன் எதற்கு எப்படினு ஒரு ஆராய்ச்சி பதிவ போட்டுட்டாரு! அவரு கேட்ட கேள்விகளை பார்த்துதான் நம்ம ஜொள்ளு பேச்சியக்காவே பல பதிவுகள போட ஆரம்பிச்சாங்க!!! நிஜமல்ல கதைனு நிஜத்துல அவரு விட்ட ஜொள்ள பத்தி ஒரு தொடரே போட்டாருப்பா"

"சரி, நம்ம ரேஞ்சுக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வருமா?" புலி நக்கலாக கேட்க

"தீபாவளி அன்னைக்கு பொங்கல் பதிவு போட்டாருப்பா! இது போதுமில்ல"

"யாரடா அது நமக்கு தெரியாம இவ்வளவு பெரிய தில்லாலங்கடி?" விவசாயி ஆர்வமாக கேட்க

"விவா, வெடக்கோழிய எப்படி பிடிக்கிறதுனு நம்ம வாசுக்கு சொல்லி கொடுத்தாரே!!! இதுக்கு மேலையும் சொல்லனுமா?"

எல்லாரும் புரிந்துகொண்டு "வாவ் கலக்கல்" என்று சொல்ல...

தலை ஜெர்க்காகிறார்...

"ராஸ்கல்ஸ் என்னது இது சின்ன புள்ளத்தனமா? பேர சொல்லாம என்னதிது விளையாட்டு?"

"தல நீ மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்டு மனுசன கொல்லுவ... நாங்க பண்ணக்கூடாதா?"

"அதெல்லாம் சொல்லப்படாது!!! நான் கேள்வி கேப்பேன் நீ பதில் சொல்லனும். நீ கேள்வியெல்லாம் கேக்கப்படாது"

"சரி தல... ரொம்ப சவுண்ட் விடாத! நான் பார்ட்டிக்கு போறேன்... போயிட்டு வந்து சொல்றேன்" சொல்லிவிட்டு வெட்டி வெளியே போகிறார்.

"டேய் அப்பரண்டீசுகளா!!! யாராவது சொல்லுங்களேன்டா. யார்டா அந்த அட்லாஸு?"

"தல இன்னுமா தெரியல? நம்ம மில்வாக்கி நாயகன்தான்" சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் போர்வாள் தேவ்!!!

இதுக்கு மேலயும் கேட்டா நமக்கு விவரம் பத்தாதுலனு நெனச்சிக்குவானுங்க இந்த அப்பரண்டீசுங்க. எப்படியும் நாளைக்கு பதிவ போடும் போது
பார்த்துக்கலாம். அது வரைக்கும் தெரிஞ்ச மாதிரியே எஃபக்ட்ட கொடுத்துடுவோம் ...

"சரி சரி!!! எல்லாம் பார்ட்டிக்கு ரெடி பண்ணுங்க. நான் போய் நம்ம கட்டதுரைய சந்திச்சிட்டு வரேன்" சவுண்ட்விட்டு எஸ்ஸாகிறார் கைப்பு!!!

26 comments:

Anonymous said...

நியூ இயர் யூத்து யாருன்னு சொல்லிடுங்கப்பா

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்க வாங்க சவுண்ட் பார்ட்டி உதய குமார் :)))) ரொம்ப சந்தோசமா இருக்கே. வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்கோ :)))))))

ஏதாசும் ஸ்பெசல் ஆராய்ச்சி முடிவுகள் லேபிலே வெயிட் பண்ணிகிட்டு இருக்கா ??;)))

பொன்ஸ்~~Poorna said...

ஓ.. உதையா? சரி சரி..

அடுத்த ஆராய்ச்சியைத் தொடங்கிடப் போறார், பத்திரமா பார்த்துக்குங்க..

அனுசுயா said...

வாழ்த்துக்கள் சவுண்ட் பார்ட்டி கலக்குங்க

ILA(a)இளா said...

http://soundparty.blogspot.com/
எப்பா எங்க குரூப்ல இன்னொரு ஆளா?

தேவ் | Dev said...

வாங்க உதய்...சங்கம் உங்களைத் தான் தேடிகிட்டு இருக்கு... ம்ம்ம் ஸ்டார் சவுண்ட்ஸ் (எத்தனை நாளைக்குத் தான் மியூசிக்ன்னே சொல்லுறது)

Udhayakumar said...

//நியூ இயர் யூத்து யாருன்னு சொல்லிடுங்கப்பா //

அஹா, வரவேற்பு ரொம்ப பலமா இருக்கு :) நான் ஒரு மாசத்துக்கு இங்கதான் இருப்பேன்.

Udhayakumar said...

//ஏதாசும் ஸ்பெசல் ஆராய்ச்சி முடிவுகள் லேபிலே வெயிட் பண்ணிகிட்டு இருக்கா ??;))) //

ஜொள்ளுப்பாண்டி, எல்லாம் நீங்க இருக்கற தைரியத்துலதான் இருக்கேன். காப்பாத்துவீங்கல்ல???

Udhayakumar said...

//ஓ.. உதையா? சரி சரி..//

பொன்ஸ், வரும் போதே சிலம்பம் சுத்திட்டு வரீங்க...

//அடுத்த ஆராய்ச்சியைத் தொடங்கிடப் போறார், பத்திரமா பார்த்துக்குங்க.. //

நீங்க கேட்ட ஆராய்ச்சி இன்னமும் பென்டிங்கல இருக்கு, அடுத்ததுக்கு எல்லாம் இப்போ நேரம் இல்லை...

Udhayakumar said...

//வாழ்த்துக்கள் சவுண்ட் பார்ட்டி கலக்குங்க//

அனு, ரொம்ப நன்றிங்க...

Udhayakumar said...

//எப்பா எங்க குரூப்ல இன்னொரு ஆளா? //

இளா, முடிவோடதான் இருக்கீங்க எல்லோரும். உங்களை எல்லாம் தனியா கவனிக்கனும் :)

Udhayakumar said...

//ம்ம்ம் ஸ்டார்ட் சவுண்ட்ஸ்//

தேவ், எல்லோரும் ஆப்பு ஆப்புன்னு சொன்ன மாதிரி இருந்தது, இந்த சவுண்ட் அதுக்கா? அவ்வ்வ்வ்.... அழுதுடுவேன், வேணாம், விட்டுங்க...

சுதர்சன்.கோபால் said...

வாழ்த்துக்கள் சவுண்ட் பார்ட்டி...

{காந்தக் கண்ணழகி,ஸ்டார்ட் மூசிக்....}

நாமக்கல் சிபி said...

டிசம்பர் மாதத்தில் க்ரிச்மஸ் பார்ட்டி, நியு இயர் பார்ட்டிதான் ஸ்பெஷல்னு சொல்றவங்க கிட்ட எல்லாம் சொல்லுங்கப்பு இது எல்லாத்தயும் விட ஸ்பெஷலு வ.வா.சல இப்ப சவுண்ட் பார்ட்டினு

சுதர்சன்.கோபால் said...

ஆங்...சொல்ல மறந்தது...

அட்லாஸ் வாலிபரை வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன் :-)

நிலவு நண்பன் said...

வாங்க சவுண்ட் பாரட்டி

வந்து கலக்குங்க..

ஜொள்ளுப்பாண்டி said...

//ஜொள்ளுப்பாண்டி, எல்லாம் நீங்க இருக்கற தைரியத்துலதான் இருக்கேன். காப்பாத்துவீங்கல்ல???//

அட வாங்க மாப்பூ ;))) நான் காப்பாத்த மாட்டனா உங்களை ? நம்ம நர்ஸ் 'சுஜா'தான் ICU இன்சார்ஜ் . கவலையே படாதீங்க. சுஜா நம்ம பெட் பக்கத்திலே எதுக்கும் இன்னொரு பெட் ரெடி பண்ணி வைங்க !! ;))))))

கலவரமாய்டாதீங்க உதய். சும்மா உல்லலாய் :))))))))

இராம் said...

வா என்னருமை தங்கமே!! மில்வாக்கி சிங்கமே!

கைப்புள்ள said...

வாங்க சவுண்ட்பார்ட்டி,
ரெடி...ஸ்டார்ட் சவுண்டு. தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.
ஒரு மாசம் உங்கத் துணையோட...பாத்து பக்குவமா நடந்துக்கங்க...யமகாதக அப்ரண்டீசுங்க இவிங்க.
:)

நாமக்கல் சிபி said...

//யமகாதக அப்ரண்டீசுங்க இவிங்க.
:)//
தல!!!
என்னா பேச்சு இது?

புதுசா வர விருந்தாளிங்கக்கிட்ட இப்படியா உண்மைய போட்டு உடைப்ப? ;)

கப்பி பய said...

சவுண்ட் பார்ட்டிக்கு ஸ்பீக்கர் செட்டெல்லாம் கட்டியாச்சா???

வாங்க அட்லாசு வாங்க...விட்ற சவுண்ட்ல தலயோட காது கிழியனும் ;))

இராம் said...

//சவுண்ட் பார்ட்டிக்கு ஸ்பீக்கர் செட்டெல்லாம் கட்டியாச்சா??? //

என்ன இப்பிடி கேட்டுப்பிட்டே கப்பி... அவருக்கு சங்கத்திலே பத்தடிக்கும் உசுரமா ஸ்பீக்கர் கட்டி விட்டுறுக்கோம்.... பாரு அவரு வந்து விடுற சவுண்ட்லே அதிரப்போகுது... :)

//வாங்க அட்லாசு வாங்க...விட்ற சவுண்ட்ல தலயோட காது கிழியனும் ;)) //

எது என்ன ஆனாலும் கடமையே சரியா எடுத்து சொல்லுறீயே சிங்கமே, நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க!!!!

Udhayakumar said...

//வாங்க சவுண்ட்பார்ட்டி,
ரெடி...ஸ்டார்ட் சவுண்டு. தாரைத் தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.
ஒரு மாசம் உங்கத் துணையோட...பாத்து பக்குவமா நடந்துக்கங்க...யமகாதக அப்ரண்டீசுங்க இவிங்க.
:)//

தல, நான் இருக்கேன். கவலைய விடுங்க. எல்லா ஆப்பையும் கரெக்டா வாங்கி உங்களுக்கே டெலிவரி பண்ணீரேன், சரியா?

Udhayakumar said...

//வாங்க அட்லாசு வாங்க...விட்ற சவுண்ட்ல தலயோட காது கிழியனும் ;)) //

கப்பி, தலயோட காது கிழியுதோ இல்லையோ என்னோட டவுசரு கிழியாம இருந்தா சரி :-0

Udhayakumar said...

//எது என்ன ஆனாலும் கடமையே சரியா எடுத்து சொல்லுறீயே சிங்கமே, நீ வாழ்க, உன் கொற்றம் வாழ்க!!!! //

என்னது கொற்றம், கோபுரம்ன்னு??? இதெல்லாம் நல்லா இல்லை. அப்புறம் அழுதுடுவேன்.

Anonymous said...

ennaanga ithu perlaye udhay nu irukku. be careful ;)