Thursday, November 9, 2006

பிகு

Photobucket - Video and Image Hosting

புதிதாய் வாங்கும்
பேனாக்கள் எல்லாம்...
உன் பெயர் எழுதி
அழகு பார்ப்பதும்...

நிலவைப் பார்க்கும்
நிமிடங்களில் எல்லாம்
நீ வந்து
நினைவைக் கலைப்பதும்,

என் வீட்டுத் தோட்டத்தில்
ரோஜாவாய் வந்த...
உன் வருகையும்,

தினம் தினம்
நீ கொடுத்த கடிதத்தை
படித்து ,படித்து கண்கலங்குவதும் ,

என் பழைய டைரியில்
உன் புதிய புகைப்படம்..
ஒளித்துவைப்பதும் ,

பீச்சில்...பார்க்கில்
ஜோடிகளைக்
காணும்பொழுதெல்லாம்
தனியாய் செல்லும் நான்..
தவித்த தவிப்பும் ,

எவனோ...எவளோ...
பைக்கில்
பக்கம் அமர்ந்து
செல்லும்பொழுது
நான் பதறிய பதறலும்,

மாறிப்போன உன்
முகவரியைக் கண்டறிய...
உன்
பக்கத்து வீட்டுக்காரனை
பிராண்டிய பிராண்டலும் ,

நண்பர்களின் காதலிகள் பற்றி
கிண்டலடித்து விளையாடும்பொழுது நீ
அடிக்கடி என் இதயத்தில்வந்து...
சடுகுடு ஆடிச்செல்வதும்,

இப்படி
அவஸ்தை நிமிடங்களிலையே...
ஆயுள் கழிவதைவிட
நீ காதலை சொல்லியபொழுதே
பிகு செய்யாமல்
உன்னை...
காதலித்துத் தொலைத்திருக்கலாம்.

- ரசிகவ் ஞானியார்

5 comments:

ILA(a)இளா said...

//நீ காதலை சொல்லியபொழுதே
பிகு செய்யாமல்
உன்னை...
காதலித்துத் தொலைத்திருக்கலாம்.//

உதடுகள் சிரித்தாலும், மனசு அழத்தான் செய்த்து நண்பா.

Arun said...

don't plagiarize please...i saw one very similar in aval vikatan(last edition or the one before that)...I don't know how to say this without hurting ur feelings....so i will just say it....u writing skills needs improvement....big time....

கில்லி பையன் said...

டேய் டேய் நிப்பாட்டுங்கடா.. பிக் அப் ட்ராப் எஸ்கேப்ன்னு ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்து வாலிபர்களுக்கும் இந்த PUNCH பாலா சொன்ன மேட்டரை பாலோ பண்ணு பிகரை கரெக்ட் பண்ணு காபியிலே சுகரைக் கம்மி பண்ணு உன் லைப் நல்லா இருக்கும்.. ஓ.கேவா..அதை விட்டுட்டு இப்படி கவிதைப் பாடி கம்ப்யூட்டரை டேமெஜ் பண்ணிகிட்டு.. வெரி பேட்

நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...

உதடுகள் சிரித்தாலும், மனசு அழத்தான் செய்த்து நண்பா. //

அட சின்னப்பிள்ள தனமால்ல இருக்கு..

//u writing skills needs improvement....big time.... //

நன்றி நண்பா..முயற்சி செய்கின்றேன்..

//Punch பாலா said...
டேய் டேய் நிப்பாட்டுங்கடா.. பிக் அப் ட்ராப் எஸ்கேப்ன்னு ஒட்டு //

உங்க அனுபவத்தை நினைச்சா கஷ்டமாத்தான் இருக்கு பாலா.. :)

நளாயினி said...

சரியான லூசு. இதை விட வேறென்ன சொல்வது?