Thursday, August 31, 2006

இது நம்ம ஆளு

வணக்கம் ... வந்தனம்... இது செப்டம்பர் மாதம்.. புதிய நாள்... இங்கே பக்கத்துல்ல இவருக்கு வரவேற்பு தட்டி எல்லாம் கட்டி வச்சு ஒரு வாரமாச்சு..

பினாத்தலாருக்கு முன்னுரைக் கொடுக்கறதுங்கறது சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான்.

பளிச்சுன்னு சொல்லணும்ன்னா ஒரு சூப்பர் ஸ்டார் பாட்டு நமக்கு டக்குன்னு ஞாபகம் வருது

"பொதுவாக என் மனசுத் தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்...

இந்த வரிகள் நம்ம ஆளுக்கு நச்சுன்னு பொருந்தும். இது வரை வலை உலகில் நடத்தப் பட்ட போட்டிகளில் பெரும்பான்மையானவற்றில் நம்ம ஆளு வெற்றி மாலைச் சூட தவறியதில்லை. இவர் வென்ற போட்டிகளையும் அதன் விவரங்களையும் அறிந்துக் கொள்ள இங்கே சுட்டுங்கள்.

கலகலன்னு சிரிக்க வைக்கிறது நம்ம ஆளுக்குக் கைவந்தக் கலைன்னா.. கல் மனசையும் கலங்க வச்சிருக்கு அவருடையப் பல படைப்புகள்.

ஒரு பல்சுவைப் பதிவாளர். பேச்சிலே எப்போதும் ஒரு அழகியச் சிரிப்பினைத் தேக்கி வைத்திருப்பவர். பழகுவதில் எளிமை, இனிமை, தோழமை என்ற குணங்களுக்குச் சொந்தக்காரர்.

அடிப்படையிலே ஒரு ப.ம.க. காரர் தான் நம்ம ஆளு ஆனாலும் சங்கம் மற்றும் சங்கத்து மக்கள் மீதும் தனிப்பாசம் கொண்டவர்.

நம்ம ஆளு நகைச்சுவையை அள்ளி விட்ட சிலப் பதிவுகள் உங்களுக்காக
அவள் விகடன் பதிப்பித்தஅவன் விகடன்

தான் காரோட்டியக் கதையை நகைச்சுவையாய் கூறிய ஆத்தா நான் பாசாயிட்டேன்

மற்றும் இவரது ஒண்ணரைப் பக்க துக்ளக், கொள்கை டிராக்கர் போன்ற அரசியல் நையாண்டி பதிவுகளும் படிக்க படிக்க சிரிப்பை அள்ளித் தெளிப்பவை.

இவர் சினிமா தயாரித்தப் பதிவுகளும் வெகுப் பிரபலம்... ஆமாங்க ஷங்கருக்கு முன்னாடியே சிவாஜி எடுத்தாரு... கஜினின்னு கலக்குனார்....பதிவுலக ஸ்பீல்பெர்க் கணக்கா நம்ம ஆளு அடிச்ச லூட்டிக்கு அளவே இல்லைங்க.

ஒரு போட்டியிலே ஜெயிச்சு கலக்கனவங்க இருக்காங்க.. பாத்திருக்கோம்.. நம்ம ஆளு ஒரு போட்டிக்கு தலைப்பு மட்டும் கொடுத்தேப் பட்டயக் கிளப்புனார்ன்னா பாருங்களேன்

கதை, கவிதை, கட்டுரை, சினிமா விமர்சனம் என நம்ம ஆளு பொளந்துக் கட்டாத ஏரியாவே கிடையாதுங்க.

இவ்வளவு தானா இவர் பதிவுகள்ன்னு கேட்கறவங்களுக்கு... இதெல்லாம் சும்மா ட்ரெயிலர் தான் இந்த மாசம் சங்கத்துல்ல நம்ம ஆளு மெயின் பிக்சரே ஓட்டுவாரு பாருங்க

இந்த மாதம் நம்ம ஆளு பினாத்தல் சுரேஷ் தான் அட்லாஸ் வாலிபர்...

கட்டம் எல்லாம் கட்டி அலங்காரமா வாங்கய்யா வாங்கன்னு வரிசையில்ல நின்னு சங்கத்து மக்கள் எல்லாம் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

வழக்கம் போல ஸ்டார்ட் மியூசிக் தான்... ஆப்புகளை அள்ளி அடிங்க... நம்ம ஆளு நின்னு ஆடுவார்..

11 comments:

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலாரே.

வாழ்த்தி வரவேற்கிறேன். பட்டையைக் கிளப்பும். வழக்கம் போலவே.

ILA (a) இளா said...

பெனாத்தலாரை வாழ்த்தி/வணங்கி வரவேற்கிறோம்.
விரைவில் ஆரம்பியுங்கள் உங்க பெனாத்தலை. ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறேன்.

ILA (a) இளா said...

// பட்டையைக் கிளப்பும்.//
ஏன் கிராம்பு, ஏலக்காய், லவங்கம் எல்லாம் கிளப்ப மாட்டாரா?

கைப்புள்ள said...

செப்டம்பர் மாசம் சங்கத்து பாரத்தை எல்லாம் சுமக்கப் போகும் அட்லாஸ் வாலிபர் பெனாத்தலாரை வருக வருக என வரவேற்கிறோம்.

நாகை சிவா said...

வாங்க வாங்க பினாத்தல்.

நீங்க நின்னு ஆடுவீங்களோ, இல்ல வர்கார்ந்து ஆடுவீங்களோ தெரியாது. ஆனா ஆட்டம் சும்மா சூட்ட கிளப்புனும்.

உங்கள் நண்பன்(சரா) said...

//பினாத்தலாருக்கு முன்னுரைக் கொடுக்கறதுங்கறது சூரியனுக்கே டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான்.
//

அறிமுகம் எல்லாம் சூப்பர்! பினாத்தலாரை நானும் வாழ்த்தி வரவேற்கிறேன்!

பி.கு:நான் இன்று மாலை முதல் விடுமுறையில் எனது கிராமத்திற்க்கு செல்கின்றேன், ஒரு வாரம் கழித்து சங்கத்துக்கு வருகிறேன், அதுவரை சமத்தா இருங்க சரியா?


அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi said...

அட்லாஸ் வாலிபர் பெனாத்தலார்..
வருக..வருக..வருக..

Syam said...

அட்லாஸ் வாலிபர் பினாத்தலாரே....வருக வருக...ஆப்பு வாங்குக :-)

ஜொள்ளுப்பாண்டி said...

வாங்கண்ணா பினாத்தலாரே !! இது உங்க வீடு மாதிரி ! வந்து ஊடுகட்டி அடிங்க !! ஜருகண்டி ஜருகண்டி அண்ணாத்தே பினாத்தல்ஸ் ஒஸ்தாரு!!! :)))

ஜொள்ளுப்பாண்டி said...

//ILA(a)இளா said...
// பட்டையைக் கிளப்பும்.//
ஏன் கிராம்பு, ஏலக்காய், லவங்கம் எல்லாம் கிளப்ப மாட்டாரா? //

ஆஹா தோழர் இளாவுக்கு வந்திருப்பது ஒரு வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த சந்தேகம் ! யாராச்சும் புலவர் மக்காஸ் வந்து சந்தேகத்தை விம் பொட்டு வெளக்குங்க !!! :)))

lollu-sabha said...

கலக்குறீங்க தேவ். நீங்கள் விட்டுச் சென்ற பணியை நான் தொடர்ந்து இருக்கிறேன். நீங்கள் தான் என் லொல்லுசபா வலைப்பூவிற்கு முன்னோடி. வாழ்க வளமுடன்