Wednesday, August 9, 2006

செயற்குழு கூட்டம்!

சங்கத்தின் நூறாவது நாளை முன்னிட்டு சென்னை லீ-ராயல் மெரீடியன் ஒட்டலுக்கு எதிரில் இருந்த கரும்பு ஜுஸ் கடையில் சங்கத்து சிங்கங்கள் அனைவருக்கும் கரும்பு ஜுஸ் கொடுப்பட்டது. ஜுஸ் குடிக்க வந்த கூட்டத்தால் கத்திபாரா ஜங்கசனில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தை கண்டு அரசியல் கட்சிகள் எல்லாம் அரண்டு போயி இருப்பதாக தகவல். மேலும் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை கடிதம் வந்ததால் அன்று மாலை மெரீனா கடற்கரையில் நடக்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அன்று மாலை சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத்து திண்ணையில் நடைப்பெற்றது. ஒவர் டூ செயற்குழு கூட்டம்.

கலந்து கொண்டவர்கள் : சங்க திண்ணையில் தல கைப்பு, தளபதி சிபி, போர்வாள் தேவ், விவ் இளா, ஜொள்ஸ் பாண்டி, டெலி காண்பரஸ் மூலமாக நாகை சிவா. மற்றவர்கள் களப்பணியில் தீவிரமாக இருப்பதால் கலந்துக் கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கைப்பு : யப்பா, முதல் முறையாக செயற்குழு கூட்டம் போடுறோம். இதுல எப்பவும் பண்ணுவது போல இந்த கோமாளித்தனம், கேப்பாரித்தனாம் ஏதும் பண்ணாம எல்லாத்தையும் முறைப்படி செய்யுங்கப்பா.
(உடனே தேவ் வேகமாக எழுகின்றார்)
தேவ் : இந்த செயற்குழு கூட்டத்தை தளபதியார் சிபி அவர்களை நடத்தி தரும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : அதை நான் வழிமொழிகின்றேன்.
சிபி : நன்றி, இந்த கூட்டத்திற்கு தல கைப்பூ தலைமை வகிக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
கைப்பு : எப்பவும் நான் தானே தல, அப்புறம் என்ன, நடக்கட்........
(இடையில் கைப்பு அருகில் அமர்ந்து இருக்கும் இளா மிக வேகமாக எழுந்து)
இளா : இதை நான் வழிமொழிகின்றேன்.
கைப்பு : யோவ், மெதுவா எந்துறியா, இப்படி போசுக்குனு எழுவதை பாத்தா உயிர் போயி உயிர் வருது
தேவ் : தல, உயிர் பிரச்சனை உன்னோட தனிப்பட்ட பிரச்சனை, அத சங்கத்துக்கு கொண்டு வராத
கைப்பு : நான் எங்கய்யா கொண்டு வந்தேன்.
தேவ் : இப்ப தானே உயிர் போயி உயிர் வருதுன்னு சொன்ன
கைப்பு : அது விவ் வேகமாக எழுந்ததுக்கு சொன்னேன். ஒரு சொல் சொல்லக்கூடாதே. அந்த சொல்ல நெல் ஆக்கி, அத அரிசியாக்கி பொங்கல் வச்சி என்னை சட்னியா தொட்டு சாப்பிடாட்டி உனக்கு தூக்கம் வராதே. கொஞ்ச நேரம் நீ கம்முனு இரு. சிபி, யூ ஸ்டார்ட் மியூச்சிக் (சே ராசா பதிவ படிச்சு படிச்சு நானே இப்படி ஆகிட்டேன்) யூ கண்டியூ.
சிபி : நன்றி தல. இன்றுடன் நாம் ஒரு புது வரலாற்றை படைத்து உள்ளோம். மாபெரும் சரித்திர வெற்றியுடன் சங்கத்தை நூறு நாட்கள் நடத்தி உள்ளோம். இந்த வெற்றி பொன் எழுத்துக்களால் கல்வெட்டில் பதித்து, அதை நயன் தாராவை கொண்டு திறந்து வைக்க வேண்டிய வெற்றி.
பாண்டி : இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
தேவ் : இப்ப அது எல்லாம் வேண்டாம், தற்சமயம் அதற்கு நம் பொருளாதார நிலைமை ஒத்துழைக்காது.
சிவா : ஹுக்கும் என்னைக்கு தான் ஒத்துழைத்து இருக்கு.
சிபி : சரி, சரி, இந்த விசயத்தை பிறகு பொதுக்குழுவில் விவாதித்து முடிவு எடுக்கலாம். இப்ப இந்த 100 வது நாள் வெற்றி கொண்டாடும் வகையில் சிறு விருந்து.
(திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் சிங்கிள் டீயும், டபுள் பொறையும் வழங்கப்படுகின்றது. அவர்கள் சாப்பிடுவதை சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்)
சிபி : இப்ப நம்மளை நாமே சரி பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம். அதனால் இந்த தருமணத்தில் நாம் கடந்து வந்து நூறு நாட்களில் நாம் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் கூறலாம். அதை பிறகு தீர்மனாமாக நிறைவெற்றி வாசலில் அலைமோதும் பத்திரிக்கையாளர்களிடம் தரலாம். முதலில் இளா நீங்க சொல்லுங்க
இளா : சங்க வரலாற்றை உலகறிய செய்யும்படி சங்க சிங்கங்களின் சரித்திரத்தை சங்கப்பலகையில் ஒட்டியதும், கத்தாரில் போய் உதார் விட்டதும் சாதனை. அதுக்கு என் கை காச செலவு பண்ணியது சோதனை.
சிபி : சரி சரி, சங்கத்துக்காக தானே விடுங்க, எப்பா தேவ் நீ சொல்லு
தேவ் : கல்கியில் தல வந்தது சாதனை. அவருக்காக பின்னாடி கழுதைப்புலியால கடிப்பட்டது வேதனை. சீ சோதனை
சிபி : அதுக்கு தான் சங்கம் மருத்துவ செலவ ஏத்துக்கிட்டுல அப்புறம் என்ன
தேவ் : (மெதுவாக) ஹுக்கும் சுண்ணாம்ப தடவி விட்டு, அதையும் செலவு கணக்குல எழுதிட்டாங்க.
சிபி : என்ன அங்க முணுமுணுப்பு,
தேவ் : நீங்க இன்னும் சாதனை சோதனைய சொல்லயே அத கேட்டேன்.
சிபி : எல்லாரும் சொல்லிய பிறகு சொல்லாம் என்று இருந்தேன், நீ கேட்டதால் இப்பவே சொல்லுறேன். சிங்கப்பூரில் நடைப்பெற்ற வ.வா.ச.வின் நாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் வரலாறு காணாத கூட்டத்தை கூட்டி அதற்கு நயன் தாராவை தலைமை ஏற்க வைத்தது சாதனை. கூட்டம் முடிந்ததும் நயன் தாரா என்ன கண்டுக்காம போனது சோதனை.
சிவா : அடச்சே எப்ப பாத்தாலும் நயன் தாரா தானா. வேற எதுமே தெரியாதா..
சிபி : சரி, சரி. நீங்க சொல்லுங்க உங்க சாதனைகளையும் சோதனைகளையும்
சிவா : நம்ம தல கைப்பு உலக கோப்பை உதைப்பந்தில் கலந்து கொண்டது சாதனை, அதில் உதை வாங்கியது சோதனை.
சிபி : அது எப்பவும் நடப்பது தானே, வேற எதுவும் இருக்கா
சிவா : ஆங் இருக்கு, உங்க எல்லாத்தையும் பிரிந்து மிக தொலைவில் களப் பணியாற்றுவது மிகப் பெரிய சோதனை.
பாண்டி : நெஞ்ச நக்கிட்டான்யா. இந்த தடவை இண்கிரிமெண்ட் வாங்கிடுவான்.
(இடையில் கைப்பு அழுது கொண்டே எழுந்து)
கைப்பு : சிவா, நோ ஹார்டு பீலிங்கஸ்... எல்லாம் சங்கத்துக்காக தானே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிபி : சரி சரி, கண்ட்ரோல் பண்ணுங்கப்பா உங்க பீலிங்கஸ்ச.... அடுத்து பாண்டி நீ சொல்லு உன் சாதனையையும், சோதனையும்.
பாண்டி : சோதனையா, எல்லாமே சாதனை தான். கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்துக் கொண்டு, ஜொள்ளு துறையையும் ஏற்று அயராது களப்பணி ஆற்றிய நான், பின் சங்கத்தை மகளிர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அனைத்து மகளிர் கல்லூரிகள் முன்பும் நின்று களப்பணி ஆற்றி சங்கத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தை விட வேற என்ன சாதனை வேண்டும்.
சிபி : அப்பாடா, கொஞ்சம் தண்ணி குடி முதல, இப்படி விடாம பேசுற. இது மாதிரி எல்லாம் நீ பேச மாட்டியே. என்ன ஆச்சு உனக்கு. ஹும் சோதனைகளை சொல்லுங்க.
பாண்டி : நான் தான் முன்னாடியே சொன்னேனே எல்லாமே சாதனை தான் என்று அப்புறம் என்ன தனியா சோதனை என்று மறுபடியும் கேட்டுக்கிட்டு.
சிபி : சரிப்பா. தெரியமா கேட்டுட்டேன்.
சிவா : (மெதுவாக) எல்லாம் குங்குமம் பண்ணும் வேலைனு நினைக்கிறேன். பாப்போம் எம்புட்டு நாளைக்குனு.
சிபி : அங்க என்ன சத்தம். தல நீ சொல்லுமா
கைப்பு : பேரன்பு கொண்ட பெரியோர்க்களே, தாய்மார்களே
தேவ் : தலலலலலலல....
கைப்பு : சாரிப்பா, பொதுக் கூட்டம் ஞாபகம் வந்து விட்டது. அதான். சரி நான் சாதனைகளையும் சோதனைகளையும் சொல்லுறேன் கேட்டுங்க. இந்த சங்கத்தில் நீங்க எல்லாம் இருப்பதே ஒரு மிக பெரிய சாதனை தான்.
இளா : சூசூசூச்ச்ச்ச்சோ
கைப்பு : ஏலேய், யாரு அது சைட்ல சவுண்ட் விடுது, நானே ஏத சொல்ல ஏத விட யோசிக்கினு இருக்கேன். இதுல இது வேற, ஹும் சரி, நம்ம படத்த புதர பத்திரிக்கையில் வந்தது சொல்வேனா, நம்ம சங்கப்பத்திரிக்கை டாக்டர் நமது கைப்பு வெளியிடப்பட்டதை சொல்வேனா, ஜெர்மனியில் உதைப்பந்தாட்டத்தில் கோலாயிச்சியதை சொல்வேனா, ஜமைக்காவில் இந்திய அணி வெற்றி பெற ஆலோசனை வழங்கியதை சொல்வேனா, எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல நமது சங்கத்திற்கு அட்லாஸ் வாலிபராக சிறப்பு வருகை தரும் "முக்கி"யஸ்தற்களை சொல்வேனா....அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னால் பேசப் முடியலப்பா பேசப் முடியல...... அவ்வ்வ்வ்வ்வ்வ்.
பாண்டி : ஆஹா, தல அழுக்காச்சி ஆரம்பிட்டாரயே. நிறுத்த மாட்டாரேய....இப்ப என்ன பண்ணுறது.
சிபி : சரி, சரி விடுங்க. சாதனைகளை விடுங்க சோதனை ஏதும் இருக்கா.
கைப்பு : என்னத்த சொல்ல, நீங்க எல்லாம் சாதனை பண்ணுறேன் பேர்வழினு எனக்கு ஆப்பு மேல ஆப்பு கொடுத்து சோதனை கொடுத்துகிட்டு இருக்கீங்க. அது ஒன்னு தான். ஆங்! இன்னும் ஒன்னு இருக்கு. ஆனா இப்ப வேணாம், இந்த சாதனை திருநாளில் அதை பத்தி பேச வேணாம், இன்னவொரு நாள் பாத்துக்கலாம்.
இளா : சோதனைகளை களைந்து சாதனைகள் படைக்க வேண்டும் என்பது தான் நம் எண்ணம், அதனால் இன்றே சொல்லுங்க.
கைப்பு : விவ், சொல்வதும் சரியா தான் இருக்கு. சரி சொல்லுறேன். யாரும் தப்பா எடுத்துக் கூடாது. என்னா....
சிவா : பீடிக்கை எல்லாம் பலமா இருக்கு. என்னனு சீக்கிரம் சொல்லுங்க. யாரும் தப்பா எடுத்துக்க மாட்டோம்.
கைப்பு : சரி, சொல்லுறேன். சாதனைகள் பல இருந்தாலும் நம்ம சங்கத்து ஆட்களில் சிலர் மேல் ஏற்பட்ட சில ஊழல் புகார் எனக்கு சோதனையா தெரியுது.
தேவ் : சுத்தி வளைக்காம யாரு மேல அந்த புகார் வந்துச்சுனு சொல்லுங்க
கைப்பு : நான் உன்ன சொல்லப்பா, பொதுவா தான் சொன்னேன்.
தேவ் : பொதுவாக சொல்கின்றேன் என்று சொல்லிவிட்டு, என்னை சொல்ல என்று தனிப்பட்ட முறையில் கூறுவது ஏன்?
கைப்பு : ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க. எப்படி சொன்னாலும் இப்படி தான் சொன்னேனு சொன்ன நான் என்ன பண்ணுறது.
தேவ் : சொல்வதை சொல்லிட்டு, அப்பறம் என்ன சமாளிப்பு. சரி தல, நான் முடிவு பண்ணிட்டேன். என் மேல இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டு ஏற்பட்டதை முன்னிட்டு நான் என் செயற்குழு பதவியை ராஜினாமா செய்கின்றேன்.
பாண்டி : ஐய்யகோ, என்ன இது தீடிரென்று இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்க. போர்வாள் இல்லாமல் களப்பணி எப்படி ஆற்றுவது. நீங்க சங்கத்தில் இல்லாட்டி.....
தேவ் : பாண்டி ரொம்ப ஆசைப்படாத, நான் செயற்க்குழு பதவியை தான் ராஜினாமா செய்கின்றேன். அடிப்படை உறுப்பினர் பதவியை இல்ல.
சிபி : சரி சரி. பிரச்சனை வேண்டாம். தேவ்வின் இந்த முடிவை குறள் ஒட்டு எடுப்பிற்கு விடுகின்றேன். முதலில் நான்,
குறள் - "இட்லிக்கு சட்னி இல்லையென்றால் சிறிது
சாம்பார் ஈயப்படும் "
- நன்றி இட்லிவடையார் என்ற குறளை கூறி தன் மேல ஏற்பட்ட பழியை தொடைத்து எடுத்து, அதன் மேல் எச்சா பண்ணி தலை சுற்றி, விட்டு எறிந்து விட்டு மீண்டும் சங்கத்தின் செயற்க்குழு பதவியை ஏற்க வர வேண்டும் என்று கூறி என் ஆதரவை தேவ்வுக்கு தெரிவிக்கின்றேன்.
இளா : "தண்ணீர் என்ப உரம் என்ப இவ்விரண்டும்
கண் என்ப விவசாயத்திற்கு"
- நன்றி வரப்பு என்ற குறளை கூறிய தேவ் அவர்கள் தன் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று கூறி அவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
தேவ் : "கற்க கற்கண்டு, குமுதம், விகடன் கற்றப்பின்
விற்க பாதி விலைக்கு"
என்ற குறளை கூறி செயற்க்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகின்றேன், நானாக ஏதுவும் உளர விரும்பவில்லை, இருந்தாலும் என் முடிவிற்கு நானே ஆதரவு தெரிவிக்கின்றேன்.
பாண்டி : குறளா..... குறளா......... நான் எங்குட்டு போவேன் குறளுக்கு........குறள் எல்லாம் எங்கிட்ட இல்ல ஜொள்ளு தான் இருக்கு. அத வச்சி ஜொள்ளிகிட்டே சொல்லுறேன். தேவ் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
சிவா : "உதையினால் வாங்கிய அடி உள்ளாரும் ஆறாதே
ஆப்பினால் வாங்கிய காயம்"
என்ற குறளை சொல்லி எனக்கு இந்த பிரச்சனையின் ஆழம் தெரியாதால் நான் நடுநிலை வகிக்கின்றேன்.
இளா : ஆழம் அதிகம் இல்ல ஜெண்டில்மேன், ஒரு இருபத்தைந்து அடி தான்.
சிபி : உச்ச்ச்ச்ச்ச். பாண்டி குறள் சொல்லாதால், அவரின் ஒட்டை ஒதுக்கி விட்டு பார்த்தால் தேவ் ஆதரவாக இரண்டு ஒட்டுக்களும், எதிர்ப்பாக ஒரு ஒட்டும் உள்ளது, ஆதலால் தல நீங்க உங்க முடிவை சொல்லி இதற்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டுகிறேன்.
கைப்பு : "சதாரணமாக வாங்கும் ஆப்பு எல்லாம் ஆப்பு இல்ல
ஸ்பெஷலாக வாங்கு ஆப்பே ஆப்பு"
என்ற குறளை சொல்லி தேவ் தன் முடிவை உடனே கை விட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இந்த பிரச்சனையை இத்துடன் முடிக்கம்படி கேட்டுக் கொள்கின்றேன்.
சிபி : தல கூறியதை கருத்தில் கொண்டு அத்த இத்தோட விட்டு விட்டு செயற்குழுவின் தீர்மானத்தை தாக்கல் செய்யுமாறு சிவாவை கேட்டுக் கொள்கின்றேன்.
சிவா : இன்றைய கூட்டத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்ற படவில்லை என்ற தீர்மானத்தை சபையின் முன் வைக்கின்றேன்.
(அனைவரும் கோரஸ்சாக)
அதை நாங்கள் வழிமொழிகின்றோம் என்று கூறி அந்த தீர்"மானத்"தை நிறைவேற்றி, மீண்டும் பொதுக்குழுவில் சந்திப்போம் என்று விடைப்பெற்றார்கள்.

41 comments:

Geetha Sambasivam said...

ஒரு பின்னூட்டம் கூட வராது. தலைவி நான் களப்பணி ஆற்றி வந்திருக்க எனக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்யாமல், உங்களுக்குள்ளே சண்டை போடறீங்களே! ஒரு பத்து நாள் நான் இல்லாட்டி இந்த மாதிரியா? எல்லாரும் மரியாதையா நான் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்க நானே ஏற்பாடு செய்திருக்கும் முப்பெரும் விழாவிற்கு வராமல் இருந்து என் மானத்தைக் காப்பாத்துங்க.

ALIF AHAMED said...

100 வது நாள் வாழ்த்துக்கள்

(செயற்குழு முடிவு பற்றிய பின்னுட்டம் பின்னர் வெளிவரும்.)

துபாய் ராஜா said...

சென்னை செயற்குழு கூட்டத்தில் வளைகுடா கிளை புறக்கணிக்கப்பட்டதை
வன்மையாக கண்டிக்கிறோம்.

ILA (a) இளா said...

//என் மானத்தைக் காப்பாத்துங்க//
கண்டிப்பாங்க..

நாகை சிவா said...

சங்கத்தின் நிரந்திர தலைவலி கீதா அவர்களே, சங்கத்தின் செயற்க்குழுவிற்கு அழைப்பிதழ் கொடுக்க நம்ம தல கைப்பூவே நேரா உங்கள் வீட்டிற்கு வந்தார். அந்த சமயத்தில் நீங்கள் களப்பணியாற்றும் பொருட்டு பெங்களுர் சென்று வீட்டீர்கள். நீங்க வரமால சங்க கூட்டமா என்று அழுது புரண்ட கைப்பூவை சமாதனப்படுத்துவதற்க்கே எங்களுக்கு போதும் போதும் என்று ஆகி விட்டது. தாங்கள் மறுபடியும் இப்படி ஒரு வார்த்தை கூறியதை கேட்டால் என்ன ஆகுமோ எதாகுமோ. கொஞ்சம் நீங்களே வந்து தலய சமாதானப்படுத்துங்கள்

நாமக்கல் சிபி said...

//முப்பெரும் விழாவிற்கு வராமல் இருந்து என் மானத்தைக் காப்பாத்துங்க//

ஆனா! தளபதி ஏற்கனவே விழாவுக்கு வந்து போனதா செய்திகள் அடிபடுதே!

நாகை சிவா said...

//சென்னை செயற்குழு கூட்டத்தில் வளைகுடா கிளை புறக்கணிக்கப்பட்டதை
வன்மையாக கண்டிக்கிறோம். //
எப்படி ராசா, எப்படி? எப்படி சங்கம் வளைகுடா கிளை புறக்கணிக்கும். அது தானே சங்கத்தின் மிக பாசமிகுந்த, டப்புமிகுந்த கிளை. அதை எப்படி புறக்கணிப்போம். நீ வசூலித்து அனுப்பிய சங்க நிதியில் இருந்து தான் கரும்பு ஜுஸ்சே அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் போது.... நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லாமா....... இதை நான் எப்படி தாங்குவேன். தேவ் என்ன வந்து கொஞ்சம் தாங்கி பிடி.

கோவி.கண்ணன் said...

//அவர்கள் சாப்பிடுவதை சிவா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்)//

இது இது ரொம்பவுமே தமாஸாக இருந்தது ... கலகலப்பான காமடிக் கூட்டம் :) வ.வா ... வா .. ! வா .. ! தொடர்ந்து காமடி தா .. தா .. !

இராம்/Raam said...

ஏம்ப்பா இப்படி நாலு பேரு கூடி பேசறதுக்கு பேருதான் செயற்குழு கூட்டமா....?

கப்பி | Kappi said...

வெற்றிகரமாக செயற்குழு கூட்டத்தை நடத்தி முடித்த சங்கத்தின் சிங்கங்களுக்கு வாழ்த்து சொல்லும் அதே நேரத்தில் சிங்கிள் டீயும் டபுள் பொறையும் மற்றவர்களுக்கு ஏன் பார்சல் அனுப்பவில்லை என்ற கேள்வி எழும் அதே நேரத்தில்

//ஏம்ப்பா இப்படி நாலு பேரு கூடி பேசறதுக்கு பேருதான் செயற்குழு கூட்டமா....?
//
என்ற கேள்விக்கு அது நாலு இல்லை..ஆறு பேர் என்று சரிப்படுத்த விழைகிறேன்.

துபாய் ராஜா said...

//சென்னை செயற்குழு கூட்டத்தில் வளைகுடா கிளை புறக்கணிக்கப்பட்டதை
வன்மையாக கண்டிக்கிறோம். //

// "எப்படி ராசா, எப்படி? எப்படி சங்கம் வளைகுடா கிளை புறக்கணிக்கும். அது தானே சங்கத்தின் மிக பாசமிகுந்த, டப்புமிகுந்த கிளை. அதை எப்படி புறக்கணிப்போம். நீ வசூலித்து அனுப்பிய சங்க நிதியில் இருந்து தான் கரும்பு ஜுஸ்சே அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டு இருக்கும் போது.... நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லாமா....... இதை நான் எப்படி தாங்குவேன். தேவ் என்ன வந்து கொஞ்சம் தாங்கி பிடி."//

வுடு சிவா வுடு.விஷயம் தெரியாத நம்ம வளைகுடா ஒட்டகம் ஒண்ணு உணர்ச்சிவசப்பட்டு குரல் கொடுத்துடுச்சு.

Unknown said...

களப் பணி ஆற்றி இன்று பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நிலையம் வருகைப் புரிந்திருக்கும் எங்கள் ஆற்றல் அன்னையார் கீதா அவர்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

Unknown said...

ஆற்றல் அன்னையார் இனி தன் அலுவலகப் பணிகளை நம் தலைமை நிலையத்தில் இருந்து தொடர வேண்டுமெனவும்.. அடிக்கடி இப்படி தம் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு களப்பணி ஆற்ற செல்ல வேண்டாமெனப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Unknown said...

ஆற்றல் அன்னையார் இனி தன் அலுவலகப் பணிகளை நம் தலைமை நிலையத்தில் இருந்து தொடர வேண்டுமெனவும்.. அடிக்கடி இப்படி தம் குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு களப்பணி ஆற்ற செல்ல வேண்டாமெனப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Unknown said...

ஆற்றல் அன்னையா கீதா சாம்பசிவம் வாழ்க... இனி தமிழ் கூறும் பதிவுலகம் உங்களை அன்போடு ஆற்றல் அன்னையார் என்றே அழைக்கும்.... வளர்க ஆற்றல் அன்னையின் புகழ்...

Unknown said...

//ஆனா! தளபதி ஏற்கனவே விழாவுக்கு வந்து போனதா செய்திகள் அடிபடுதே! //

கட்டத்துரையின் கலகலப்பு கட்டத்துரை பெருசு கிட்ட மிஸ்ஸ்ங்... ம்ம்ம் வயசு ஆனாலே இப்படித்தான்...

சீக்கிரம் சொல்ல வேண்டியது எம்புட்டு லேட்டாச் சொல்லுறீரு

Unknown said...

//ஏம்ப்பா இப்படி நாலு பேரு கூடி பேசறதுக்கு பேருதான் செயற்குழு கூட்டமா....? //

வாய்யா ராம்.. உனக்குன்னு வாங்கி வச்ச கரும்பு சாறு இன்னும் சங்கத்துப் பானையிலே உனக்காகச் சில்லுன்னு இருக்கு... கூட்டத்துக்கு கூப்பிட்டா வராதே.. அப்புறம் நல்லாக் கேக்குறய்யா டீடெயில்...

இராம்/Raam said...

//வாய்யா ராம்.. உனக்குன்னு வாங்கி வச்ச கரும்பு சாறு இன்னும் சங்கத்துப் பானையிலே உனக்காகச் சில்லுன்னு இருக்கு... கூட்டத்துக்கு கூப்பிட்டா வராதே.. அப்புறம் நல்லாக் கேக்குறய்யா டீடெயில்... //


சாரிப்பா நானு எதையும் ராவா'ல்லாம் சாப்பிடமாட்டேன்... எனக்கு ஆகாது, எதானச்சும் மிக்ஸிக்கு ஏற்பாடு பண்ணுங்க... சில்லுன்னு இருந்தா ok... :-)))

சொஜ்ஜி said...

//இனி தமிழ் கூறும் பதிவுலகம் உங்களை அன்போடு ஆற்றல் அன்னையார் என்றே அழைக்கும்.... //

சங்கத் தலைவலியே.. என்றும் பதினாறாய்த் தோற்றமளிக்கும் எங்கள் அன்புத் தங்கமே.. கோவில் கோவிலாகச் சுற்றினாலும், இளமைத் துள்ளல் குறையாத எங்கள் காரிகையே..

உங்கள் வயதை அதிகமாக்கிக் காட்டவே இந்த அன்னை பட்டம் என்று அறிந்திடுங்கள்.. ஆற்றல் என்னும் வார்த்தையை முதலில் போட்டு உங்களை (ஏ)மாற்றாப் பார்க்கிறார்கள்.
ஏமாற வேண்டாம்..
எதையும் மாற்ற வேண்டாம்
என்று ஆணையிடுங்கள்..

சமீபத்தில் தந்தையாகி இருக்கும் நமது கழகப் போர்வாள், நடுநடுவே தம்மையே குழந்தை என்று கூறியதைப் பற்றியும் நீங்கள் கவனிக்க வேண்டும் - எனபது மழலைகளில் மழலையான இந்தக் கட்ட துரை ஜூனியரின் அன்பார்ந்த வேண்டுகோள்..

சொஜ்ஜி said...

//மேலும் கமிஷ்னர் அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை கடிதம் வந்ததால் //

சிவாண்ணே, கமிஷனர் அலுவலகத்துல நம்ம பார்த்திபனைப் பார்த்ததா கட்டதுரை பெருசு சொன்னாரு.. கூடவே தளபதி அண்ணனும் நயன் தாரா அண்ணியும் கூட அங்ஙன தான் இருந்தாங்களாம் அப்போ.. அதுக்கப்புறம் தான் தலக்கு எச்சரிக்கை மடல் வந்துச்சாம்

நாகை சிவா said...

//வுடு சிவா வுடு.விஷயம் தெரியாத நம்ம வளைகுடா ஒட்டகம் ஒண்ணு உணர்ச்சிவசப்பட்டு குரல் கொடுத்துடுச்சு.//
ராசா அண்ணன், அத அப்படியே விடாத அண்ணன், கொஞ்சம் தட்டி வை அண்ணன். கொஞ்சம் நேரத்துக்கு கண்ண கட்ட வைச்சுடுச்சு. நல்ல வேல நீ வந்த. இதுக்கு தான் ராசா வேணுங்குறது....

Syam said...

100 வது நாளுக்கு வாழ்த்துக்கள், அதை முன்னிட்டு தல க்கு ஒரு 100 ஆப்பு அனுப்பி வெச்சாச்சு... :-)

Syam said...

BBC,CNN ல கூட காட்டுனாங்க...அப்பா என்ன ஒரு கூட்டம்...6 பேரு அந்த சின்ன கரும்பு ஜூஸ் கடைல கஷ்டந்தேன்...

ILA (a) இளா said...

//பல ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நிலையம் வருகைப் புரிந்திருக்கும் எங்கள் ஆற்றல் அன்னையார் கீதா அவர்களை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்//
இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்

நாகை சிவா said...

//BBC,CNN ல கூட காட்டுனாங்க...அப்பா என்ன ஒரு கூட்டம்...6 பேரு அந்த சின்ன கரும்பு ஜூஸ் கடைல கஷ்டந்தேன். //
பங்காளி 6 க்கு பக்கத்தில் லட்சத்தை விட்டு விட்டாய் பாரு. இது போன்ற தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக் கொள்.

ILA (a) இளா said...

//எதானச்சும் மிக்ஸிக்கு ஏற்பாடு பண்ணுங்க... சில்லுன்னு இருந்தா ok//
ஜூஸ் கடை அண்ணாச்சி கூட இதையேதான் சொன்னாரு. சில்லுன்னு ஐஸ் கட்டி போட்டு குடிக்க சொன்னாரு. ஆமா ராம் இததானே சொல்ல வந்தீங்க?

ஜொள்ளுப்பாண்டி said...

//இந்த வெற்றி பொன் எழுத்துக்களால் கல்வெட்டில் பதித்து, அதை நயன் தாராவை கொண்டு திறந்து வைக்க வேண்டிய வெற்றி.//

தளபதி சிபி சந்தில் சிந்து என்பது இதுதானா ???? :))))))))))

ஜொள்ளுப்பாண்டி said...

//சிவா : (மெதுவாக) எல்லாம் குங்குமம் பண்ணும் வேலைனு நினைக்கிறேன். பாப்போம் எம்புட்டு நாளைக்குனு.//

அடப்பாவி சிவா இதென்னா கலாட்டா !! நேற்று முழுதும் பாசறையில்ம் அடைந்து விட்டு வெளியே வந்தால் இதென்ன அபாண்டம் ம்ம்ம்...:))))

Unknown said...

apesadumbrado para romper a individuos de la materia del ur está ese realmente nayanthara cariñoso del simbu

துபாய் ராஜா said...

//ஆற்றல் அன்னையா கீதா சாம்பசிவம் வாழ்க... இனி தமிழ் கூறும் பதிவுலகம் உங்களை அன்போடு ஆற்றல் அன்னையார் என்றே அழைக்கும்.... வளர்க ஆற்றல் அன்னையின் புகழ்...//


வாழ்க!வாழ்க!அன்னையின் ஆற்றல்!வளர்க!வளர்க!அன்னையின் புகழ்!

இவண்
வ.வா.ச.வளைகுடா கிளை.

துபாய் ராஜா said...

//வுடு சிவா வுடு.விஷயம் தெரியாத நம்ம வளைகுடா ஒட்டகம் ஒண்ணு உணர்ச்சிவசப்பட்டு குரல் கொடுத்துடுச்சு.//

//ராசா அண்ணன், அத அப்படியே விடாத அண்ணன், கொஞ்சம் தட்டி வை அண்ணன்.//

நல்லா தட்டி,கட்டி வச்சுட்டேன் சிவா.

துபாய் ராஜா said...

//கொஞ்சம் நேரத்துக்கு கண்ண கட்ட வைச்சுடுச்சு. நல்ல வேல நீ வந்த. இதுக்கு தான் ராசா வேணுங்குறது..//

கண்ணு சிவா!கரும்பு ஜுஸ்ல்லாம் குடிச்சா கண்ண தான் கட்டும்.ஒரு கிளாஸ் ஒட்டகப்பால் அடி.உற்சாகமா இருப்பே.

நாகை சிவா said...

மகேந்!
ஆரம்பிச்சிட்டியா உன் வேலய....
இங்கன பாரு, நல்லா பாரு. எங்க சங்கத்தின் தலைப்பை. சங்கத்துக்கு இப்படி ஒரு தலைப்பை வச்சுட்டு இந்த மேட்டருக்கு எல்லாம் வருத்தப்படுவோமா. நயன் மேட்டரா இருந்தாலும் எந்த மேட்டரா இருந்தாலும் எங்கள் மனசை நோக அடிக்க முடியாது முடியாது முடியவே முடியாது.
உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
யோவ் எதா இருந்தாலும் தமிழ்ல கேளுய்யா...... புரிஞ்சி உனக்கு விளக்கம் சொல்ல காட்டியும் கண்ண கட்டுது.

Unknown said...

நாகை சிவா நான் மட்டும் ஒரு சங்கம் ஆரம்பிக்க அய்டியா இருக்கு ஒரு உதவி பன்னுவீங்களா?
வ.வா.ச.வ.வை.ச இதுக்கு விளக்கம் சொன்னா நம்ம சங்கத்தை ரிஜிஸ்டர் பன்னிடுவேன் :))

இலவசக்கொத்தனார் said...

செயற்க்குழு அப்படின்னு தலைப்பை பார்த்துட்டு, எவ்வளவு அழுத்தமான விஷயங்கள் பேசினாலும் அது செயற்குழுதான் அப்படின்னு சொல்ல வந்தா, அதுக்குள்ள மாத்திட்டியே புலி...

Syam said...

//6 க்கு பக்கத்தில் லட்சத்தை விட்டு விட்டாய் பாரு//

இது எல்லாருக்கும் தெறிஞ்சது தான பங்கு...கண்னு பட்டுட போகுதுன்னு தான்...(அஞ்சே முக்கால் பேர் இருக்கும் போதே இத்தன ஆட்டம் இதுல 6 லட்சமாம்)

இராம்/Raam said...

//ஜூஸ் கடை அண்ணாச்சி கூட இதையேதான் சொன்னாரு. சில்லுன்னு ஐஸ் கட்டி போட்டு குடிக்க சொன்னாரு. ஆமா ராம் இததானே சொல்ல வந்தீங்க? //

what a shame.... :((((((

Santhosh said...

கலக்கல் பதிவு சிவா... செயற்குழுவுல யாரும் சேர் டேபில்களை எடுத்து அடிக்காம சப்புன்னு முடிச்சிடிங்க அடுத்த தடவை இதை எல்லாம் செஞ்சி லைவான செயறகுழு கூட்டமாக வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

//செயற்குழுவுல யாரும் சேர் டேபில்களை எடுத்து அடிக்காம சப்புன்னு முடிச்சிடிங்க //
பங்காளி, செயற்குழு நடந்ததே சங்கத்து திண்ணையில் தானே, அப்புறம் டேபிள் சேருக்கு எங்க போக

நாகை சிவா said...

//செயற்க்குழு அப்படின்னு தலைப்பை பார்த்துட்டு, எவ்வளவு அழுத்தமான விஷயங்கள் பேசினாலும் அது செயற்குழுதான் அப்படின்னு சொல்ல வந்தா, அதுக்குள்ள மாத்திட்டியே புலி... //
ஹிஹி
நாங்க தான் புருப் ரீடர் வச்சு இருக்கோம்முல. நம்ம தப்பு செய்தாலும் சங்கத்தின் மூத்தவர், நல்லவர், வல்லவர் இருக்காருல. அவர சரி பண்ணுவார்ல. அது மாதிரி வந்து சரியாக சரி பண்ணிட்டார்ல. :)

நாகை சிவா said...

//அடப்பாவி சிவா இதென்னா கலாட்டா !! நேற்று முழுதும் பாசறையில்ம் அடைந்து விட்டு வெளியே வந்தால் இதென்ன அபாண்டம் ம்ம்ம்...:)))) //
பாண்டி அண்ணா, நீ என்றுமே எங்களின் பாச அறையில் தானே இருக்கின்றாய். அப்பறம் என்ன?