Monday, August 14, 2006

கோவியாரின் நாடக சபா - பாகம் 1

லொள்ளுபவர்கள் : கைப்புள்ளை சின்னப்புள்ளையாக, நாகை சிவா லொள்ளு சிவாவாக, நாமக்கல் சிபியார் நக்கல் நக்கீரராக, ஜொள்ளுப்பாண்டி ஜொள்ளுப்பாண்டியாகவே

தயாரிப்பு : வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அனைத்து வலைநண்பர்களுக்கும் இந்த நாடகம் சமர்பணம்

காட்சி 1 : மண்டபம்

மண்டபத்தில் தனியே நாஷ்டாவுக்கு துட்டுக்கு எவன் தலையை தடவலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் சின்னப்புள்ளை. அந்த நேரத்தில் தண்டோரா சத்தம் பலமாக கேட்கிறது.

"நாட்டு மக்களுக்கோர், நற்செய்தி ... ! நம் மன்னன் ஜொள்ளுப் பாண்டிக்கு பெரும் பிரச்சனையில் ஒரு பெருத்த சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது அதை உடனடியாக தீர்த்து வைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்படும்"
என்று அறிவித்துச் சென்றான் அரண்மனை அறிவிப்பாளான்.

சின்னப்புள்ளை தனக்குள்
அப்பு .. 1 லட்சம் ரூபாயா ... இதை வச்சிக்கிட்டு ஒரு வருசம் வயித்தை கழுவலாமே, இம்புட்டு நேரம் யோசிச்சும் ஒரு யோசனையும் வரமாட்டக்குதே, அந்த பணம் எனக்கில்லை எனக்கில்லை...... இந்த நேரம் பார்த்து ஒரு பயலையும் காணும், அப்பு சிவா ... நீ எங்கிட்டு இருக்க... வாப்பு ... !

ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ங்,
உடனடியாக சிவா அவர் முன் தோன்றுகிறார்

லொள்ளு சிவா : அழைத்து யாரோ ?

சின்னப்புள்ளை : நான்தேன் ... ! ஆனா நா ஒன்னும் ஒன்னிய கூப்பிடலயே... ! யாரப்பு நீயீ... ? கெட்டப்பல்லாம் பலமா இருக்கு, பின்லேடன் அட்ரஸ் கேட்டு வந்திருக்கிறாயா ? என்று பயந்தபடி கேட்கிறார்.

லொ.சிவா : ஹா ஹாஹ் ... ஹா ..... !
பலமாக சிரிக்கிறார் சிவா

சின்னப்புள்ளை : இப்ப இப்படித் தான் சிரிப்ப... ! அப்பறம் என் சட்டையையும் .. ஒன் சட்டையும் கிழிச்சிட்டு திரும்பி நின்னும் சிரிப்பே ! ... ஆள வுடு... நான் யோசிச்சிக்கிட்டு இருக்கேன். எதுக்கும் பின்னால திரும்பு துணியெல்லாம் நல்லா இருக்கான்னு ஒருதடவ பாக்கிறேன் !

லொ.சிவா : சின்னப்புள்ள ... நீ என்னை தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய் ... நான் யாரென்பது தெரியுமா ?

சின்னப்புள்ளை : ஏன்பு நீ யாருவேனுமானாலும் இருந்துட்டு போ ... ஒன்னால ஜொள்ளுப் பாண்டி சந்தேகத்தை தீத்துற முடியும்னா நில்லு இல்லையென்றால் திரும்பி அப்படியே போ !

லொ.சிவா : ம் .... க்கும்ம் சின்னப் புள்ளையாரே ... !வேண்டுமென்றால் எம்மை சோதித்து பாரும் உனக்கு திறமை இருந்தால், கேள்விகளை நீர் கேட்கிறீரா அல்லது நான் கேட்க்கட்டுமா ?

சின்னப்புள்ள ... மனதுக்குள் ஆத்தாடி நம்ம தொப்பையைப் பார்த்து புள்ளையாருன்னு சொல்றானே... இருக்கட்டும்... என்னத் தான் சொல்றான்னு பாப்பமே

சின்னப்புள்ள : இந்தாப்பா இரு ... எனக்கு கேக்க மட்டும்தான் தெரியும் ... சரி நான் கேகுறத்துக் பதிலை சொல்லு !

லொ.சிவா : சரி நீரே கேளும் ... !
சின்னப்புள்ள : பிரிக்க முடியாதது எது ?
லொ.சிவா : ஜீன்சும் டாப்சும்
சின்னப்புள்ள : பிரியக் கூடாதது ?
லொ.சிவா : சாரியும், மல்லிகைப்பூவும்
சின்னப்புள்ள : சேர்ந்தே இருப்பது ?
லொ.சிவா : சுடிதாரும் ஷாலும்
சின்னப்புள்ள : சேரா திருப்பது ?
லொ.சிவா : ஹை ஹீல்சும், புடவையும்
சின்னப்புள்ள : பார்த்து ரசிப்பது
லொ.சிவா : காலேஜ் பிகர்களை
சின்னப்புள்ள: பார்காது ரசிப்பது
லொ.சிவா: சினிமா நடிகைகளை
சின்னப்புள்ள : சொல்லக் கூடியது ?
லொ.சிவா : ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே
சின்னப்புள்ள : சொல்லக் கூடாதது ?
லொ.சிவா : பெண்களிடம் ஐ லவ் யூ
சின்னப்புள்ள : ஆசைக்கு ?
லொ.சிவா : ஜொள்ளு !
சின்னப்புள்ள : அறிவுக்கு ?
லொ.சிவா : லொள்ளு !

சின்னப்புள்ள : அப்பு நீர் ஜொள்ளர் !

லொ.சிவா : இல்லை இல்லை நீர் தான் ஜொள்ளர் !

சின்னப்புள்ள : சரி பாட்டைக் கொடும், ஜொள்ளுப் பாண்டி என்ன தருகிறாரோ, அதைக் கொண்டுவந்து அப்படியே கொடுத்து விடுகிறேன்

லொ.சிவா : எனக்கு அந்த பரிசு வேண்டாம் எல்லாவற்றையும் ... நீயே எடுத்துக் கொள்ளும்

சின்னப்புள்ள : ம் நல்லா பிளாஸ்திரி போட்டு அனுப்புவாங்க அதானே தகிரியாமாக சொல்லுறீரு

லொ.சிவா : ஹா ஹாஹ் ... ஹா ..... !

சின்னப்புள்ள : லொள்வீக சிரிப்பையா உமக்கு !
சிவா பாடலை எழுதி சின்னப்பிள்ளையிடம் கொடுக்கிறார்

காட்சி 2 : சபை

சின்னப்புள்ள : மன்னா ... ஜொள்மன்னா .. பார் மன்னா .. ! பாட்டுடன் வந்திருக்கும் சின்னப்புள்ளையைப் பார் மன்னா !

ஜொள்ளுப்பாண்டி : சின்னப்பிள்ளை ! என் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பாடலை கொண்டு வந்திருக்கிறீரா ? எங்கே கொடும் ... !

அதற்குள் நக்கல் நக்கீரர் சின்னப்புள்ளையை மடக்குகிறார்
ந.நக்கீரர் : ஜொள்மன்னா சற்று பொறுங்கள் !

சின்னப்புள்ள : நக்கலாரே ... மன்னனே அழைக்கும் போது நீர் யாரைய்யா தடுப்பது? உமக்கு என்னய்யா பொறாமை ? நக்கலாரு என்று சொல்றது சரிதாம் போல .. !

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை ... அதை கிடப்பில் போடும் ... எங்கே நீர் வடித்த ஜொள்பாடலைப் பாடலை பாடும்

சின்னப்புள்ள : இதோ படுகிறேன் ... நன்றாக கேளும்

"காலேஜ் பிகர்கள்,
கட்டிளங் குமரிகள்,
அங்கயற் கன்னிகள்,
மணமான மாதுக்கள்,
பேத்தி கண்ட பாட்டிகள் ... ஏன் ?
அத்தினி, சித்தினி, பத்தினி பெண்களுக்கும்
இன்னும் எத்தனையே
வகை தமிழ் பெண்டிருக்கும்,
நெற்றிப் பொட்டில் வைக்க
ஸ்டிக்கர் பொட்டே சிறந்தது !"

ஜொ.பாண்டி : சரியான பாட்டு ... சரியான ஜொள்ளு ... தீர்ந்தது என் சந்தேகம்

ந.நக்கீரர் : ஜொள் மன்னா, சற்றுபொறும் அவசரத்தில் ஜொள்ளை நினைத்து துள்ளிக் குதிக்காதீர்... ! சின்னப்பிள்ளை இப்படி வாரும்

சின்னப்புள்ள : வந்தேன் நக்கலாரே ... உமது நக்கல் லொள்ளு ஆரம்பம் ஆகிவிட்டதா ?

ந.நக்கீரர் : உமது பாட்டில் பிழை இருக்கிறது !

சின்னப்புள்ள : இருக்கட்டும் ஓய்... எவ்வளவு பிழை இருக்கிறதோ ... எழுத்துப் பிழையாரிடம் சொல்லி சரிசெய்தால் போகிறது

ந.நக்கீரர் : அது இல்ல ஓய் ... பொருள் பிழை

சின்னப்புள்ள : வந்துட்டான்யா ... வந்துட்டான் !

ந.நக்கீரர் : சின்னப்புள்ள ... உன் சின்னப்புள்ளத் தனத்தை நிறுத்து .... முதலில் சொல்லும் பாட்டை வடித்ததி நீர்தானே ?

சின்னப்புள்ள : ஏ.... ஏன் நான் தான் நான் தான் வடித்தேன் ... நக்கலாரே ... பின்ன மண்டபத்தில் யாரோ வடித்ததையா எடுத்து வந்திருக்கிறேன் ?

ந.நக்கீரர் : அப்படியென்றால் வடித்த வரிகளுக்கு விளக்கம் சொல்லிவிட்டு பரிசைப் பெற்றுக் கொள்ளும் !

சின்னப்புள்ள : ஏனப்பபு ஜொள்ளுப் பாண்டியே சந்தேகம் தீந்துடுச்சின்னு சொன்னபிறகு போது நீ எதுக்கப்பு நக்கல் பண்ணுகிறீரு ?

ந.நக்கீரர் : சின்னப்புள்ளை ... ! சரியான ஜொள்ளுக்கு என் ஜொள் மன்னன் பரிசளிக்கிறான் என்றால் அதைப்பார்த்து முதல் ஜொள்விடுபவனும் நான் தான் ... அதே சமயத்தில் பிழையான பாட்டுக்கு பரிசளிக்கிறான் என்றால் முதலில் லொள்ளு பண்ணுகிறவனும் நான் தான்

சின்னப்புள்ள : ம் .. இங்கு எல்லாமே நீர் தானா .. ?

அவையோர் எல்லோரும் சிரிக்க சின்னப்புள்ளை நொந்து நூடூல்ஸ் ஆகி சபையை விட்டு வெளியேறி மண்டபத்துக்கே வருகிறார்.

(தொடரும்)


ஆக்கம்-கோவி.கண்ணன்

ஊக்கம்- சங்கம்

11 comments:

Anu said...

ha ha..
aazhndha karutthu
arumaiyana sindhanai :)

நாமக்கல் சிபி said...

//ஜொள்ளுப்பாண்டி ஜொள்ளுப்பாண்டியாகவே//

:)

நாகை சிவா said...

கோவியாரே!
மிக பெரிய ஆராய்ச்சியில் இறங்கி உள்ளீர் போலும், நம்ம பாண்டிக்கு போட்டியாக ?

பொட்டு பத்தி பேசுறீங்க சரி, வர வர நம் பெண்கள் பொட்டு வைப்பதை பேஷன் குறைவாக நினைக்கின்றார்களே
அதற்கு என்ன பண்ணுவது ?

நாமக்கல் சிபி said...

எக்குத்தப்பா எதையாவது எழுதிக்கொடுத்து தலையை ஆப்பு வாங்க வைப்பதில் நம்ம நாகையாருக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

தலை.. நாகையார் உம்மை சாச்சிப்புட்டாருலே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

துபாய் ராஜா said...

கோவியாரே! ஆக்கம் அருமை.நமது
சங்கத்தாரின் ஊக்கம் எப்போதும் உண்டு.அடுத்த பாகத்தை ஆவலுடன்
எதிர்பார்க்கிறோம்.

படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்.

கைப்புள்ள said...

//எக்குத்தப்பா எதையாவது எழுதிக்கொடுத்து தலையை ஆப்பு வாங்க வைப்பதில் நம்ம நாகையாருக்கு அப்படி ஒரு ஆனந்தம்.//

ஆமா ஆனந்தம் தான்...இருக்காதா பின்ன. ஆப்பு வாங்கறது நானாச்சே?

கைப்புள்ள said...

//தலை.. நாகையார் உம்மை சாச்சிப்புட்டாருலே!//

சாய்ப்பாரு தான்...யார் வேணாலும் வரலாம் யாரு வேணாலும் சாய்க்கலாம்...நான் பொறம்போக்கு தானே?
:((((((((

உங்கள் நண்பன்(சரா) said...

//சாய்ப்பாரு தான்...யார் வேணாலும் வரலாம் யாரு வேணாலும் சாய்க்கலாம்...நான் பொறம்போக்கு தானே?
:(((((((( //

தல எதுக்கு தேவையில்லாம உனக்கு இந்த சீன், ஆமா ஏன் யாருக்குமே உன்னைப் பார்த்தா பாவாமாத் தோணவே மாட்டோங்குது? :)))))


தேவு எனது கிராமம் பற்றிய பதிவை பார்த்தியா..?
http://unkalnanban.blogspot.com/2006/08/blog-post_115570806362340979.html

அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் said...

//பொட்டு பத்தி பேசுறீங்க சரி, வர வர நம் பெண்கள் பொட்டு வைப்பதை பேஷன் குறைவாக நினைக்கின்றார்களே
அதற்கு என்ன பண்ணுவது ? //

சிவா ... ! இடைக்குத் தக்க உடை மட்டுமல்ல ... அது போல் நெற்றிக்கு... ! சில உடைகள் போட்டு வைக்கலைன்னா தான் நல்லா இருக்கும் ! :))

Syam said...

ஜொல்லுங்கள் ச்சே தொடருங்கள் யாகத்தை :-)

நாமக்கல் சிபி said...

//...நான் பொறம்போக்கு தானே?//

தலை! சத்தமா சொல்லிடாதீங்க! பட்டா போட்டுடுவாங்க!