நம்ம தல'க எல்லாத்தையும் தியேட்டரிலே பார்த்து மக்கள் சிரிச்சிட்டாங்கன்னா, இண்டர்நெட்,சங்கம்,இன்னும் என்னனென மண்ணாங்கட்டியோ அதிலேயெல்லாம் போட்டு தாளிச்சிட்டாங்கன்னு பயங்கர பீலாகி சரக்கை ராவா உள்ளே விட்டுக்கிறாரு முருஹன். இவரு யாருன்னு பார்த்தா ஜோடி நம்பர் - 1 புகழ் நடிக்கவே தெரியாத அடுத்த அஷ்டாவதானி சொம்பாகியா வம்பு பிடித்த சிம்புவின் அஸிஸ்டெண்ட். இவருக்கு கூட சரக்குக்கு கம்பெனி கொடுக்கிறது நம்ம புரச்சி இயக்குநரு பேரரசு அஸிஸெண்ட் அவருக்கு இன்னும் பேரு இன்னும் வைக்கலை. ஏன்னா அவருடைய குருதேவர் வைக்க போற பெயரை வைச்சிதான் படமெடுக்க போறாரு. அதுனாலே இப்போ சின்ன பேரரசு.
முருஹன்:- "என்னாங்க நம்ம நிலமை இப்பிடி ஆகிப்போச்சு.கண்டமேனிக்கு வியர்வை உதிர்த்து உழைச்சு படமெடுத்து ரீலிஸ் பண்ணா ஆனந்தவிகடனிலே மிருகவதை மனிதவதை'ன்னு நம்ம சிம்புசாரை நக்கல் விடுறானுக. கொஞ்சநாளைக்கு முன்னாடி சிகப்புரோஜாக்கள்'லே லேசா டிக்கரிங் பார்த்து எச்சா ஒன்னா சேர்ந்து மன்மதனா காட்டின்னா நல்லாயிருக்குன்னு சொல்லுறாங்களே?"ன்னு பீலிங் டயலாக் பேசி ஒத்த சிப்'லே சரக்கை முடிக்கிறாரு.
சி.பே:- ஆமாம் பாஸ். எங்க தல, எதுகை மோனையா வசனம் பேசி ஹை டெசிபல் மீயூசிக்'லே இண்ட்ரோ கொடுத்தா தியேட்டரிலே வந்துட்டாண்டா கோமாளி'ன்னு பசங்க தம்மடிக்க கிளம்புறானுக. லேடிஸ்'க தூக்கிட்டு வந்த பிள்ளைக கிட்டே இடைவேளையிலே பாப்கார்ன் வேணுமின்னு கேட்டு அடம்பண்ண இன்னொருதடவை இந்த மாமா எடுக்கிற படத்துக்கு கூட்டிட்டு வந்துருவேன்னு டிரெஜிடி பண்ணுறாங்க. நம்ம தல'க பாடுதான் காமெடியா போகுது.
முரு:- "இதுக்கு என்னா பண்ணலாமின்னு சொல்லுங்க. ஊருக்குள்ளே கலவரமான எப்க்ட்'லே எங்க தல'ய பத்தியே அவரு நடிப்பை பத்தியே எல்லாரும் பேசனும். அந்தமாதிரியே ஒரு படத்தை எடுத்துறனுமின்னு துடியா துடிக்கிறேன்."
சி.பே:- நானும் உங்களமாதிரியேதான் இப்பிடிதான் எந்நேரமும் திருத்தணிய பத்தியே நினைச்சிட்டே இருக்கேன்.
முரு:- "அப்பிடியா அதுக்குள்ளே டைட்டில் எல்லாம் வைச்சாச்சா?"
சி.பே:- "இதுக்கே இப்பிடி ஆச்சரியப்படுறீங்க? நாங்க எங்க தல பேசப்போற அடுக்குமொழி பன்ச் டயலாக்'ல்லாம் எழுதியாச்சு.
முரு:- "என்னா பாஸ் அது??"
சி.பே:- "நிறைய கிடைச்சு குடிக்க முடியாத கடல்தண்ணி இல்லாடா, கொஞ்சமா கிடைச்சாலும் தேனாட்டாம் இனிக்கிற சுனைத்தண்ணி, அவந்தாண்டா திருத்தணி, என்னவிட்டு விலகி நில்லு நீ" எப்பிடி??"
முரு:- " கேட்டதும் கால் கட்டைவிரலிலே இருக்கிற நாலு முடியிலே இருந்து உச்சத்தலையிலே இருக்கிற எல்லா முடியும் ஜிவ்'ன்னு கரண்ட் அடிச்சமாதிரி நட்டுக்கு நிக்கிது பாஸ்"
எல்லாரும் நாசமா போகப்போறிங்கடா, இன்னும் கொஞ்சநாளிலே பூமாதேவி சிரிக்க போறா எல்லாரும் உள்ளே போகப்போறீங்கன்னு கொஞ்சம் அதிகமாக பீல் ஆகி சிசர் மனோகர் டேபிளிலே நின்னு கத்துறாரு. அவருக்கு கூட வந்த கஞ்சா கருப்போ அய்யோ நீதான் அடுத்த படத்துக்கு ஹிரோ'ன்னு உப்புக்கு சப்பாணியா போட்டு படுத்துறானுக'ன்னு சரக்கைவிட்டாவது நிம்மதியா இருக்கலாமின்னு வந்த தண்ணிய போட்டு சலம்பலை கொடுத்துட்டு இருக்கானே'னு அவரும் பீல் ஆகுறாரு.
க.க:- "ஏலேய் செவனேன்னு ஒக்காருய்யா. பெரிய வெள்ளக்காரனட்டாம் பெர்முடா போட்டு வந்துட்டு டேபிள் மேலே ஏறிக்கிட்டு உள்ளே போகப்போறீங்கன்னு கத்திட்டு இருக்கே? நீ உள்ள என்னத்தாயவது போட்டு வந்தியா? இருக்கிறவனை நொள்ளைகண்ணாகிறது'ன்னே வந்துறாய்ங்கன்னு சவுண்டு விட்டு சரக்கை அடித்து ஊறுகாயை உறிஞ்சுகிறாரு."
சி.பே:- "இங்க பாருய்யா, இவனுக அலும்பை... ஏலேய் படம் எடுக்கிறேன்னு அதுக்கு பேரு கடவுள் அது இதுன்னு வந்த மொக்கையிலே நடிச்சது நீதானே??"
க.க:- "அண்ணே , ஏண்ணே, அந்த சோகத்தயெல்லாம் போட்டு கெளறிக்கிட்டு கெடக்கீங்க, அந்த சோகத்தை மறக்கதானே தண்ணியாத்த வந்தேன். இங்கன என்னாடா'ன்னா ரெண்டாவது ரவுண்டு'லே சிசர் அலும்பை கூட்டிக்கிட்டு கெடக்கு..
முரு:- "என்னாய்யா இப்பிடி பீல்'ஐ போடுறே? தயாரிச்சது யாரு அடுத்தவன் காசு'லே சமைச்சு திங்கிற ஆளு, அவரு காசு போட்டு சமைச்சு கொடுக்கிறாருன்னா என்னாதயாவது சொல்லி வித்திற மாட்டாரா?"
க.க:- " அண்ணே அதை நம்பிதானே நானும் வந்ததும் வரமிட்டுமின்னு அந்த படத்திலே நடிச்சேன், மருத திருவிழா'க்கு ஆத்துக்கு கூட்டம் கூடுறமாதிரி நைட்'லே தீயேட்டருலே கூட்டம் சேருவாய்ங்க, ஆனா போனவாரம் திருவிழா வந்துச்சு'லே ,மருத போயிருந்தேன், எதிர்சேவை'க்காக அறை எண்'க்கு நடுநீசி 1.30 காச்சின்னு போட்டுருந்தாய்ங்கன்னு நடனா தீயேட்டரு'க்கு ஓடினேன். அங்கன இருக்கிற சேர்களோட அதிகமா கொசு திரிஞ்சுக்கிட்டு கெடந்துதக...
முரு:- "அப்புறம் என்னாய்யா.... இப்பிடி பீல்'ஐ போட்டு திரியுறே?
க.க:- மக்கா எண்ணிக்கைய விட கொசு எண்ணிக்கைதான் அதிகமா இருந்துச்சு'ன்னு சிம்பாலிக்கா சொன்னேண்ணே, அதுக்கூடய புரியல?"
சி.பே:- "நானு செல்லாகாசா போயிட்டேன்னு சொல்லாமே சொல்லுறான்"
முரு:- "அவனா நீயீ? கொஞ்சம் தள்ளி ஒக்காரு, கொஞ்சமா செயிக்கிறவங்களுக்கு பெருசா செயிக்க வைக்கனுமின்னு இருக்கோம், தோத்துப் போனதுகளோட கூட்டு சேர்ந்தா என்னத்துக்கு ஆகுறது?"
சிசர் மனோகர்:- " கூஜா தாங்கியேதாய்யா நீங்கல்லாம் நாசமா போறீங்க, அவனுக எல்லாம் நீங்க சிந்திச்சது எல்லாத்தையும் திஸ் இஸ் .......... ஃபிலிம்'ன்னு போட்டுக்கிறான்."
முரு:- " ஹிம், பெரிய மனுசன் நெஞ்சுல சந்தனத்தை பூசிக்கிட்டு வந்து நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்லிட்டாருய்யா! போய்யா போ எங்கனயாவது அடுத்த படத்துக்கு ஒட்டு ரோலுக்கு சப்போர்ட் ரோலு கிடைக்குதான்னு பாரு"
கஞ்சா கருப்பும், சிசர் மனோகரும் சோகத்திலும் சோகமாய் அடுத்த பாருக்கு நடைய கட்ட ஆரம்பிக்கும் வேளையில் பெருங்கூட்டமாய் சத்தமாய் தானும் முன்னாடி போகாமல் பின்னாடி வந்தவன் பின்னாடி நிக்காமல் முன்னாடிக்கு வந்துருன்னு நடுவிலே நிக்கறவன் கொடுக்கிற ஆதரவுமாக இருக்கிற பெருங்கூட்டமொன்று பாருக்குள்ளே நுழைக்கிறது.
இந்த பார்'க்கு வந்ததை நான் வழிமொழிகிறேன்னு குரல் கேட்க அட ஙொங்யாலே இங்கனயயும் ஆரம்பிச்சிட்டிங்களா?'ன்னு சன்ன குரலிலே அழுவாச்சியோட பாவப்பட்ட ஜீவன் சிணுங்க ஒத்த டேபிளுக்கு சைடுக்கு மூணு மூணு சேரு இழுத்து போட்டு விஷ ஜந்துகளாக அமர்க்கிறார்கள்.(பி.கு:- மனநோயாளிகளை விட விஷ ஜந்துகள் அடைமொழி நல்லாயிருக்குமின்னு நம்புறோம்)
"ஙொங்யாலா என்னாத்தாயாவது ஆர்டர் பண்ணுங்கய்யா! நீயூஸ் வாசிக்கிறக்குமுன்னாடி நான் போயி சிலேடு தூக்கிட்டு நிக்கனும்"
"டவுசர் கிழியுது டாவு தீருது, சாப்பாத்தி திங்கப்போனா மாவூ தீருது, தகரநெடுகாதனுக்கு செவடு ஆகுது, மூணு ரவுண்டுக்கு மேலே அடிச்சதான் போதை ஆகுது, மை தீர தீர எழுதி பார்த்தாலும் சொம்பு'ப்பன் மாதிரி ஆக முடியல'ன்னு உருவம் மருகுது!.
ஐயா சாமி இதுக எதோ வேத்து கெரகத்திலே இருந்து பலத்தரப்பட்ட உயிரினங்கள் ஒன்னாக்கூடி சரக்கு போட வந்திருக்காங்ய்க, இந்த இடத்தை விட்டு கெளம்புனாதான் நம்ம குடும்பத்தையும், நாமே பார்க்கிற தொழிலையும் காப்பாத்தமுடியுமின்னு முருஹனும்,சின்ன பேரரசும் எஸ் ஆக பேரர் ஆர்டர் எடுக்க வர்றாரு.
தள:- "நாங்க உள்ளே வந்ததும் ரெண்டு பேருக முக்காடு போட்டு வெளியே போறாங்களே! அவங்க யாரு"
பேரர்:- "அவங்க ரெண்டு பேரும் சினிமாகாரய்ங்க, இம்புட்டு நேரமா சினிமா எடுக்க போறதா நாலு கட்டிங்க போட்டு கூத்து பண்ணிட்டு இருந்தானுக, ஒங்களுக்கு எத்தனை கட்டிங் வேணுமின்னு சொல்லுங்க"
லக்கி:- "கட்டிங் விடலன்னா நைட் ஒடம்பு நடுங்குது,விடிச்சு எந்திரிச்சா அடுத்த தெரு ஆத்துக்குள்ளே இட்லி வேகுது, பக்கத்து வீட்டிலே சுண்டகஞ்சி ரெடியாகுது, ஆனா எங்கவீட்டிலே மட்டும் அடி விழுகுது. தாவூ தீருது"
பேரர் மெரண்டு போய் பேஸ்தடிச்சு அந்த இடத்தை விட்டு தெறிச்சு ஓடுறாரு, பக்கத்திலே ஒக்கார்ந்தவாய்ங்க எல்லாம் வேப்பிலை மரத்தை கிளையோட பிடுங்கி சாமியடிச்ச மாதிரி வாசலை பார்த்து ஓடுறாங்க.
அடடே நாமே வந்ததும் நார்மல் பிளேசஸ், அன் - நார்மல் பிளேசஸ்'கிருச்சுலா, இதை மாதிரிதான் நான் மலேசியா'விலே இருக்கிறோப்போயும் ஆச்சு'லா'னு சரக்கு விடாமலே தள பொலம்ப ஆரம்பிக்க லக்கி குடிக்க வைச்சிருந்த தண்ணிய எடுத்து குடிச்சு போதையிலே அங்கயும் போலி-தகரநெடுகாதன் இருக்காறான்னு கேட்டு மட்டையாகிறார்.
ஙொய்யாலா சரக்கு வரலை, பெப்சி வரலை, தண்ணி வரலை, முத்தம் கவுஜ எழுதுனா பத்து கமெண்ட் வரலை, நாமெல்லாம் பைத்தியாமன்னு கேட்டு வைச்சா "ஆமாம்"னு ஐம்பது கமெண்ட் போடுறாய்ங்க'ன்னு ஈனஸ்வரத்திலே சுதியோடு கஷ்டஜீவன் சிணுங்கலாய் புலம்ப சிபி வந்து ஆபாந்துவானாக முன்னுக்கு வருகிறார்.
தள:- "ஒங்களுக்கு ஆயிரம் கஷ்டமின்னா அதிலே ஒன்னை ஒன்னையாவது நினைச்சி சிரிப்போம், இப்போ ஒங்களுக்குன்னு இருக்கிற பிரச்சினை போயி ஒட்டு மொத்த பாருக்குள்ளே பிரச்சினை ஆகிப்போச்சே"
ப.பா:- " என்னாய்யா இந்த பாருக்குள்ளே பிரச்சினை?"
தள:- " நாமே வர்றதுக்கு முன்னாடி யாரோ ரெண்டு பேருங்க கோமாளிய வைச்சி படம் எடுக்கிறத பத்தி பேசிட்டு இருந்தாங்களாம், நாமே வந்ததும் சத்தமில்லாமே எஸ் ஆகிட்டாங்க"
ப.பா:- " சரிய்யா, அதுக்கு நீ என்னாய்யா பண்ணப்போற?"
தள:- "அவங்க எடுக்க நினைச்ச படத்தை நான் எடுக்க போறேன்"
ப.பா:- " ஐயா சாமிகளா, எல்லாரும் புல் அடிச்சிம் மட்டையாகிறாதிங்கய்யா, நம்ம தள கதை சொல்ல போறாராம், அந்த கதையிலே படம் எடுக்க போறாரம்"
அய்யோய்யோ சும்மாவே ஆவிக்கே ஆம்பிள்ள பொம்பிள்ள'ன்னு பேதம் பிரிச்ச தெய்வம் இப்போ சினிமா எடுக்கப்போறேன்னு அவதாரம் எடுக்கப்போகுதான்னு உண்மைதமிழன் அந்த படத்துக்கு நாப்பது பக்கதுக்கு விமர்சனம் எழுதிடனுமின்னு மனசுக்குள்ளே கங்கணம் கட்டுக்கிறாரு.
தள:- "அவ்வளவு சீக்கிரத்திலே எல்லாம் வந்துறாது, இப்"போதை"க்கு டைட்டில் மட்டும் போடுவோம். அப்பாலிக்கா இன்னும் வருவோம்.
சங்கம் புரெடக்சன் பெருமையோடு வழங்கும்,
தள சிபியின் கைவண்ணத்தில்,
10 comments:
\\தாரே வடபழனி பார்..\\
எங்கேயே கேட்ட மாதிரி இருக்கே..!!
ஸ்WDKFண்QWஏஈFQWஈஏஈFHWQஈஏHF
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் vavaasangam.blogspot.com Posts
:350 Comments: 10159
350வது பதிவை வெற்றிகரமாக சரக்கோடு ஏத்திய ராமுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா.
:))
நும்மூத்தி ஐம்பதாவது..ச்சே முந்நூத்தி ஐம்பதாவது பதிவா..ஜூப்ப்பரு :))
வாழ்த்துகள் ராம்.சீக்கிரமே 500 ஆகட்டும் எல்லாப் பதிவிலேயும் இதே சிரிப்பு இருக்கணும்:)
முருஹன் - சி.பே டிஸ்கஷன் கலக்கல் ;-))
முதல் பின்னூட்டத்தில் இளா என்ன சொல்ல வர்ரார்?
கேட்டதும் கால் கட்டைவிரலிலே இருக்கிற நாலு முடியிலே இருந்து உச்சத்தலையிலே இருக்கிற எல்லா முடியும் ஜிவ்'ன்னு கரண்ட் அடிச்சமாதிரி நட்டுக்கு நிக்கிது பாஸ்"//
ஹைய்யோஓஓஓ:)
சூப்பரு...
ஆனா இதை ஏற்கனவே போர் வாள் எழுதறனு சொல்லிட்டு இருந்தாரே...
கோபி,
நாமே இதுவரைக்கும் பார்க்காத இடம்தான்.... :)
விவாஜி,
தெளிவா புரிஞ்சுப்போச்சு.... :)
KTM,
அட இந்த படத்தோட ஹீரோ'வே வந்து கமெண்ட் போட்டுருக்காரு.... ஒங்களுக்கெல்லாம் ஆட்டோகிராப் போடவே டைம் இல்லன்னு நினைச்சிருந்தேன்... :)
வல்லியம்மா,
நன்றி.... எல்லாம் உங்களை மாதிரி பெரியவர்கள் எங்களுக்கு அளிக்கும் ஆசியும், ஆதரவும்தினால் தான் ....
வெட்டிக்காரு,
காப்பிரைட்ஸ்'லிருந்து டீ ரைட்ஸ், பூஸ்ட் , ஹார்லிக்ஸ் ரைட்ஸ்'ன்னு இருக்கிற எல்லா ரைட்ஸ்யும் கச்சேரி கம்பெனியிலிருந்து சங்கம் புரெட்க்சனுக்கு மாத்தியாச்சு.... :)
அடலாஸ் சிங்கமே,
நன்னி....
//
முதல் பின்னூட்டத்தில் இளா என்ன சொல்ல வர்ரார்?//
படிச்சிட்டு தெளிவா இருக்கேன்னு சொல்லுறாரு விவாஜி .... :)
Post a Comment