Monday, April 28, 2008

அவன் அவள் அது

அது ஒரு சித்திரை மாத வெள்ளிக்கிழமை மாலை. அவனும் அவளும் தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்தம், காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள் ஆகிய தொடர்கள் முடிந்து இருந்த அந்த ப்ரைம்டைம் வேளையில் போனால் போகட்டும் என்று கிரிக்கெட் பாக்க அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது. ஆங்...அவளையும் அவனையும் உங்களுக்கு அறிமுகப் படுத்தலை இல்லை? அவன் ஒரு வருத்தப்படாத வாலிபன். இப்போதும் அவ்வாறே இருப்பதாக ஊர் நம்பிக் கொண்டிருப்பதால் அவன் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. அவள் இன்னும் இந்த ஊர் நம்பிக் கொண்டிருக்கும் அவ்வருத்தப்படாத வாலிபனின் வாழ்க்கை துணை.

பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதையும், மட்டையாளர்கள் அதனை அடிப்பதையும் தொல்லைக்காட்சியில் மக்களுக்குக் காட்டி காட்டி அலுத்துப் போன ஒளிப்பதிவாளரின் கேமரா பார்வை, ஊக்கு விக்கும் நங்கையரின்(அதாங்க சியர் லீடர்ஸ்) பக்கம் திரும்பியது. கேமரா இயக்குபவர் தன் பார்வையைத் திருப்பியதால் அவர் பார்வையில் பட்டது டிவி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பார்வையிலும் பட்டது. உண்மையில் அவளுடைய பார்வையில் படுவதற்கு முன்னர் அவன் அதை பார்த்து விட்டான். ஆனால் ஆர்வமாகப் பார்ப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் நொடிப் பொழுதில் அவன் பார்வையும் கவனமும் வேறெங்கோ இருப்பது போல பார்த்துக் கொண்டான்.

"ஏங்க...ஐபிஎல் கிரிக்கெட்ல இந்த மாதிரி சியர் லீடர்ஸ் எல்லாம் ஆடறதைப் பத்தி நேத்து பார்லிமெண்ட்ல பேசிருக்காங்களாம். இனிமேல் இது மாதிரி ஆட மாட்டாங்கன்னும் அது டிவில வராதுன்னும் இன்னிக்கு பேப்பர்ல போட்டிருந்தான். ஆனாலும் வந்துக்கிட்டுத் தான் இருக்கு"

"ஹ்ம்ம்ம்"

"என்ன நான் சீரியஸா சொல்லிக்கிட்டு இருக்கேன். வெறும் ஹ்ம்ம்ம் தானா?"

இவ்விஷயத்தில் தலையிடுவதும் அது குறித்து கருத்து தெரிவிப்பதும் ஆபத்தானது என்று அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் அவள் அவன் வாயிலிருந்து எதையாவது வரவைத்தே தீர வேண்டும் என்பதில் தீர்க்கமாயிருந்தாள்.

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதை அவன் அறிந்திருந்தாலும் அந்த டாபிக்கைத் தட்டிக் கழித்தலும் உடம்புக்கு நல்லதில்லை என்று அவன் அறிந்திருந்த காரணத்தினால் "சியர் லீடர்ஸ் ஆடறதை எல்லாம் ஐபிஎல்ல நிறுத்த மாட்டாங்க" என்றான்.

"ஏன்? எப்படி" காரணகாரியங்களை அறிந்து கொள்வதில் அவளுக்கு ஆர்வம் எப்போதும் அதிகம்.

"இதனால எத்தனை குடும்பங்கள் பொழைக்குது தெரியுமா? அதை எப்படி நிறுத்துவாங்க?"

"என்னது குடும்பம் பொழைக்குதா?" -தன் ஆச்சரியத்தை அவளால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

"ஆமாம்...இல்லியா பின்ன? படிச்சி டாக்டர் ஆகனும், இஞ்சினியர் ஆகனும் அப்படிங்கிறது தான் ஒவ்வொரு பொண்ணோட கனவும். வறுமையும் இயலாமையும் காரணமாத் தான் இந்த மாதிரி சியர்லீடர்ஸா ஆகறாங்க. யாரும் விரும்பி சியர் லீடர்ஸ் ஆகறதில்லை. கிரிக்கெட் ஸ்டேடியத்துல சியர் லீடரா ஆடற ஒவ்வொரு பொண்ணுக்கு பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு தெரியுமா?"

"வறுமையா? அவங்களைப் பாத்தா ஃபாரின் காரங்க மாதிரி இல்ல இருக்காங்க?"

"ஏன் ஃபாரின் காரங்கன்னா ஏழையா இருக்கக் கூடாதா? சியர் லீடரா ஆடற அவளும் ஒரு பெண் தானே? முறைவாசல் செஞ்சு குடும்பத்துக்குக் கால் வயிறு கஞ்சு ஊத்தற அம்மா, அம்மா சம்பாதிச்சு கொண்டாறதை புடுங்கிக் குடிச்சிட்டு அம்மாவைப் போட்டு அடிக்கிற பொறுப்பில்லாத அப்பா, படிக்கிற வயசுல சின்ன சின்ன தம்பி, தங்கச்சிங்க, கல்யாணம் ஆகாத அக்கா இவங்களை எல்லாம் பாத்து பாத்து கஷ்டப் பட்டு குடும்பத்துக்கு விடிவு காலம் பொறக்கணும்னு தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டுலேருந்து இவ்வளவு தூரம் கண்காணாத இடத்துக்கு வந்து ராத்திரி பகல் வெயில்னு பாக்காம கஷ்டப் பட்டு உழைக்கிறாங்க"

அவன் சொல்வதை மேலும் ஆச்சரியத்தோடு அவள் கேட்கிறாள்.

"இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு தானே யோசிக்கிறே? கப்பின்னு என்னோட ஃப்ரெண்டு ஒருத்தன் அமெரிக்கால டெக்சாஸ் மாநிலத்துல இருக்கான். அவன் பக்கத்து வீட்டுல இருக்கற ஆண்ட்டியோட பொண்ணு இந்த மாதிரி சியர்லீடரா ஐபிஎல்ல ஆடிக்கிட்டு இருக்காம். அவன் தான் இதெல்லாம் எனக்கு ஈமெயிலா அனுப்புனான். அதோட அவங்க படற கஷ்டத்தை எல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லற மாதிரி சிறுகதை ஒன்னெ எழுதிக்கிட்டு இருக்கான்.

அதோட இளான்னு இன்னொரு ஃப்ரெண்ட். அவரும் அமெரிக்கால தான் இருக்காரு. அவங்க பக்கத்து வீட்டுல இருக்கற பொண்ணு ஐபிஎல்ல சியர்லீடரா ஆகனும். நீங்க உங்க காண்டேக்ட்ஸ் யூஸ் பண்ணி எனக்கு சிபாரிசு பண்ணமுடியுமான்னு கேட்டிருக்காம். சூப்பர் பவுல், என்பிஏ சேம்பியன்ஷிப்ல எல்லாம் சியர்லீடரா இருந்த அனுபவம் எனக்கு இருக்குன்னு சொல்லுச்சாம். டெய்லி பேட்டாவும் வீட்டுக்குத் திரும்பப் போக பஸ் சார்ஜும் தான் அவங்க ஊர்ல தர்றாங்களாம். ஏற்கனவே பஸ்பாஸ் இருந்துச்சுன்னா பஸ் சார்ஜ் கூட தர மாட்டாங்களாம். ஐபிஎல்ல ஆடுனா கொஞ்சம் காசு பாக்கலாம்னு சொல்லுச்சாம்.

கதிர்னு இன்னொரு ஃப்ரெண்டு. அவன் துபாய்ல இருக்கான்மா. அவன் பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல மேல் வீட்டுல இருக்கற ஷேக் பொண்ணுங்கல்லாம் அங்கிள் நாங்க ஐபிஎல்ல சியர் லீடர்ஸ் ஆகனும், எப்படியாச்சும் ஹெல்ப் பண்ணுங்க...மூடாக்கு போட்டுக்கிட்டாச்சும் நாங்க ஆடியே தீருவோம்னு உறுதியா சொல்லுச்சுங்களாம். அரைகுறையா ஆடறாங்கன்னு தானே பார்லிமெண்ட்ல எதிர்த்து பேசியிருக்காங்க. இப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் சியர்லீடர்ஸையே எடுத்துக்கயேன். என்ன தான் வறுமையின் கொடுமையினால சியர்லீடரா ஆடுனாலும் மானம் தான் பெருசுன்னு ஃபுல் பேண்ட், சட்டை போட்டுக்கிட்டுத் தான் ஆடறாங்க. இப்போ அவங்க வீட்டுல எரியற அடுப்புல நம்ம கவர்ன்மெண்ட் தண்ணியை மொண்டு ஊத்தனுமா? யோசிச்சிப் பாரு"

இவ்வளவு நேரம் அவள் சொன்னதை எல்லாம் கேட்ட அவள் முகத்தில் ஒரு எக்ஸ்பிரெஷனை அவன் கண்டான். அந்நியன் படத்து விக்ரம் போல ஒரு முகபாவம்...சே...சே...இது அவள் இல்லையா...கே.பாலச்சந்தர் படத்து ஹீரோயின் போல ஒரு முகபாவம். ரசித்து, கோபப்பட்டு, ஆச்சரியப்பட்டு, ஏமாற்றத்தைத் தாங்கி, சந்தோஷப்பட்டு - எல்லாம் சேர்ந்த ஒரு கூட்டுக் கலவையான ஒரு எக்ஸ்பிரெஷன். அந்த "ராகமாலிகை"எக்ஸ்பிரெஷனில் கடைசியாக வந்தது ஒரு சிரிப்பு.

அந்த சிரிப்பைப் பார்த்து ஏமாந்து ஏதோ ஒரு உந்துதலில் உணர்ச்சிவசப்பட்டு அவன் சொன்னான் - "யப்பா! சியர்லீடர்ஸ் டிவில ஆடறதை பாக்கறதுக்கு என்னென்ன கதையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு?"

"---"

தூரத்திலிருந்து தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றுவதற்கு உதவும் 'அது' அவனுடைய கபாலத்தை மூர்க்கத் தனமாக முத்தமிடும் போது அவனறிந்து கொண்டது 'ரெண்டு'
1. ஆபத்தான விஷயங்களை எப்படி 'well left' ஆக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுதல் அவசியம். அதை தெரிந்து வைத்துக் கொள்ளும்வரை பேசினாலும், பேசாது போனாலும் சேதாரம் பலமாகத் தான் இருக்கும்.
2. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உறுதியில்லாதவர்களை இவ்வுலகம் ஹர்பஜனையும் ஸ்ரீசாந்தையும் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதை போல் சிரிக்கும்.

32 comments:

Iyappan Krishnan said...

சொந்த அனுபவத்தை அப்படியே கொட்டிட்டீரு... நல்லாருங்க ஸ்வாமி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டாவது பாயிண்ட் நல்லாருக்கு..
இப்பல்லாம் யாராச்சும் அழுதா.. என்ன ஸ்ரீசாந்த் மாதிரி அழறன்னு கிண்டல் செய்யறாங்களாமே..

கைப்புள்ள said...

//சொந்த அனுபவத்தை அப்படியே கொட்டிட்டீரு... நல்லாருங்க ஸ்வாமி//

ஹி...ஹி...நோ கமெண்ட்ஸ்
:)

கைப்புள்ள said...

//இரண்டாவது பாயிண்ட் நல்லாருக்கு..
இப்பல்லாம் யாராச்சும் அழுதா.. என்ன ஸ்ரீசாந்த் மாதிரி அழறன்னு கிண்டல் செய்யறாங்களாமே..//

வாங்க மேடம்,
வருகைக்கு நன்றி. உண்மையிலேயே அது கிண்டல் செய்ய வேண்டிய விஷயம் தான். கோடி கணக்கான மக்கள் பாக்கறாங்கன்னு கூட தெரியாம அடிக்கிறதும், அழுவறதும் நல்லாவா இருக்கு?

இராம்/Raam said...

//தூரத்திலிருந்து தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றுவதற்கு உதவும் 'அது' அவனுடைய கபாலத்தை மூர்க்கத் தனமாக முத்தமிடும் போது அவனறிந்து கொண்டது 'ரெண்டு'/

அடி எப்பவும் போலே உள்ளேதானே!! வெளிக்காயம் இல்லைதானே??? :)

ஒங்க கதையே படிச்சா படு ஜோக்கா'கீது தல.... :))))

ambi said...

ஹஹா! தல! எப்படி தல? எங்க வீட்ல நடக்கறத எல்லாம் காமிரா வெச்சு படம் புடிச்ச மாதிரி அப்படியே புட்டு புட்டு வெச்சு இருக்கீங்க? :p


சீனா தானா பாட்டு வந்தா எங்க வீட்ல அடிதடியே நடக்கும்.

உடனே ரசிகா எவ்ளோ பாவம் தெரியுமா? அவ தங்கச்சிய படிக்க வெக்கறத்துக்காக தான் இப்படி ஐட்டம் நம்பர் ஆடறாங்கனு ஒரு பேட்டியில அவங்களே சொல்லி இருக்காங்கனு நான் சொல்லுவேன். (அது உண்மையும் கூட)

அந்த பேட்டிய நீங்க ஜொள்ளு விட்டுகிட்டே படிச்சீங்களாக்கும்?னு தங்கமணி பவுன்சர் போடுவாங்க.

அதுக்குள்ள சீனா தானா பாட்டு பாதி முடிஞ்சு இருக்கும், ஹிஹி. :))

ஆயில்யன் said...

//ஒங்க கதையே படிச்சா படு ஜோக்கா'கீது தல.... :))))//

திரும்ப சொல்லிக்கிறேம்ம்ப்பா:))))

ஆயில்யன் said...

//ஏன் ஃபாரின் காரங்கன்னா ஏழையா இருக்கக் கூடாதா? சியர் லீடரா ஆடற அவளும் ஒரு பெண் தானே? முறைவாசல் செஞ்சு குடும்பத்துக்குக் கால் வயிறு கஞ்சு ஊத்தற அம்மா, அம்மா சம்பாதிச்சு கொண்டாறதை புடுங்கிக் குடிச்சிட்டு அம்மாவைப் போட்டு அடிக்கிற பொறுப்பில்லாத அப்பா, படிக்கிற வயசுல சின்ன சின்ன தம்பி, தங்கச்சிங்க, கல்யாணம் ஆகாத அக்கா இவங்களை எல்லாம் பாத்து பாத்து கஷ்டப் பட்டு குடும்பத்துக்கு விடிவு காலம் பொறக்கணும்னு தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டுலேருந்து இவ்வளவு தூரம் கண்காணாத இடத்துக்கு வந்து ராத்திரி பகல் வெயில்னு பாக்காம கஷ்டப் பட்டு உழைக்கிறாங்க"////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

Syam said...

//ஹி...ஹி...நோ கமெண்ட்ஸ்
:)//

சேம் பிளட்..... :-)

Syam said...

//என்ன தான் வறுமையின் கொடுமையினால சியர்லீடரா ஆடுனாலும் மானம் தான் பெருசுன்னு ஃபுல் பேண்ட், சட்டை போட்டுக்கிட்டுத் தான் ஆடறாங்க//

அதுனால அவங்களுக்கு பேசினதுல பாதி சம்பளம் தான் தராங்களாம்....பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ அப்படினு இன்னும் கொஞ்சம் சேர்த்து சொல்லி இருக்கலாம் தல...அதுசரி என்ன தான் மணி கணக்குல நாம விளக்கம் குடுத்தாலும் 'அது" க்கு தெரியுமா நமக்கு தலை வீங்கி போய் ஆபீஸ்க்கு சிக் லீவ் போடனும்னு...:-)

வல்லிசிம்ஹன் said...

கோடி கணக்கான மக்கள் பாக்கறாங்கன்னு கூட தெரியாம அடிக்கிறதும், அழுவறதும் நல்லாவா இருக்கு?//
அது தெரிஞ்சுதானே இப்படி செய்யறாங்க.

கிரி கெட்டுப் ப்போச்சுப்பா.

கைப்புள்ள said...

//அடி எப்பவும் போலே உள்ளேதானே!! வெளிக்காயம் இல்லைதானே??? :)//

ரொம்ப சரியா கேட்டேப்ப்பா ராயல். இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்கல்லாம் போலிஸ் டிரெயினிங் எடுத்துக்கிட்டு வராங்க போல...வழக்கம் போல உள்காயம் தான்.
:(

//ஒங்க கதையே படிச்சா படு ஜோக்கா'கீது தல.... :))))///

என் ஜோகக் கதையைக் கேளு தாய்க்குலமே...அதை கேட்டாக்கா தாங்காதம்மா உங்க மனமே...
:(

கைப்புள்ள said...

//ஹஹா! தல! எப்படி தல? எங்க வீட்ல நடக்கறத எல்லாம் காமிரா வெச்சு படம் புடிச்ச மாதிரி அப்படியே புட்டு புட்டு வெச்சு இருக்கீங்க? :p//

வீட்டுக்கு வீடு வாசப்படி அண்ட் சேம் ப்ளட் :)


//உடனே ரசிகா எவ்ளோ பாவம் தெரியுமா? அவ தங்கச்சிய படிக்க வெக்கறத்துக்காக தான் இப்படி ஐட்டம் நம்பர் ஆடறாங்கனு ஒரு பேட்டியில அவங்களே சொல்லி இருக்காங்கனு நான் சொல்லுவேன். (அது உண்மையும் கூட)//
அப்படியா? தேங்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன். பிற்காலத்துல எப்பவாச்சும் பயன்படும்.


//அதுக்குள்ள சீனா தானா பாட்டு பாதி முடிஞ்சு இருக்கும், ஹிஹி. :))//
ரிப்பீட்ட்டேய்
:))

கைப்புள்ள said...

////ஒங்க கதையே படிச்சா படு ஜோக்கா'கீது தல.... :))))//

திரும்ப சொல்லிக்கிறேம்ம்ப்பா:))))//

"தல ஜோக்காகீது படு படிச்சா கதையே ஒங்க" - இப்பிடியா?
:)

கைப்புள்ள said...

//பொறக்கணும்னு தான் இந்தப் பொண்ணுங்க எல்லாம் வெளிநாட்டுலேருந்து இவ்வளவு தூரம் கண்காணாத இடத்துக்கு வந்து ராத்திரி பகல் வெயில்னு பாக்காம கஷ்டப் பட்டு உழைக்கிறாங்க"////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((//

ஒருத்தருக்காச்சும் அந்த கஷ்டம் எல்லாம் புரிஞ்சுச்சே? அது வரைக்கும் சந்தோஷம்.

கைப்புள்ள said...

////ஹி...ஹி...நோ கமெண்ட்ஸ்
:)//

சேம் பிளட்..... :-)//

வாய்யா 12பி...அதே அதே சபாபதே
:)

கைப்புள்ள said...

//அதுனால அவங்களுக்கு பேசினதுல பாதி சம்பளம் தான் தராங்களாம்....//

என்ன கொடுமை சார் இது?

//
பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ அப்படினு இன்னும் கொஞ்சம் சேர்த்து சொல்லி இருக்கலாம் தல...//

அட ஆமா இல்ல...சிவாஜி ஸ்டைல்ல யாரு பெத்த புள்ளைங்களோன்னு ஒரு டயலாக் விட்டிருந்தா கூட நல்லாத் தான் இருந்திருக்கும்.


//அதுசரி என்ன தான் மணி கணக்குல நாம விளக்கம் குடுத்தாலும் 'அது" க்கு தெரியுமா நமக்கு தலை வீங்கி போய் ஆபீஸ்க்கு சிக் லீவ் போடனும்னு...:-)//

ஹி...ஹி...அனுபவம் பேசுது.
:)

கைப்புள்ள said...

//அது தெரிஞ்சுதானே இப்படி செய்யறாங்க.

கிரி கெட்டுப் ப்போச்சுப்பா//

வாங்க வல்லிம்மா,
சரி தான். விளையாட்டுங்கிறதையும் மீறி அது ஒரு நல்ல வியாபாரம் ஆகிப் போச்சு.

ஹர்பஜனை 11 மேச் பேன் பண்ணிருக்காங்களாம். அதுனால அவருக்கு ஏற்பட்ட இழப்பு ரூ2.67 கோடியாம். Costliest Slapனு கிண்டல் பண்ணிருக்காங்க மீடியால
:)

கப்பி | Kappi said...

:)))

டோமரு. said...

இன்னா நைனா? கபால்னு காலவாரிட்டியே.பேஜாரா புட்ச்சுப்பா.

கைப்புள்ள said...

//:)))//

நன்னிப்பா கப்பி
:)

கைப்புள்ள said...

//இன்னா நைனா? கபால்னு காலவாரிட்டியே.பேஜாரா புட்ச்சுப்பா//

இன்னாபா ஆச்சு?

நன்மனம் said...

////ஒங்க கதையே படிச்சா படு ஜோக்கா'கீது தல.... :))))//

திரும்ப சொல்லிக்கிறேம்ம்ப்பா:))))//

"தல ஜோக்காகீது படு படிச்சா கதையே ஒங்க" - இப்பிடியா?
:)

:-)))))))))))))))))))))))))

வெட்டிப்பயல் said...

தல என்னமா சிந்திச்சிருக்கீங்க...

நீங்க ஒரு சிந்தனை சிற்பி ;)

கைப்புள்ள said...

//"தல ஜோக்காகீது படு படிச்சா கதையே ஒங்க" - இப்பிடியா?
:)

:-)))))))))))))))))))))))))//

ஆஹா நன்மனம்! சங்கத்தின் இணையிலா ஒற்றர் படைத் தலைவரே! எங்கே போயிட்டீங்க இம்புட்டு நாளா? உங்களைத் தேடி ஒற்றர்களை எல்லாம் அனுப்பிச்சோமே? Bakistan தீவிரவாதிகள்னால எதனா ஆபத்தா? சொல்லுங்க Gaptan நம்ம வெட்டீயோட ஃபிரெண்ட் தான்.
:)

கைப்புள்ள said...

//தல என்னமா சிந்திச்சிருக்கீங்க...

நீங்க ஒரு சிந்தனை சிற்பி ;)//

நன்னி வெட்டிகாரு.
:)

Anonymous said...

கைப்ஸ்! காயம் ஆறிடுச்சா! என் கிட்ட நல்ல ஐடியா மருந்து இருக்கு வேணுமா????:-))

Anonymous said...

போன பின்னூட்டம் என்னுடையது!

இப்படிக்கு அபிஅப்பா

கைப்புள்ள said...

//கைப்ஸ்! காயம் ஆறிடுச்சா! என் கிட்ட நல்ல ஐடியா மருந்து இருக்கு வேணுமா????:-))//

ஐடியாவா? மருந்தா? தெளிவாச் சொல்லுங்கப்பு

கைப்புள்ள said...

//போன பின்னூட்டம் என்னுடையது!

இப்படிக்கு அபிஅப்பா//

டேங்கீஸ் இதோட முப்பது
:)

ஜே கே | J K said...

/"---"//
என்ன தல ரெண்டுனு சொல்லிட்டு மூனு டேஸ் போட்டுட்டீக???

Geetha Sambasivam said...

//தூரத்திலிருந்து தொலைக்காட்சியின் அலைவரிசை மாற்றுவதற்கு உதவும் 'அது' அவனுடைய கபாலத்தை மூர்க்கத் தனமாக முத்தமிடும் போது அவனறிந்து கொண்டது 'ரெண்டு'//

ராயல் சொன்னதுக்கு ஒரு ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ, கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கமுடியலையேனு ஏங்கும்