~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Thursday, April 17, 2008
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......
வெளிநாட்டு வாழ்க்கையில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானம் என்பது போல, குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை, சமையல் என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் ஒரு ஆண்மகன், தன் மகனைத் தாலாட்டுகிறார் தன் புலம்பல்களைச் சொல்லி.
பெரும்பாலான வீடுகளில் இதுதான் பொதுவான கதையாம் ;-)
பாடல்: பூபாளம் இசைக்குழு.
பாடல் வரிகள்:
Come on Mohan, come on..don't cry
mummy will be here in a minute
சோ றற சோ.......றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
சோறு கறியோ வெறி சொறியப்பா
களைச்சுப் போனேன் ரேக் எவே என்பா
உங்கள் சமையல் நல்ல ரேஸ்ரப்பா
ஐயோ நீங்கள் வெரி நைஸ் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
வீக் எண்டெல்லோ விசிற்றிங் அப்பா
நீங்கள் போங்கோ ஷொப்பிங் என்பா
நாலுபேர் போல் நாங்களுமப்பா
வாங்க வேணும் புதுக்கார் என்பா
உடுப்பில் வேண்டும் ஒழுக்கம் எண்டால்
ஐயோ நீங்கள் வெறி றிமோட் என்பா
எங்கள் கல்சரும் நல்லதெண்டு சொன்னால்
இண்டிபெண்டன்ற் நான் ஷட்டப் யூ என்பா
செலவு வேண்டாம் சேமிப்பம் எண்டால்
ஸ்ரேரஸ் எல்லோ குறைஞ்சிடும் என்பா
நன்மை தீமையேதும் சொல்லிப்போட்டனெண்டால்
நல்லாய்ச் சொல்லும், ஐ டோண்ட் கேர் என்பா
சோ றற சோ...... றொகான் சோ றற சோ
என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா
காசு கனக்க ஏர்ண் பண்ணி வாறா
சலறி கொண்டு சேலுக்கு போவா
சில்லறை தான் மிச்சம் கொண்டு வருவா
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அடடா. அலுவலகத்துல இருக்கேன். வீட்ல போயி கேட்டுட்டு சொல்றேங்க.
...:-)) அருமை!
//என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா//
அப்ப உவர் என்னவாம் செய்யிறவர்..??!!
கானம் அருமை கானா பிரபா!
தொடருங்கள்!!
வாழ்த்துக்கள்!!!
எங்கு பிடித்தீர்கள் இந்த கானத்தை?
அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.
சோ றற சோ...... கானா சோ றற சோ
சாகவாசமாவே கேளுங்க இளா
//ஆ.கோகுலன் said...
...:-)) அருமை!
//என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா//
அப்ப உவர் என்னவாம் செய்யிறவர்..??!!//
அவர் வீட்டில் இருந்து பிள்ளை பராமரிக்கிறார். அதைத் தானே சாடையா பாட்டில் சொல்றார்.
"என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா"
எண்ட பல்லவியை ஒவ்வொரு சரணத்துக்குப்பிறகும் பாடிக்கொண்டிருக்கிறது அலுப்பாக் கிடக்கு. ரெண்டாம் சரணத்தோடயே பாட்டை நிப்பாட்டச் சொல்லுது.
மற்றப்படி பரவாயில்லை.
பாடுகின்ற பாடகர் நீங்கள் தானே பிரபா? இந்தக் குழந்தை பராமரிப்புடனும் வலையில் எழுத எப்படி நேரம் கிடைக்கின்றது உங்களுக்கு?
அர்த்தம் உள்ள பாட்டய்யா, பெண்ணீயம் மக்கள் வந்து கும்ம போறாங்க..
கானா, நல்ல பதிவுங்க. இதுமாதிரி நிறைய பதிவிடுங்க..
//சோ றற சோ...... கானா சோ றற சோ//
பித்தன், அதைத் தான் கானா அலுவலக்த்துல பண்றாரே.. :) ஆக மொத்தத்துல குடும்பமே சோ றறா சோ..
என்னமோ போங்க, வ.வா.சவில் சோகக்கதை எல்லாம் போடலாமா?
//, வ.வா.சவில் சோகக்கதை எல்லாம் போடலாமா?//
உண்மைய சொன்னா சோகக்கதைங்களா?
//ILA(a)இளா said...
அர்த்தம் உள்ள பாட்டய்யா, பெண்ணீயம் மக்கள் வந்து கும்ம போறாங்க.. //
இதுக்கும் உஷாக்கா உங்க பின்னூட்டத்துக்கும் ஏதும் சம்பந்தம் இல்லியே ..
இளா, கானாபிரபாவின் தனிப்பட்ட கண்ணீர் காவியத்தை, பொது பிரச்சனையாக்கி, குளிர்காய நினைக்கும் உங்கள்
நுண்ணரசியல் நன்கு புரிகிறது :-)
//ஜோதிபாரதி said...
வாழ்த்துக்கள்!!!
எங்கு பிடித்தீர்கள் இந்த கானத்தை?//
மிக்க நன்றி ஜோதி பாரதி
இதெல்லாம் ரொம்ப காலத்துக்கு முன் சேகரித்த ஒலிநாடாக்களில் ஒன்று.
// தமிழ்பித்தன் said...
சோ றற சோ...... கானா சோ றற சோ//
எனக்கேவா ;-)
//ILA(a)இளா said...
பித்தன், அதைத் தான் கானா அலுவலக்த்துல பண்றாரே.. :) //
அலுவலகத்தில் டேமேஜர் தான் இதை நமக்குப் பண்ணுவார் இளா ;-)
// வசந்தன்(Vasanthan) said...
"என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா"
எண்ட பல்லவியை ஒவ்வொரு சரணத்துக்குப்பிறகும் பாடிக்கொண்டிருக்கிறது அலுப்பாக் கிடக்கு.//
இது தாலாட்டுப் பாட்டு எண்டுறத அடிக்கடி நினைவு படுத்துறார் அவர்.
//வந்தியத்தேவன் said...
பாடுகின்ற பாடகர் நீங்கள் தானே பிரபா? இந்தக் குழந்தை பராமரிப்புடனும் வலையில் எழுத எப்படி நேரம் கிடைக்கின்றது உங்களுக்கு?//
என்னக் கொடும சார்? நான் பாடினா குழந்தை எழும்பி ஓடிவிடும்.
///ILA(a)இளா said...
அர்த்தம் உள்ள பாட்டய்யா, பெண்ணீயம் மக்கள் வந்து கும்ம போறாங்க..
கானா, நல்ல பதிவுங்க. இதுமாதிரி நிறைய பதிவிடுங்க..//
வாங்க இளா
நம்ம கடமையைத் தானே செஞ்சோம் ;-)
//ramachandranusha(உஷா) said...
இளா, கானாபிரபாவின் தனிப்பட்ட கண்ணீர் காவியத்தை, பொது பிரச்சனையாக்கி, குளிர்காய நினைக்கும் உங்கள்
நுண்ணரசியல் நன்கு புரிகிறது :-)//
உஷாக்கா
எனக்கு இந்த நிலை இன்னும் வரவில்லை, ஆனாலும் விதியை யாரால் வெல்ல முடியும் ;-)
பாட்டு சூப்பர் ,பிரபா மாம்ஸ்:)
கவிஞருக்கு கனமான பாதிப்பு போலிருக்கு..
Come on Mohan, come on..don't cry
mummy will be here in a minute
சோ றற சோ...... றோகன் சோ றற சோ
எண்ட மிஸ்ஸிச் வீட்டிலிருக்கா
ஒர்க்குக்குப் போகாமல் ஓசியில் தின்பா
சலறி கொண்டு வீட்டில் கொடுத்தா
பழைய சோறும் ஊறுகாயும் தருவா
அஞ்சு மணிக்கு வேல விட்டு வந்தா
வீட்டில் றோகன் அழுதிட்டு இருப்பான்
அம்மா எங்கே என்று கேட்டா
பக்கத்து வீட்டை பாத்திட்டு அழுவான்
//ரசிகன் said...
பாட்டு சூப்பர் ,பிரபா மாம்ஸ்:)//
மாப்ளே
நீங்க சொன்னா சரிதான் ;-)
//சிறில் அலெக்ஸ் said...
கவிஞருக்கு கனமான பாதிப்பு போலிருக்கு..//
வாங்க சிறில்
பதிலுக்கு நீங்களும் பாட்டாவே படிச்சிட்டீங்களா, கலக்கல் ;0
இந்தப் பாட்டைக் க்ளாசிக்கலில் சேக்குறதா இல்ல கானாவில் சேக்குறதா-ன்னு இன்னும் ரோசிச்சிக்கிட்டு இருக்கேன்!
கானா அண்ணாச்சி பாடியது கானா மாதிரி தான் இருக்கு!
ஆனா சிறில் அண்ணாவின் எதிர்ப்பாட்டு தான் க்ளாசிக்கல் டச் தருது! :-)))
ஆஹா, கடைசீல நானே பாடியதா முடிவெடுத்தாச்சா ;(
சேமிப்பில் வைத்திருந்ததைப் பகிர்ந்தேன். அம்புட்டுத்தேன் ;)
that was a good one :-)
வருகைக்கு நன்றி யாத்திரிகன்
Post a Comment