Tuesday, April 15, 2008

யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி


வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு முன்பே, தாய்நாட்டில் வாழா வெட்டி வாலிபர் சங்கம் அமைத்து குட்டிச் சுவர் மாநாடெல்லாம் நடாத்தியிருந்தோம் என்று முந்திய பதிவில் சொல்லியிருந்தேன். இந்தப் பதிவில் நம்மூர் காதல் வட்டாரங்களில் புழங்கும் சில கலைச் சொற்களின் அரும் பொருளைத் தரலாம் என்று முடிவு கட்டியிருக்கிறேன். சரி ஒவ்வொன்றாக நினைவில் நிற்பவையைச் சொல்கின்றேன் ;-) விடுபட்டவை பின்னர் வரும்.

1. காய் - பிகரு, பொண்ணு
2. எறிதல் - சைட் அடித்தல்
3. காய் பார்த்தல் - பிகரை சைட் அடித்தல்
4. சுழட்டல் - பிகர் ஏரியாவில் ரவுண்ட்ஸ்
5. காயிதம் - லவ் லெட்டர்
6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்
7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்தல்
8. வில்லன், நம்பியார் - காதலியின் அப்பா, அண்ணன்
9. வில்லி - காதலியின் அக்கா
10. தேவதாஸ், ராஜேந்தர் - காதலில் தோற்றவர்
11. சரக்கு - வடிவான (அழகான) பெண்களை அழைக்கும் பொது வார்த்தை


சந்திக்கும் இடங்கள்
1. டியூசன் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வரும் நேரம்.
2. கோயில் திருவிழா காலங்கள்
3. காய் (பிகர்) வீட்டின் வெளிக் குந்தில் (திண்ணையில்) காத்திருக்க,
சைக்கிளில் மாம்ஸ் ரவுண்ட் அடிப்பார்.
4. பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்
5. கிடுகுவேலி மறைப்புக்கள்

குண அம்சங்கள்
நிறைய மனோ, சித்ரா ஜோடிப்பாடல்கள் கேட்டல் - அண்ணன் சந்தோசமா இருக்கிறார் எண்டு அர்த்தம்

இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை எண்டு அர்த்தம்

நிறைய ஆனைக்கோட்டை நல்லெண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.

தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.

40 comments:

ஆயில்யன் said...

//சுழட்டல்//
நல்லா இருக்கே :)

//இளையராஜா, டி.ராஜேந்தரின் தனிப்பாடல்கள் கேட்டல் - அவவை (காதலியை) சந்திக்கேல்லை அண்டு அர்த்தம்
//

சந்திக்கவில்லை அல்லது காதல் அவர்களை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும் :) (எல்லா இடத்துலயும் இப்படித்தான் தமிழ் சினிமா ஃபீல் பண்ண வைச்சிருக்கு!!)

கொழுவி said...

செல்லாது செல்லாது
இது பழைய சிலபஸ்

கானா பிரபா said...

வாங்க ஆயில்யன்

சந்திப்பு என்பதை விட, காதலியை காணாவிட்டால் இப்படிப் பாட்டு அதிகம் கேட்பாங்க, ஒருதலைக் காதல் என்றாலும் கூட ;-)

ILA (a) இளா said...

:))
எங்கே போனாலும், இதுதான் அடித்தளம் போல இருக்கே.

ரசிகன் said...

//நிறைய எண்ணை வைத்து தலையை பக்கவாட்டில் இழுத்தால் - "படிப்பு தான் முக்கியம், அப்பா, அம்மா பேசிச் செய்த கல்யாணம் தான் கட்டுவன்" இப்படி வசனம் பேசும் பெடியன்.

தலைக்கு ஜெல் வைத்து மேவி இழுத்தால் - காதல் பூப்பூக்கும் பருவம்.//

அடடா... பிரபா மாம்ஸ் இதுலல்லாம் phd பண்ணவராச்சே:P
ரொம்ப அனுபவம் போல:))))))

ரசிகன் said...

//9. வில்லி - காதலியின் அக்கா//

அவ்வ்வ்வ் எங்க ஊர்லல்லாம், காதலியின் அக்காவுக்கு 3 வயசுக்குள்ள வித்தியாசம் தான் இருந்தா
பெரிய காதலியாக்கும்:P


வில்லன்:காதலியின் அண்ணன்.

கானா பிரபா said...

//கொழுவி said...
செல்லாது செல்லாது
இது பழைய சிலபஸ்//

தம்பி

பழைய சிலபஸ் தான் கடினமானது. இப்ப ஈசியாம் ;-)

CVR said...

வளரட்டும் உங்கள் கலைச்சேவை... :P

வசந்தன்(Vasanthan) said...

நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

வந்தியத்தேவன் said...

ஆஹா அந்தக்கால வார்த்தைகள். சுழட்டப்போவது காய்பார்க்கபோவது. எறிவது என என்னைப் பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள். என்னதான் இன்ரெர்னெட் ஈமெயில் வந்தாலும் சைக்கிளில் கிடுகுவேலிக்கு மேலால் வேண்டிய பெண்ணைப் பார்க்கும் அந்த சுவைக்கு நிகர் எதுவும் இல்லை.

ILA (a) இளா said...

//செல்லாது செல்லாது
இது பழைய சிலபஸ்//
சிலபஸ் மாறினாலும் பரீட்சையும், மதிப்பெண்ணும் அதேதானுங்களே கொழுவி.

மு. மயூரன் said...

மேலே இருக்கும் அமலா படம், மனோ - சித்திரா - மனோ- ராஜேந்தர் இப்படியாக உங்களுக்கு வயசு போய்விட்ட கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ;-)

எங்களூரில் (திருக்கோணமலை) தற்போது "நிலவும்" வார்த்தைகளோடு "ஓப்பீட்டு ஆய்வு" செய்ததில் இதோ diff report:

//6. அவர், அத்தான் - காதலனைப் பிரியமாக அழைத்தல்
7. அவ, என்ரை ஆள் - காதலியைப் பிரியமாக அழைத்த//

காதலி, தன் காதலனை அவர் என்று மரியாதையாகக்கூப்பிடும் வழக்கமே கிடையாது. அப்படி அவர் என்று கூப்பிட்டால் சர்வ நிச்சயமாக அந்த ஆண் அவள் காதலனாக இருக்க முடியாது.
பெரும்பாலும் பெண்கள், "அவன்", "அது" என்று யாரையும் அடிக்கடிச்சொன்னால் அந்த ஆள் தான் அவட "ஆள்".

ஆணுக்கு அவள் "அவள்" தான்.

//4. பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்//

இங்கே சந்திப்பதா? அப்படி ஒரு வாய்ப்பே கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. எப்படி இது முடிகிறது யாழ்ப்பாணத்தில்?

சந்திக்கும் முக்கியமான இடங்கள்:
(ஊரிலிருக்கும் தம்பி தன் காதலியை/களை சந்திக்கும் இடங்கள்)

1. Net Cafe
2. கோயில்
3. ஒதுக்குப்புறமான "கூல் ஸ்பொட்" கள்
4 நண்பன் வீடு

ஆனா இப்ப எல்லாம் அங்கே ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் அவரவர் வீடுகளுக்கே நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு போய்ப் பார்த்துவிட்டு வரக்கூடிய சூழல் இருப்பதால் ஒதுக்குப்புறங்களும் இருட்சந்துகளும் மார்க்கெட் இழந்துவிட்டன.

கொஞ்சம் துணிச்சலானவர்கள் நிலாவெளி Beach Hotel க்கு கூட்டிக்கொண்டு போவார்கள்.

கானா பிரபா said...

//ILA(a)இளா said...
:))
எங்கே போனாலும், இதுதான் அடித்தளம் போல இருக்கே.//


வாங்க இளா

ஆயிரம் மன்னர்கள் வருவார்கள் போவார்கள், வால்கா நதி ஒன்று தான் ;-)
இப்போ நம்ம அடுத்த தலைமுறை தமிழ் சினிமாவில் உபயோகிக்கும் வார்த்தையையே பாவிக்கிறாங்களாம்.

கானா பிரபா said...

//ரசிகன் said...
அடடா... பிரபா மாம்ஸ் இதுலல்லாம் phd பண்ணவராச்சே:P
ரொம்ப அனுபவம் போல:))))))//


மாம்ஸ்

என்னை விட டபுள் பிஹெச்டி வாங்கினவாங்க நிறையப்பேர் ;-)

அக்கா ரேஞ்செல்லாம் கிடையாது, தங்கச்சி ஓகே

//CVR said...
வளரட்டும் உங்கள் கலைச்சேவை... :P//


கா.கவிஞரே

உங்க அனுபவத்தையும் சொல்றது ;-))

//வசந்தன்(Vasanthan) said...
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.//

இஞ்சை பாற்றா, பால்குடி மாறா பாலகனை ;-), உங்கட காலத்துக் கலைச்சொற்களையும் சொல்லுங்கோவன்.

சினேகிதி said...

பிரபாண்ணா நீங்கள் இப்பவும் எப்பவும் இளையராஜா பாட்டு கேக்கிறீங்கள் அப்பிடி என்டால்---

சரக்கு என்றா அங்கயும் சொல்றனீங்கள்??

காதலனையம் அவர் அத்தான் கணவனையும் அப்பிடித்தானே சொல்லினம்??

இப்ப எல்லாம் பெடியங்கள் அவள் என்ர ஆள் என்றெல்லாம் சொல்றேல்ல :-))

\\பள்ளிக்கூட விளையாட்டு மைதானம்\\

எத்தின அண்ணாமார் எங்கட பள்ளிக்கூட விளையாட்டு மைதான மதில்ல தவமிருக்கிறவை பிறகு குட்டி கல்லால எல்லாம் எறிவினம்:-))

சினேகிதி said...

\\//வசந்தன்(Vasanthan) said...
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.//

இஞ்சை பாற்றா, பால்குடி மாறா பாலகனை ;-), உங்கட காலத்துக் கலைச்சொற்களையும் சொல்லுங்கோவன்.
\\

இதோடா ஏன் வசந்தனண்ணாட காலத்துக்கும் உங்கட காலத்துக்கும் நிறைய வித்தியாசமோ?

கோபிநாத் said...

தெய்வமே....;)))

Haran said...

நீங்கள் பாடசாலை விளையாட்டுத் திடலிலெல்லாம் சந்தித்துப் பேசுவீங்களா... ஐயோ.... நம்மட ஊரில எல்லாம் ஒருத்தரோடை ஒருத்தர் சும்மா பேசினாலே கதை கட்டிப் போடுவங்கள்... அது மட்டுமில்லை.... ரீச்சர் மார் அடிச்சுத் துவச்சுப் போடுவினம்...

//வசந்தன்(Vasanthan) said...

நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.//

வசந்தனுக்கு என்ன பச்சப் பாலகன் போல் நடிப்பு வேண்டிக் கிடக்கு... :P ஒண்டுந் தெரியாத சின்னப்பாப்பா மாதிரி... விட்டால் ஒரு சின்னப் பாப்பாவே குடுப்பாங்கள்...

கானா பிரபா said...

// வந்தியத்தேவன் said...
ஆஹா அந்தக்கால வார்த்தைகள். சுழட்டப்போவது காய்பார்க்கபோவது. எறிவது என என்னைப் பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள்.//

இப்பவும் அங்காலை தானே நிக்கிறியள், ஒரு ட்றை குடுக்கிறது தானே?

சிறீ மாஸ்டர் ( கொமேர்ஸ்) சொல்லுவார், மாடு பிடிக்க இணுவிலிலை இருந்து வந்திட்டாங்கள் எண்டு ;-)

சயந்தன் said...

சிறீ மாஸ்டர் ( கொமேர்ஸ்) சொல்லுவார்,//

கொமர்ஸ் எண்ட உடனை எனக்கு கன விசயங்கள் நினைவுக்கு வருது :(

அது கிடக்கட்டும். கடலை போடுதல் எண்ட சொல்லுக்கு யாழ்ப்பாண வழக்கு என்னெண்டு தெரியுமோ ?

Jay said...

நான் கூட இப்பெல்லாம் ஜெல் வைச்சுத்தான் தலை இழுக்கிறன். அதுக்காண்டி என்னையும் அப்பிடியென்டு சொல்றீங்களா?

Jay said...

@மு.மயூரன்
பயங்கரமா அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்கள்? எந்த நெட்கபேயில சந்திப்பீங்க.. அடுத்த முறை நானும் வந்து பாக்கிறன்!!!

அதைவிட இன்னொரு சொல்லும் சொல்லுவார்கள் யாழ்ப்பாணத்தில்: மணிச்சரக்கு!!!

இராம்/Raam said...

ஹி ஹி... நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.... :)

பகீ said...

கானா பிரபா அண்ணை,
கொழுவி சொன்ன மாதிரி பழைய சிலபஸ்தான். இப்ப புது சிலபஸ்தான் கஸ்டம் தெரியுமோ...

மயூரன் இங்கை நெட்கவே இருந்தாதானே போய் சந்திக்க. விளையாட்டு மைதானத்தில பாடசாலைக்காதல்.
புது சிலபஸ் படி சந்திக்கிற இடங்கள்
1. றியோ
2. கோசி
3. நல்லூர்

மயூரேசன் மணிச்சரக்கு எண்டு காதலியை சொல்லுறேல்ல , நல்லா இருக்கிற எல்லாரையும்...

கானா பிரபா said...

//மு.மயூரன் said...
மேலே இருக்கும் அமலா படம், மனோ - சித்திரா - மனோ- ராஜேந்தர் இப்படியாக உங்களுக்கு வயசு போய்விட்ட கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ;-)//

மயூரன்

அடி மடியிலை கை வையாதேங்கோ ;-) எனக்கு தியாகராஜ பாகவதர் பாட்டும் பிடிக்கும்.

பள்ளிக்கூட மைதானம் என்பது விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் நடக்கும் நாட்களில் தான் வாய்ப்பு அதிகம். அப்ப வாத்திமாரும் கவனிக்காயினம்.
யாழ்ப்பாணத் தமிழ் எண்டே நான் நிண்டிட்டன். எனக்குத் தெரியும் மற்றப் பிரதேசங்களில் சொல்லாடலும் வேறுபடும் என்று. திருமலையின் நிலவரங்களைச் சொன்னதுக்கு நன்றி ;-)


//உண்மை! விவரம் அறிய கனடாவின் blog' க்கு வாருங்கள்! "http://canadathatstamil.blogspot.com///

ஆஹா, நம்ம பதிவுக்கு விளம்பரதாரர் ஆதரவு எல்லாம் நடக்குதா ;-) வருகிறேன் நண்பரே


///சினேகிதி said...
பிரபாண்ணா நீங்கள் இப்பவும் எப்பவும் இளையராஜா பாட்டு கேக்கிறீங்கள் அப்பிடி என்டால்---//

தங்கச்சி

எப்பவும் இளையராஜாதான் கதி ;-)
மைதானக் கூத்துக்களை வச்சுக் கதை கதையா எழுதலாம் கண்டியளோ.

//கோபிநாத் said...
தெய்வமே....;)))//

தல

ட்ரெயினிங் ஏதாவது தேவையா ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
பாடசாலை வாழ்வு முடிந்து வேலைசெய்யும் போதும்; இந்த வகையறாச் சேட்டைகள் இருப்பது இயல்பு;
மலையகத்தில் வேலைசெய்யும் போது நீங்கள் குறிப்பிடும் சொற்கள் பலர் புரியக்கூடியதாகவும் இருந்ததால்
நாம் நண்பர்கள் புதிய சொல்லாக பெண்பிள்ளைகளுக்கு "கார்" எனும் சொல்லைப் பயன்படுத்தினோம். வயது அழகுக்குத் தகுந்த வகையில் ஸ்ரீ கொடுப்போம் அதாவது 2ஸ்ரீ ;3ஸ்ரீ இப்படி... அந்த மாதிரிக் கார் மச்சான்
கண்ணைமூடிக் கொண்டு 3 ஸ்ரீ போடலாம் என்றால் பிள்ளை நல்ல அழகு எனப் புரிய வேண்டும்.
....உன்ர காரைக் கண்டேன் எனில் உன் காதலியைக் (ஒரு தலையாகவும் இருக்கலாம்) கண்டேன்.அது ஒரு காலம் ....
அந்தக் காரெல்லாம் இப்போ றொறியாக இருக்கும் என்னைப்போல்.

கானா பிரபா said...

// Haran said...
ஐயோ.... நம்மட ஊரில எல்லாம் ஒருத்தரோடை ஒருத்தர் சும்மா பேசினாலே கதை கட்டிப் போடுவங்கள்...//

தம்பி

சாவகச்சேரி கொஞ்சம் ஸ்ரிக்ட் போல ;-)

// சயந்தன் said...
கொமர்ஸ் எண்ட உடனை எனக்கு கன விசயங்கள் நினைவுக்கு வருது :(//

விசயங்களை மனசுக்குள்ள போட்டு வைச்சால் கண்ட கண்ட வருத்தம் வருமாம், எங்களுக்கும் சொல்லுங்கோவன்.

//Mayooresan said...
நான் கூட இப்பெல்லாம் ஜெல் வைச்சுத்தான் தலை இழுக்கிறன். அதுக்காண்டி என்னையும் அப்பிடியென்டு சொல்றீங்களா?//

இதுவரைக்கும் அப்படி நான் நினைக்கேல்லை மயூரேசன், இப்ப கொஞ்சம் டவுட்டாத் தான் இருக்கு ;-)

//இராம்/Raam said...
ஹி ஹி... நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்.... :)//

வாங்க ராம்

பக்கம் பக்கமா எழுதினா எட்டிப்பார்க்க மாட்டாங்க, இப்ப பாருங்க ஆளாளுக்கு வந்து டிப்ஸ் கொடுக்கிறாங்க ;-)

கானா பிரபா said...

//பகீ said...
இப்ப புது சிலபஸ்தான் கஸ்டம் தெரியுமோ
மயூரன் இங்கை நெட்கவே இருந்தாதானே போய் சந்திக்க. விளையாட்டு மைதானத்தில பாடசாலைக்காதல்.
புது சிலபஸ் படி சந்திக்கிற இடங்கள்
1. றியோ
2. கோசி
3. நல்லூர்//


புது சிலபஸ் ஈசி எண்டு அனுபவஸ்தர்களே எனக்கு சட்டிலை வந்து சொன்னவை. றியோ, நல்லூர் எல்லாம் பழைய சிலபஸ் அப்பு, கூடவே கல்யாணி கிறீம் ஹவுஸ் இன் மறைவான பக்கமும் அடக்கம்.

கோசிக்கும் போறனீங்களே, அது என்ர கூட்டாளியின்ர தான். ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்கோ ;)

கானா பிரபா said...

//சயந்தன் said...
அது கிடக்கட்டும். கடலை போடுதல் எண்ட சொல்லுக்கு யாழ்ப்பாண வழக்கு என்னெண்டு தெரியுமோ ?//

எங்கட ரைமிலை கடலை போடுதலுக்கு நிகரான கலைச் சொல் "சல் அடிக்கிறது".


// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
பாடசாலை வாழ்வு முடிந்து வேலைசெய்யும் போதும்; இந்த வகையறாச் சேட்டைகள் இருப்பது இயல்பு;//

யோகன் அண்ணா

நீங்கள் சொன்ன விடயங்கள் புதிதாக இருந்தன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ரெக்னிக்மாறுபடும் போல. எங்கட காலத்தில் சிறீ எண்ட இலக்கமே காரில் இருக்காது.

வி. ஜெ. சந்திரன் said...

//அது கிடக்கட்டும். கடலை போடுதல் எண்ட சொல்லுக்கு யாழ்ப்பாண வழக்கு என்னெண்டு தெரியுமோ ?//

வாளி வைத்தால், சள் அடித்தல்.....

வாளி வைத்தல் அதிகம் புழங்கிய சொல்.

Anonymous said...

வயசு ஆன கிழவர்கள் எல்லாம் லவ்ஸ் அகராதி எழுதினால் இப்படிதான் பழைய மொக்கையா எழுதுவாங்க...
;)

U.P.Tharsan said...

என்னத்த சொல்லுரது என்டே தெரியல..

//கோசிக்கும் போறனீங்களே, அது என்ர கூட்டாளியின்ர தான். ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்கோ ;)//

இது வேறயா? இது உங்கட கூட்டடாளிக்கு தெரியுமா?

கானா பிரபா said...

//வி. ஜெ. சந்திரன் said...

வாளி வைத்தால், சள் அடித்தல்.....

வாளி வைத்தல் அதிகம் புழங்கிய சொல்.//


சல் அடித்தல் எண்டு எங்கட காலத்திலை சொல்லுவம், சள் எண்டு பின்னர் மருவியிருக்கலாம் ;)


// துர்கா said...
வயசு ஆன கிழவர்கள் எல்லாம் லவ்ஸ் அகராதி எழுதினால் இப்படிதான் பழைய மொக்கையா எழுதுவாங்க...
;)//


எடுடா அந்த அரிவாள

ஆ.கோகுலன் said...

சே.. இப்பிடி ஒரு பதிவைப்போட்டு அநியாயத்துக்கு கனபேரை ரென்சனாக்கி போட்டியள்..!!
//மேலே இருக்கும் அமலா படம், மனோ - சித்திரா - மனோ- ராஜேந்தர் இப்படியாக உங்களுக்கு வயசு போய்விட்ட கதையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்//
ம்.. ம்.. ''''வாலிபர்'''' சங்கத்தை விட்டு உங்களை விலத்திறதுக்கான சதி முயற்சி இது. மயூரன் கட்டதொரையோட ஆளோ தெரியேல்லை. எதுக்கும் அவதானமாயிருந்து இப்படி வயசை தெரியப்படுத்தக்கூடிய வரிகளிலை கொஞ்சம் டை அடிச்சு எழுதுங்கோ..
இந்த அமளிக்குள்ள கனடாக்காரர் சைக்கிள் கேப்ல அசோக் லேடனே ஓட்டியிருக்கிறார்.
மற்றது.. இந்த சந்திக்கிற இடங்களிலை ரியூற்றறிகளில் நடக்கும் சரஸ்வதி பூசையை விட்டுட்டிங்கள். ஒவ்வொரு வருஷமும் ஓ.எல் காரர் தான் அனேகமாய் இந்த பூசைக்கு இன்சார்ஜ் ஆக இருக்கிறது. டீன் ஏஜ் வேற.. இந்த நேரங்களில கனடா அன்பர் மாதிரி அசோக் லேடனென்ன.. ஏரோப்பிளேனே ஓடியிருக்கினம்.
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண வச்சதுக்கு நிரம்ப தாங்ஸ் கானாபிரபா.. அண்ணா..!!! :-)))

Anonymous said...

//எடுடா அந்த அரிவாள//
இந்த மாதிரி பழைய அகராதி எல்லாம் போட்டு எங்களைக் கொலைப் பண்ணிய உங்களை நீங்களே அரிவாளால் தற்கொலை செய்து கொள்ள கூடாது.இது எல்லாம் வாழ்க்கையில சகஜம் ;)
உங்களை மனிச்சு விட்டுறேன்...பொழைச்சு போங்க

கானா பிரபா said...

// U.P.Tharsan said...
என்னத்த சொல்லுரது என்டே தெரியல.. //

சொல்றதைக் கெதியாச் சொல்லுங்கோவன் ;-)

கோசிக்கு போனவைக்கு தெரியும்.


//ஆ.கோகுலன் said...
சே.. இப்பிடி ஒரு பதிவைப்போட்டு அநியாயத்துக்கு கனபேரை ரென்சனாக்கி போட்டியள்..!!//

அதெல்லாம் இருக்கட்டும், முடியேக்கை ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டியள்

//துர்கா said...

இந்த மாதிரி பழைய அகராதி எல்லாம் போட்டு எங்களைக் கொலைப் பண்ணிய உங்களை நீங்களே அரிவாளால் தற்கொலை செய்து கொள்ள கூடாது//

அதைத் தான் இப்ப செய்யலாம்னு முடிவு :(

Anonymous said...

பிக்கப் எஸ்கேப் என்று விவேக் வழியில் இருக்கிற எங்களை தவறான வழியில் மாற்ற முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழ்வலையுலக இளையோர் அமைப்பு

வந்தியத்தேவன் said...

//இப்பவும் அங்காலை தானே நிக்கிறியள், ஒரு ட்றை குடுக்கிறது தானே?
//
ஏன் ஐயா நான் ஒழுங்காக இருக்கிறது பிடிக்கவில்லையோ!!!
எங்கட இடத்திலை கோயில் திருவிழாவைத் தவிர கடற்கரைப்பக்கமும், வல்லை வெளியிலும் சிலர் சந்திக்கின்றவை. பொதுவாக வல்வெட்டித்துறைய்லிருந்து பருத்தித்துறை முனைவரை உள்ள கடற்கரையில் ஒரு ஜென்ட்ஸ் சைக்கிளும் ஒரு லேடிஸ் சைக்கிளும் நிண்டால் தெரியும் ஆரோ கடற்காற்று வாங்க வந்திருக்கிறார்கள் என்று. சில பொடியள் அந்த லேடிஸ் சைக்கிளை வைத்தே சொல்வார்கள் யார் பெட்டை என்று. அப்படியே அங்காலை வல்லை வெளிப்பக்கம் இருக்கின்ற பொடிசுகள் அப்படியே வல்லைவெளியில் நல்ல இடமாப்பாத்து நிற்கிறவர்கள். இதெல்லாம் ஒரு 15 வருடத்துக்கு முந்தின காலத்தில் ந்டக்கின்ற நிகழ்ச்சி.

அப்போ ஊரிலை ஹைலைட்டான விடயம் என்னவென்றால் பொடியன் பெட்டைக்கு திருவிழாவிலை ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுப்பதுதான் . அதிலையும் பொடியன் சுத்துகின்றகாலத்திலை ஐஸ்கிறீம் வாங்கிக்கொடுத்தால் அந்தப் பெட்டையும் வாங்கிச்சுதோ என்றால் தெரியும் ஆள் விழப்போகின்றது என்று.

அப்படியே தற்கால அகராதி ஒன்றையும் போடுங்கள். கொழும்பிலை எங்கே எங்கே சந்திக்கின்றார்கள் என்பதையும் யாராவது கூறுங்கள்.

Anonymous said...

சந்திக்கும் இடங்கள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மாறாது போல (ராஜேந்தர் பாடல்கள் போல)

அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

கானா பிரபா said...

//பிக்கப் எஸ்கேப் என்று விவேக் வழியில் இருக்கிற எங்களை தவறான வழியில் மாற்ற முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்

தமிழ்வலையுலக இளையோர் அமைப்பு//

ஹாய் ஹாய் ஹாய்,
கண்டுக்காதீங்க வீட்டுடுங்க ;-)


//வந்தியத்தேவன் said...
ஏன் ஐயா நான் ஒழுங்காக இருக்கிறது பிடிக்கவில்லையோ!!!//

வந்தி

இதை மாதிரி சைக்கிளை விட்டுட்டு ஒதுங்கிப் போய் காதல் பேசும் இடங்கள் நிறைய இருக்கு. கதை கதையா எழுதலாம் கண்டியளோ

//சந்திக்கும் இடங்கள் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் மாறாது போல (ராஜேந்தர் பாடல்கள் போல)

அன்புடன்
கே ஆர் பி //

வாங்க கே.ஆர்.பி

இண்டர் நெட் யுகத்திலும் மாறாது ;-)