Thursday, July 5, 2007

கமிட் ....வித் நிமிட்ஸ்...

இந்த நிமிட்ஸ் வந்தாலும் வந்துச்சி அம்புஜம் மாமி அலம்பல் தாங்கலை.

'தங்கமணி மாமாவுக்கு கெய்டு போஸ்ட் கெடச்சிருக்குடி'

ஏதோ பிரதீபா பாட்டிலுக்கு பதிலா இவரப் பிரசிடெண்ட் ஆக்கிட்டா மாதி பீத்திக்கிட்டா.
'என்ன விஷயம் மாமி'

நிமிட்ஸ் வந்து நம்ம ஹார்பர்ல தங்குது இல்ல.அதுல வர்ரவா எல்லோரையும் அழைச்சிப் போய் தமிழ் நாட்டுல முக்கியமான எடத்தை எல்லாம் சுத்திக் காட்டனுமாம்.அதுக்கு ஒரு குரூப்புக்கு மாமா கெய்டாம் வேண்டாம்னாக்கூட மாமா வந்தே ஆகனும்னு சொன்னாளாம்'

அந்த ஃபாரினர்ஸோட சுத்தனும்னு ஒரு புரோக்கர் கால்ல விழாத குறையா நாலு குவார்ட்டர் வாங்கிக் குடுத்தார்னு அப்புறமா பால்கார கோயிந்து சொன்னான்.

'தங்கமணி பிச்சுவோட சட்டை ரெண்டு குடு.மாமா திரீ ஃபோர்த் [3/4] பேண்ட்டும் ஷார்ட் சட்டையும்தான் போட்டுப் போனம்னு சொன்னார்.'

'மாமி இது ஓவராயில்ல .மாமாவோட டிரஸ்ஸே போட்டா என்ன?'

'அதப் போட்டுட்டு அம்மாஞ்சி மாதிரி போனா நல்லாயிருக்காதுடி.மாமா பேசற இங்கிலீஸ்ல வெள்ளக்காரனே மிரளுவான் [;(??????].டிரஸ்ஸும் அப்படி இருக்கனும்' என்றாள்.

மாமி சொன்ன காஸ்ட்யூம்ல மாமாவப் பாத்தபோது எனக்கே பாவமாயிருந்தது.
அந்த காலத்து சந்திரபாபு பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருந்தார்.

மாமி ஆரத்தி எல்லாம் எடுத்து பொட்டெல்லாம் வச்சி விட்டாள்.

'மாமி 'நிமிட்ஸ் 'போர்க் கப்பல்தான் ஒத்துக்கிறேன்.அதுக்காக மாமா ஏதோ போருக்குப் போற மாதிரி வீரத்திலகம் வச்சி அனுப்பறீங்க.அவர் ஊரைச் சுத்திக் காட்டத்தானே போறார்.'

'இருக்கட்டுமேடி.வெளி நாட்டிலேர்ந்து வந்தவங்களுக்கு நல்லபடியா வில்லங்கம் இல்லாம ஹெல்ப் பண்ணனுமில்ல'

மாமா கிளம்பினதுக்குப் பிறகு மாமி மணிக்கு ஒருதரம் ஃபோன் போட்டு மாமா எங்கயிருக்கார் என்ன பண்றாருன்னு கேட்டு எல்லோருக்கும் லைவா ஒலி பரப்பிக்கிட்டிருந்தாள்.

மறுநாள் மாமி கொஞ்சம் கலவரமாயிருந்தாள்.

'என்ன மாமி நேத்து இருந்த சந்தோசத்தைக் காணோம்'

'தங்கமணி மாமா அழைச்சிண்டு போற குரூப்புல எல்லாம் பொம்மனாட்டியாம்டி'

அதனாலென்ன மாமி.யாராயிருந்தா என்ன அவங்க நம்ம நாட்டு கெஸ்ட்டுங்க'

'இல்லடி மேல் நாட்டுப் பொண்ணுங்கல்லாம் ரொம்ப சோஷியல் டைப்பு'

'சோ வாட்?மாமி அவங்க நாட்டுல எப்படியிருந்தாலும் வந்த இடத்துல மரியாதையா இருப்பாங்க.நாமே இப்படிச் சொல்றது தப்பு'

'என்னமோடி நீ சொல்றது சமாதானம் ஆகலை எனக்கு'

'சரி அவங்க எப்படியிருந்தா என்ன மாமா மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கில்ல' என்றதும் அடங்கினாள்.

அடுத்த நாள் மாமி அரக்கப் பறக்க வந்தாள்.

மாமா அவங்களுக்கெல்லாம் ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம்னு சொன்னாராம்.
'ரொம்ப நல்ல விஷயம் மாமி.அவங்களும் நம்ம சாப்பாடு சாப்பிட்டுப் பார்க்கட்டும்.ஆனா தயவு செஞ்சி அல்வா மட்டும் நீங்க செஞ்சிடாதீங்க'

'ஏண்டி நான் 'நிமிஷத்துல' அல்வா கிண்டிடுவேன்'

'ஆனா சாப்பிட்டப் புறம் அவங்க 'நிமிட்ஸ்'ல திரும்பிப் போக முடியாது.ஆஸ்பத்திரிக்கில்ல போகனும்'
'ஆனாலும் நீ ரொம்பத்தான் கலாய்க்கிறடி'

நானும் மாமிக்கு சமயலில் உதவ மாமா மதியம் லஞ்ச்க்கு அவருடைய டீமை அழைத்து வந்தார்.

மொத்தம் ஆறு பொண்ணுங்க மூனு பேர் ஒல்லியாகவும்,இரண்டு பேர் நடுத்தரமாகவும்,ஒரே ஒரு பெண் ரொம்பக் குண்டாகவும் இருந்தனர்.அவ பேரு காத்தரீனாம்.

கிட்டாஸ் கிட்டாஸ் னு மாமாவோடயே பேசிக்கிட்டிருந்தாள்.
'தங்கமணி பாருடி அவதான் இப்படி ஈஷிக்கிட்டிருக்கான்னா இந்த மனுஷனுக்கு புத்தி எங்க போச்சு'
'மாமி நீங்க பேசறதூ சரியில்லை.அவ பார்க்கத்தான் ஆளு அப்படீ வயசென்னமோ சின்னப் பொண்ணுதான்.அவங்க அப்படித்தான் விகல்பமில்லாமா பழகுவாங்க'

நான் சொன்னதை மாமி காது குடுத்தே கேட்கலை.

மாமாவுக்கும் போறாத நேரம் போலும்.
அவரோட டி.வி.எஸ்50 [ஞாபகம் இருக்கா கம்பெனியின் முதல் தயாரிப்பு] பார்த்த குண்டுப் பெண் காத்தரீன் அதுல ஒரு ரைடு போக ஆசைப் படனுமா?

மாமாவும் உதைத்து ஸ்டார்ட் பண்ண 25 வது உதைக்கு அப்புறம் அது உறும காத்தரீன் குதித்து ஏறி உட்கார்ந்ததும் வண்டி பேலன்ஸ் இழந்து சாய்ந்தது.

மாமா ஓடிப் போய் காத்தரீனைத் தாங்க மாமி கோபத்துடன் மாமாவை முறைக்க சட்டென்று மாமா கையை எடுத்து விட்டார்.

வண்டி கீழேயும் காத்தரீன் மேலேயும் விழுந்தனர்.
அப்புறமென்ன காத்தரீன் வெயிட் தாங்காம வண்டி நொறுங்க மாமா கோணி சாக்கு எடுத்து வந்து வண்டியைப் பொட்டலமாக் கட்டினார்.

ஓ சாரி வெரி சாரி என காத்தரீன் மாமாக் கையைப் பிடித்தபடி சொல்ல,

'போதும்டி எம்மா பரவாயில்லை வண்டி போனாப் போறது அவர் கையை விடு' என் மாமி சொன்னது புரியாமல் 'வாட்'என்றாள்.

நான் நிலையை சமாளித்து அவர்களை சாப்பிட அழைத்தேன்.

'இது என்ன' 'வாட் ஈஸ் திஸ்' 'சோ டேஸ்டி' என்றபடி ருசித்துச் சாப்பிட்டனர்.

விருந்து முடிந்ததும் ஒவ்வொருவராக மாமிக்கும் எனக்கும் கை கொடுத்து 'சோ நைஸ்' சோ டெலிஷியஸ்' தேங்க்யூ' என்று நன்றி கூற

காத்தரீன் மாமா கன்னத்தில் முத்தமிட்டு 'யூ ஆர் ய நைஸ் மேன் கிட்டாஸ் ஐ லைக் யூ வெரி மச் தேங்க்யூ ஃபார் யுவர் கம்பெனி 'என்றாள்.

மாமி முறைத்த முறைப்பின் உஷ்ணம் அணு உலைக் கதிர் வீச்சைவிட அதிகமாயிருந்தது.

அவர்கள் போனதும் 'மாமி இது அவங்களுக்கு சகஜம் நீங்க தப்பாக நினைக்காதீங்கன்னு' நான் சொல்லியும் கேட்கவில்லை.

ஒரு வழியா இன்னைக்கு[ 5ந்தேதி] 'நிமிட்ஸ்' ஹார்பரை விட்டிக் கிளம்பிடுச்சி.

மக்கள் நிமிட்ஸ மறந்துட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி அடுத்த பிரச்சனைக்கு ரெடியாகிட்டாங்க.

ஆனா மாமி வீட்டுல மட்டும் இன்னமும் நிலமை சகஜ நிலைக்குத் திரும்பலைன்னு கேள்வி.

17 comments:

துளசி கோபால் said...

:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) ஆக மாமிய விடறதா இல்ல நீங்க...

Unknown said...

நிமிட்ஸ் எந்தப் போர்ல்ல எந்த நாட்டு மேல எல்லாம் குண்டுப் போட்டுச்சோ தெரியல்ல... ஆனா மாமா குடும்பத்துல்ல நல்லாவே குண்டு வீசிட்டுப் போயிருச்சுன்னு தெரியுது.... :))

arun said...

etho palaya tamil comedy movie patha mathiri irunthuchu..

கதிரவன் said...

:-)

குட்டிபிசாசு said...

அக்கா,

பொளந்து கட்டுங்க!!

கோபிநாத் said...

சூப்பர் :))))

நாகை சிவா said...

பின்னி பெடல் எடுத்து இருக்கீங்க....

கண்மணி/kanmani said...

வாங்கக்கா துளசியக்கா,முத்துஅக்கா
மாமியை விட்டா நமக்கு ஏது கதி...:))

கண்மணி/kanmani said...

நன்றி தேவ்

டெல்பின் கண்மணி என்ன எழுதினாலும் நாலு வார்த்தை நல்லா சொல்லனும்னு நினைக்கும் உங்க நல்ல மனசு வாழ்க....அவ்வ்வ்வ்வ்வ் ஒரே ஃபீலிங்ஸ்

கண்மணி/kanmani said...

நன்றி அருண் ஏதோ காமெடின்னு [பழசோஒ புதுசோ] ஒத்துக்கிட்டா சரி.
பழசு டீஸெண்ட்டா இருக்கும் புதுசு ....ஆக்வேர்டா இருக்கும்.]

கண்மணி/kanmani said...

குட்டி பிசாசு,கோபி,கதிரவன் நன்றி

கண்மணி/kanmani said...

ஆகா புலியா இது ஒரு குத்தமும் சொல்லாம பின்னூட்டியது?ஏனுங்க கண்ணாடி போடாம பதிவு படிச்சீங்களா?

PPattian said...

நல்ல கற்பனை.. :))

அபி அப்பா said...

நானும் வந்துட்டேன்!

Anonymous said...

:)))))))))))

Anonymous said...

:)))))))))))