Sunday, July 1, 2007

மெசேஜ்னாலே..ச்சும்மா அதிருதில்ல

விதி வலியதுன்னு சொல்லுவாங்க.

அது 100/100 உண்மைங்கிறது இப்ப உங்க எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்.
தம்பிங்களா உங்க பாசத்துக்கு ஒரு அளவேயில்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

இல்லாட்டி வ.வா. சங்கத்துல இந்த [பாப்பா!!!!!!!]அக்கா வ அட்லஸ் 'வாலிபி' யா சேர்த்திருப்பாங்களா?

அது சரி ஆயிரம் ஸ்பேர் பார்ட்ஸ்ஸ நம்பி ஓடற வண்டின்னாலும் 'திருஷ்டி' கழிக்க ஒரு பூசணிக்கா ஓடைக்கறது சகஜம்.

அட தம்மாத்தூண்டு எலுமிச்சம் பழம் நசுக்கறதில்லயா?

அப்படி 'திருஷ்டி' கழிக்க நம்ம பதிவுகள்னு படிங்க.

என்ன கொடுமையிது சரவணா?[வாஜி?]

என்னோட சொந்தக்கார பசங்க ஒரு கூட்டமேயிருக்கு. சித்தப்பா பெரியப்பா,புள்ளைங்கன்னு
அவனுங்கல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு சொந்தம்தான்.

அதுல ஒரே ஒருத்தன் மட்டும் பத்தாப்புக்கு மேல படிப்பு ஏறாம பிசினஸ் பண்ண மத்தவங்க எல்லாம் பி.ஈ ..எம்.ஈ தான்.

இவனுங்களுக்கெல்லாம் காலேஜ்ல கேர்ள் பிரண்ட்ஸ் எக்கச் சக்கம்.

ஒரு ஃபங்ஷன் அது இதுன்னு ஒன்னா சேர்ந்தாங்கன்னா செம ரகளை.

அதுலயும் எந்நேரமும் 'பீப் பீப்'னு மொபைல்ல மெஸேஜ் வர ஒரே பீட்டர்தான்.

நம்ம பத்தாப்பூ தம்பிக்கு செம கடுப்பாயிடும்.

அவன் கையில செல்போனைப் பாத்தாலே இவனுங்க கலாய்ப்பானுங்க.

'உனக்கு ஏண்டா மொபைல்.மிஸ்டு கால் கூட நீயே குத்துக்கிட்டாத்தான்' அப்படின்னா கூட
'அது எப்படிடா குடுக்கிறது' ன்னு அப்பாவியாக் கேப்பான்.

போனவாரம் ஒரு ஃபங்ஷனுக்கு எல்லோரும் கூடியிருக்க நம்ம ஹீரோ முகத்துல ஒரே பல்பு.

ஒரு கூடை சன்லைட்...ஒரு கூடை மூன் லைட்....ஒன்றாகச் சேர்த்து..
ஜெக்ஜ்ஜோதி...ஜோதி தான்.

அடிக்கடி அவன் மொபைலுக்கு மெசேஜ் வேறு.

இவனுங்கல்லாம் விசாரிக்க ரெண்டு நாளா யார்க்கிட்டேயிருந்தோ எஸ் எம் எஸ் வந்துட்டேயிருக்குன்னான்.

இவனுங்க வாங்கிப் பார்க்க

ஹாய்

ஹௌ ஆர் யூ

ஐ மிஸ் யூ

இப்படி ஆரம்பிச்சு அவன் காலையில என்ன டிரஸ் போடணும் என்ன சாப்பிடனும் என்ன எல்லாம் பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு ஆர்டர் வேறு.

முக்கியமா 'தண்ணி 'அடிக்கக் கூடாதுன்னு.

பத்து நிமிஷத்துக்கொரு மேசேஜ். இவன் படிச்சிட்டு பதில் போட்றதுக்குள்ள அடுத்தது.

'யாருடா இது'

'தெரியாது'

'பேர் என்ன'

'தெரியாது'

'எத்தனை நாளா எஸ்.எம்.எஸ் வருது'

'நேத்துலேர்ந்து'

'அடப்பாவி அதனாலதான் நேத்து நைட்டு 'ரெட் லேபிள் 'இருக்குன்னு சொல்லியும் வேண்டாம்னுட்டியா'

'ஆமாம் ஆளு யாருன்னு தெரியலைன்னாலும் மெஸேஜ் வந்தா 'சும்மா அதிருதில்ல'.
அதான் அவ சொல்றத கேக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்'.

'போன்ல பேசியிருக்கியா'

'இல்லை.மெசேஜ் மட்டும்தான்'

'ஏய் இது ரொம்ப ஓவரு.இது ஆணா பொண்ணானு கூட தெரியாது.வேண்டாம் விட்டுடு

'வேலையப் பாருங்கடா' ன்னுட்டு அடுத்த மெசேஜுக்காக போனையே பார்க்க ஆரம்பிச்சான்.

'சரி ஓகே இது உண்மையான்னு பார்ப்போம் .நீ அவளைப் பார்க்கனும்னு சொல்லி மெசேஜ் குடு'
இவனுக்கும் சரின்னு பட்டது.

முதல்ல பேர் என்னன்னு கேட்க,.......என்று பதில் வந்தது.[இவனுங்ககிட்ட சொல்லலை]

பார்க்கனும் முடியுமான்னு கேட்க
என்னைக்குன்னு கேட்டு பதில் வந்தது.

ரொம்பக் குஷியாகி நாளைக்குன்னு சொன்னதும்
ஓகே ஆனால் ஒரு கண்டிஷன்னு ரிப்ளை வர்ர
எதுனாலும் சரி ன்னு பதிலினான்.

அதுக்கு வந்த ரிப்ளையைப் பார்த்ததும் முகத்தில ஈ ஆடலை.

என்னடான்னு இவனுங்கக் கேட்டும் சொல்லலை.

மறுநாள் பங்ஷனுக்கு இவன் எம்.ஜி.ஆர் மாதிரி [எம்.ஜி.ரவிச்சந்திரன்] வந்ததைப் பார்த்து உறவுக்காரங்க முகம் சுளித்தனர்.

'ஏண்டா என்னாச்சு உனக்கு நல்ல நாளும் அதுவுமா இப்படி மொட்டையோட வந்திருக்கே'
இவனுங்க பதறிப் போய் என்னாச்சுடா ன்னு கேட்க

நம்ம ஹீரோ,'cool...cool [கூல்] அவளுக்கு இந்த கெட்டப்னா ரொம்பப் பிடிக்குதாம்.அதான் நாளைக்கு மீட் பண்ணும்போது இப்படி வாங்கன்னா' என்றான் கூலாக.

நாங்களும் வர்ரோம்னு இவனுங்க சொல்ல' நோ கண்ணா பன்னிங்கதான் கூட்டமாப் போகும் சிங்கம் சிங்கிலாத்தான் போகும்' னுட்டான்.

ஃப்ங்ஷன் முடிந்து அவள் வரச் சொன்ன இடத்துக்கு இவன் போய் காத்திருக்க நேரம் போச்சு ஆள் வந்தபாடில்லை.

இவன் உடனே அவள் நெம்பரைக் கூப்பிட்டு தான் காத்திருப்பதாகச் சொல்ல,

இதோ நாங்களும் அதைத்தான் ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கமே என போன் பேசியபடியே ஒளிந்திருந்த இவனுங்க வர

அப்பத்தான் புரிந்தது நம்ம ஹீரோவுக்கு ரெண்டு நாளா போன்ல தன்னை வச்சி காமெடி பண்ணது இவனுங்கதான்னு.இவனுக்காகவே ஒரு புது நெம்பர் வாங்கி பிளே பண்ணியிருக்கானுங்க.

ஏமாற்றத்தோடு கோபமும் சேர்ந்து கொள்ள [முடி வேறு போச்சே]மொபைலைத் தூக்கி எறிந்து விட்டுப் போனவன் இன்னைவரைக்கும் மொபைலை கையாலகூட தொடுவதில்லை.

எங்கயாச்சும் மேசேஜ் சவுண்டு கேட்டாக் கூட நம்ம ஆளுக்கு 'அதிருது'

டிஸ்கி: புலி உடனே அக்கா காதுல முழம் பூ சுத்தாதீங்கன்னு சொல்லும்.'சிவாஜியில' சுத்தறத விடக் கம்பிதான் தம்பி.இது 100% உண்மைச் சம்பவம்தான்.கொஞ்சூண்டு 'சிவாஜி மொட்டைய' மட்டும் லிங்க் பண்ணிட்டேன்.

36 comments:

குசும்பன் said...

என்ன மாதிரி ஒரு அப்பாவி அங்கயும் இருக்கானா???அக்கா???

என்ன உலகமடா இது நல்லவனா ஒருத்தனை இருக்க விட மாட்டீங்களே!!!

காயமே இது பொய்யட வெறும் காற்று அடைத்த பையடா...

நாமக்கல் சிபி said...

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

எங்க தலை பத்தாவதுக்கு மேலயே படிச்சிருக்காரு!

அவரோட தெறமைய இருட்டிப்பு செய்யுறீங்க!

காத்திருப்பவன் said...

"தள! ஏனிந்த கொலை வெறி?"

கண்மணி said...

சிபி சத்தியமா இது என் உறவினர் பையனுக்கு நடந்தது.இதுலா 'தல' ன்னு வீணா வம்பு மூட்டாதீங்க.
அப்படி நீங்க அடங்கலைன்னா
'ஆபீஸ் ரூமுக்கு' அனுப்பித்தான் 'டிரீட்மெண்ட்' குடுக்கோனும்.

வீனாப் போனவன் said...

என்ன கொடுமயிது சரவணா இங்கேயும் இவங்க ரவுசா

நாமக்கல் சிபி said...

//இதுலா 'தல' ன்னு வீணா வம்பு மூட்டாதீங்க//

ஓகே! ஓகே!

:))

அப்போ இது வேற ஒருத்தரா?

அப்படின்னா ஓகே!

நாமக்கல் சிபி said...

//அப்படி நீங்க அடங்கலைன்னா
'ஆபீஸ் ரூமுக்கு' அனுப்பித்தான் 'டிரீட்மெண்ட்' குடுக்கோனும்.
//

என்னது ஆபீஸ் ரூமுக்கா!

ஐய்யோ!

குசும்பன் said...

அப்படி நீங்க அடங்கலைன்னா
'ஆபீஸ் ரூமுக்கு' அனுப்பித்தான் 'டிரீட்மெண்ட்' குடுக்கோனும்.

எங்க முடிஞ்சா குடுங்க பார்கலாம்....
சிபி மேல கைய வச்சுடுவீங்களா? அந்த கவிதை எழுதுற கைய ஒடிச்சுடுவீங்களா பார்கலாம் தில் இருந்தா மோதுங்க...

(மறக்காம ஆப்ப எடுத்துடுங்க:))))))))

கதிரவன் said...

:-))நல்ல காமடி !! ஆனாலும் ஒரு அப்பாவிய இப்டி கலாய்ச்சிருக்க வேண்டாம்

ஆமா, இன்னும் இங்க கும்மி ஆரம்பிக்கலியா ? ஆச்சர்யமா இருக்குதே ! ;-)

குசும்பன் said...

எங்க தலை பத்தாவதுக்கு மேலயே படிச்சிருக்காரு!

ஆமா அவர் ஸ்கூல்ல பத்தாவதுக்கு மேல (மாடியில) 8ஆம் வகுப்பு B செக்ஸன் இருக்கு அதுவரை படிச்சு இருக்காருன்னு சொல்ல வரீங்க சரி தானே சிபி...

கண்மணி said...

நம்ம THE BOSS சிவாஜி யோட 'ஆபிஸ்ரூம்' டிரீட்மென்ட்டுதான்.சரியா

சிபி பின்னூட்ட சங்கம் said...

//எங்க முடிஞ்சா குடுங்க பார்கலாம்....
சிபி மேல கைய வச்சுடுவீங்களா? அந்த கவிதை எழுதுற கைய ஒடிச்சுடுவீங்களா பார்கலாம் தில் இருந்தா மோதுங்க...//
ஆமா எங்க தளய வச்சி காமெடி கீமெடி எதுவும் பன்ன்லியே?

நாமக்கல் சிபி said...

//எங்க முடிஞ்சா குடுங்க பார்கலாம்....
சிபி மேல கைய வச்சுடுவீங்களா? அந்த கவிதை எழுதுற கைய ஒடிச்சுடுவீங்களா பார்கலாம் தில் இருந்தா மோதுங்க...
//

அது சரி! இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒருத்தர் உடம்பை ரணகளமாக்குனீங்களே! போதாதா?

அதுக்கெல்லாம் தல இருக்காருய்யா! தள ய விட்டுடுங்க!

குசும்பன் said...

ஆமா, இன்னும் இங்க கும்மி ஆரம்பிக்கலியா ? ஆச்சர்யமா இருக்குதே ! ;-)

எங்களை குறைத்து மதிப்பிட்ட கதிரவனை நாளை நாம கவனிச்சுப்போம்...

நாமக்கல் சிபி said...

//(மறக்காம ஆப்ப எடுத்துடுங்க:)))))))) //

ம். இது வேறயா?

ரொம்பத்தான் அக்கரை!

தேடுனவன் said...

கூகிள் டாக்கில் காணாமல் போன சிபி இங்கே கும்மியடைப்பதை வண்மையாக கண்டிக்கிரேன்

குசும்பன் said...

நாமக்கல் சிபி said... "அதுக்கெல்லாம் தல இருக்காருய்யா! தள ய விட்டுடுங்க! "

சிபி இந்த காக்கா இருக்கே காக்கா அது எது கிடைச்சாலும் காகாகான்னு கத்தி சரி சமமா பிரிச்சி கூட்டத்தோடதான் சாப்பிடும். ஆனா நீங்க என்னடான்னா தலய மட்டும் மாட்டிவிட பார்குறீங்களே,,,எதா இருந்தாலும் சரி சமமா பிரிச்சுக்குங்க..

கண்மணி said...

சிபிக்கு மட்டுமில்ல சிபியப் பார்த்து கெட்டுப் போய் செய்யுள் எழுதும் குசும்பருக்கும் ஆபிஸ் ரூம் ரெடியாயிடுச்சி.ஆளூக்கொரு கையி.

குசும்பன் said...

நாமக்கல் சிபி said...
"ரொம்பத்தான் அக்கரை! "

தான் ஆடாவிட்டாலும் டான்ஸ்ர் சாரி சாரி தன் தசை ஆடும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள்...

கண்மணி said...

வாங்க கதிரவன் நடந்ததச் சொன்னாக்கூட எப்படி கலாய்க்கிறாங்க பாருங்க.

குசும்பன் said...

கண்மணி said...
"குசும்பருக்கும் ஆபிஸ் ரூம் ரெடியாயிடுச்சி.ஆளூக்கொரு கையி. "

நான் எல்லாம் தின கூலி அக்கா எனக்கு எல்லாம் ஆபிஸ் ரூம் வேண்டாம் எதா இருந்தாலும் சிபிக்கே குடுத்துடுங்க...
(நான் எப்பவும் உங்க கட்சி)

குசும்பன் said...

கண்மணி said...
வாங்க கதிரவன் நடந்ததச் சொன்னாக்கூட எப்படி கலாய்க்கிறாங்க பாருங்க.

அக்கா யாருன்னு சொல்லு அக்கா காலி செஞ்சுடலாம்...

சின்னத்தம்பி said...

//கூகிள் டாக்கில் காணாமல் போன சிபி இங்கே கும்மியடைப்பதை வண்மையாக கண்டிக்கிரேன் //

குயிலைப் பிடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்!

மயிலைப் பிடிச்சி காலை உடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்!

அது எப்படி பாடுமைய்யா! அது எப்படி ஆடுமைய்யா!

ஓஓஓஓஓஓஓஒ!

சின்னத்தம்பீ..... (குஷ்பூ ஓடி வருகிறார்)

பின் குறிப்பு : இங்கே சிபி என்பது சின்னத்தம்பி என்ற பெயரின் சுருக்கம் அல்ல!

நாகை சிவா said...

//புலி உடனே அக்கா காதுல முழம் பூ சுத்தாதீங்கன்னு சொல்லும்//

கண்டிப்பா ஆனா முழம் பூ இல்ல ஒரு பூ மாலையே சூடுறீங்க... ஒவரா இல்ல....

ஒரு நம்பர் வச்சு கலாய்த்தது வேணும்னா உண்மையா இருக்கலாம்....

யாருனே தெரியாத, ஒரு தடவை கூட பேசாத பெண்ணுக்காக தலை முடிய எடுப்பது எல்லாம் ரொம்ப ஒவர் சொல்லிட்டேன்...

ஒரு அளவு வேணாம் கதை விட....

இப்ப எல்லாம் பசங்க ரொம்ப உஷார்....

மெசெஜ் வந்தா முதல பேச தான் டிரை பண்ணுவாங்க, பேசாம நேரா பார்ப்பது எல்லாம் நம்புற மாதிரி இல்ல....

அடுத்து தடவை பெட்டர் திங்க் பண்ண வாழ்த்துக்கள்...

நாகை சிவா said...

//'அடப்பாவி அதனாலதான் நேத்து நைட்டு 'ரெட் லேபிள் 'இருக்குன்னு சொல்லியும் வேண்டாம்னுட்டியா'//

கேவலம் ரெட் லேபிளாக்கா எல்லாம் பிகரை விட்டு கொடுக்க முடியாது... பிளாக், கீரின் என்றால் திங்க பண்ணலாம். ப்ளூ, கோல்ட் னா போகலாம்.... , மேலும் விபரங்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ தீர்த்தானந்தா சுவாமிகளிம் மில்லியில் இருந்து ஃபுல் வரை என்று புத்தகத்தை படிக்க சொல்லுங்கள்...

நாகை சிவா said...

ஸ்ரீ ஸ்ரீ தீர்த்தானந்தா சுவாமிகளின் "பிகரா! சரக்கா" என்று புத்தகமும் பல புரிதல்களை கொடுக்கும் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறேன்.

கண்மணி said...

@புலி நாந்தான் நெம்பர் வச்சு கலாய்ச்சது உண்மை மொட்டை மட்டும் இடைசெருகல்னு வாக்குமூலம் குடுத்துட்டேன்.அப்புறம் என்ன துப்பறியும் சாம்புன்னு நெனப்பா?
முதல்ல ஸ்ரீ ஸ்ரீ பிளாக்கானந்தா ஸ்வாமிகளின் பிளாக்கை புரிந்து படிப்பது எப்படி படித்துப் பார்க்கவும்.இது படிக்காமயே பின்னூட்டம் போடும் அப்பா கிட்ட கிடைக்கும்.

கண்மணி said...

@புலி
நம்ம பையன் எழுதின இங்கிலீஷ் பத்தி சொன்னா தெரியும்.அதையும் கதைன்னு சொல்வீங்க .kiss ன்னு டைப் பண்ண தெரிஞ்சோ தெரியாமலோ 'p' போட்டுட்டான்.

நாகை சிவா said...

//நாந்தான் நெம்பர் வச்சு கலாய்ச்சது உண்மை மொட்டை மட்டும் இடைசெருகல்னு வாக்குமூலம் குடுத்துட்டேன்.அப்புறம் என்ன துப்பறியும் சாம்புன்னு நெனப்பா?
முதல்ல ஸ்ரீ ஸ்ரீ பிளாக்கானந்தா ஸ்வாமிகளின் பிளாக்கை புரிந்து படிப்பது எப்படி படித்துப் பார்க்கவும்.இது படிக்காமயே பின்னூட்டம் போடும் அப்பா கிட்ட கிடைக்கும். //

எங்க, நீங்க இடைசொருகல் என்ற சொன்ன வரில இருந்து எடுத்து மேற்கோள் காட்டி தானே அம்மாம் பெரிய பின்னூட்டம் போட்டேன்...

எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கனும்... மற்றவை எல்லாத்தையும், "கண்டும்" காணாம விட்டுடனும். நீங்க மறுபடியும் ஸ்ரீ ஸ்ரீ பிளானந்தா புத்தகத்தை முதலில் இருந்து படிங்க... இது ப்ளாக்கு பின்னூட்டம் போட மட்டும் இல்ல ப்ளாக் அரசியலுக்கும் பாலப் பாடம்.... நல்லா படிங்க அந்த அரசியல் இல்ல ப்ளாக்கு அரசியல்...

நாகை சிவா said...

//நம்ம பையன் எழுதின இங்கிலீஷ் பத்தி சொன்னா தெரியும்.அதையும் கதைன்னு சொல்வீங்க .kiss ன்னு டைப் பண்ண தெரிஞ்சோ தெரியாமலோ 'p' போட்டுட்டான். //

இது எல்லாம் பொது வாழ்க்கைல சகஜம்.... டைப்போ வா இருக்கும்... அதுக்குனு இதை எல்லாம் சபைல வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க... அந்த பையன் போன் நம்பர் கொடுங்க... அப்புறம் கச்சேரி வச்சுப்போம்.

தேவ் | Dev said...

கண்மணி அக்கா, சங்கத்தில் நீங்கள் எழுதியிருக்கும் இந்த முதல் பதிவு எங்கள் சங்கத்துச் சிங்கங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் புண்படுத்தியுள்ளது...

எதுக்கு அக்கா இப்படி பண்ணிட்டீங்க...?

இதுக்கு மேல எங்க தளபதியின் கருத்து அதான்ங்க அவர் போட்ட முதல் பின்னூட்டத்தைப் படிச்சிப் பாத்துருங்க....

அதான் சங்கத்தின் மொத்த கருத்தும்

ILA(a)இளா said...

//அதான் சங்கத்தின் மொத்த கருத்தும்//

ராமை இதுவரைக்கும் யாரும் மொத்தவில்லை என்பது ஸ்கூப் செய்தி.

சங்கம் நியூஸ்க்காக
தோட்டத்துல களை புடிங்கியவாரு விவசாயி

கோபிநாத் said...

அட்லாஸ் அக்கா வாழ்த்துகள் ;))

கண்மணி said...

@சிங்கம்ஸ் நீங்க கலாய்க்கிறீங்களா நிஜம்மா ஃபீலிங்ஸா தெரியலை.உங்க தல யப் பத்தி எனக்கு எப்படித் தெரியும்.இது நெஜம்மா எங்க உறவுல நடந்தது.கொஞ்சம் மிகைப் படுத்தியிருக்கேன்.
இப்படியெல்லாம் சொன்னா நான் 'அப்பீட்டு 'ஆயிடுவேன்.
அவ்வ்வ்வ்வ்

குட்டிபிசாசு said...

அக்கா,

நாங்களும் இதுபோல வெறுப்பேத்தி இருக்கோம். ஆனால் யாஹூ சேட்டில்.்

தேவ் | Dev said...

இப்படி எல்லாம் பிலீங் மிரட்டல் விட்டா சிங்கம்ஸ் சும்மா விட்டுருவோமா...

சங்கத்துக்கு வந்துருக்க முதல் தாய்க்குல அட்லாஸ் நீங்க தான்.. இங்கிட்டு வசமா கண்மணி அக்கான்னு ஒருத்தங்க சிக்கியிருக்காங்க.... வாங்க கலாய்க்கலாம் வாங்க கலாய்க்கலாம்ன்னு கொட்டாம்பட்டியில் இருந்து கோலாலம்பூர் வரைக்கும் கூப்பிட்டு அனுப்பியிருக்கோம்.. இப்படி அப்பீட் அது இதுன்னு பேசுன்னா.. எல்லாரும் அழுதுருவோம் ஆமா...