Friday, July 6, 2007

ஏழு...ஏழு....ஏழு..... ங்கோ

ஏழு.....ஏழு....ஏழு..ங்கோ

இதென்ன ஆறு எழுதச் சொன்னாங்க அப்பால எட்டு போட்டு லைசன்ஸ் குடுத்தாங்க,இது ரெண்டுக்கும் நடுவுல விட்டுப் போன ஏழான்னு கேக்கறீங்களா?

இல்லையே.

இது ஒரு முக்கியமான எண்ணுங்க...நெம்பருங்க..

1. என்ன ஒன்பது கோள்களும் ஒரே நேர்க் கோட்டுல வந்து வரிசை கட்டி நிக்க, உலகையே அழிக்கிற சக்தியுடன் ஏதாவது அரக்கக் குழந்த பிறக்கப் போவுதா? >:)

சத்தியமா இல்லீங்க பயப்படாதீங்க.

2. பின்ன தமிழ் மணத்துல எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாம ஒற்றுமையா பதிவு போட்டு கண்ணியமா பின்னூட்டம் போடப் போகும் நாளா? =))

அய்யே...ரொம்பத்தான் ஆசை...நடக்கறத பேசுங்க

3. வேற என்ன அபி அப்பா திருந்தி [?!] காமெடியில்லாம சீரியஸ் பதிவுப் போடப் போறாரா?:))

உம்ம நக்கலுக்கு அளவேயில்லையா?

4. இல்ல கண்மணியக்கா கும்மியடிக்கிறத விட்டுட்டு சமையல்,தையல்னு நல்ல[?!!]உபயோகமான பதிவாப் போடப் போறாங்களா?:(

ஹுக்கும் இருக்கிற சரக்குதானே வரும்

5.வ.வா.சங்கமும் ப.பா.சங்கமும் இணைந்து ஒரே சங்கமா செயல்படப் போறாங்களா?

இந்த நாரதர் வேலைதானே வேணாங்கிறது.இப்ப என்ன அடிச்சிக்கிட்டா நிக்கறாங்க?போட்டின்னு இருந்தாத்தான் தெறமை வளரும்;)=D>

6. இல்லைன்னா இனிமேயாச்சும் அய்யனார் புரியற பாஷையில கவுஜ எழுதப் போறாரா?:-/

இப்பவே பாதிபேர் மண்டையப் பிச்சிக்கிறாங்க இது வேறயா?

7. ரஜினி அடுத்தப் படத்துல தன் வயசுக்கு ஏத்த மாதிரி மறுபடியும் ராதிகா ஸ்ரீபிரியான்னு ஜோடி போடப்போறாரா?;)

அய்யா உமக்கு கோடி நமஸ்காரம்.இப்படி வம்புல இழுத்துவிட்டு நம்மள தூக்கிடாதீங்க.

சரி ஏழு...ஏழு....ஏழு..ன்னா என்னன்னு சொல்லுங்க.ஏன் இந்த பில்டப்பு?

கரீட்டாச் சொல்லிட்டீங்க..பில்டிங் பத்துனதுதான்:))

ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.

அன்னைக்குத்தான் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உலக அதிசயங்கள் ஏழு
பட்டியலை வெளியிடறாங்களாம்.

07-07-07 அதிசயங்கள் 7.
எல்லாம் ஏழு மயம்
.

தாஜ்மஹால் இடம் பெறுமா என்பதை வெயிட் அண்டு சீ மக்கள்ஸ்.

டிஸ்கி:ஆயிரம் ஆண்டு என்பது தவறுதலாக நூறுன்னு எழுதப்பட்டது.திருத்தி விட்டேன்.

36 comments:

முதலில் வந்தவன் said...

நான் தான் பர்ஸ்ட்டு

7 வது அறிவு said...

இங்கே எங்களை அனுமதிக்கா விட்டால் நாளை 7 மணி 7 நிமிடம் 7 விநாடிக்கு எங்கள் ரத்தத்தின் ரத்தம், சங்கத்துச் சிங்கம், அரச மரியாதை மேல்குடி 7 முறை டீக்குடிப்பார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!

கண்மணி said...

வாங்க 7 வது அறிவு 7 முறை 'டீயா' இல்லை வேற ஏதாச்சுமா?நாளைக்கு ஆணி புடுங்கும் வேலையும் இல்லை

டிராஸ்டிலேட்டர் said...

//அரச மரியாதை மேல்குடி //

இதற்கு என்ன அர்த்தம் என்று அகராதியைத் தேடியதில் ராயல் என்ற பொருள் வருகிறதே!

நமது கைப்புள்ளை said...

இங்கு ஏழாவது பின்னூட்டம் இடும் நபருக்கு கண்மணி அக்கா அவர்கள் கையால் 7 பவுன் தங்கச் சங்கிலி பரிசளிக்கப் படும் என நமது தலை கைப்புள்ளை அறிவித்திருக்கிறார்.

(கண்மணி அக்காவே 7 வது பின்னூட்டம் இட்டால் செல்லாது என்றும் அவர் அறிவித்திருக்கிறார்)

கண்மணி அக்கா பி.ஏ said...

அப்போ 7வது பின்னூட்டம் நான் போடலாமா? ன்னு கேட்டுச் சொல்லுங்க!

கைப்புள்ளை said...

//அப்போ 7வது பின்னூட்டம் நான் போடலாமா? ன்னு கேட்டுச் சொல்லுங்க! //

என்ன இது சின்னப் புள்ளைத்தனமா?

(ஹிஹி.. பரிசு எனக்குத்தான்)

அர்ஜூன் said...

நம்ம படத்தைப் பத்தி ஏதாச்சும் விமர்சனமா?

-ஏழுமலை!

குட்டிபிசாசு said...

//1. என்ன ஒன்பது கோள்களும் ஒரே நேர்க் கோட்டுல வந்து வரிசை கட்டி நிக்க, உலகையே அழிக்கிற சக்தியுடன் ஏதாவது அரக்கக் குழந்த பிறக்கப் போவுதா? >:)//

கண்டகண்ட பேய் படங்களை பார்க்கதீங்கனு சொன்னா கேட்டாதானெ!! ஏன் ஏன் இப்படி!!

குட்டிபிசாசு said...

//2. பின்ன தமிழ் மணத்துல எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாம ஒற்றுமையா பதிவு போட்டு கண்ணியமா பின்னூட்டம் போடப் போகும் நாளா? =))//

சச்சரவு இல்லாட்டி சுவாரசியமா இருக்காதுங்க அக்கா!! இதெல்லாம் தமிழ் மரபு!!(அசிங்கமா திட்டிகிறது தான் நல்லா இல்ல!!)

குட்டிபிசாசு said...

//3. வேற என்ன அபி அப்பா திருந்தி [?!] காமெடியில்லாம சீரியஸ் பதிவுப் போடப் போறாரா?:))//

அவரு சீரியஸா போட்டாலும் காமெடியா தான் இருக்கும்

குட்டிபிசாசு said...

///இல்ல கண்மணியக்கா கும்மியடிக்கிறத விட்டுட்டு சமையல்,தையல்னு நல்ல[?!!]உபயோகமான பதிவாப் போடப் போறாங்களா?:(//

அக்காவோட அகராதில...

சமையல் = உப்புமா!!

தையல் = காதுகுத்தல், கழுத்தறுப்பு!!

குட்டிபிசாசு said...

//5.வ.வா.சங்கமும் ப.பா.சங்கமும் இணைந்து ஒரே சங்கமா செயல்படப் போறாங்களா?//

ஹாஹா...!! இரண்டா இருக்கிறது தான் சரி!! ஒரு பிலேடுனு இருந்தா, ரெண்டு பக்கம் இருக்கனும்!!

கண்மணி said...

//1. என்ன ஒன்பது கோள்களும் ஒரே நேர்க் கோட்டுல வந்து வரிசை கட்டி நிக்க, உலகையே அழிக்கிற சக்தியுடன் ஏதாவது அரக்கக் குழந்த பிறக்கப் போவுதா? >:)//

பிறந்திடுச்சே ஒரு குட்டி பிசாசு....[ஆனா நல்ல பிசாசுதான்]

குட்டிபிசாசு said...

//7. ரஜினி அடுத்தப் படத்துல தன் வயசுக்கு ஏத்த மாதிரி மறுபடியும் ராதிகா ஸ்ரீபிரியான்னு ஜோடி போடப்போறாரா?;)//

ராதிகாவுக்கு பேரனா மேக்கப் போட்டு நடிக்க போறாரு!!கமல் தாத்தாவா மேக்கப் போட்டு ராதிகாக்கு ஜோடியா நடிக்க போறாரு!! !!

இதுல எந்த உள்குத்தும் இல்ல!!

அட்வைஸ் ஆறுமுகம் said...

என்னா வாத்தியாரே தனியா கும்மி யடிச்சிகினு கீற்!!

குட்டிபிசாசு said...

பன்னிங்க தான் கூட்டமா வந்து கும்மியடிக்கும்!!

சிங்கம் தனியாதான் கும்மியடிக்கும்!!கூஊஊஊஊஊல்ல்ல்ல்ல்ல்!!

வவ்வால் said...

இளா!

//நூறு வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.//

01-01-01(2001)
02-02-02(2002)
03-02-03(2003)
04-04-04(2004)
05-05-05(2005)
06-06-06(2006)

இவை எல்லாம் 100 ஆண்டுக்கு ஒரு முறை வந்த நாட்களா இளா, கதை விட ஓரளவு வேண்டாமா ஸ்வாமி!

10 - 10- 10(1910)
02-02- 22(1922)
.
.
.
08- 08- 88(1988)
.
.
09- 09- 99(1999)

போன்ற நாட்களும் எண்களும் தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

இந்த உட்டாலக்கடியை பார்க்காமலே இத்தனி பேர் வந்து பின்னூட்டம் போடுறாங்கப்ப!

வவ்வால் said...

இளா,

10- 10- 1010
11- 11- 1111
12- 12- 1212
22- 02- 2222

போன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.

அய்யனார் said...

அட இது தெரியாம போச்சே :)

அபி அப்பா said...

இன்னிக்கு 7 பின்னூட்டம் போடுவதா உத்தேசம்!

அபி அப்பா said...

2

அபி அப்பா said...

3

அபி அப்பா said...

4

அபி அப்பா said...

5

அபி அப்பா said...

6

அபி அப்பா said...

7

கண்மணி said...

வாங்க மிஸ்டர் வவ்வால் தலைகீழா தொங்கியே மேட்டரையும் தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க.நூறு இல்லை 1000 ஆண்டுக்கு ஒரு முறை வரும் தேதிகள் இந்த ஒரே எண்மாதிரி எண்கள் கொண்டவை.
01-01-01
02-02-02
03-03-03
04-04-04
05-05-05
-6-06-06
07-07-07
08-08-08
09-09-09

இவைகளில் 07 வரை [இன்றுவரை] இந்த 2001 முதல் 2007 வரை பார்த்து விட்டோம்.
இனி 2008 முதல்2012 வரை பார்க்கலாம்.12-12-12வரும் டிசம்பர் வரை]
அதற்குப் பிறகு எந்தத் தேதியும் 2013 முதல் 3000 வரை வருஷத்தைச் சுருக்கி இப்படி எழுத வாய்ப்பில்லை .
புரிகிறதா டீச்சர் சொன்னது.இல்லை இன்னும் விளக்கம் வேணுமா?

நானானி said...

கேளடி...கண்மணி!!!
நான் நினைக்கிறேன் நாந்தான் பஸ்ட்!!
ஏழு போட்டேன்.
உங்களை மாதிரி கலக்கலை!

Anonymous said...

வேனாங்க இதுவே தாங்கல.இன்னும் விளக்கமா அய்யோ டீச்சர் எங்களுக்கு பெயில் மார்க்குன்னாலும் போடுங்க.ஆனா பாடம் போதும் நிறுத்துங்க
நிறுத்துங்க

கோபிநாத் said...

\
6. இல்லைன்னா இனிமேயாச்சும் அய்யனார் புரியற பாஷையில கவுஜ எழுதப் போறாரா?:-/\\\

சூப்பர் காமெடி ;))))))))

கண்மணி said...

நானானி சங்கத்துக்கு வந்ததிற்கு நன்றி

கண்மணி said...

கோபி உனக்கு இன்னும் வெளக்கமா சொல்லனுமா ' 6 ' அப்படித்தான்.

விளங்காதவன் said...

விளக்கமா சொல்லுங்க விளங்காமத்தானே கேக்குரன் இந்த விளங்காதவன்

ILA(a)இளா said...

புதுசா 7 அதிசயங்கள் கிளிக்கீ

சுந்தர் ராம்ஸ் said...

/*
அதற்குப் பிறகு எந்தத் தேதியும் 2013 முதல் 3000 வரை வருஷத்தைச் சுருக்கி இப்படி எழுத வாய்ப்பில்லை .
*/

அப்ப, 07 ஜூலை 2107 -ஐ 07/07/07-ன்னு எழுத முடியாதுங்களா? 2007-அ 07-னு எழுத முடிஞ்சா, 2107-யும் 07-னு எழுதலாம்ங்க. அதாவது, 07/07/07 நூறு வருசத்துக்கு ஒரு தடவ வரும்ங்க.

மத்தபடி, 7 7 7 -ங்கறது ஜாக்பாட் எண்களா கருதப்படுகிறது. அதனாலதான், மத்த எணகளை(1 1 1, 2 2 2, ...) விட 7 7 7 க்கு கவனிப்பு அதிகம்.

-சுந்தர் ராம்ஸ்