Monday, July 2, 2007

நானும் பார்த்துட்டேனே.......

அப்பாடா ஒரு வழியா எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைச்சிடுச்சி.

அதாங்க நானும் பார்த்துட்டேன்.

வாஜி...வாஜி...என் ஜீவன் நீ சிவாஜி...தானுங்கோ

முதல்ல சினிமா விமர்சனமெல்லாம் தேவையான்னு யோசிச்சேன்.
இதுவரை ஆண்களோட கண்ணோட்டத்துலதான் எல்லோரும் சிவாஜியப் பார்த்தீங்க.
இந்த அக்கா கண்ணோட்டத்துல கொஞ்சம் பாருங்க.

அதிர வைக்கும் dts சவுண்டு இரைச்சலான சத்தம்,பக்கத்து சீட்டு விடலைகளின்
ஊஉய்....உ..ஊஊய்...சீழ்க்கைக்கு இடையிலே முகம் காட்டாத ரஜினி வர ஃபிளாஷ் பேக் சொல்லத் திரும்பும் போது...எனக்குக் காதிக்குள் ங்கொய்ய்ன்னு...சத்தம்.

ஸ்பீக்கர் அவுட்டோன்னு சந்தேகமாயிருக்கு.டாக்டர் கிட்டப் போகனும்.
என்னங்க மக்க முழுக் கதையும் சொல்லப் போறேன்னு பயப் படாதீங்க.

பிடிச்சது....பிடிக்காதது ...மட்டும்

முத்து வீராவுல செந்தில் வடிவேலு காமெடிக் கம்பேனியன்.இதுல 'ய்ய்..ஹாய்' விவேக்.
அது சரி இப்படியொரு கம்ப்யூட்டர் டெக்னாலஜியோட வர்ர இன்டலெக்சுவல் காமெடிக்கு விவேக்தான் சூட்டாகும்.ஆனா காமெடிதான் செகண்ட் கிளாஸ்.

தம்பிக்கு எந்த ஊரு,பாண்டியன்,குரு சிஷ்யன் காலத்துலயே ரஜ்னி ஒரு சூப்பர் காமெடியன்னு ஒத்துக்கிட்டோமே.
ஆனா சாலமன் பாப்பையாவையும்,ராஜாவையும் சேர்த்திருக்க வேண்டாம்.

அதிலும்,எனக்கு ரெண்டு பொண்ணிருக்கு.பழகுங்க.புடிக்கலைன்னா ஃபிரண்ட்ஸா இருங்க ன்னு ரெட்டை இலை மாதிரி கையக் காட்டறதும்,தீபாவளிக்கு பொம்மைத் துப்பாக்கி வச்சு சுடறதும்...ஹ்ம்ம்ம்...பாப்பைய்யா..உமக்கு இது தேவையா?

மத்தபடி ரஜ்னி.விவேக் கூட்டணி களை கட்டுகிறது.

அதென்ன 'ரிச் கெட் ரிச்சர்...புவர் கெட் புவரர் னு கூவக்கரையைக் காட்டிட்டு வில்லேஜ் தேடி சிவாஜி தர்மபுரிக்கும்,மதுரைக்கும் பறக்கிறார்?சென்னைவாழ் ஏழைகள் தெரியலையா?

கள்ளப் பணம் யார் கிட்ட இருக்குன்னு கண்டு புடிக்கும் யுக்தியும் அதை அவ்வ்ளோ ஈஸியா வெள்ளையா மாத்தறதும்...என் காதோரம் அதுக்குள்ள நாலு முழ்ழம் பூ....கூல்.

அமெரிக்க ரிட்டண்டு ரஜினி கூல்...கூல்...சொல்லும் போது அழகு.

ஆனா நெறைய்ய ஆங்கிலக் கலப்பு வசனம் பேசுவது சி செண்டருக்கு ஒரு ஏமாற்றம்தான்.
பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த பைய்யன் சொன்னான்'தலைவர்ர் இங்கிலீஸ்ல பொளந்து கட்டறார்னு'

விவேக் காதலி நம்பனும்னா சாகிற மாதிரி நடின்னு ஐடியாக் குடுக்க ரஜினி
'என்னை வச்சிக் காமெடி கீமெடி பண்ணலையேன்னு 'சொல்லும் போது எனக்கு நம்ம பதிவுகள்தான் ஞாபகம் வந்தது.சோ பாப்புலர் .

ஃபியூஷன் மூலம் வெள்ளை வெளேர் ரஜினி நெஜம்மாவே கொள்ளை அழகு.
அழகு தேவதை ஸ்ரேயா அழகா டேன்ஸ் ஆடுறார்.

ப்பிரம்ம்மாண்ட செட்டிங்ஸ்,கிராஃபிக்ஸ்,வாய்ஸ் சின்க்ரனைஸ்டு பாஸ்வேர்டு,பியூஷன் அப்படின்னு நிறைய்ய ஜாலங்கள் ரசிக்கும்படி இருந்தாலும் 80 கோடி செலவிடாமலே எடுத்திருந்தாலும் இந்தப் படம் ஓடியிருக்கும்.

அதுவும் சஹானா பாடல் காட்சிக்கு மட்டும் 15 கோடியாம்.ஹூம்....

இன்னமும் ஒரே ஹீரோ நூறு வில்லன்களைப் பின்னிப் பெடல் எடுக்கிறது,எத்தனை கார்கள் மோதினாலும் ஹீரோ கார் சேதமடையாமல் இருப்பது,நம்ப முடியாத பல லாஜிக் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

CPR ன்னு சொல்லி ஷாக் அடித்தப் பையனுக்கு உடனடி ஃபர்ஸ்ட் எய்டு குடுக்கிறார் ரகுவரன்.ஓகே.ஆனா ரஜினிக்கு ஷாக் அடித்து பல மணி நேரம் வேனில் கடத்தப்பட்டு டிராவல் செஞ்ச பிறகு CPR பலனளிக்குமா?சுஜாதாக் கிட்டதான் கேக்கனும்.கூல்...

குறைன்னு சொன்னா அடுக்கிக்கிட்டே போகலாம்.ஆனால்

ரஜினியின் இளமையாக்கப் பட்ட தோற்றம், துறு துறுப்பு,ஸ்டைல்,வேகம் இருக்கும்வரை ரஜினியை எல்லோருக்கும் [எனக்கும்] பிடிச்சிருக்கே.கூல்...கூல்

17 comments:

Sumathi. said...

ஹாய் கண்மனி,

//ரஜினியின் இளமையாக்கப் பட்ட தோற்றம், துறு துறுப்பு,ஸ்டைல்,வேகம் இருக்கும்வரை ரஜினியை எல்லோருக்கும் [எனக்கும்] பிடிச்சிருக்கே.கூல்...கூல்//

படத்தோட சக்சஸே இது தானே..
அதனால தான் எல்லாரும் போய் பாக்கறோம்.

arun said...

Spiderman, Superman, Batman, 007....Sivaji...

cool..

PPattian said...

அதோட சிவாஜியை தீர்த்து கட்ட நினைக்கும் எந்த அடியாளும் துப்பாக்கி என்கிற ஒரு சமாச்சாரத்தையே பார்த்த்தில்லையோ... எப்போதும் அரிவாளும், கட்டையும்தான். வாய்ஸ் ரெக்கக்னிஷன் இருக்கும் காலத்தில்தான் வில்லன் கூட்டம் வாழ்கிறதா?

அந்த டிரைவ்-இன் தியேட்டரில் அத்தனை கார்களை வீணாக்காமல் தூரத்தில் இருந்தே ஒரு துப்பாக்கியால் குறி பார்த்து முடித்திருக்கலாம்.... ஹி..ஹி.. தப்பா எடுத்திக்காதீங்க... ஆனாலும் படம் என்னவோ சூப்பர்.

ஒரு கூடை.. சாரி.. ஒரு கன்டெய்னர் பூ சுத்தும்போது.. நோ லாஜிக்.. ஒன்லி ரஜினி மேஜிக்.

மின்னல் said...

முடியல போதும் சிவாஜி விமர்சனம் படிச்சி படிச்சி.... அவ்வ்வ்வ்

குட்டிபிசாசு said...

படிச்சி படிச்சி சொன்னேனே பார்க்காதீங்கனு கேட்டிங்களா? நல்லா கஷ்டப்பட்டீங்களா?

அக்கா,

ஆணி அலுவல் எல்லாம் அதிகம். பின்னூட்டம் போட முடியல!!

Chinna Ammini said...

//CPR ன்னு சொல்லி ஷாக் அடித்தப் பையனுக்கு உடனடி ஃபர்ஸ்ட் எய்டு குடுக்கிறார் ரகுவரன்.ஓகே.ஆனா ரஜினிக்கு ஷாக் அடித்து பல மணி நேரம் வேனில் கடத்தப்பட்டு டிராவல் செஞ்ச பிறகு CPR பலனளிக்குமா?சுஜாதாக் கிட்டதான் கேக்கனும்.கூல்//
லாஜிக் பாக்காமத்தான் படம் பாக்கணும் எல்லாரும் சொல்லிட்டாங்களெ

நாகை சிவா said...

வருங்கால சரித்திரத்தில் உங்க மேல வர இருந்த கரும்புள்ளிய தவிர்த்து வீட்டீங்க...

சந்தோசம்...

நாகை சிவா said...

//படிச்சி படிச்சி சொன்னேனே பார்க்காதீங்கனு கேட்டிங்களா? நல்லா கஷ்டப்பட்டீங்களா? //

//கண்மணி : ரஜினியின் இளமையாக்கப் பட்ட தோற்றம், துறு துறுப்பு,ஸ்டைல்,வேகம் இருக்கும்வரை ரஜினியை எல்லோருக்கும் [எனக்கும்] பிடிச்சிருக்கே.கூல்...கூல்//

இஷ்டப்பட்டேன் என்று சொல்லுறாங்க, அவங்கள போய் கஷ்டப்பட்டீங்களா எனக் கேட்குறீங்களே...
ஹய்யோ... ஹய்யோ....

துளசி கோபால் said...

//சொன்னான்'தலைவர்ர் இங்கிலீஸ்ல பொளந்து கட்டறார்னு'//

இப்படிக் கட்டுனாத்தான் உண்டு:-))))

அபி அப்பா said...

வாழ்க வளமுடன்!!

முத்துலெட்சுமி said...

நானும் பார்த்துட்டேனே அதுவும் இந்தி படம் போடற தியேட்டர்ல தில்லியில் தமிழ் படம் வர ஆரம்பிச்சு ...அதுவும் எப்பவும் போடற இந்தி ப்பட விலைய விட குறைவா... கூட்டம் கம்மியா ஸ்பெஷல் ஷோ மாதிரி ஹாயா பார்த்தோமே...

கோபிநாத் said...

\\ அபி அப்பா said...
வாழ்க வளமுடன்!! \\

ரிப்பீட்டே (பதிவுக்கு முக்கிய பின்னூட்டம் இது தான்)

கண்மணி said...

நன்றி சுமதி,அருண்,பரங்கிப்பேட்டையன்,முத்துலட்சுமி,கு.பிசாசு.சின்ன அம்மினி
அபிஅப்பா பதிவுதான் படிக்காம பின்னூட்டம் போடுறீங்க. விமர்சனமாவது படிங்க.[படம் பாத்தாச்சா]

கண்மணி said...

புலி நீங்க சொன்னது கரீட்டு.எதிர்கால சரித்திரத்தில் சிவாஜி பாக்கலைன்னு அவப் பேரு வந்துடக் கூடாதுன்னுதான் பார்த்தேன்.

arun said...

athai ennanu solrathu?... 3rd day-laye padam pathuttu, ennathu chinnapulla Suman-kooda ellam Thalaivar Sandai podurare, avarukku tough kodukka India-la entha villain irukarunu yosichu pathen... Then I felt, from next film onwards Thaliavar should fight only with Aliens ;)

Anonymous said...

நான் எதுக்காக போய் பார்த்தேன்னா, என் இளமைகால நினைப்பு கொஞ்சம் திரும்ப வரும். அவ்வளவுதான்.

எவண்யா தமிழ் சினிமாவுல லாஜிக் பாக்கிறான் ?

தேவ் | Dev said...

சங்கத்தில் வெளிவந்திருக்கும் முதல் சினிமா விம்ர்சனம் என்ற முறையில் இந்தப் பதிவு வரலாற்றில் இடம் பெறுகிறது....

கண்மணி தொடரட்டும் உங்க சரித்திரம் படைக்கும் அட்லாஸ் பயணம்...