Tuesday, July 31, 2007

கவுண்டர்'ஸ் Devil Show - கப்பி பய

"அண்ணே!! அண்ணே!! நீங்க ரொம்ப நாளா டெவில் ஷோ நடத்தாமே இந்த சங்கத்துக்காரய்ங்கே ஓவரா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கானுக! எவனையாவது கூப்பிட்டு ஆப்பு வையிங்க! அப்போதான் சும்மா இருப்பானுக!" ன்னு கோமுட்டி தலையன் கவுண்டர்கிட்டே சொன்னதும் படு சீரியசாக யோசிச்சிட்டு இருந்த கவுண்டர் டக்'குன்னு திரும்பி மேட்டுக்குடி காளிங்கன் ஸ்டைலில் லவ் லுக்கை ஒன்றை காட்டுக்கிறார்.

கோமுட்டி தலையன்:- "அண்ணே? ஏனிந்த கொலைவெறி? எதுக்கு இப்பிடியொரு லுக்?"

கவுண்டர்:- "ஏண்டா, அரைமண்டையா? சங்கத்துக்காராய்ங்கே'கிட்டேயிருந்து ஒனக்கு வரவேண்டியது வரலயா? நீயா கூப்பிட்டு அவியங்களுக்கு டெவில்ஷோ நடத்த சொல்லுறே? நான் இப்போ அடுத்த படத்திலே நமிதா'வே லவ் பண்ணுறமாதிரி சிட்டிவேசனுக்கு யோசிச்சுட்டு இருந்தேன், தேங்காமண்டயா என்னோட மூடு'ஐ கெடுத்துட்டியே?"

கோ:- "அண்ணே! ஒங்க ரொமண்டிக் மூடுக்கு சரியான ஆளு சங்கத்திலே ஒருத்தன் இருக்காண்ணே, அவனை கூப்பிட்டு டெவில் ஷோ நடத்துங்க! அவனுக்கு ஸ்பானிஷ் பேசுற பொண்ணுக பூராவும் சேர்ந்து ரசிகையர் மன்றம் வைச்சிருக்காங்க! "

கவுண்டர்:- "யாருடா? அந்த அரைமண்டயன்?"

கோ:- "ஹைய்யோ, அவரு அரைமண்டயன் இல்லண்ணே! நம்ம அழகுபுயல் கப்பிநிலவர்."

கவுண்டர்:- "ஓ அந்த அழகு மண்டயனே கூப்பிடுறா! இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சு..."

கூகுள் சேட்'ல் 50 சேட் விண்டோக்களுக்கும், யாகூ'வில் 100 சேட் விண்டோக்களையும், ஓர்குட்' ல் 100 ஸ்கிரப்பிங் ரிப்ளை செய்து கொண்டிருந்த கப்பிபய வேகமாக சங்கத்து கட்டிடத்துக்குள் ஓடி வருகிறார்.

கோ:- "பூவையர் மனங்கவர் கள்வன், உருகுவே இளவரசன்,ஸ்பானிஷ் அரசன், சங்கத்தின் லிட்டில் சூப்பர் ஸ்டார் கப்பி நிலவர் வருகிறார்.... வருகிறார்."

கவுண்டர்:- "அடேய், கோமுட்டி, இப்போதானாடா அவனைப் பத்தி என்னோமோ சொல்லிட்டு இருந்தே? அதுக்குள்ளே பாராட்ட ஆரம்பிச்சிட்டே?"

கோ:- "அண்ணே, அவரு என்னோட அக்கவுண்ட்'க்கு மணி டிரான்ஸ்பர் பண்ணிட்டார், அப்புறமென்னா கூவ வேண்டியதுதானே?"

கவுண்டர்:- "ஹிம், அரைமூடி தேங்கா கிடைச்சாலே நீ எம்புட்டு பேசுவே? ஒனக்கு பணம் வேற அனுப்புறானுக அந்த நான்சென்ஸ் பிலோ? எங்கடா அந்த ஆப்பாயில் மண்டயனை?"

கப்பி:- "கவுண்டர் சார், நாந்தான் கப்பி பய... வந்துட்டேன்.."

கவுண்டர்:- "வாடா, வா... எதுக்குடா மண்டயா, கப்பிபய'னு பேரு வைச்சிக்கிட்டே? நீ எதுவும் கொத்தனார் வேலை எதுவும் பார்த்தியா?"

கப்பி:- "அய்யோ... இல்லிங்க சார், நானு கொஞ்சம் அட்வான்ஸாடு பெர்சன், இப்போ எதிர்காலத்திலே நான் ஒரு காப்பி கடை வைச்சா இந்த பேரு சூட் ஆகனும், நீங்க சொன்னமாதிரி படிச்ச ஆஞ்சுனேயர் வேலைக்கு வீடு கட்டி தர போனாலும் இதை சம்பந்தப்படுத்தி இருக்கனுமின்னு தான் அப்பிடி 'கப்பி'ன்னு வைச்சேன்... அதாவது என்னோட பேரு வரலாறு'லே வரனுமின்னு தலைகனத்திலே செய்யலை! இப்பிடியெல்லாம் நாமே இருந்தா அது வரலாற்று பொன் ஏட்டுக்களிலே வந்தே தீரும்கிறது காலத்தின் கட்டாயம்."

கவுண்டர்:- "அட அரை டவுசர் மண்டயா? பேருக்கு காரணம் சொல்லுடா'ன்னா கஜினி படத்திலே வர்ற வசனத்தையே சொல்லிட்டு இருக்கே? மவனே அப்புறம் அவனை மாதிரி இரும்பு ராடு'லே அடி வாங்கி உண்மையிலே அரைகிறுக்கனா போயிறாதே? கப்பி'ன்ன குருட்டு அழுக்குன்னு அர்த்தமிடா அட்லாஸ் மண்டயா! அது ஏண்டா ஒன்னோட புரோப்பலிலே குதிரை குனிஞ்சிட்டு நிக்கிது?"கப்பி:- "ஆமாங்க ஆபிஸர்.. நான் குதுரையிலே பிகர்வலம் போனப்போ எல்லாரும் அந்த குதுரையேதான் பார்க்கிறாய்ங்கே! என்னை பார்க்கமாட்டேக்கிறாய்ங்கே? அதுதான் நான் குதுரையிலே ஒடகார்ந்து இருக்கிறபோ அதை தலையே குனிஞ்சிக்கிற சொல்லிட்டேன்..."

கவுண்டர்:- "அட ஆட்டுக்கல மண்டயா! சரித்திர சாதனையை சொன்னமாதிரி சொல்லுறே? ஏண்டா ஒரு இடத்துக்கு வாடா'ன்னு சொன்னா வரமாட்டியா நீயி? மறுநாள் நீ ஏன் வரலைன்னு ஒரு லீவுலெட்டர் வேற கொடுக்கிறே? இன்னும் அரைடவுசர் மாட்டிக்கிட்டு ஸ்கூல் போறே பச்சப்புள்ளயா நீ?"

கப்பி:- "ஆபிசர் சார்... நான் எப்பவும் பச்சப்புள்ளதான், நாமே ஒரு இடத்திலே இல்லாட்டியும் அந்த வேலை நடந்துரும், ஆனா நாமே ஏன் இல்லாமே போனோமின்னு காரணக்காரியத்தை சொல்லி ஒரு மொக்கை போடனும்மின்னு எங்க தல' கைப்புள்ள'தான் சொல்லிருக்காரு, அவரு சொல்பேச்சை நான் எப்பிடி மீறமுடியும் சொல்லுங்க?"

கவுண்டர்:- "கீ போர்ட் மண்டயா, ஒனக்கில்லாமே ஒங்க தல'க்கிற அந்த அரைடவுசர் மண்டயனுக்கும் இருக்குடா சீக்கிரமே? ஏனுங்க வெள்ளக்கார தொர வெறும் இங்கிலிஸ் படங்க மட்டுந்தான் பார்ப்பீங்களா? அதுலே வர்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாடா புரொஜக்டர் மண்டயா?"

கப்பி:- "ஸ்டாப் த நான்ஸென்ஸ் கொஸ்டின்ஸ்... அது தெரியாமே எப்பிடி நான் விமர்சனம் எழுதமுடியும்? அந்த படம் போடுற தீயேட்டரிலே போயி அந்த படத்தோட பேரு என்னான்னு தமிழிலே போட்டுருப்பாங்க, அதை மொதல்ல நோட் பண்ணிக்குவேன், அப்புறம் நாலஞ்சு பேரு சேர்ந்ததும் உள்ளே போயி ஒட்கார்ந்துட்டு படத்தை பார்ப்பேன், பக்கத்திலே ஒட்கார்ந்துருவங்க சிரிச்சா நானும் சிரிப்பேன், அவங்க கைத்தட்டினா நானும் தட்டுவேன், எப்பிடியாவது அவங்க பக்கத்திலே இருக்கிறவன்கிட்டே கதையோ, இல்ல வசனத்தையோ பத்தி பேசுவாங்க! அதை அப்பிடியே நோட் பண்ணிக்கிட்டு வந்துருவேன்... எப்பிடி என்னோட தெறமை?"

கவுண்டர்:- "ஒன்னயெல்லாம் தூக்கிப் போட்டு பந்தாடுனா'ன்னு என்னாகும், பாப்கார்ன் பாக்கெட் தலையா! அப்போ நீ வசனமெல்லாம் வெளங்கமாட்டாமேதான் இங்கிலிஸ் படமெல்லாம் பார்த்தியா?"

கப்பி:- "ஆபிசர் சார் இங்கிலிசு படம் மட்டும் இல்ல, ஸ்பெனிஸ் படமெல்லாம் பார்த்துருக்கேன், அதை பத்தி விமர்சனமெல்லாம் எழுதி என்னோட எழுத்துதிறனை இங்கே நிருபிச்சு இருக்கேன்."

கவுண்டர்:- "என்னாலே ஒன்னும் முடியலை'டா! இது வரைக்கும் கோமுட்டி தலையன் மட்டுந்தான் இந்த கிரகத்திலே விசித்திரபிராணி'ன்னு நினைச்சேன், இப்போ நீயும் அந்த லிஸ்ட்'லே சேர்ந்துட்டே?"

கப்பி:- "என்னா ஆபிசர் இதுக்கெல்லாம் இப்பிடி அசந்து போறீங்க.. போனவருசமே துள்ளல்'ன்னுகிற காவியதிரைப்படம் எப்போ ரிலிஸாகமின்னு பதிவு போட்டு அந்த படத்தோட புரொடிஸர்'க்கு போன் மேலே போனை போட்டு போன மாசம் ரிலிஸ் பண்ண வைச்சிடோமில்ல.. அப்போ பார்த்துகோங்க, என்னோட தணியாத கலை தாகத்தே"

கவுண்டர்:- "நீ தானா அந்த கொடும்பாதகன், அந்த படம் ரிலிஸ் ஆனப்போ எவனுக்கோ கொடும்பாவி எரிச்சாங்களே அந்த பாவி நீதானா? ஒன்னெயல்லாம் ஏண்டா நாடு கடத்தமாட்டேன்கிறாங்க இந்த சமுதாயம்"

கப்பி:- "ஆபிசர் இவ்வளோ காலமும் நாங்க வெளிநாட்டிலே தான் இருந்தோம், அங்க கிடைச்ச வாழ்க்கை இங்க கொஞ்சம் கூட கிடைக்கலன்னு ரொம்ப வருத்ததிலே இருக்கேன்."

கவுண்டர்:- "என்ன வருத்தத்திலே இருக்கியா? அப்பிடியே பக்கத்திலே வந்து ஏறி மிதிச்சிருவேண்டா கோழிகாலு மண்டயா! ஒன்னோட ரசிகையர் மன்றத்துக்கு இங்க கிளைகள் இல்லியா? இருந்துச்சுன்னா போயி ஒரு கிளையை பிடிச்சி கொள்ளிவாய் பிசாசு மாதிரி தொங்குடா"

கப்பி:- "ஹி ஹி... இப்பிடியெல்லாம் என்னை சொல்லி இன்சல்ட் பண்ணக்கூடாது, அப்புறம் நீங்க வெளிநாட்டிலே இருக்கிற நீதிமன்றத்திலே வழக்குக்களை சந்திக்க வேண்டியதா வரும்?"

கவுண்டர்:- "வழக்கா? எங்கவீட்டிலே இருக்கிற ஒலக்கையிலெ ரெண்டு அடி போட்டுறுவேண்டா ஆம்லெட் மண்டயா? இந்தமாதிரி விதண்டவாதம் பேசுறனுவனுக எல்லாத்தையும் நான் தூக்கி போட்டு மிதிக்கிறதுதான் என்னோட பழக்கமான வழக்கம்..."

கப்பி:- "அய்யோ வேணாங்க ஆபிசர், என்னோட பவர் ஒங்களுக்கு தெரியட்டுமின்னு தான் அப்பிடி சொன்னேன். ஒங்க பவர் என்னான்னு எனக்கு கோமுட்டியே பார்த்ததிலே தெரிஞ்சுக்கிட்டேன், என்னை விட்டுருங்க நான் அப்பாவி"

கவுண்டர்:- "அடேய் கொலைக்கார பாவி, நீயும் இந்த தலைக்காணி உறையே முழங்கால் வரைக்கும் போட்டுக்கிட்டு திரியுற எழுத்தாள கோஷ்டியா? கதையெல்லாம் எழுதுறீயே? என்னாடா காரணம்?"

கப்பி:- "ஹிம் அந்த கோஷ்டியிலேயும் இருக்கலாம், இல்லான்னா இல்லாமேயும் இருக்கலாம், அந்த கோஷ்டியிலே நான் இல்லாதுனாலே நான் எழுத்தாளன் இல்லைன்னு இல்லை, நான் அந்த கோஷ்டியிலே இருக்கிறதுனாலே அங்க இருக்கிற மத்தவங்க எல்லாம் எழுத்தாளருக இல்லைன்னு இல்லை. ஆனா நாங்க எல்லாம் எழுத்தாளர்'ன்னு தான் ஊருக்குள்ளே எல்லாரும் சொல்லுறாங்க, அவங்கெல்லாம் சொன்னதுனாலேதான் நாங்க எழுத்தாளர் இல்லை. ஆனா அவங்கெல்லாம் அதை சொல்லட்டியும் நாங்க எழுத்தாளர்தான்! நீங்க இதைப் பத்தி என்ன சொல்லுறீங்க?"

கவுண்டர்:- "ஹிம் என்ன சொல்லவா? ஒன்கிட்டே இவ்வளோ நேரம் பேசினதே தப்பு'டா லாப்டாப் மண்டயா? சரி பிர்த்டே பேபி பொழைச்சிட்டு போ'ன்னு விட்டா விசு டயலாக்'ஐ என்க்கிட்டே பேசி காட்டுறீயா?"

கப்பி:- "ஆபிசர் சார், நீங்க கூப்பிடதுக்காக தான் என்னோட 25 மொபலையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வந்தேன், இல்லன்னா இந்நேரம் இந்த ஒலகத்திலே இருக்கிற என்னோட மன்றத்து உறுப்பினர்களுக்கிட்டே இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை வாங்கிட்டு இருந்துருப்பேன்."

கவுண்டர்:- "பொண்ணுக கூட கடலை போடுறதுக்கு 25 மொபைல்'டா! விளங்கிருமடா இந்த ஒலகம்.. ஒனக்கு இருக்குடா இன்னிக்கு பிர்த்-டே பம்ப்ஸ்... ஓடாதா அரைடவுசர், நில், இல்ல டிக்கிலோனா'க்கு கோமுட்டி வாங்கினமாதிரியே நீயும் வாங்கிருவே"ன்னு கப்பியை விரட்டுகிறார் கவுண்டர்.

41 comments:

ILA(a)இளா said...

இத்தனை மண்டையா கப்பிக்கு?

வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு ராயல்...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ILA(a)இளா said...

/கப்பி:- "என்னா ஆபிசர் இதுக்கெல்லாம் இப்பிடி அசந்து போறீங்க.. போனவருசமே துள்ளல்'ன்னுகிற காவியதிரைப்படம் எப்போ ரிலிஸாகமின்னு பதிவு போட்டு அந்த படத்தோட புரொடிஸர்'க்கு போன் மேலே போனை போட்டு போன மாசம் ரிலிஸ் பண்ண வைச்சிடோமில்ல.. அப்போ பார்த்துகோங்க, என்னோட தணியாத கலை தாகத்தே"//
சரியா, சொன்னேயா. அந்த கருமத்தை பார்க்கவெச்சது கப்பிதான். சாபம் குடுக்குற நாள் இன்னிக்கு இல்லே. நல்லா இருங்க சார்!

ALAGAR said...

Kappi mandaiyanukku,

Enathu
Idhyam
Kanintha
Pirantha naal Vaazhthukkal

அய்யனார் said...

கலக்கல் பதிவு ...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தம்பி said...

கப்பி நீ பொறந்து 30 வருஷம் ஆச்சுன்றத நம்பவும் முடில, நம்பாம இருக்கவும் முடில.

ம்ஹிம் என்ன பண்றது.

என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சி.கை.பு

இம்புட்டு திட்டி ஒருத்தனுக்கு வாழ்த்து சொல்றத விட நாலு நமீதா படம் போட்டுருந்தா கூட்டம் கூரைய பிச்சிகிட்டு வந்திருக்கும். :))

இராம் said...

/இத்தனை மண்டையா கப்பிக்கு?///

விவ்,

சீக்கிரமே நட்சத்திரத்துக்கும் டெவில் ஷோ நடத்த கவுண்டர் வெயிட்டிங் ;)


/கலக்கல் பதிவு ராயல்...//

எல்லாம் ஒன்னோட ஆசிர்வாதம்தான் வெட்டி...

/சரியா, சொன்னேயா. அந்த கருமத்தை பார்க்கவெச்சது கப்பிதான். சாபம் குடுக்குற நாள் இன்னிக்கு இல்லே. நல்லா இருங்க சார்!//

என்ன சொல்ல... சொ.செ.சூ....

நானும் அந்த கருமத்தை பத்து நிமிசம் பார்த்து தொலைஞ்சேன்... வராத தூக்கமெல்லாம் வந்து தொலைஞ்சது அன்னிக்கு....

செவன்னேன்னு படுத்து தூங்கிட்டேன்.... :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி'ன்ன குருட்டு அழுக்குன்னு அர்த்தமிடா அட்லாஸ் மண்டயா!//

இன்னும் குருட்டு புலி எஃபக்ட்லயே சின்ன தல இருக்காரு போல ;)

வெட்டிப்பயல் said...

//"கீ போர்ட் மண்டயா, ஒனக்கில்லாமே ஒங்க தல'க்கிற அந்த அரைடவுசர் மண்டயனுக்கும் இருக்குடா சீக்கிரமே? //

சின்ன 'தல'க்கு பெரிய தல மேல என்ன கோபமோ?

வெட்டிப்பயல் said...

இதுல மொத்தம் எத்தனை மண்டைகள் இருக்குனு கண்டுபிடிக்கறவங்களுக்கு சின்ன தல லீலா பேலஸ்ல டின்னர் ஸ்பான்சர் பண்ணுவார்...

வெட்டிப்பயல் said...

கப்பிமா,
உன்னை பத்தி பல இடங்களிலிருந்து கம்ப்ளைண்ட் வருதே... என்ன மேட்டர்?

ஸ்பெனிஷ் அழகி said...

//வெட்டிப்பயல் said...

கப்பிமா,
உன்னை பத்தி பல இடங்களிலிருந்து கம்ப்ளைண்ட் வருதே... என்ன மேட்டர்? //

அப்படி என்ன கம்ப்ளைண்ட் வந்துச்சி என் பாய் ஃபிரெண்டை பத்தி?

ஸ்பேனிஷ் அழகி said...

எங்க அத்தான் ரொம்ப நல்லவர். இன்னைக்கு அவர் பிறந்த நாளைக்கு நாங்க எல்லாம் இந்தியாக்கு ஃபிளைட் பிடிச்சி வந்திருக்கோம்

காந்திமதி said...

// ஸ்பேனிஷ் அழகி said...

எங்க அத்தான் ரொம்ப நல்லவர். இன்னைக்கு அவர் பிறந்த நாளைக்கு நாங்க எல்லாம் இந்தியாக்கு ஃபிளைட் பிடிச்சி வந்திருக்கோம் //

எவடி அவ வெள்ளக்கார சிருக்கி, என் பேராண்டிக்கு ரூட் விடறது. நான் வந்தனா உருகுவேல உன்ன சந்தி சிரிக்க வைச்சுடுவேன். ஆமா

கப்பி பய said...

அடப்பாவி மக்கா :(

ஸ்பேனிஷ் அழகி said...

// காந்திமதி said...

// ஸ்பேனிஷ் அழகி said...

எங்க அத்தான் ரொம்ப நல்லவர். இன்னைக்கு அவர் பிறந்த நாளைக்கு நாங்க எல்லாம் இந்தியாக்கு ஃபிளைட் பிடிச்சி வந்திருக்கோம் //

எவடி அவ வெள்ளக்கார சிருக்கி, என் பேராண்டிக்கு ரூட் விடறது. நான் வந்தனா உருகுவேல உன்ன சந்தி சிரிக்க வைச்சுடுவேன். ஆமா //

நான் வெள்ளக்காரி இல்லை. நானும் உங்க கலர் தான். சொல்லப்போனா நான் அவரைவிட கலர் கம்மிதான். எங்களை பிரிச்சிடாதீங்க ஆத்தா.

காந்திமதி said...

//
நான் வெள்ளக்காரி இல்லை. நானும் உங்க கலர் தான். சொல்லப்போனா நான் அவரைவிட கலர் கம்மிதான். எங்களை பிரிச்சிடாதீங்க ஆத்தா//

அடியே என் பேராண்டிக்கு என் பேத்தியத்தான் கட்டி வைப்பேன். ஒழுங்கா ஊர பாத்து ஓடி போயிடு

மெல்கிப்சன் said...

ராம்,
கப்பிய திட்டாதீங்க. அவர் என் படத்துக்கு விமர்சனம் எழுதனதால என் படம் வசூல் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது.

துள்ளல் தயாரிப்பாளர் said...

// மெல்கிப்சன் said...

ராம்,
கப்பிய திட்டாதீங்க. அவர் என் படத்துக்கு விமர்சனம் எழுதனதால என் படம் வசூல் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது. //

அடப்பாவிகளா. எப்படியாவது படத்தை பாதில நிறுத்தி தப்பிக்கலாம்னு பார்த்தேன். படத்தை எதிர்பார்க்கிறேன், நேரா பார்க்கிறேனு சொல்லி பதிவு போட்டு என்னை பிச்சக்காரன் ஆக்கிட்டீங்களே!

ப்ரவின் காந்த் said...

கப்பி,
அந்த பதிவுக்கும், விளம்பர பதிவுக்கும் நான் கொடுத்த பணம் அக்கவுண்டுக்கு வந்துடுச்சா?

இராம் said...

/
சின்ன 'தல'க்கு பெரிய தல மேல என்ன கோபமோ?//

வெட்டிகாரு,

ஒனக்கு டெவில் ஷோ போட்டப்போ எனக்கு என்ன மேன் ஒம்மேலே கோவம்??

இல்ல நீ எனக்கு போட்டியே அப்போ என்மேலே ஒனக்கு எதுவும் கோவம் இருந்துச்சா???

இப்பிடி நான்-சென்ஸ் கொஸ்டினெல்லாம் கேட்டின்னா நம்ம ரெஸ்பெக்ட் என்னாக்குறது??? :)

வெட்டிப்பயல் said...

//இராம் said...

/
சின்ன 'தல'க்கு பெரிய தல மேல என்ன கோபமோ?//

வெட்டிகாரு,

ஒனக்கு டெவில் ஷோ போட்டப்போ எனக்கு என்ன மேன் ஒம்மேலே கோவம்??

இல்ல நீ எனக்கு போட்டியே அப்போ என்மேலே ஒனக்கு எதுவும் கோவம் இருந்துச்சா???

இப்பிடி நான்-சென்ஸ் கொஸ்டினெல்லாம் கேட்டின்னா நம்ம ரெஸ்பெக்ட் என்னாக்குறது??? :) //

இதெல்லாம் சும்மா பீதி கிளப்பறதுக்கு. இதுக்கு போய் டென்ஷனாகலாமா?

கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.

காந்திமதி said...

//கப்பி பய said...

அடப்பாவி மக்கா :( //

பேராண்டி,
கரி சோறு போட்டு வளத்த ஆயாவ நேத்து வந்த சிரிக்கிக்காக இப்படியெல்லாம் வையக்கூடாது.

இராம் said...

//கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//

ஏலேய்,

நான் அவன் இல்லை....


ஐயா.. அமுக செல்லம், என்னாய்யா ஒனக்கு இப்பிடியொரு பாசம் நம்ம கப்பி நிலவர் மேலே??? :)

வெட்டிப்பயல் said...

//கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//

சாரி டெக்னிகல் 'பால்ட். மேல நீங்க போட்டிருக்க கமெண்டெல்லாம் சூப்பர்

ஸ்பேனிஷ் அழகி said...

// காந்திமதி said...

//கப்பி பய said...

அடப்பாவி மக்கா :( //

பேராண்டி,
கரி சோறு போட்டு வளத்த ஆயாவ நேத்து வந்த சிரிக்கிக்காக இப்படியெல்லாம் வையக்கூடாது. //

நல்லா திட்டுங்க டார்லிங். அப்பதான் என் மேல நீங்க வெச்சிருக்க பாசம் அதுக்கு புரியும்

அமுக அசரிரி said...

//இராம் said...

//கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//

ஏலேய்,

நான் அவன் இல்லை....


ஐயா.. அமுக செல்லம், என்னாய்யா ஒனக்கு இப்பிடியொரு பாசம் நம்ம கப்பி நிலவர் மேலே??? :) //

ஏன்னா அவர் எங்க ஆளு (நமீதா ரசிகர்). அவர் மேல எங்களுக்கு அவ்வளவு பாசம்

அமுக அசரிரி said...

//வெட்டிப்பயல் said...

//கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//

சாரி டெக்னிகல் 'பால்ட். மேல நீங்க போட்டிருக்க கமெண்டெல்லாம் சூப்பர் //

வெட்டிகாரு,
நாங்க மேலயும் போடுவோம். கீழழும் போடுவோம்.

இது எப்படி இருக்கு?

வெட்டிப்பயல் said...

//
நல்லா திட்டுங்க டார்லிங். அப்பதான் என் மேல நீங்க வெச்சிருக்க பாசம் அதுக்கு புரியும்//

கப்பி,
உன்னைய நல்லவனு நினைச்சிட்டிருந்தனேயா...

இப்படி பண்ணிட்டியே :-(((

கப்பியின் மனசாட்சி said...

//கப்பி,
உன்னைய நல்லவனு நினைச்சிட்டிருந்தனேயா...

இப்படி பண்ணிட்டியே :-(((//

உன்னைய யாரு இப்படி நினைக்க சொன்னா?

அது உன் தப்பு.

வெட்டிப்பயல் said...

// கப்பியின் மனசாட்சி said...

//கப்பி,
உன்னைய நல்லவனு நினைச்சிட்டிருந்தனேயா...

இப்படி பண்ணிட்டியே :-(((//

உன்னைய யாரு இப்படி நினைக்க சொன்னா?

அது உன் தப்பு. //

கப்பி,
அது நிஜமாலுமே உன் மனசாட்சி தானா? :-((

ஜொள்ளுப்பாண்டி said...

கப்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

கப்பி பொறந்த நாளும் அதுவுமா டக்கீலா ஏதாச்சும் வெட்டி வெட்டி டான்ஸ் ஆடுதா?? ;)))))

ILA(a)இளா said...

//சீக்கிரமே நட்சத்திரத்துக்கும் டெவில் ஷோ நடத்த கவுண்டர் வெயிட்டிங் ;)//
இது என்ன போக்கிரி படத்துல விஜய் லிஃப்டல தர வார்னிங் மாதிரி இல்லே இருக்கு

ILA(a)இளா said...

//இன்னும் குருட்டு புலி எஃபக்ட்லயே சின்ன தல இருக்காரு போல //
இதுல ஏதோ உள்குத்து இருக்கு. மக்கா என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்...

ILA(a)இளா said...

//கப்பி,
உன்னைய நல்லவனு நினைச்சிட்டிருந்தனேயா...//
அப்படியா? யாருய்யா அது உண்மை நெலவரம் தெரியாம பேசிக்கிட்டு...

ILA(a)இளா said...

கப்பிக்கு புடிச்ச தமிழ்ல புடிச்ச ஒரே வரி
//நான் அவன் இல்லை....//
இப்படித்தான் கியூவுல நிக்கிறவங்களுக்கு சொல்றாராம்.. கடன் குடுத்தவங்கதான்யா கியூவுல நிக்கிறாங்க..

ILA(a)இளா said...

////கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//

சாரி டெக்னிகல் 'பால்ட். மேல நீங்க போட்டிருக்க கமெண்டெல்லாம் சூப்பர்//
யாரு மேல?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வெட்டிப்பயல் said...
//கீழ நீங்க போட்ட கமெண்டெல்லாம் சூப்பர்.//
சாரி டெக்னிகல் 'பால்ட். மேல நீங்க போட்டிருக்க கமெண்டெல்லாம் சூப்பர்//

வெட்டிக்கு எப்பமே மேற்கொண்டு பார்க்கத் தெரியாது! அதான் மேல போட்ட கமெண்டெல்லாம் மேற்கொண்டு பாக்காம, கீழ்க்கொண்டு பாத்துட்டாரு! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இராம்...கலக்கிட்டீங்க!
வலையுலகில் முதன் முதலா பிறந்த நாள் பரிசா ஒரு டெவில் ஷோ போட்டது யாருப்பா?....

கப்பி...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கப்பி பய said...

டொடடொடடொய்ங்ங்ங்ன்ங்....

ஒன்னுமில்ல...சோக பேக்ரவுண்ட் மூசிக்கு...டோட்டல் டேமேஜ்!!

இராம் said...

//இது என்ன போக்கிரி படத்துல விஜய் லிஃப்டல தர வார்னிங் மாதிரி இல்லே இருக்க//

ஆஹா விவ்... போக்கிரி படமெல்லாம் பார்த்தீங்களா???

ஹைய்யோ பாவம்... :)