Sunday, July 8, 2007

ச்சுப்பிரமணியின் சினிமா என்ட்ரி

அதிர்ஷ்டம் யாருக்கு எப்போ வரும்னு சொல்ல முடியாது.

சினிமாவுல ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு பலபேர் ஏங்கும் போது எங்க ச்சுப்பிரமணிக்கு அடிச்சது பாருங்க அதிர்ஷ்டம்.

இப்ப நான் சொல்றத கேட்டு சூடான் புலி கதை வுடாதீங்க அக்கா பெட்டரா திங்க் பண்ணுங்கன்னு சொல்லும்.

வவ்வால் இந்த 'உட்டாலக்கடி வேலை' வேண்டாம் நிஜமாவே ச்சுப்பிரமணியக் கூப்பிட்டாங்களான்னு கேக்கும்.


ஏன்னா ச்சுப்பிரமணியக் கூப்பிட்டது ஏப்பை சாப்பையான ஆளு இல்லீங்கோ.
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிங்கோ....கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல....

ச்சுப்பிரமணிக்கும் அப்படித்தான் அதிர்ந்தது.ஒரு இடத்துல நிக்காம ஓடுறான் ஆடுறான்.

மேட்டர் இதாங்க.ஒரு 15 வருஷத்துக்கு முன்னால ரஜினி ,ராதா,நதியா நடிச்ச 'ராஜாதி ராஜா' பாத்திருக்கீங்களா?அதுல தலைவர் டபுள் ரோல்.

ஒன்னுல பயந்தாங்குள்ளியா நதியாக்கு ஜோடி.அவரு பயத்தப் போக்க நதியா தாயத்து கட்டி உடுவாங்க.

அப்ப ரஜினி கேப்பாரு,'இதைக் கட்டிக்கிட்டா காளையனை [வில்லன்] அடிக்க முடியுமா?சுப்பிரமணிய அடிக்க முடியுமா?'[அவரை துரத்திய நாய்]

இப்ப சிவாஜி க்கப்புறம் கே.எஸ்.ரவிக்குமாரோட ஒரு படம் பண்ணப் போறாராம்.
காமெடி கலந்த ஆக்ஷன்.

15 வருஷத்துக்கு முன்னால தன்னை ஓட ஓட விரட்டிய சுப்பிரமணிய வச்சி கதை பண்ணச் சொன்னாராம்.

அந்த நாய் செத்துப் போயிருக்குமேன்னு சொல்ல பரவாயில்லை அதே போல வேற நாய நடிக்க வைக்கலாம்னு பல நாய்களை அழைச்சிவர,ரஜினி நிஜம்மாவே சுப்பிரமணின்னு பேர் வச்ச நாய்தான் வேணும் தேடுங்கன்னு சொன்னாராம்.

ரவிக்குமாரோட அசோசியேட் டைரக்டர் ஒருத்தர் எதேச்சையா...

[எதேச்சையாத்தான்....லஞ்சம்லாம் குடுக்கலீங்க] நம்ம ச்சுப்பிரமணியப் பத்திக் கேள்விப்பட்டு,வந்து பார்த்து இப்ப ஓகே ஆயிடுச்சு.

மனுஷனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க .

பாருங்க என்னா ஸ்டைலா குடை பிடிச்சிக்கிட்டிருக்கான்.வாழ்வுதான்.

எங்க ச்சுப்பிரமணிக்கு வந்த வாழ்வப் பாருங்க.

சினிமால நடிக்கப் போவது உறுதியானதும் ச்சுப்பிரமணி ரொம்ப அலட்ட ஆரம்பிச்சிட்டான்.எந்நேரமும் கண்ணாடியும் கையுமா அழகு பாக்கறதும்,
ஆப்பிள் ஜூஸ் கேக்கறதும் டி.வி.டி.யில இங்கிலீஷ் படம் அதுவும் ஜாக்கிஜான் படம்னா தான் பாக்கறது.ஏன்னா சூப்பர் ஸ்டார் கூட ஃபைட் பண்ணனுமாம்.

ஒரு நாள் அசோஸியேட் டைரக்டர் வந்து ச்சுப்பிரமணிக்கு ஃபோட்டோ ஷெஷன் இருக்கு. எடுத்துட்டு அப்படியே டயலாக் டெலிவரியும் பார்த்துடுவோம் என்று சொல்லி கூப்பிட்டார்.

[லொள்ளுவது கூட சினிமா ஸ்டைல்ல இருக்கனுமாம். இல்லாட்டி டப்பிங் போடனுமாம்.]

நான் ஒரு ஆட்டோவில் அழைத்து வர்ரேன் என்றதும் [கார் சர்வீஸ் போயிருந்தது] நோ நோ நான் இவரோட டயோட்டா இன்னோவாவில் போறேன். நீங்க பிச்சு கிச்சைக் கூப்பிட்டுக் கிட்டு ஆட்டோவுல வாங்கன்னு சொல்லிட்டு கார்ல ஏறிடுச்சு.

உனக்கு ரொம்ப ஏத்தம் தான்னு நெனைச்சிக்கிட்டு ஆட்டோவில் நாங்க மட்டும் போனோம்.விதவிதமான,காஸ்ட்யூம்ல [!!!!!!] ச்சுப்பிரமணி போஸ் குடுக்க கேமெராமேன் எடுத்துத் தள்ளினார.போட்டோவெல்லாம் பார்த்து ரஜினி சார் ரொம்ப சந்தோஷப் பட்டு,கொஞ்சமா இருந்த ச்சுப்பிரமணி ரோலை கிளை மேக்ஸ்வரை வக்கச் சொல்லிட்டார்.

அப்படியே தன் தம்பி டஃப்பிக்கும் ஒரு சான்ஸ் கேக்க ,ரஜினி சிரிச்சிக்கிட்டே ஓகே ரிஸ்க்கான சீன்ல உன் தம்பிய டூப்பா போட்டுக்கன்னு சொல்லிட்டார்.

ஷூட்டிங் எல்லாம் மலேஷியா,நியூஸிலாந்து லயாம்.மை பிரண்ட் ,துளசியக்கா கிட்ட சொல்லி ச்சுப்பிரமணியப் பார்த்துக்கச் சொல்லனும்.

கிச்சுவுக்கும்,பிச்சுக்கும் ஸ்கூல்ல இதே பேச்சுதானாம்.இதக் கேட்டுட்டு அவங்க மிஸ்,பிரண்ட்ஸ் னு டெய்லி சுப்புவ பாக்க வர்ர கூட்டம் வேற.

மாமி இப்பல்லாம் என்னைக் கண்டுக்கிறதில்லை.எது செஞ்சாலும் ச்சுப்பிரமணிக்குத்தான் ஃப்ர்ஸ்ட் குடுக்கிறாள்.

அவனோ படு உஷார்.எதுவானாலும் நாங்க முதல்ல தின்னு பார்த்து வயத்துக்கு ஒன்னும் ஆகலைன்னாதான் தொடறான்.

இதுக்கு நடுவுல இராம நாராயணன் யூனிட்டுக்கு விஷயம் தெரிஞ்சி அவங்க அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கேக்க,'சாரி நான் கமிட் ஆயிட்டேன்.
சூப்பர் ஸ்டார் படம் முடியும் வரை நோ நோ கால்ஷீட்.
வேணும்னா அபி அப்பாவோட 'டைகர்' இருக்கு கூப்பிட்டுக்கோங்க.
என் ரேஞ்சுக்கு இல்லைன்ன்னாலும் ஏதோ உங்க யூனிட்டுக்கு அது போதும்னு சொல்லிடுச்சி.

சரி படம் எப்போ ரிலீஸ்னு கேக்கறீங்களா? ஆகஸ்ட்ல தாங்க..[அட அடுத்த ஆகஸ்ட்டுங்க]

ஒரு சூப்பர் ஸ்டார் நடிச்சாலே டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம்.ரெண்டு சூப்பர் ஸ்டாருங்க நடிக்கிறாங்க.அதனால இப்பவே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க.

17 comments:

delphine said...

உங்க ரேஞ்சே தனிதான்...

இராம் said...

யக்கோவ்,

சூப்பரு.... :))

கண்மணி said...

நன்றி டெல்பின்.நீங்க தொடர்ந்து எழுதுனா நான் ஓட வேண்டியதுதான் ;)

கண்மணி said...

@ ராம் வேற வழி.அக்காவ நல்லதா நாலு வார்த்த சொல்லித்தானே ஆகனும்.;)

Anonymous said...

;))

தருமி said...

சபாஷ், சரியான போட்டி !

குட்டிபிசாசு said...

சூப்பரப்பு!!

Chinna Ammini said...

சுப்பிரமனிக்கு பொம்பளை(நாய்) வேஷமெல்லாம் போட்டு கவுத்துட்டாங்களே. ஆம்பளச்சிங்கமில்ல சுப்பிரமணி. இத நீங்க நாலு தட்டு தட்டி கேக்கரதில்ல‌

அபி அப்பா said...

ச்சுப்பு ஜூப்பரு! நம்ம டைகருக்கும் ஒரு சான்ஸ் வாங்கி குடுப்பா! கோபியோட சோனி, அவந்திகாவின் ஜூலி எல்லாருக்கும் கோரஸ் ரோலாவது வாங்கி குடுப்பா:-))

நாகை சிவா said...

//இப்ப நான் சொல்றத கேட்டு சூடான் புலி கதை வுடாதீங்க அக்கா பெட்டரா திங்க் பண்ணுங்கன்னு சொல்லும்.//

சொல்லல.... பெட்டராவே திங்க் பண்ணி இருக்கீங்க... ஆனா ரஜினிய நினைச்சா தான் பாவமா இருக்கு....

கண்மணி said...

தருமி சார் யாருக்கு போட்டி
நீங்க நேத்து வஞ்சிக்கோட்டை வாலிபன் பாத்தீங்களா?

கண்மணி said...

குட்டி பிசாசு பதிவு போட்டு மூனு நாள் கழிச்சி கமெண்டா?அபி அப்பா கூட சேர்ந்து கெட்டுப் போயிட்ட நீயி

கண்மணி said...

சின்ன அம்மினி ரஜினி பொம்பள வேஷம் கட்டலாம் எங்க ச்சுப்பு கட்டக் கூடாதா?
குட்டி [ச்சுப்பி] எவ்ளோ அழகா இருக்கு ப்பாருங்க.

கண்மணி said...

அபி அப்பா ச்சுப்பிரமணி கனவி சீன்ல டைகர்,சோனி,ஜூலி இவங்கதான் கோரஸ்.

கண்மணி said...

சிவா ரஜினி குடுத்து வச்சிருக்கனும் எங்க ச்சுப்பு கூட நடிக்க.
மூல்தானி மட்டியில் குளிக்காம ஃபியூஷன் பண்ணாம எவ்ளோ கலர் பாருங்க.

Anonymous said...

:))))))

நாகை சிவா said...

//சிவா ரஜினி குடுத்து வச்சிருக்கனும் எங்க ச்சுப்பு கூட நடிக்க.
மூல்தானி மட்டியில் குளிக்காம ஃபியூஷன் பண்ணாம எவ்ளோ கலர் பாருங்க.//

அட ஆண்டவா! இந்த கொடுமைக்கு எல்லாம் அளவே இல்லையா?