இப்பல்லாம் எங்க திரும்பினாலும் வலைப் பதிவர் சந்திப்புதான்.
மூனு பேர் ஒன்னா சேர்ந்துட்டாலே சந்திப்புன்னு மக்கா பதிவு போட்டுடுது.
சென்னை வலைப் பதிவர் சந்திப்புகள் தான் முறைப்படி அறிவிப்போட தொடங்கப் பட்டது.
அப்புறம் பார்த்தா 'தலைநகரத்தில் சந்திப்பு' மாயவரத்தில் சந்திப்பு'
மதுரையில் சந்திப்பு' 'பெங்களூரில் சந்திப்பு' ன்னு அடுத்து அடுத்து போட்றாங்க.
அபி அப்பாவுக்கு செம கடுப்பு. நம்மள விட சூப்பரா பதிவு பட்டறை,அனாதை இல்லம் னு லிங்க் பண்ணி போடறாங்களேன்னு.
பாசக்கார குடும்பம் செயற்குழுவைக் கூட்டி ஆலோசனை பண்ணாங்க.
இவிங்களையெல்லாம் பீட் பண்ரா மாதிரி செய்யனும் என முடிவு செய்யப் பட்டது.
மை பிரண்ட் உடனே 'நயாகரா' வுல வச்சுக்கலாமா' என
அய்யனார் 'ஆப்பிரிக்க காட்டுல வச்சுக்கலாம்' என்றார்.
குட்டிபிசாசு,'பூமியிலயே வேண்டாம் எங்க நடத்தினாலும் காப்பியடிச்சிடுவாங்க அதனால எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் தான் சரி'என
அபி அப்பா ,'பிசாசு சொல்றதுதான் சரி நான் ஒரு அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்துட்டு வர்ரேன்'
'யோவ் நாசா க்காரன் நாசவேலைன்னு நம்மள புடிச்சி உள்ள போட ஐடியாவா' என கோபி அலற,
'நீ ஒரிஜினல் காட்ரெஜ் பீரோவுக்கும் டூப்ளிகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் பார்த்திருக்கியா?
ஒரிஜினல் 'godrej' ன்னு பேர் இருக்கும் டூப்ளிகேட்ல 'godhrej' ன்னு ஒரு H சேர்த்திருக்கும்.
அதுமாதிரி athlandis ன்னு H சேர்த்துட்டா நாசா கேஸ் போட முடியாது 'என விளக்க ஒருவழியா ஓகே ஆனது.
ஆரம்ப கட்ட வேலைகள்லாம் நடந்து முடிய [எப்படி என்னா ன்னு கேக்கப் படாது .அது குடும்ப இரகசியம் சொல்ல மாட்டோம்]
அட்[த்]லாண்ண்டிஸில் ஏறும் நாள் வந்தது.மெடிக்கல் டெஸ்ட்டுகள் ,காற்றுக் குளியல் சோதனைகள் எல்லாம் முடிந்து அனைவருக்கும் விண்வெளி கவச உடை அணிவிக்கப் பட்டது
திடீரென அபி அப்பா கண்கலங்க,'என்னாச்சு அனைவரும் பதற,
'என் தங்கமணி நேரா நேரம் வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டும் தேறாத உடம்பு இந்த கவச உடை போட்டதும் சும்மா 'பம்முனு' பெர்சனாலிட்டிய தூக்கிடுச்சே' என்றதும் கோபி கட கட வென சிரிக்க ,மறுபடியும் என்னாச்சு என
'ஒல்லி குச்சானுங்க அபி அப்பாவுக்கும் சென்ஷிக்கும் ஓகே நம்ம ஆல்ரெடி பீம் பாய் 'தம்பிக்கு' என்றதும் ,
'அட அது கூட தேவலாம் நம்ம 'சொர்ணாக்கா கண்மணி' டீச்சரப் பாருங்க' என முத்துலஷ்மி கும்மாளமிட,
'உஷ்...உங்களுக்குள்ளேயே இப்படி நோ கமெண்ட்ஸ்' என் டெல்பின் அதட்டினார்.
சொல்ல மறாந்துட்டேன்.தருமிம் சாரும் டெல்பினும் தான் ஃபைலட்ஸ்.
வழக்கம் போல மை பிரண்ட் 'ம்மீ த ஃபர்ஸ்ட்' ன்னு கிட்டே ஓடிப் போய் ஏறுச்சி.
எல்லோரும் ஏறியதும் ஓடம் மேலே பறக்கத் தொடங்க,
இம்சையரசி,'கோவிந்தா கோவிந்தா' என
'அடிப்பாவி கெளம்பும் போதே அபசகுனமா கோவிந்தாவா இனி எனக்கு கோழிக்கால் கெடச்ச மாதிரிதான் என்று காயத்ரி அழ
'ரொம்பத்தான் ஆசை கண்ணு மேல போனப்புறம் நோ ஃபுட். ஒன்லி வைட்டமின் காப்ஸ்யூல்ஸ்தான் 'என்று G3 சொன்னாள்.
சோறு வேண்டாம் 'தண்ணியாவது' கிடைக்குமா என குசும்பன் கவலைப் பட
'கவலைப் படாத பங்காளி தேவர்கள் அங்கங்கே ஆகய மார்க்கமா வருவாங்க அவங்க கிட்ட தேத்திடுவோம் 'மின்னல் ஆறுதல் தந்தது.
'இப்படியே ஆடாம அசையாம இருந்தா போர் அடிக்குது.கொஞ்ச நேரம் விளையாடாலாம்' என மை பிரண்ட் சொல்ல
'இதோ ஏதோ சங்கிலி மாதிரி இருக்கு இதை வச்சி டக் ஆப் வார் இழுப்போம் .லேடிஸ்தான் ஜெயிப்போம் 'இம்சை சவால் விட,
ஆண்கள் ஒரு பக்கமும் மகளிர் ஒரு பக்கமும் இழுத்தனர்.
திடீரென அட்[த்]லாண்டிஸ் ரெண்டாப் பிரிஞ்சி ஒரு பாதி தருமி சார் கண்ட்ரோலிலும்,
மறு பாதி டெல்பின் கண்ட்ரோலிலும் வர
ஃபுட் போர்டில் தொங்குவதுபோல் தொங்கத் தொடங்கினர்.
ஒழுங்கா வாங்கன்னு சொன்னாக் கேக்கனும் இப்படி 'ஷண்ட்டிங்' கம்பியப் புடிச்சி இழுத்து ஓடத்தக் கூறு போட்டுட்டீங்களேடா யாரைத்தான் நொந்து கொள்வது' என தருமி சார்
இதுங்க கூப்பிட்டு வந்தது தப்புன்னு தன்னையே நொந்து கொண்டார்.
மேலே இருந்தத ஏதோ ஒரு வளையத்தைப் பிடித்த படி ஒருபக்கம் குசும்பனும்,
இன்னொரு பாதியில் குட்டி பிசாசும் சர்க்கஸில் அந்தரத்தில் ஊஞ்சலாடுவதுபோல ஆடி 'ஷண்ட்டிங்கை' இணைக்க முயன்றனர்.
'ஹய் எம்.ஜி.ஆர் அரச கட்டளையில் ஆலம்விழுது புடிச்சி ஆடிகிட்டே பாட்டுப் பாடற மாதிரியில்ல இருக்கு'என மை பிராண்ட் கெமெண்ட் அடித்தாள்.
ஒரு வழியா குசும்பனும்,குட்டிபிசாசும் ஓடத்தை ஒன்றாக்க டெல்பின் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
இனி விண்வெளி வரும்வரை எல்லோரும் ஒழுங்கா வாலை சுரிட்டிக் கிட்டிருக்கனும் என டீச்சர் அதட்ட கப்சிப்.
அட்[த்]லாண்டிஸ் மேலே மேலே போய்க் கொண்டிருந்தது.
'ஆடி வா...பாடி வா...ஆனந்தம் காணலாம் வா..'என பாட்டுச் சத்தம் கேட்க
ஓடம் அந்தத் திசையில் போகப் பார்த்தால்,
தேவலோகத்தில் இந்திரன் ரம்பா ,ஊர்வசியோடு குஜாலாக ஆடிக் கொண்டிருந்தார்.
சரி இங்கேயே இறங்கி சந்திப்பை நடத்துவோம் என முடிவு செய்ய ஓடம் ஒருவழியாக
தேவலோகத்தில் லேண்ட் ஆனது.
[தொடரும்]
13 comments:
அக்கா அபி அப்பாவ ஒரு ஓட்டு மீசை வச்சுக்க சொல்லுங்க இல்ல நம்ம தலை மாதிரி மீசையாவது வரைய சொல்லுங்க அவர குளோசப் (கோல்கேட்) எப்படி பார்த்தாலும் ரொம்ப கஷ்டமா இருக்கு...
(இங்கேயும் என்ன அந்தரத்துல தொங்க விட்டுட்டீங்களே அக்கா!!!)
"அபி அப்பா ,'பிசாசு சொல்றதுதான் சரி நான் ஒரு அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்துட்டு வர்ரேன்"
என்னது திரும்பவும் அபி அப்பா ஆர்கனைசரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அக்கா செமயா இருக்கு கலக்குங்க.
ஆஹா வந்திருச்சு, மீசையில் ஓடி வந்தேன்!
குசும்பா! உனக்கு என்ன குறை வச்சேன், ஜூப்பரா 11 க்கு கொண்டு வந்து நிறுத்தலையா? ஐஸ் ஸ்கேட்டிங்ல நீ விழந்த இடத்தை சுத்தி செங்கள் வைக்கலையா?(நடு ரோட்டில பிரேக்டவன் வண்டி சுத்தியும் இருக்குமே அதுபோல), நான் தான் அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்து வருவேன்!
குசும்பன் said...
"அபி அப்பா ,'பிசாசு சொல்றதுதான் சரி நான் ஒரு அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்துட்டு வர்ரேன்"
என்னது திரும்பவும் அபி அப்பா ஆர்கனைசரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ
//
அதான் யாருகிட்டையும் சொல்ல கூடாது என்று சொல்லிட்டு இப்ப ஏன் குசும்பருக்கு ஞாபகம் வருது
அபி அப்பா said...
குசும்பா! உனக்கு என்ன குறை வச்சேன், ஜூப்பரா 11 க்கு கொண்டு வந்து நிறுத்தலையா?
//
வாய புடுங்காத ஆமா
அப்புறம் ஓட்ட வாய் அப்படி சொல்லுவ
எலே மக்கா பதிவு பத்தி சொல்லாம கும்மியா அடிக்கிறீங்க.
அடுத்த பதிவுக்கு வைட்டிங்!!
யக்கா...சூப்பர் பதிவு ;)))
\\குசும்பன் said...
"அபி அப்பா ,'பிசாசு சொல்றதுதான் சரி நான் ஒரு அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்துட்டு வர்ரேன்"
என்னது திரும்பவும் அபி அப்பா ஆர்கனைசரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\
ரிப்பீட்டேய்
சீக்கிரம் போடுங்க அடுத்த பதிவை...;)))))
சீக்கிரம் அடுத்த பதிவு போட்டா ஈ யடிக்கவா.
வெயிட்டீஸ் டில் நெக்ஸ்ட் வீக்
[அக்கா யோசிக்கனுமில்ல]
Post a Comment