Tuesday, July 24, 2007

சங்கம் டெக்னாலஜீஸில் சின்னக் கலைவாணர்

சங்கம் டெக்னாலஜீஸின் லெட்ஜர் கணக்கைப் பார்த்த தல கைப்பு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். டீக்கடை கடனைக்கூட அடைக்கமுடியாத அளவுக்கு கம்பெனியின் கிராஃப் அதளபாதாளத்திற்கு இறங்கிக்கிடக்க அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து தீவிர யோசனையில் இருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் கன்சல்டன்ட்,கருத்து கந்தசாமி, சின்னக் கலைவாணர் விவேக் கைப்புவை சந்திக்க ஆப்பீசுக்கு வருகிறார்.

"எவ்ளோ ஆப்பு வாங்கினாலும் ரியாக்சன் காட்டாம இருப்பியே..இப்ப என்னடான்னா கன்னத்துல கைவச்சுகிட்டு ஏதோ ராக்கெட் விடப்போற மாதிரி யோசிச்சிட்டிருக்கியே..என்னடா ஆச்சு?"

"கம்பெனி கூடிய சீக்கிரம் திவாலாகப் போவுது விவேக்கு. நானும் எவ்வளவு நேரம் தான் வேலை பாக்கற மாதிரியே நடிக்கறது. பஞ்சாயத்து பஞ்சாயத்தா போய் உதைவாங்கி உடம்பு பஞ்சராயிப்போச்சு. ஊருக்குள்ள தல காட்டமுடியல. பசங்க என்னடான்னா விவரம்புரியாம வெளாட்டுக்காரப் பயலுகளாவே இருக்கானுங்க. இவனுங்கள வச்சு எப்படி மாரடிக்கறதுன்னு புரியாம உக்காந்திருக்கேன்"

"அது கரெக்ட்தான் கைப்பு. இப்பல்லாம் டாவடிக்கறதுல இருந்து ஒரு கட்சி ஆரம்பிக்கறதுவரைக்கும் எல்லாமே காஸ்ட்லியாகிப்போச்சு. ஆனா நம்ம நெலம தான் அப்படியே இருக்கு. மின்னலே மாதவன் சாப்ட்வேர் சொல்லிக்குடுத்து ஆறாயிரம் சம்பளம் வாங்கும்போதும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான். சிவாஜி இருநூத்தம்பது கோடி சம்பாதிச்சாலும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான்"

"நான் சங்கத்து ஆபிசைப் பத்தி புலம்பினா நீ உன் சொந்த புலம்பலை ஆரம்பிச்சுட்டயா..எனக்கு ஒரு வழி சொல்லப்பு"

"ஆமா இவரு பில் கேட்ஸ் கம்பெனி நடத்தறாரு..நாங்க அட்வைஸ் கொடுக்கறோம்.சரி உன் கம்பெனிக்கு வரேன். என்னதான் பண்றீங்கன்னு பார்த்து என் கருத்தை சொல்றேன்" என்றபடி கைப்புவும் விவேக்கும் சங்க ஆப்பீசுக்கு வருகிறார்கள்.

அலுவலகத்துக்குள் நுழையும்போதே முன்னால் விவ்ஸ் இளா சேர் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லோருடைய மானிட்டரையும் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

விவேக்: டேய், ஆபீஸ் நேரத்துல சேர் மேல ஏறி நின்னு என்னடா செய்யற?

கைப்பு: நான் தான் அவனை சேர் மேல ஏறி நிக்க சொன்னேன்

விவேக்: ஏன் சுவத்துக்கு ஒட்டடை அடிக்கவா?

இளா: அது இல்லீங்க..நான் ஜி-டாக்ல ரொம்ப நேரம் சாட் பண்றேன்னு தல பனிஷ்மெண்ட் கொடுத்துட்டாரு. இப்ப வேற யாராவது சாட் பண்ணாங்கன்னா அவங்களை கண்டுபுடிச்சு சேர் மேல நிக்க வச்சுட்டுத்தான் நான் உட்காரனும். அதான் யார் சிக்கறாங்கன்னு பார்க்கறேன்

விவேக்: இன்னும் நீங்க வளரவே இல்லையாடா

கைப்பு: யப்பா இது நான் ஸ்ட்ரிக்டா கொடுத்திருக்க பனிஷ்மெண்ட். அப்பத்தான் சிங்கங்க பேசாம வேலை பார்க்கும்

விவேக்: இது பனிஷ்மெண்ட் இல்லடா...ஃபன்னிஷ்மெண்ட். அங்க யாருடா தனக்குத்தானே சிரிச்ச்ட்டு உக்காந்திருக்கவன்? டேய் நீ யாரு? என்ன பண்ற?

தேவ்: நான் பத்து மணிக்கு ஆபிஸுக்கு வருவேன். மக்கள்ஸ் எல்லாருக்கும் சாட்டில குட் மார்னிங் சொல்லுவேன். அப்புறம் டீ குடிக்க போவேன். டீ குடிச்சதால வாய் கசக்கும். அதனால ஒரு ஆப்பிள் ஜூஸும் குடிப்பேன். 12 மணிக்கு வந்து மறுபடியும் சாட் பண்ணுவேன். ஒரு மணிக்கு சாப்பிடப் போய் 3 மணிக்கு திரும்ப வருவேன். ஒரு அரைமணி நேரம் சீட்டுல சாஞ்சு குட்டித்தூக்கம். அப்புறம் ஒரு மணி நேரம் சாட். அப்புறம் கீழே டீக்கடைக்கு போய் டீ அடிச்சுட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவேன்.

விவேக்: நீ சங்கத்து ப்ராஜெக்ட் மேனேஜர்னு சுத்தி வளைச்சு சொல்றியா? வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேல பாக்கக்கூடாதா ராசா?

தேவ்: தல கம்பெனில யாராவது வேலை பார்த்தா அது தலக்குதான் அசிங்கம். போய்யா அந்த பக்கம்

விவேக்: அது சரி..உங்களை 1000 பில் கேட்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா..அங்க யாருடா ரொம்ப சீரியசா கீபோர்டை உடைச்சுட்டிருக்கறது?

சிபி: நான் தான் தளபதி. HR டீம். எங்கே, எந்த நேரத்துல ஆள் வேணும்னாலும் வோல் சேல்ல அனுப்புவேன்.

விவேக்: உன்னைத்தான்யா ரொம்ப நாளாத் தேடிட்டிருந்தேன். அவனவன் ஒரு பொண்டாட்டி, ஒரு பதிவு, ஒரு பாஸ்வேர்ட் வச்சே மெயின்டெயின் பண்ண முடியாம நாட்டுல பல கலவரங்கள் உருவாகுது. நீ எப்படி இத்தனையும் சமாளிக்கற?

சிபி: எனக்கு பிரச்சனை வந்துச்சுன்னா ஆவி உலகத்துல இருந்து நண்பர்களைக் கூப்பிட்டுப்பேன்.

விவேக்: ஆவியா...என்னடா ரோட்டு கடை இட்லிலருந்து வர ஆவி மாதிரி அசால்டா சொல்றீங்க...உங்க கிட்டயெல்லாம் பார்த்து பக்குவமா இருக்கனும்போலிருக்கேடா..கைப்பு என்ன அப்படியே கைத்தாங்கலா அடுத்த ஆளுகிட்டே கூட்டிட்டுப்போய்யா

அங்கு ஜொ.பா ஃபிகர்களுக்கு கொலைவெறியோடு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

விவேக்: டெக்னாலஜியை எவன் யூஸ் பண்றானோ இல்லையோ..உங்களை மாதிரி ஆளுங்க தான்டா நல்லா யூஸ் பண்றீங்க..அந்த செங்கல்லு செல்போனை வச்சு எந்த ஆண்ட்டியடா கரெக்ட் பண்ற?

ஜொ.பா: தல..எனக்குத் தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொன்னு.

விவேக்: அடப்பாவிகளா..போன வாரம் சிட்டி சென்டர் வாசல்ல கண்ணு தெரியாத பிச்சைக்காரன் போஸ்ல உட்கார்ந்துகிட்டு குட்டைப் பாவாடைகளை சைட் அடிச்சுட்டு வந்துட்டு இப்ப "தமிழ் கலாசாரம் ஆந்திரா மிளகா காரம்"னு டயலாக் விடறியேடா

ஜொ.பா: அதெல்லாம் ச்சும்மாச்சுக்கு..ஆனா எனக்குத் தேவை தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ணு

விவேக்: டேய்...சும்மா சும்மா தமிழ் கலாசாரப் பொண்ணுங்கறியே..எங்க "கண்ணே கனியமுதே கார்முகிலே"ன்னு தமிழ்ல ஒரு லவ் லெட்டர் எழுது பார்க்கலாம்

ஜொ.பா: அட விடுங்க தல..நமக்கு பொண்ணுங்க தான் முக்கியம்..தமிழ்ல கவுஜ எழுதறதுக்குத்தான் எங்க சின்ன தல இருக்காருல்ல

விவேக்: அது யாருடா உங்க சின்ன தல

கைப்பு: இராயலைப் பார்த்து யாருன்னு கேட்டுட்டியா? ராயல் என் செல்லம்.

விவேக்: செல்லம்னா மடில வச்சு கொஞ்ச வேண்டியதுதானே..இங்க பாரு இறக்கிவிட்டதும் ரஞ்சனி மகான்னு ஊருல ஒரு பொண்ணு விடாம சாட் பண்ணுது உன் செல்லம்

ராயல்: எனக்கான வெளியில்
குருட்டுப் புலியில்
மொட்டை வெயிலில்
ஓட்டை குடையில்
இன்னொரு இரவிலும் பயணத்தை தொடர
முடிவெடுத்தது.

விவேக்: என்னாங்கடா இது..புலின்றான் வெளின்றான்...சரி சூடான் புலி மேல உனக்கென்ன கோபம்? குருட்டுப்புலின்னு திட்டற?

ராயல்: அது படிமம்ண்ணே

விவேக்:"படிமம் அடி ரம்"னு ஏதேதோ சொல்றானுங்க..நல்லாத்தானேடா இருந்தீங்க?

எனும்போதே "சப்ஜெக்ட் கிடைச்சுடுச்சு" என கத்தியபடியே இராயல் ஃபிகர்களை படமெடுக்கிறார். பின்னால் உட்கார்ந்திருந்த ஜி ஓடி வருகிறார்.

ஜி: இளந்தல, அபெர்ச்சர் சரியா இருக்கா..லைட்டிங் ஏத்தி எடுங்க..மேக்ரோ எஃபெக்ட் போடுங்க..நைட் மோட் மாத்திட்டீங்களா...ஜூம் கரெக்டா பண்ணுங்க

விவேக்: டேய் டேய் டேய்..போதும்டா...உனக்கு தெரிஞ்ச எல்லா டெக்னிகல் வார்த்தையையும் சொல்லிட்ட..கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ

ஜி: நாங்களும் போட்டொகிராபர் தெரியும்ல?

விவேக்: உங்களச் சொல்லி குத்தமில்லடா...உங்களப் பத்தி தெரியாம உங்களுக்கு சொல்லிக்குடுத்தாங்களே ரெண்டு பேரு..அவங்களச் சொல்லனும்

ஜி: அண்ணே..பாத்து இருந்துக்கோங்க...இங்கல்லாம் அருவா வீச்சுதான்...வாளும் வேலும் என் கண்கள்..

விவேக்: டேய் கிரீடம் 'தல'யே பேஸ் வாய்ஸ்ல பஞ்ச் அடிக்கறத விட்டுட்டாரு..நீங்க இன்னும் விடலயாடா? அங்க ரொம்ப நேரமா ஒருத்தன் மானிட்டரை வெறிச்சிட்டிருக்கானே..புலி ராசா சிவா..என்னய்யா ஆச்சு?ரொம்ப நேரமா சும்மாவே உட்கார்ந்திருக்க?

சிவா: என் மவுஸ் பேடைக் காணோம்.

விவேக்: அதுக்கு?

சிவா: யோவ் மண்டையில ஏதாவது இருக்கா? மவுஸ் பேட் இல்லைனா எப்படிய்யா வேலை செய்யறது? அதான் சும்மா உட்கார்ந்திருக்கேன்.

விவேக்: அடப்பாவிகளா உள்ளுக்குள்ள எழுநூத்தம்பது ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத கம்ப்யூட்டர் மவுஸ் பேடால தான் ஓடுதாடா? உங்களைத் திருத்தவே முடியாதுடா

சிவா: திருத்தறதுக்கு நாங்க என்ன எக்ஸாம் ஆன்சர் ஷீட்டா?

விவேக்:(மனதுக்குள்) ஆகா..வில்லங்கம் புடிச்ச ஆளா இருக்கானே...வாயக்கொடுத்து மாட்டிக்க கூடாது..கைப்பு நெலம ரொம்ப பாவம்தான்

விவேக்: கப்பி, ரொம்ப நேரமா விட்டத்தை பார்த்து யோசிச்சுட்டிருக்கியே?

கப்பி: நம்ம சங்கத்துக்கு எப்படி லாபம் சம்பாதிக்கலாம்னு யோசிக்கறேன்

கைப்பு: ஜாவா பாவலா! உண்மையாவா ராசா? நீ தான் டா சிங்கம்..

விவேக்: ஜாவா பாவலனா...ஏன்டா?

கைப்பு: இவன் ஜாவா கோட் அடிக்கும்போதே வரிக்கு ஒரு வார்த்தை தான் அடிப்பான்..ஆச்சரிய குறிலாம் போடுவான்

விவேக்: அடப்பாவிகளா..இப்படிலாம் அடிச்சா புரோகிராம் வேலையே செய்யாதே? எரர் வருமே? க்ளையன்டு காசு கொடுக்க மாட்டானே? அப்புறம் எப்படிடா லாபம் சம்பாதிப்பீங்க?

கப்பி: ஊர்ல இருக்க எல்லா கம்பெனியும் சைட் பிசினஸா பஸ் விட்டு சம்பாதிக்கறாங்க. ரோட்டுல பார்த்தா ஃபுல்லா இவங்க பஸ்ஸாதான் இருக்கு. அதே மாதிரி நாமளும் நெறய பஸ் வாங்கிவிட்டு பாதி ரேட்டுக்கு டிக்கெட் வித்து சங்கத்துக்கு பணம் சேர்க்கலாம்

விவேக்: ஏன் ஒரு டிரெயின் வாங்கி விட்டா இன்னும் நல்ல லாபம் வருமே..நீ உண்மைலயே படிச்சுத்தான் வேலைக்கு வந்தயா? அதெல்லாம் அந்தந்த கம்பெனில வேலை செய்யறவங்களை ஏத்திட்டு போறதுக்குடா..போற போக்குல என்னைய கைப்பு ஆக்கி காமெடி பண்ணிடுவீங்க போலிருக்கேடா

வெட்டி: விவேக் நீங்க இஙக் வாங்க. நீங்க எங்க ஆபீசுக்கு வந்ததும் எனக்கு ஒரு லவ் ஸ்டோரிக்கு கரு கிடைச்சுடுச்சு

விவேக்: சொல்லவேணாம்னு சொன்னா விடவா போற? சொல்லு

வெட்டி: நீங்க ஒரு கம்பெனிக்கு இது மாதிரி கன்சல்டிங்கு போறீங்க. அங்க ஒரு தெலுகு பொண்ணு மேல உங்களுக்கு பார்த்த உடனே காதல. ஆனா அவ ஃப்ரென்ட்லியா பழகுறா. அதே கம்பெனில மில்காஜின்னு ஒரு பையன் வேல பார்க்கறான். அவன் அந்த தெலுகு பொண்ணை ஒன்சைடா லவ் பண்றான். அது உங்களுக்குத் தெரிஞ்சுடுது. நீங்க ஆபிசை விட்டு போற கடைசி நாள் பிரியற நேரத்துல அந்த பொண்ணு ஃபீலாகி உங்க கிட்ட 'ஐ லவ் யூ' சொல்றா.

விவேக்: ஏ தெலுகுமொழியேஏஏஏஎ

என 'முதல்வன்' பாட்டை அடித்தொண்டையிலிருந்து பாடுகிறார்.

வெட்டி: ஆனா நீங்க மில்காஜிகூட அந்த பொண்ணை சேர்த்துவச்சுட்டு பாலகிருஷ்ணா படம் பார்க்க போயிடறீங்க

விவேக்: அடப்பாவி..இங்கயும் எனக்கு காதலை சேர்த்துவைக்கிற அல்லக்கை வேலை தானா? கடைசி வரைக்கும் ஜோடி சேர விடமாட்டீங்களாடா?

வெட்டி: மில்காஜி பாவம்ல

விவேக்: பாவமாவது கூவமாவது..போடாடேய் போடா..ஆ...ஆஅ....

என கமல் வாய்ஸில் ஃபீலாகுகிறார்.

அப்போது தம்பி சோடா எடுத்துக்கொண்டு வர

விவேக்: இந்த ஏரியாவுலயே நீ ஒருத்தன் தான் கைகட்டி பவ்யமா இருக்க? என்ன லாங்குவேஜ்ல புரோகிராம் எழுதுவ? சியா? வி.பியா? ஜாவாவா?

தம்பி: மலையாளம் சேட்டா

விவேக்: என்னடா சோடா குடுத்துட்டு சேட்டாங்கறா? நான் சேட்டெல்லாம் இல்லடா...மறத்தமிழன்டா

தம்பி: அண்ணே..எனக்கு தெரிஞ்ச மொழி மலையாளம்னு சொன்னேண்ணே

விவேக்: மலையாளமா? ஏன்டா கேரளாவுல ஏதாவது க்ளையன்ட் புடிக்கப்போறியா?

தம்பி: க்ளையன்ட் இல்லண்ணே..கிளி புடிக்கப்போறேன்

கைப்பு: கிளியா? ஏற்கனவே உள்ளூருல அடிவாங்க வைக்கறது பத்தாதுன்னு என்னைக் கேரளாவுக்கு பார்சல் பண்ண ப்ளான் போட்டுட்டீங்களாய்யா?

தம்பி: அதெல்லாம் இல்ல தல..எல்லாம் பாவனாவுக்காகத்தான்

விவேக்: பாவனாவா...ஊருக்கு ஒரு பிகரைப் பிடிக்கறியேடா..நாடு தாங்காதுடா..மஞ்சுளா பாவம்டா..

எனும்போதே "கும்மி கும்மி, ரிப்பீட்டு ரிப்பீட்டு" என பாசக்கார குடும்பத்தினர் அட்லாஸ் கண்மணி டீச்சர் தலைமையில் அலுவலகத்தில் நுழைகின்றனர். "மொக்கை! மொக்கைக்கு மொக்கை!! மொக்கையோ மொக்கை!! மொக்கையை வச்சு மொக்கை" எனக் கொலைவெறி கும்பலோடு செந்தழல் வருகிறார்.

"கிளம்பிட்டாங்கய்யா....ஆப்பெல்லாம் ரெடியா எடுத்துட்டு வந்துட்டீங்களா..அவ்வ்வ்வ்" என தல சேரில் சாய்ந்து மயக்கமாகிறார்.

"இவங்ககிட்ட சிக்கினா சிக்குன்குனியாவே வந்துரும்போலயே...தப்பிச்சிருடா விவேக்கு" என கைப்பு டோனில் சவுண்ட் விட்டு ஜன்னலேறி தப்பியோடுகிறார் விவேக்.

23 comments:

Unknown said...

//பட்டைய கிளப்புனது கப்பி பய //

இதான்யா உண்மைலயே பட்டய கெளப்புறது கலக்குறே
கப்பி

ALIF AHAMED said...

இன்னும் படிக்கல

ALIF AHAMED said...

இதான்யா உண்மைலயே பட்டய கெளப்புறது கலக்குறே
கப்பி
//

கப்பி நல்லாவே 'கலக்குவாரு'

ALIF AHAMED said...

ராயலை இன்னும் நல்லா கலாய்ச்சி இருக்கலாம் ஒன்னும் சொல்லமாட்டாரு.. :)

ALIF AHAMED said...

தம்பிக்காக ஒரு தகவல்



"பிரமிட் நிறுவனத்தின் சார்பில் அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் வாழ்த்துக்கள். ஆர். மாதவன், பாவனா நடிப்பில் சீமான் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் இப்படம் வளர்ந்து வருகிறது"

கதிர் said...

பட்டை, லவங்கம் எல்லாத்தையும் போட்டு கலக்கிட்ட கப்பி.

ரவி said...

நல்லா புல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இருக்கு...!!!!

முரளிகண்ணன் said...

கலக்கீட்டியெ கப்பி

இராம்/Raam said...

கப்பி,

கவுண்ட் - டவுன் ஒனக்கு ஸ்டார்ட் ஆகிருச்சு.... :)))

வெயிட் டில் ஜீலை 31 ...

Anonymous said...

கப்பிண்ணே, பிரமாதம்ன்ணே..

வெட்டிப்பயல் said...

கலக்கல் பதிவு கப்பி...

Santhosh said...

கப்பியண்ணே கலக்கல்..

பாலராஜன்கீதா said...

//அதே மாதிரி நாமளும் நெறய பஸ் வாங்கிவிட்டு பாதி ரேட்டுக்கு டிக்கெட் வித்து சங்கத்துக்கு பணம் சேர்க்கலாம்//
ஆமாம் இதுல தலக்கு அனுபவம் அதிகம்.
:-)))

ILA (a) இளா said...

//எனக்கான வெளியில்
குருட்டுப் புலியில்
மொட்டை வெயிலில்
ஓட்டை குடையில்
இன்னொரு இரவிலும் பயணத்தை தொடர
முடிவெடுத்தது.//
அடடா,அடடா. என்னா கவிஜ ராம், அதெல்லாம் பொறப்புலையே வரனும்யா. பிறவிக் கவிஜனயா எங்க ராமு.

ILA (a) இளா said...

//மில்காஜின்னு ஒரு பையன் வேல பார்க்கறான்.//
எங்க ஊர்ல பன்னு பேரு மாதிரியே இருக்குதே?

// அவன் அந்த தெலுகு பொண்ணை ஒன்சைடா லவ் பண்றான்//
ஆரம்பிச்சுட்டாங்களா? ஏமுண்டி, ஆமாமுண்டி..

கோபிநாத் said...

கப்பியண்ணே...சூப்பரு ;-)

Ayyanar Viswanath said...

கலக்கல் கப்பி
:)

Unknown said...

:))))

ஜொள்ளுப்பாண்டி said...

வார்ர்றே வாவ் ..... கப்பி என்ன இது சும்ம அல்லாரையும் மொறத்திலே பொடு பொடைச்ச மாதிரி கெளப்பியிருக்கீக?? :))))))) கலகுங்க மக்கா !!! :))))))

இராம்/Raam said...

//அடடா,அடடா. என்னா கவிஜ ராம், அதெல்லாம் பொறப்புலையே வரனும்யா. பிறவிக் கவிஜனயா எங்க ராமு.//

ஹி ஹி...

விவ்,

ஒங்களுக்கு அநியாத்துக்கு நகைச்சுவை உணர்ச்சி ஜாஸ்திங்க... :))

MyFriend said...

wow. fantastic Kappi. :-D

MyFriend said...

//
//பட்டைய கிளப்புனது கப்பி பய //

இதான்யா உண்மைலயே பட்டய கெளப்புறது கலக்குறே
கப்பி
//

ரிப்பீட்டேய்.. :-D

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஒரு ஃபுல் ஸ்க்ரீன் காமெடிங்க கப்பி!

//டீ குடிச்சதால வாய் கசக்கும். அதனால ஒரு ஆப்பிள் ஜூஸும் குடிப்பேன். 12 மணிக்கு வந்து மறுபடியும் சாட் பண்ணுவேன். ஒரு மணிக்கு சாப்பிடப் போய் 3 மணிக்கு திரும்ப வருவேன். ஒரு அரைமணி நேரம் சீட்டுல சாஞ்சு குட்டித்தூக்கம். அப்புறம் ஒரு மணி நேரம் சாட். அப்புறம் கீழே டீக்கடைக்கு போய் டீ அடிச்சுட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவேன்//

அப்படியே நேர்-ல பாத்தாப்பல சொல்றீங்களே! யாரையோ பாத்து தான் இதைச் சொல்லி இருக்கீங்க! யாரு....யாரு? :-)

//தம்பி: அதெல்லாம் இல்ல தல..எல்லாம் பாவனாவுக்காகத்தான்

விவேக்: பாவனாவா...ஊருக்கு ஒரு பிகரைப் பிடிக்கறியேடா..நாடு தாங்காதுடா..மஞ்சுளா பாவம்டா..//

ஐயோ, பாவனாவா?
சங்கத்துல வேற யாரோ ஒருத்தர் கூட பாவனாவுக்காகத் தான் பதிவு எல்லாம் போடறாராமே! யாருன்னு விசாரிக்காம "தம்பி" ன்னு தப்பா எழுதிட்டீங்களே தல! :-(