அ- அலுவலகம்: வேலை செய்யும் போது நரகமாகவும், வீட்டுக்கு வந்தவுடன் சொர்க்கமாகவும் தோன்றும் இடம்!
ஆ- ஆட்டுக்கல்: மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள். ஊற வைத்திருக்கும் அரிசி, உளுந்தைக் கரகரவென்று ஆட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
இ- இரு சக்கர வண்டி: தாம்பத்யம் என்பது சைக்கிளைப் போல; நீங்கள் முன் சக்கரம்; உங்கள் மனைவி பின் சக்கரம். முன் சக்கரம் முன்னால் நின்று இப்படி, அப்படி அசைந்து கம்பீரமாகக் காட்சியளித்தாலும், அதை உந்தித் தள்ளுவது பின் சக்கரம் தான். பின் சக்கரம் இல்லா விட்டால் முன் சக்கரத்திற்கு வேலையே இல்லை.
ஈ- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படியே நிற்க வேண்டியது தான்.
உ- "உயிரொப்பந்தம்' எனப்படும் ஆயுள் இன்சூரன்ஸ்: உங்கள் ஆயுளை இன்ஸ்யூர் செய்து, பாலிசியில், "நாமினி' பெயரைப் பூர்த்தி செய்யாமல் விட்டு வையுங்கள். மனைவி கொஞ்சம் இடக்கு பண்ணும்போது, "நாமினி' என்று சொல்லிப் பாருங்கள். மந்திர சக்திக்குக் கட்டுப்பட்ட நல்ல பாம்பாகி விடுவாள். இல்லாவிட்டால் "என் உயிருக்கு .....தான் காரணம்"னு எழுதி வெச்சுக்குங்க, தேவைபடும்போது உன் பேரை எழுதிருவேன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லியே காலம் தள்ளலாம்.
ஊ- ஊமை: காலையில இருந்து ராத்திரி வரைக்கு ஓயாம பேசுற பொண்டாட்டி கட்டினவனுக்கு பொண்டாட்டி அப்படி ஆயிரக்கூடாதுன்னு தோணும். அந்த அது "ஊமை". இல்லாட்டி புருசனுங்க அதுவா மாறிடலாம். இப்பவும் அந்த அது ஊமை. பிரச்சினை பாதி குறைஞ்சுரும். காதும் கேட்காம போச்சுன்னா சூப்பர்.
எ- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்
ஏ- ஏய்!: இருக்கும் போதே தீர்ந்து விட்டதென்று சொல்லிப் பணம் வாங்கி ஏய்க்கிறாளே என்று மனைவி மேல் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் இல்லை. நீங்கள் தானே, "ஏய், ஏய்' என்று அவளுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
ஐ- ஐன்ஸ்ட்டீன்: "ரிலேடிவிட்டி' தியரியைக் கண்டுபிடித்தவர். இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களை போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.
ஒ- ஒரு முழம்: வாழ்க்கையே வெறுத்துப் போவும் போது விட்டத்தைப் பார்த்தா .. வேணாம் விடுங்க.
ஓ- ஓமத் திரவம்: எந்த மனிதனுக்கும் தன் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இருக்குமா? நீங்கள் விரும்பிய ஹோட்டலுக்குப் போய் பிடித்ததை எல்லாம் ஆனந்தமாக சாப்பிடுங்கள். வீட்டுக்குள் நுழையும் போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு, முகத்தை சுளித்து, "சாப்பாடா அது! அது என்னமோ, உன் சமையலை சாப்பிட்டு பழகிட்டு, வேற எங்காவது சாப்பிட்டா ருசியாவும் இல்லே; வயித்தையும் என்னவோ பண்ணுது. கொஞ்சம் ஓமத் திரவம் கொடேன்!' என்ற வசனத்தை உணர்ச்சிகரமாக பேசுங்கள்.
ஒள- ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி.
ஃ-சீனாவுல சண்டை போடுறவங்க எல்லாம் இப்படிதான் பொட்டு வெச்சுக்குவாங்களாம் . இப்படி வாழ்க்கை முழுசா சுத்தி, சுத்தி அடி வாங்கினதை சொல்றேங்க.
நன்றி-கல்யாணமான கபோதிகள் சங்கம்-டுபுக்கு
14 comments:
//இன்னொருவன் மனைவியின் ரிலேடிவ்களை போற்றியும், தன் மனைவியின் ரிலேடிவ்களைத் தூற்றியும் எவன் பழகுகிறானோ, அவன் வாழத் தெரியாதவன்.//
மனைவியின் ரிலேடிவ்களை போற்றியும், தன் ரிலேடிவ்களை தூற்றியும் எவன் பழகுகிறானோ அவனே வாழத்தெரிந்தவன்.
ஹா ஹா ஹா என்னங்க இது! இப்படியொரு கலக்கல். அனுபவம் பேசுது!
// ஈ- கல்யாணமான புதிதில் இப்படி நிற்பவன், கடைசி வரை இப்படியே நிற்க வேண்டியது தான். //
ஜூப்பரு. அப்படியே ஒங்களுக்குப் பொருந்துது. :)
// ஒள- ஒளவையார்: "கூறாமல் சன்யாசம் கொள்!' என்று உபதேசித்த தமிழ்ப் பெருமாட்டி. //
ஹி ஹி ஹி...உங்களுக்கு வாழ்நாள்ல அந்தத் துணிச்சல் மட்டும் வரவே வராது. :))
கருப்பண்ணே
இன்னொண்ணு விட்டுப்போச்சு.
என்னோட பின்னூட்டத்துக்கு கீழே
அப்புரண்டிசு
(வருங்காலத்தலைவர்)
க.க.ச
தென் அமெரிக்க கிளை
அனுபவம் ?
ஜி.ரா,
நீங்க மாட்டாம போயிருவீங்களோ, திரும்பி ஊருக்கு போங்க, வீட்டுலே பாத்து வெச்சிருப்பாங்க.
அப்புறமா கவிதையா வரும்.
எ- எலிப்பொறி: குடும்ப வாழ்க்கைக்கு மறு பெயர்
//
நல்ல உதாரணம்
:)
// பெருசு said...
ஜி.ரா,
நீங்க மாட்டாம போயிருவீங்களோ, திரும்பி ஊருக்கு போங்க, வீட்டுலே பாத்து வெச்சிருப்பாங்க.
அப்புறமா கவிதையா வரும். //
இது வாழ்த்து மாதிரி தெரியலையே...சாபம் மாதிரீல்ல இருக்கு :))))))))))))))
பெருசு said...
ஜி.ரா,
நீங்க மாட்டாம போயிருவீங்களோ, திரும்பி ஊருக்கு போங்க, வீட்டுலே பாத்து வெச்சிருப்பாங்க.
அப்புறமா கவிதையா வரும்
//
அப்புறம் கவிதை எப்படி வரும் வெறும் காத்துதான் வரும்.... :)
நல்ல பதிவு கருப்பு. அனுபவமே இல்லாம இப்படியா?
கருப்பு
இது என்னாங்க அகர முதலியைப் பார்த்தா ஒவ்வொரு உயிர் எழுத்துக்கும் ஒரு கல்யாணம் பண்ணிக்கட்டு சொல்றா மாதிரி தான் இருக்கு! :-)
விட்டாக்கா, ஆத்திச்சூடிக்கு அடுத்து...இன்னா நாப்பது, இனியது ஒண்ணே ஒண்ணு-ன்னு வரிசையா தொடங்கிடுவீங்க போல இருக்கே!
//மனைவியை ஆட்டிப் படைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறதா? உடனே, அதன் அருகில் போய் அமருங்கள்//
இந்த ஆட்டுக்கல் மாவாட்டலை நீங்க வீட்டில் செய்யச் சொல்றீங்களா, இல்லை வெளியில் ஓட்டலில் செய்யச் சொல்றீங்களா? தெளிவாச் சொல்லிடுங்க...
வீட்டில் ஆட்டினா அது அவுங்களுக்குத் தான் உதவியாப் போகும்!
ஓட்டலில் ஆட்டினா பாக்கெட் மணியாவது மிஞ்சும் :-)))))
Sooper Karuppu!! ;))
kalakkuringa ponga..romba anubhavam pola ??
//kalakkuringa ponga..romba anubhavam pola ??//
\எனக்கும் அதேதான் சந்தேகம்
கருப்பு கலக்குறீங்கண்ணா !!!! நல்லா சிரிச்சேன் !! :))))))))
Post a Comment