Monday, June 11, 2007

சங்கம் - சோசியல் சர்வீஸ்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம். சென்ற ஏப்ரல் மாதம் வ.வா.சங்கத்து முதலாமாண்டு விழாவை முன்னிட்டு நகைச்சுவை பதிவு எழுதும் போட்டியொன்றெ அறிவித்து அதில் பரிசு பெற்றவர்களாக ஆறு பேரையும் தேர்ந்தெடுந்து இருந்தோம்.

அது அனைவரும் அறிந்த செய்தி!!!!

அப்போட்டியை அறிவித்தப் பொழுது நாங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் ஒருவருக்கு வழங்கப்படும் என்றே குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் அப்போட்டியை அறிவித்த வினாடி முதல் வந்து குவிந்த வரவேற்பை முன்னிட்டு பரிசுத்தொகையை அதிகப்படுத்தி அதை ஆறு பேருக்குப் பங்கிட்டு தரலாம் என முடிவு செய்தோம்,

வந்து மலையெனக் குவிந்த 105 பதிவுகளில் பரிசுக்குரிய பதிவுகளை தேர்ந்தெடுக்க சற்றே தடுமாறிதான் போனோம்.

சங்கத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் வெவ்வெறு நாடுகள், மாநிலங்கள் என இருப்பதும், காலச்சூழ்நிலை, பணிச்சுமை என பலவகையான காரணங்களையும் தாண்டி போட்டியின் முழுப் பொறுப்பினையும் செவ்வன செய்து முடித்தது இனியதொரு அனுபவமாக அமைந்தது.. அதற்கு நம்ம சங்கத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைச் சொல்லிக்கிறோம்

போட்டியும் வைச்சாச்சு அதில் ஆறு பேர் ஜெயிச்சாச்சு.. பரிசை அவங்க கிட்டச் சேக்கணும்.. . பரிசை எப்படி அனுப்புவது என ஆலோசிக்கையில்.. பரிசினைத் தாங்கள் பெறுவதை விட தங்கள் வெற்றி இன்னும் பலரை மகிழ்விக்கும் விதமாகப் பரிசினை எதாவது தொண்டு நிறுவனத்திற்கு அளிக்குமாறு மனமுவந்து கருத்துக்கு உடன்பட்டு வெற்றியாளர்கள் இன்னொமொரு வெற்றி பெற்றனர்.. இம்முறை அவர்கள் பல இதயங்களையும் வென்றனர்..

பரிசுத் தொகையான 3000 ரூபாயோடு, நண்பர் சிவிஆர் அனுப்பிய தொகையான 2000 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 5000 ரூபாயை சென்னை திருவான்மியூரில் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக இயங்கி வருகின்ற
காக்கும் கரங்களுக்கு நாங்களே நேரடியாக சென்று Rs.5000/- நம் வ.வா.சங்கத்து நண்பர்கள் பெயரில் வழங்கி வந்தோம்.



எந்தவொரு செயலுக்கும் ஊக்கமாய் உறுதுணையாய் என்றென்றும் எங்களுக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் சிறம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் உரித்தாக்கட்டும். இன்னும் இதேப்போல பலவகையான சமுகப்பணிகளை மேற்கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம் என்பதை இங்கே அறிய தருகின்றோம். அதற்கும் உங்களின் மேலான ஆதரவுகளை எதிர் நோக்கி என்றொன்றும் உங்களின் நண்பர்கள்

23 comments:

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள்!!

Ayyanar Viswanath said...

நல்ல பணி மக்கா

வாழ்க நீவிர் பல்லாண்டு!!!

ஸ்ரீமதன் said...

நல்ல பணி நண்பர்களே.வாழ்த்துக்கள்!!

ALIF AHAMED said...

இதயங்களையும் வென்றனர்..

நம் வ.வா.சங்கத்து நண்பர்கள்

ஜி said...

வாழ்த்துக்கள் சிங்கங்கள்... இது போன்ற சமூகச் சேவைகளில் இன்னும் ஈடுபட உளமாற வாழ்த்துக்கள்...

ஷைலஜா said...

பூவோடு நாராய் நானும் சேர்ந்ததில் மகிழ்கிறேன் நன்றி வவாச நண்பர்களே!
ஷைலஜா

MSATHIA said...

அருமையான பணி!!

Unknown said...

Good work Makkas...

Va Va Sankam, Valkaa,
Future CM Royal Ram Valkaa,

Arunkumar said...

மிக்க நன்றி சங்கத்து சிங்கங்களே.. இந்த நல்ல காரியத்தில் என் பங்கு இருந்தது எனக்கு பெருமையே :)

இது போன்ற சமூகச் சேவைகளில் இன்னும் ஈடுபட உளமாற வாழ்த்துக்கள்...
-- நானும் !!

இராம்/Raam said...

உங்களின் தார்மீக ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்களே...

//Future CM Royal Ram Valkaa,//

தொல்லை ச்சீய் நெல்லை காந்த்,

என் மேலே ஏனிந்த கொலை வெறி???

கண்மணி/kanmani said...

மிக்க மகிழ்ச்சி ராம்.இதுபோல் இன்னும் நிறைய உதவிகளை செய்ய வாழ்த்துக்கள்.

கதிர் said...

சங்கத்து சிங்கமாக என்னோட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் இதுபோன்றா நல்ல விஷயங்கள் பல செய்வோம்.

பாலராஜன்கீதா said...

ராம்சி The BOSS

:)

Anonymous said...

Fantastic!!!
Kalakiteenga

ACE !! said...

சங்கத்து சிங்கத்துக்கும் CVRகும் வாழ்த்துக்கள்..

MyFriend said...

vaazhthukkal nanbargalaa! :-)

இம்சை said...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

Va Va Sangam the MASS (Master's of Aappuu and Social Service) சும்மா அதிருதுல்ல !!!!

குசும்பன் said...

போட்டியை நடத்தியவர்களும், போடியில் வென்று அந்த பரிசை
தொண்டு நிறுவணத்துக்கு கொடுக்க முன் வந்த பெரிய மணசு
காரர்களும் எல்லாம் வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுக்கொள்கிறேன்.

மனதின் ஓசை said...

வாழ்த்துக்கள்.. மிக நல்ல விதத்தில் இந்த் வெற்றி கொண்டாடப்படுவது குறித்து மகிழ்ச்சி.

காயத்ரி சித்தார்த் said...

உருப்படியான வேலை கூட செய்வீங்க போல! கலக்குறீங்கப்பா!

My days(Gops) said...

நல்ல பணி நண்பர்களே

இது போன்ற சமூகச் சேவைகளில் இன்னும் ஈடுபட உளமாற வாழ்த்துக்கள்...
-- நானும் !!

Aani Pidunganum said...

வாழ்த்துக்கள், அருமையான பணி, கலக்குறீங்கப்பா

இம்சை அரசி said...

வாழ்த்துக்கள்...

so nice of u :)))