Tuesday, June 26, 2007

கைப்புள்ள மனைவி வாங்கிய புதுகிளி!

கிளி ஒன்றை வாங்கி வளர்க்க ஆசைப்பட்டார் நம்ம கைப்புள்ள மனைவி! வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடைக்குச் சென்றார்...

"அடடா.. இந்தக் கிளி இவ்ளோ அழகா இருக்கே.. என்ன விலை..?"

"அது வேணாம்மா.. அதுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி..!"

"நீ ஏம்பா கவலைப் படறே.. பரவால்ல.. நான் சமாளிச்சுக்கறேன்..!"

"இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!"

"பாவம்பா அது.. வாயில்லா ஜீவன்.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!"

"சொன்னா கேளுங்கம்மா.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!"

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி பேச ஆரம்பித்தது!..

"புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!"

கைப்புள்ள பொண்டாட்டிக்கு ஆச்சர்யம்..!

பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்.. கிளி. மீண்டும் சொல்லிற்று...

"புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..!"

எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..

இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே அந்த கடைக்கார கடன்காரன்.. கட்டையில போக..!

சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...

"புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு... அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"

13 comments:

ILA (a) இளா said...

//புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு... அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"//
badiyaa hai

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"//
//

ஐயோ கைப்பு! விடாதுகருப்பு கூட கொஞ்சம் பெரிய மனசு பண்ணி, உங்களை விட்டு வைக்கல பாருங்க! :-)
உங்க நிலைமய நினைச்சா....ஆஆவ்வ்வ்வ்வ்வ்! :-))

சதீஷ்...அந்தக் கிளி இதுக்கு முன்னாடி எங்க இருந்துச்சுன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! பாவம் கைப்பு! போனாப் போகட்டும்! :-))

Anonymous said...

//புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு... அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"
///

Arumai,arumai.

Rumya

Anonymous said...

கிளிக்கு ரக்கை முளைச்சுடுத்து,
ஆத்தவிட்டே பறந்து போய்டுத்து

Anonymous said...

கருப்புங்கிற பேருக்கு ஒரு சீட்டு எடுத்து போடுங்க.

Anonymous said...

விடாது கருப்புங்கிற பேருக்கு ஒரு சீட்டு எடுத்து போடு ராசா

Anonymous said...

ம்ஹூம் மாட்டேன்

Anonymous said...

சாமி கிளி அடம்பிடிக்குது

Anonymous said...

சாமி, விடாது கருப்புங்கிற பேருக்கு
பெரியார் படம் வந்திருக்கு

சீக்கிரமே நல்லது நடக்கப் போகுது, தெற்கு திசையில் இருந்து தகவல் வரும்

அணில்குட்டி said...

//"புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. புது காரு... அடடே.. வாங்க கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"//

சதீஷ் அண்ணே... சொன்ன மாதிரி நகைசுவை பதிவு போட்டு தாக்கறீங்க.. எனக்கு கைப்பூ நிலமைய நெனச்சா, ரொம்ப பரிதாமமா இருக்கு ஆமா கவிதா வூட்டுக்கு கிளிய அனுப்பறீங்களா.. எதுக்கா.?? எல்லாம் கிளி ஜோசியம் கேக்கத்தான்.....

உண்மை said...

//
கைப்புள்ள.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???"
//

பாவம் கைப்புள்ள !

ILA (a) இளா said...

இதனால் அறியப்படுவது என்னவென்றால், தப்பு பண்றவங்க, கிளிப்புள்ளை மாதிரி இருக்கிறவங்களை கூட வெச்சு இருக்கக்கூடாது. அதான் இந்த கிளிப் பிள்ளை-கைப்புள்ளை கதையின் சாராம்சம்

Anonymous said...

கைப்புள்ளைக்கு நெறைய மனைவி போல.