Tuesday, June 12, 2007

சட்டையில் இருப்பது சிங்கப்பூரில் குற்றம்!

சட்டையில் இருப்பது சிங்கப்பூரில் சட்டப்படி குற்றம். பகுதிக்குப் பகுதி, தெருவுக்குத் தெரு அவ்வளவு ஏன்? ப்ளாக்குக்கு ப்ளாக் கூட இங்கே சில சட்டைகள் உண்டு. சட்டையில் இருப்போருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இங்கே உண்டு. செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப சிறைத்தண்டனை, ரோத்தான்(பிரம்பு) அடிகள், அபராதம் எல்லாம் மாறுபடும்.

என்னங்க ஒன்னும் புரியவில்லையா? சட்டை என்பது ஹேங்கை(வன்முறைக்குழு) குறிக்கும். இங்கே பல குழுக்கள் இது போல இருக்கின்றன. கட்டப் பஞ்சாயத்துகள், முழு நீல வண்ணப்படம் விற்பது, நான்கிலக்க லாட்டரிச் சீட்டு சட்டத்திற்குப் புறம்பாய் விற்பது, வட்டிக்கு பணம் கொடுப்பது, தூள்(கஞ்சா, அபின், ஹெராயின்) விற்பது, பொம்பளை பிசினஸ் என்று பல குற்றங்களைச் செய்கின்றனர் இந்த சட்டைகள்.

உறுப்பினர்களின் தலைவன் மண்டை அல்லது தல என அழைக்கப் படுகின்றனர். சட்டை உறுப்பினர்கள் மாதம் தோறும் குறிப்பிட்ட கட்டணத்தை தங்கள் தலைமைக்கு கட்டுகின்றனர். இந்த நிதியானது தலையின் தண்ணி, தம் போன்றவற்றிற்கும் சண்டைக்காக செல்லும்போது வாடகை ஊர்தி, பேனா, நோட்டு போன்ற பொதுப் பிரச்னைகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது. உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் கருப்பு டிசர்ட் அல்லது கருப்புச் சட்டைகளையே அணிகின்றனர். உடலில் பச்சைகள், காதில் வளையம் போன்றவை இத்யாதி.



சட்டைகளுக்கு என நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. சட்டையின் உறுப்பினர்களில் ஒருவர் சிகரெட் கேட்டால் ஒன்றை எடுத்து நீட்டுதல் கூடாது. பெட்டியைத் திறந்து ஒன்றை மட்டும் வெளியே சற்று இழுத்து வைத்து முழுப் பெட்டியையும் நீட்ட வேண்டும். அவர் அந்த ஒன்றை உருவிக் கொண்டு நன்றி சொல்வார். அதேபோல தண்ணியடிக்கும் முன்னர் சியர்ஸ் சொல்ல வேண்டும். அனைவரும் வாய் வைத்து சூப்பிய பின்னரே கிளாசை கீழே வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எல்லா பீரையும் குடிக்கக் கூடாது. கண்டிப்பாக கடைசியில் கொஞ்சம் சாமிக்கு வைக்க வேண்டும். மீறுவோர் சட்டை தலையினால் எச்சரிக்கப் படுவர். அடிக்கடி மீறுவோர் சட்டையில் இருந்து தள்ளி வைக்கப் படுவர்.

இந்த சட்டைக்கும் அடுத்த தெரு சட்டைக்கும் சண்டை வந்து விட்டால் மூன்றாம் தரப்பு சட்டைகளும் சில சமயம் அமைதிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வது உண்டு. மண்டையோடு மண்டைகளும் சட்டையோடு சட்டைகளும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்க்கும்போது வலது கையின் கட்டைவிரலை ஒன்றோடு ஒன்று மோதுவர்!

எக்காரணத்தைக் கொண்டும் இன்னொருவரின் சரக்கை(கேர்ள் பிரெண்டை அப்படித்தாம்பா சொல்றாங்க) கச்சரவு(டிஸ்டர்ப்பின் மலாய் வார்த்தையாம்) பண்ணக் கூடாது. மீறுவோர் மண்டையால் எச்சரிக்கப்படுவார். ஏரியா மாறி அடுத்த சட்டையின் சரக்கை கலாய்ப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. ஒரே சட்டைக்குள் இருக்கும் பெண் உறுப்பினர்களை அவர்களின் சம்மதத்தோடு ஆண் உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானாலும்!

சட்டையின் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரமும் மண்டையால் பாதுகாப்பு கொடுக்கப்படும். 24 மணி நேரமும் எல்லாரும் மண்டையை அழைத்து தகவல் சொல்லலாம். தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் பிரச்னைகளை தீர்க்க ஆவன செய்யப்படும்.

இதெல்லாம் எனக்கு சட்டை உறுப்பினர் ஒருத்தர் சொன்னார். என்னையும் அதில் சேரச் சொன்னார். வேண்டாம்யா வம்பு என்று ஓடி வந்துட்டேன். இத்தனை களேபரங்கள் நடக்கின்றன சட்டையாலும் மண்டையாலும். ஆனால் நம் சங்கத்து தலை இதுபோன்ற செயல்களில் எல்லாம் ஈடுபடுவது இல்லை. அவுரு ரொம்ப ரொம்ப நல்லவரு!

4 comments:

Anonymous said...

கருப்பு,

நீயும் கருப்பு சட்டைதானே?

ILA (a) இளா said...

சாட்டைய எடுத்து சட்டைய அடக்குறாங்கன்னு சொல்லுங்க

நாகை சிவா said...

சட்டைல இம்புட்டு மேட்டரு இருக்கா?

இம்சை said...

யாருல அது என்ன கேக்காம எம் படத்த பொட்டது