Saturday, June 30, 2007

கைப்புள்ளைய ஏமாற்றிய பார்த்தி!

பார்த்திபனுக்கும் நம்ம கைப்புள்ளைக்கும் துபாயில் கிளீனர் வேலை பார்த்த விஷயமாக கடுமையான வாக்குவாதம் நடந்தது. கைப்பு எவ்வளவோ மாற்றிச் சொல்லியும் வேலை பார்த்த இடத்தை போட்டு வாங்கி விட்டார் பார்த்தி!

"வேனாம்... என்ன விட்டுரு.. அப்றம் நான் அடிச்சா ஒரே அடில சுருண்டுருவே மகனே" எச்சரித்தார் கைப்புள்ள.

"நான் ஒரு குத்து விட்டேன்னா நீ அப்பீட்டு தெரியுமா?" பார்த்தியும் கொஞ்சம்கூட சளைக்க வில்லை!

இருவரும் அப்படியே விவாதம் செய்தபடி நடந்து போனபோது தெருவில் லாட்டரி டிக்கெட் ஒன்று கிடந்தது! அது யாருக்கு என்பதில் மறுபடியும் சண்டை சூடு பிடித்தது!

கடைசியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இருவரும் பலப்பரீட்சை நடத்தி வெற்றி பெறுபவர் அந்த லாட்டரி சீட்டை எடுத்துக் கொள்வது என்று! கைப்புள்ள மனசுக்குள் கணக்கு போட்டார். 'முதலில் இவனை அடிக்க விட்டு இவன் பலம் அறிந்து கொண்டு பிறகு செமையா போட்டு தாக்கிர வேண்டியதுதான்!'

கைப்புள்ள முந்திக்கொண்டு பார்த்தியிடம் சொன்னார், "முதலில் நீ என்னைத் தாக்கு. பின்னர் நான் உன்னைத் தாக்குகிறேன். யாருக்கு அடி பலமோ அவரே தோற்றவர்! என்ன சொல்ற?"

பார்த்தியும் ஒப்புக்கொண்டு, பத்து அடி பின்னால் போய், பாய்ந்து வந்து கைப்புள்ளையின் கால்களுக்கிடையில் ஓங்கி உதைத்தார். அடி ரொம்ப கனம்தான். பறந்து மல்லாக்க விழுந்த கைப்புள்ளை 10 நிமிடம் கழித்து மெல்ல எழுந்து பார்த்தார்.

நூறு மீட்டர் தூரம் ஓடிப்போய் நின்றுகொண்டு பார்த்தி சொன்னார்,"அடேய்... முட்டாள். அந்த டிக்கெட்டை நீயே வச்சுக்கோ.! அது குலுக்கல் முடிஞ்ச பழைய லாட்டரி டிக்கெட்டு!"

பார்த்தி அடிச்சது கூட பரவால்ல, ஆனா டிக்கெட்டும் பழசா? கைப்புள்ள மயங்கி விழுந்தார்!

1 comment:

Anonymous said...

சொந்த செலவில் சூனியம்!