Friday, June 29, 2007

இதோ தொட்டுவிடும் தூரம்தான்!

எதிர்கால விடியல்களை
வெளிச்சத்தில்
தொலைத்துவிட்டு
இருட்டில்
தேடிக்கொண்டிருக்கிறது
இளைஞர் உலகம்!

கண்விழியோர
தூக்க நரம்புகளோடு
சேர்ந்து கொண்டு
தூங்கப் பார்க்கிறது
எங்கள்
கலாமின் கனவு!

இதோ எட்டிவிடும்
தூரத்தில்தான் இருக்கும்
வெற்றிக் கனியை
பறிக்க விடாமல்
சோம்பலாகித் திரிகிறது
இளைஞரின் மூளைகள்..!

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தையாக
நினைத்து முன்னேறாமல்
பாதையைத் துழாவிக்
கொண்டிருக்கின்றன
அவர்களின்
நம்பிக்கை வெளிச்சங்கள்!

வெற்றியைக் குறித்தான
தொடரோட்டத்தில்
வெற்றி ஒன்றே
நமது குறிக்கோள்...
அருகில் ஓடுவோரும்
தெரியக் கூடாது
நம் கண்களுக்கு...!

உலகினை மறந்து
உன் குறிக்கோள்
ஒன்றையே நினைத்து
உழைத்துப்பார்....
இதோ தொட்டுவிடும்
தூரம்தான் உன் இலக்கு!

தன்னம்பிக்கையின்
துணையோடு
முயற்சியின் எல்லையில்...
இதோ உனக்காகக்
காத்திருக்கின்றது
புத்தம்புது விடியல்.....!

6 comments:

Anonymous said...

கருப்பு,

சூப்பர் கவிதை.

இத்தனை நாள் எங்கேய்யா ஒளிச்சு வைத்திருந்தே இத்தனை திறமையை?

வெரி குட். கீப் இட் அப்.

ILA (a) இளா said...

//அருகில் ஓடுவோரும்
தெரியக் கூடாது
நம் கண்களுக்கு...!//
ஹ்ம்ம் என்ன ஆழமான கருத்து? உண்மைதான் , சில இளைஞர்களுக்கு உழைக்காமல் வெற்றி கிடைக்கனும்னு நினைக்கிறாங்க, அவுங்களுக்கு நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க..

Anonymous said...

சூப்பர்பா! நீர் இந்த மாதிரி பேசி நான் பார்த்ததே இல்ல தெரியுமா.

Anonymous said...

சூப்பர்பா! நீர் இந்த மாதிரி பேசி நான் பார்த்ததே இல்ல தெரியுமா.

cdk said...

உலகினை மறந்து
உன் குறிக்கோள்
ஒன்றையே நினைத்து


மிகவும் கடினம் தான்! ஆயினும் வெற்றிக்கு முதல் படி இது தான் என்று ஜெயித்தவர்கள் கூறி நானும் கேட்டதுண்டு!! நல்ல கருத்துக்கள்! வாழ்த்துக்கள்!

Anonymous said...

அருமை.