Monday, June 25, 2007

பிச்சை புகினும் கற்கை நன்றே!

தலைக்கு ரொம்ப பண நெருக்கடி. ஏற்கெனவே வாங்கிய கடனை கொடுக்கலைன்னு எல்லா பயலும் குச்சி வெச்சு வெறட்டி அடிக்கிறானுங்க. கடனோட கடனா 2ரூவா முன்சாமிகிட்ட வாங்கிட்டு போயி உள்ளூரு டெண்டு கொட்டாயில பழங்கால "உதயகீதம்" படம் பார்த்தாரு! தெருவுக்கு தெரு கோயிலுக்கு கோயிலு உண்டியல் வெச்சு திடீர் பணக்காரனாகும் கவுண்டரைப் பார்த்ததும் மண்டைக்குள் 1000 ஓல்ட் பல்ப்பு ஒன்னு எரிஞ்சுது நம்ம தலைக்கு!

சரின்னு உண்டியல் வைக்க போனார் தல. கோயிலில் உள்ளவங்க இவரை வைக்க விடல. சரி ஆனதுதான் ஆச்சு, முன்வெச்ச கால பின்வைக்க வேனாம்னு முடிவு பன்னி தலையில் இருந்த முண்டாச அவுத்து ஒதறி தரையில் போட்டு உக்காந்துட்டாரு... வசூல் பரவால்ல. ஒரு நாளைக்கு 200க்கு குறைவில்லாம வசூலாகுது!

ஒரு ஆள் தெனந்தோறும் சாயங்காலம் 7 மணிக்கு கோயிலுக்கு வரதும் இவருக்கு ஒரு ரூபாய் பிச்சை போடுவதும் வழக்கமாயிருச்சி. தலயின் ரெகுலர் கஸ்டமர்(!) ஆயிட்டாரு அந்தாளு! அந்தா இந்தான்னு ரெண்டு வருஷமாச்சு. கடந்த வருடத்தில் இருந்து ஒரு ரூபாயில் இருந்து குறைந்து 50 காசு போட்டாரு.. தலைக்கு செம கடுப்பு. சரி பரவால்லன்னு அதையும் பொறுத்தாரு.... ஆனா பாருங்க இன்னிக்கு 25 காசுதான் போட்டாரு... தலைக்கு கோவம் மண்டை உச்சிக்கு போயிருச்சி!

"ஏன்யா முன்னாடி ஒத்த ரூவா கொடுத்தீய... பொறவு 50 காசு கொடுத்தீய... இப்போ என்னடான்னா அதுவும் 25 காசுக்கு வந்துருச்சி... ஏஞ்சாமி இது ஒங்களுக்கே நாயமா தோனுதா?"

"தம்பி, முன்னாடி நான் தனி ஆளு... ஒரு ரூவா கொடுத்தேன். பிறகு என் பொஞ்சாதி வந்தா.. நெலமய சமாளிக்க முடியல. அதான் 50 காசு... இப்போ எனக்கு கொழந்தை பொறந்துருச்சி... அதயும் நான் கவனிக்கனும்ல.. அதான் 25 காசு!"

தலக்கு வந்தது கோபம்... எழுந்து அந்தாளு சட்டைய புடிச்சிட்டாரு..., "யோவ் நீ கல்யாணம் பன்னு, புள்ளய பெத்துக்க.. அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அதுக்கெல்லாம் என் காசில் எப்படிய்யா நீ கை வைக்கலாம்?"

6 comments:

Anonymous said...

இது அநியாயம், அக்கிரமம். தலைகிட்ட போட்டுக் கொடுக்காம விடமாட்டோம்!

ILA (a) இளா said...

//என் காசில் எப்படிய்யா நீ கை வைக்கலாம்?"//
அட, இப்படியும் இருக்கலாமா?

லொடுக்கு said...

நல்லாயிருக்குங்க.

PPattian said...

ஆஹா.. அந்த "தல" யாக வடிவேலு மற்றும் விவேக் நடிப்பதாக கற்பனை செய்து பார்த்தேன்... சூப்பர் சீன். ரெண்டு பேருமே அவரவர் ஸ்டைலில் அசத்துவார்கள்.

சதுர் said...

நினைத்து நினைத்து சிரிக்கிறேன்!

Anonymous said...

மல்லாக படுத்துகிட்டு யோசிப்பாய்ங்களோ!