Saturday, June 23, 2007

எமதர்மராஜாவின் லொள்ளு!

எமதர்ம ராஜாவுக்கு செம கடுப்பு! பின்னே என்னங்க உலகையே மிரள வைக்கும் அவரை, அவரோட சம்சாரம் காலையில் இருந்து போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க. தொட்டதுக்கும் சண்டை! அந்த கோபத்தில் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கைகளை பின்னால் கட்டியவாறு நடந்து(உலாத்திக்) கொண்டிருந்தார்!

அந்த சமயம் பார்த்து சித்ரகுப்தன் இரண்டு ஆண்களையும் ஒரு இளம்பெண்ணையும் அங்கே அழைத்து வருகிறார்!

"பிரபோ! ஆணி புடுங்குற வேல வந்தாச்சு!"

"இவர்கள் செய்த குற்றம் என்ன?"

"இவன் ஒரு கொலைகாரன்!"

"சரி, இவனை பாம்பு இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"

"இரண்டாமவன் ஒரு திருடன்!"

"இவனை பூரான் இருக்கும் அறைக்கு அனுப்புங்கள்!"

"இந்த பெண் ஒரு நாட்டியக்காரி... பூலோகத்தில் தன் நாட்டியத் திறமையால் பலரை மயக்கி தன் வலையில் விழவைத்தவள்!"

காலையில் நடந்த சண்டையை கொஞ்சம் யோசித்த எமதர்மராஜா, "இனியும் எமலோகம் தாங்காது. இவளை மறுபடியும் பூலோகத்துக்கே அனுப்பிச்சுரு, இனிமே பொண்ணுங்களை எல்லாம் நான் விசாரிக்க மாட்டேன்"

"என்னடா இது எமதர்மன் எப்பவுமே இப்படி சொல்லமாட்டாரே"ன்னு சித்திரகுப்தன் சுற்றி பார்க்க, சிரித்தவாறு பெருமை பொங்க எமதர்மனையே பார்த்துக்கொண்டு இருந்தார் எமதர்மன் மனைவி.

5 comments:

நாமக்கல் சிபி said...

:)

Pattadhu podhadha Ema Dharama Rajavukku?

ALIF AHAMED said...

நாமக்கல் சிபி said...
:)

Pattadhu podhadha Ema Dharama Rajavukku?
///

அவரு மட்டும் விதிவிலக்கா.... :)

Anonymous said...

ஆணிபுடுங்கிற வேலைமாதிரி தெரியல்லையே , (மறுதலை ?)

Anonymous said...

//"என்னடா இது எமதர்மன் எப்பவுமே இப்படி சொல்லமாட்டாரே"ன்னு சித்திரகுப்தன் சுற்றி பார்க்க, சிரித்தவாறு பெருமை பொங்க எமதர்மனையே பார்த்துக்கொண்டு இருந்தார் எமதர்மன் மனைவி.//
கருப்பு, மல்லாக்க படுத்து யோசனை பண்ணினபிறகுதான் தெரிஞ்சுது, இந்த வரிகளோட சூட்சுமம். நல்லா இருக்கு. இப்படியே உள்குத்து வெச்சு பதிவு போடுங்க. வித்தியாசமாவும் இருக்கு

Anonymous said...

இந்த நகைச்சுவை கதையின் முடிவை நாங்க ஒத்துக்க மாட்டோம்!