ஒரு உலகமகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா கேட்டாரு, "ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்தே கிடக்குறியே! உருப்படியா ஏதாச்சும் வேலை தேடக் கூடாதா?"
"என்ன வேலைக்கு போகச் சொல்ற? எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"
"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே... அங்க போகக் கூடாதா?"
"அது சேல்ஸ் மேன் வேலையாம். நின்னு நின்னு கால் வலி எடுக்கும்!"
"சரி, அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே, அதுக்காவது போகலாமில்ல?"
"அது ஒரே போர். உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி எடுக்கும்!"
"சரிடா... அந்த டி வி ஷோரூம் வேலைக்காச்சும் போகலாமில்ல?"
"அதுவும் ரொம்ப கஷ்டம்பா! டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி எடுக்கும்!"
"படவா...அப்ப எந்த வேலைக்குதான் நீ போவே?"
"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே? படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு, பார்க்கிறேன்!"
"தெருமுக்கத்தில மெக்கானிக் சங்கர் இருப்பான். நான் சொன்னேன்னு சொல்லி அவன்கிட்ட சேந்துக்க!"
குறிப்பு:- சம்பாஷணையில் இடம்பெற்றது தலையும் அவரின் அப்பாவும்!
1 comment:
வேனாம், விட்டுடு. அப்புறம் அழுதுருவேன்!
Post a Comment