Wednesday, June 20, 2007

நாங்களும் காதலிப்போம்ல்ல

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாமே!

மூன்று வேளையும் அமிர்தம் உண்டும்
நஞ்சேறவில்லை இந்த பிஞ்சு நெஞ்சில்.
நஞ்சை நஞ்சே முறிக்குமாம்
நீ எந்தன் நெஞ்சில் இருப்பதனால்.

காதலித்ததுதான் தவறா?
இல்லை...
காதல்தான் தவறா?
பெரிதாக ஒன்றும் கேட்க வில்லை
"ஆம்"
"இல்லை"
இரண்டிலொன்று வேண்டும்.
இல்லை என்பது உன்
பதில் எனில் இந்த
மேகம் வேறு ஆகாயத்தில்
வேறு உருவில் இணைய
ஆயத்தமாகும்.
ஆம் எனில் இப்போதே
கூடி மழையாக தரையிறங்கி
வாழ்வோம்.

இரண்டிலுமில்லாத மவுனத்தை
பதிலாக தருகிறாய்.
என் இருப்பை நியூட்ரலிலேயே
வைத்திருப்பதில் என்ன சுகமடி உனக்கு?

இன்றாவது பதில் வருமா?

48 டிகிரி செல்சியஸ் வெயிலோடு
போட்டி போடுகிறது என் இதயம்.
அதை விட வாட்டுகிறது என்னை
உன் மவுனம்.

காத்திருக்கும் கணங்கள்
சாதாரணமாயினும் அது
ரணமாக இருக்கிறதே மானே.

கள்ளனிடம் தேடியும்
கிடைக்கவில்லை
உன் உதட்டுக் கதவினை
திறக்கும் சாவி.

நான்காவது கியரில் பிகரோடு
பறக்க காத்திருக்கிறேன்
நியூட்ரலிலே நிறுத்தி
வைத்திருப்பது
என்ன நியாயமடி.

இன்பாக்சை ஸீரோவாக்கி
உன் மெயில் கொண்டு நிரப்பி.
மயில் எழுதிய மடல் என்று
பெயரிடுவேன் கண்ணே.

சீக்கிரம் வா தேனே!

இந்த வருட இறுதி வரை காத்திருப்பேன்.

இப்படிக்கு கவுஜயான காதலன்.


எச்சரிக்கை: இதுபோலவே கவுஜ எழுதி காதலியிடம் கொடுத்து பாருங்கள்.பின்னால
தெரியும் சேதி.

17 comments:

ஜி said...

அடப்பாவி தம்பி... நீ வில்லன்னு இப்பத்தான் தெரியுது...

Ayyanar Viswanath said...

தம்பி டாப் புய்யா ..கலக்கிட்ட போ

/என் இருப்பை நியூட்ரலிலேயே
வைத்திருப்பதில் என்ன சுகமடி உனக்கு/

ரொfடெல்

கதிர் said...

அற்புதமான வரிகள் கொண்ட கவிதை இது. கவிதையில என்ன சொல்ல வர்றேன்னா..(இப்படில்லாம் பின்னூட்டம் போடறதுதான் இப்ப பேஷன்) இது மாதிரிலாம் பண்ணாதிங்கடா... அபத்தமா கவிதை எழுதுறது வேஸ்டுடான்னு சொல்ல வர்றேன். யாரும் கேக்கலன்னாலும் நாங்க சொல்லுவோம்.

இந்த அருமையான கவிதையை எழுத தூண்டிய அய்யனாருக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

சூப்பர் கவிதை தம்பி!

பின்னே பதிலுக்காக பல வருஷம் காத்திருக்க முடியுமா என்ன?

டூ ஆர் லீவ்! ஐ வில் லிவ்!

இதான நம்ம பாலிஸி!

Ayyanar Viswanath said...

/இந்த அருமையான கவிதையை எழுத தூண்டிய அய்யனாருக்கு நன்றி. /

தேங்க்ஸ் தம்பி..நெசந்தாய்யா
கண்ணு பார்த்தேன்,மூக்கு பர்த்தேன்,கால்தடம்,இனியவனே,என்னவளே ன்னு நம்ம காதல் கவுஜர்கள் அட்டகாசம் தாங்க முடியலியா..

இவிங்க கொட்டமடக்கனும் னா ரெண்டே வழிதான் ஒண்ணு புனைவு ரீதியிலான கவிதைகள்..
இல்லனா கிண்டலடிக்கும் கவுஜைகள்..இந்த காதல் கவிதைகளை இரு வழியிலே சிதைப்போம் தம்பி ..வா ..உறுதி மொழி எடுத்துக்கலாம் :)

கதிர் said...

//அடப்பாவி தம்பி... நீ வில்லன்னு இப்பத்தான் தெரியுது... //

அட இல்ல ஜியா நான் வில்லன் இல்ல. உங்கள மாதிரி காதலர்கள் எல்லாம் எப்படிலாம் கவிதை எழுதக்கூடாதுன்னு சொல்லித்தர்ற வாத்தியார் மாதிரி. :))

//தம்பி டாப் புய்யா ..கலக்கிட்ட போ//

நான் எதை எழுதினாலும் டாப்புன்னு சொல்ற இந்த ஆள நெனச்சா கண்ணூல வெந்நீரா வருது.

//ரொfடெல் //

ஏர்டெல் மாதிரி ரோடெல் ஆரம்பிக்க போறீங்களா?

கதிர் said...

//சூப்பர் கவிதை தம்பி!//

நன்றி தல, நக்கல் எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்ககிட்ட கத்துகிட்டதுதான்.

//பின்னே பதிலுக்காக பல வருஷம் காத்திருக்க முடியுமா என்ன?//

கண்டிப்பாக நெவர்...

//டூ ஆர் லீவ்! ஐ வில் லிவ்!//

இப்படி எல்லாருமே இருந்துட்டா உலகத்துல தாடியே இருக்காதுடா சாமி.

//இதான நம்ம பாலிஸி! //

எல்.ஐ.சி பாலிஸி கூட நம் பாலிஸிக்கு ஈடானது இல்லை என்று ஆணித்தரமாக அடித்து கூறுகிறேன்.

ALIF AHAMED said...

"நாங்களும் காதலிப்போம்ல்ல"
//

அதான் எங்களுக்கு தெரியுமே..:)

ALIF AHAMED said...

ஜி said...
அடப்பாவி தம்பி... நீ வில்லன்னு இப்பத்தான் தெரியுது...
///

ஜி வில்லன் இல்லை தம்பி

தம்பி ஹீரோ பல பெண்களுக்கு...:)

ALIF AHAMED said...

அய்யனார் said...
இவிங்க கொட்டமடக்கனும் னா ரெண்டே வழிதான் ஒண்ணு புனைவு ரீதியிலான கவிதைகள்..
இல்லனா கிண்டலடிக்கும் கவுஜைகள்..
//

எங்களுக்கு ஒரே வழிதான் இருக்கு
அது தனி வழி சிபி வழி
இப்ப எங்க வழியும்
கலாய்த்தல் மட்டுமே... :)

ALIF AHAMED said...

கண்ணால்
காதலிச்சி பார்
புரியும் உனக்கு
மெளனத்தின்
மொழி

ALIF AHAMED said...

டூ ஆர் லீவ்! ஐ வில் லிவ்!

இதான நம்ம பாலிஸி!
//

இது மாதிரி எத்தனை லீவ் நீங்க விட்டீங்க... :)

ALIF AHAMED said...

நான் எதை எழுதினாலும் டாப்புன்னு சொல்ற இந்த ஆள நெனச்சா கண்ணூல வெந்நீரா வருது
//
டீக்கடை வைய்யி

ALIF AHAMED said...

//டூ ஆர் லீவ்! ஐ வில் லிவ்!//

எடுத்தேன் கவிழ்தேன்னு முடிவெடுக்க எந்த காரியமும் இயலாது

பழகனும்
பர்ஸ் வெய்ட்டானு பாக்கனும்
சுத்தனும்
பீஸா சாப்பிடனும்
'எல்லாம்' முடிஞ்ச பிறகு லவ் பண்ணுவதா இல்லையானு சொல்லனும் இதுக்குள்ள யெஸ் ஆர் நோ கேட்டா எப்படினு தெறியல... :) :)

காயத்ரி சித்தார்த் said...

தம்பி கவிதைல பெரிய பிழை இருக்கு.. எந்த இடத்துலயுமே பாவனா னு வரலியே? :(

காயத்ரி சித்தார்த் said...

//அளவுக்கு மீறினா அமிழ்தமும் நஞ்சாமே//

ஆமா.. கவிதையும் அளவுக்கு மீறிடுச்சு.. ரொம்ப நீநீநீளம்!

கப்பி | Kappi said...

//"நாங்களும் காதலிப்போம்ல்ல"
//

அது தெரிஞ்சதுதானே :))